Aug 2, 2008

குசேலன் - சூப்பரோ சூப்பர்!!

குசேலன் - சூப்பரோ சூப்பர்!

oops..sorry for the spelling mistake.. குசேலன் - ரப்பரோ ரப்பர்!!என்னால முடியல...
ஏன்?
எதுக்கு?
எப்படி?
ஏன் இப்படிலாம்?

-மீனாவின் மூத்த பொண்ணு பத்தாவது படிக்குதாம்!!! அதுவே மீனா வயசு இருக்கும் போல தெரியுது..

- ஏழை குடும்பத்துல இருக்குற மூத்த பொண்ணு hairstyleல பாருங்க..straighten பண்ணி வச்சுருக்கு!!! arrrrrrrrgggggggggghhhhhhhh!

-வடிவேலு பண்ணது காமெடியா? பிரபு பண்ணது தான் காமெடி!!
y blood?
sameeeeeeee blood???

தெருவுல போற சனியன பனியன்குள்ள விட்ட கதையை நான் கேட்டு இருக்குறேன்... நீங்க அத முழுசா அனுப்பவிக்கனுமா.. குசேலன் படத்த பாருங்க!!:(((((((((((((((((

Aug 1, 2008

சிங்கையில் தாதியர் தினம்

உலக தாதியர் தினம் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆனால், சிங்கையில் இன்று (ஆக்ஸ்ட் 1ஆம் தேதி) கொண்டாடப்படுவதின் நோக்கம் தாதியர் வளர்ச்சி மன்றம் இன்றைய தினம் தான் 1885ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முன் தாதியர்கள் அவ்வளவாக கிடையாது. நோயாளிகளை பார்த்து கொள்ள தாதியர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது 1885ஆம் ஆண்டு தான்.



அப்போது இருந்த உள்ளூர் french convent மூலம் நிறைய தாதியர்கள் வேலையில் சேர்ந்தனர். ஆகவே தான் அந்த தினத்தை சிங்கையில் தாதியர் தினமாக கொண்டாடப்படுகிறது. உலகளவில் மே 12ஆம் தேதி கொண்டாடப்படுவதின் காராணம், அன்று தான் florence nightingale அவர்களின் பிறந்த நாளாம்.



இன்று சிங்கையில் வேலை பார்க்கும் அனைத்து தாதியர்களுக்கும் என் வாழ்த்துகள்! நன்றிகள்! என்னுடைய தோழிகள் சிலர் தாதியராக வேலை செய்கின்றனர். அவர்களுக்கு முக்கியமாக என் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தாதி என்று சொன்னவுடன் எனக்கு ஒன்னு ஞாபகத்துக்கு வரும். 'மனதில் உறுதி வேண்டும்' படமும் அப்படத்தில் நடித்த சுஹாசினியும்!! the movie is simply gr8!!! ஒரு பேட்டியில் அப்படத்தின் இயக்குனர் பாலச்சந்தர் சொன்னார் தான் இப்படத்தை எடுத்ததற்கு காரணம் தனக்கு உடல் நலம் மோசமான நிலையில் இருந்தபோது பார்த்து கொண்ட தாதி ஒருவர் தான் இப்படத்துக்கு inspiration என்று.



இவ்வாறு மற்றவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொரு தாதியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!::))

Jul 31, 2008

அட கிறுக்கா.... நான் உனக்காக பிறந்தவள்டா!



நாம் காரில் செல்வதும்
நான் சுடிதார் அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே சைவம்!


நாம் பைக்கில் செல்வதும்
நான் சேலை அணிவதும்
ஒன்று என்றாய்-
இரண்டுமே அசைவம்!
இதை அறிந்து, இனி
வெள்ளிக்கிழைகளிலும்
அசைவம் கேட்கிறாயே,
குறும்புக்காரா!


வயிற்று பசிக்கு
விரலால்
உணவு ஊட்டிவிட்டாய்.
உதட்டு பசிக்கு
உதட்டால் ஊட்டிவிடுவாயா?


புகைப்பிடிப்பவர்களை கண்டாலே
புகையும் எனக்கு
உன்னை முதன் முதலாக
பார்த்தபோது
நீ பிடித்துகொண்டிருந்த
சிகரெட்டையும் சேர்த்து
ரசித்தேன்
உன்னை!




உன்னை பார்த்தாலே
வெட்கத்தால்
கண்கள் மூடிகொள்கின்றன.
கண்கள் மூடினாலும்
என் வெட்கத்தை
அதிகப்படுத்தும்
உன் நினைவுகளை
நான் எப்படி சமாளிக்க?



'நான் எழுதிய கவிதைகளில்
எது ரொம்ப பிடிக்கும்'
என்று கேட்டாய்.
எழுதிய கவிதைகளைவிட
எழுதியவனை
ரொம்ப பிடிக்கும்!



ஆபிஸ் வேலையாக
வெளியூர் செல்லவேண்டும்
என்று சொல்லும்போதெல்லாம்
என் மனமும்
உன் மீது
நான் வைத்திருக்கும் காதலும்
நம் தலையணைகளை
நனைத்துவிடுகின்றன
அவை சிந்தும் கண்ணீர்
துளிகளால்....

குசேலன் பாடல்களை பார்க்கலாம்!

இங்கே கிளிக் செய்து, பாடல்களை பாக்கவும்.

http://www.kuselan55.com/song.html