Dec 31, 2008
சந்தோஷமா இருந்துச்சுப்பா....
தோழி: ஏய் காயு, 27th அன்னிக்கு ஒரு mini bthday celebration வச்சுருக்கேன். வந்துடு தெரியுமா. அப்பரம் ஒரு small request. நீ எதாச்சு performance போடனும்.
நான்: performanceஆ??? என்ன செய்யனும்?
தோழி: ஏதாச்சு பண்ணு.
நான்: ஏதாச்சுன்னு, கோழி பிரியாணி எப்படி செய்யனும்னு காட்டவா?
தோழி: ஆண்டவா!! இந்த புள்ளைக்கு நல்ல புத்திய குடு!
நான்: சரி சரி, அதலாம் இப்ப stockல இல்ல....
தோழி: டேய், உன் கவிதைய ஒன்னு வாசி. super performanceaa இருக்கும்!
அவள் சொன்னது முதல் எனக்கு வயிறு கலக்கல்ஸ் ஆரம்பித்துவிட்டது. எழுத சொன்னால் எழுதிவிடுவேன். ஆனா அதை பல பேர் முன்னிலையில் படித்து காட்டுவது எல்லாம் வாழ்க்கையில் செய்யாத ஒன்று. சரி முயற்சி செஞ்சு பார்ப்போம் என்று கிளம்பினேன் 27th அன்று. முதல் நிகழ்ச்சியே என்னுடையது தான். அதற்கு பிறகு தான் மத்த நண்பர்களின் பாடல், ஆடல்.
குரல் சற்று தயக்கத்துடனும், கைகால் ஒருவித படபடப்புடனும் மைக்கை பிடித்தேன். 50 மக்களின் பார்வைபட தொடங்கினேன்,
அழகான கவிதை ஒன்று
எழுத சொன்னால்
எழுதியிருப்பேன்
அழுகுக்கு ஒரு கவிதை
எழுத சொன்னால்
என்ன எழுதுவேன்?
உன்னை பற்றி எழுத தமிழில்
வார்த்தைகள் பஞ்சம்
எனினும் இயற்றுகிறேன்
என்னால் இயன்ற கொஞ்சம்.
சூர்யா ஜோதிகாவுக்கு
நீ எத்தனையாவது
ரசிகை என்று
எனக்கு தெரியாது
ஆனால்
உன்னுடைய முதல் ரசிகை
நான்!
நான் தூளாக துவண்டிருந்தபோது
எனக்கு தூணாக துணையாயிருந்தாய்
இந்த தேவதையை உலகிற்கு அனுப்பிய
இறைவனுக்கு
பல கோடி நன்றிகள்
வள்ளுவன் இருந்திருந்தால்
உன்னை பார்த்தபிறகு
1330 குறட்களையும் உதறிவிட்டு
உன்னை பற்றியே பல லட்சம்
குறட்களை எழுதியிருப்பான்
கம்பன் இருந்திருந்தால்
உன்னை கண்ட பிறகு
பல்லாயிரம் காவியங்களை
படைத்திருப்பான்.
அவர்கள் பாவம் செய்தவர்கள்
உன்னை பற்றி எழுதமுடியவில்லை.
நான் புண்ணியம் செய்தவள்
இங்கு உன்னை பற்றி மட்டுமே
எழுதுகிறேன்.
நண்பர்கள் டாப் 10 வரிசையில் இனி
உனக்கும் எனக்கும் மட்டுமே
முதல் இடம்!
நட்பின் ஆஸ்கார் விருது உனக்கே
உனக்கு!
தளபதி ரஜினி மம்மூட்டி
நட்புக்காக விஜயகுமார் சரத்குமார்
காதல் தேசம் அப்பாஸ் வினித்
பட்டியல் ஆர்யா பரத்,
இப்படி நட்புக்காக வாழ்ந்தவர்கள்
வரிசையில்
உன் பெயரையும்
என் பெயரையும்
சேர்த்து கொள்வோம்!
அம்மா அடித்தால் வலிக்கும்
அப்பா அடித்தால் வலிக்கும்
அண்ணன் அடித்தாலும் வலிக்கும்
‘சைட்’ அடித்தால் வலிக்காது
என்ற தாரக மந்திரத்தை
எனக்கு கற்றுகொடுத்த
குருவே,
நீ வாழ்க!
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
சொல்லிமுடிப்பதற்குள் எல்லாரும் கைதட்டி விசில் எல்லாம் அடிச்சாங்கப்பா! தோழியின் அம்மா ஓடி வந்து கட்டிபிடித்து பாராட்டி தள்ளிட்டாங்க! வாழ்க்கையில என் கவிதைக்கு இப்படி ஒரு நேரடி பாராட்டு கிடைத்தது இதுவே முதல் முறை. வலைஉலகில் மட்டுமே திரிந்து கொண்டிருந்த என் கவிதைக்கு இந்த பாராட்டுகளுக்கு என்னை பிரமிக்க வைத்தது!
Dec 29, 2008
என்னை ஏமாத்திய கஜினி
என்னை ஏமாத்திவிட்டார் அமீர் கான். படம் சுத்த bore! தமிழில் ஏற்கனவே பார்த்துவிட்டதால் என்னவோ, படம் கொஞ்ச நேரத்திலேயே எனக்கு போர் அடித்தது. பாடல்கள் சும்மார் ரகம். ஏ ஆர், kya? என்ன ஆச்சு? ஒரே ஒரு பாடல் மட்டும் தான் நல்லா இருக்கு.
அமீர் கானுக்கும் அசினுக்கும் chemistryயே இல்ல!! அசின் இனி பாலிவுட்டில் பெயர் போடுவது கஷ்டம்! இன்னும் நிறையவே எதிர்பார்த்தேன். காமெடி சீன்களில் அதிகபடியாக நடித்து இருக்கலாம்! என்னமோ போங்க... இந்த வருஷத்த ஒரு நல்ல படம் பார்த்து முடிக்கலாம்னு பார்த்தா இப்படி போச்சு.
ஹிந்தி தெரிந்த ஒரு இயக்குனர் படத்தை இயக்கி இருந்தால், நல்ல இருந்திருக்கும் என்பது எங்கள் கருத்து(தோழிகளும் நானும்). நயன் ரோலில் ஜியா கான்...ஐயோ... நயனே பரவாயில்ல! இயக்குனர், கேமிராமேன், ஹீரோயின், இசையமைப்பாளர் என்று தமிழர்கள் சேர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்திருக்க வேண்டாமா!
தமிழிலுள்ள லாஜிக் இடித்தல்களை சரிசெய்ய வேண்டும் என்று நினைத்து திரைக்கதையை சற்று மாற்றி, மெதுவாக நகர்த்திவிட்டார். இந்த படத்தை தான் 2 வருடமா எடுத்தாரா என்று கேள்விகுறியுடன் தியெட்டரிலிருந்து வெளியேறினோம். கிளைமெக்ஸை மாற்றி அமைத்து, கதைக்கு வலுபெறாமல் போனது.
அமீர் கான் 8 pack மட்டுமே பிரமிக்க வைக்கிறது. அதுகூட கதைக்கு எந்த வகையிலும் வலு சேர்க்கவில்லை. தன் கதாபாத்திரத்தை இன்னுமே உள்வாங்கி நடித்துஇருக்காலம் அமீர்! ஆனா, அவர் ஆத்திரத்தில் அழும்போது ரொம்பவே பாவமா இருந்துச்சு!
தோழி தெலுங்கு பொண்ணு. ஆக, இந்த படத்த தெலுங்கில் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை பாதி படத்திலிருந்து discuss பண்ணி காமெடி செய்து கொண்டிருந்தோம்!
கஜினி- கொல்றீங்க எல்லாரையும்!
Dec 28, 2008
சிலம்பாட்டம் Vs பூ
என்னால முடியலடா, ரீலு அந்து போச்சுடா சாமி!
சென்னைக்கு போயிட்டு வந்த அம்மாவும் அப்பாவும் அங்க இந்த படத்த பாத்து இருக்காங்க. 'யப்படி இருந்துச்சும்மா'ன்னு கேட்டேன்.
"காயத்ரி, this is simbu's best movie. சிம்பு அவ்வளவு அருமையா நடிச்சுருக்கான். தசாவதாரம் மாதிரி இருக்கு'ன்னு சொன்னாங்க. சிம்புவே பிடிக்காத எங்க அம்மா இப்படி சொல்லிட்டாங்களேன்னு நம்பி போனேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்..
என்னைய மறுபடியும் கொஞ்ச நேரம் அழுக விடுங்க....அவ்வ்வ்வ்....
ஏன் எப்படி எதனால அம்மா அப்படி சொன்னாங்கன்னு இது வரைக்கும் தெரியல? படத்த போய் நானும் பார்த்தேன். கொலைவெறிய ஏத்திவிட்டார் சிம்பு! ஒன்னுமே இல்லாத படத்திற்கு எங்க அம்மா போன்றவர்கள் கொடுக்கும் ceritificate என்னால தாங்க முடியல...
இந்த படத்துக்கு censor board என்ன பண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு தெரியல.
கடைசியில் ஹீரோவின் மனைவி ஒரு ஊனமுற்றவராகவோ, அல்லது அவர்களின் குழந்தைக்கு ஏதேனும் ஒரு நோய் என்று காட்டியிருந்து, அதை கண்டு மாரி அழுது இருந்தால்..படம் கண்டிப்பா என்னை உருக வைத்து இருக்கும். இப்படி எதுவுமே இல்லாமல் போனது!
பூ- எதிர்பார்த்ததைவிட குறைவு!
சிலம்பாட்டம்- யப்பா சாமி...இப்படி நான் எதிர்பாக்கவே இல்லபா! மிஞ்சியது மனதில் தளும்பாட்டம் தான்!
Dec 23, 2008
rab ne bana di jodi- அனுபவிக்கனும்!
காரணங்கள்- ஷாருக்கானின் subtle way of acting. புதுமுகம் அனுஷ்கா, பாடல்கள், கதையிலிருந்து சொல்ல வந்த கருத்து. வசனங்கள். ஷாருக்கான் hairstyle மாற்றியுடன் மனைவிக்கே அடையாளம் காணமுடியவில்லை என்பதில் லாஜிக் இடித்தாலும் படம் போக போக அது ஒன்னும் பெரிதாக தெரியவில்லை. படம் எல்லாம் நாடுகளில் சக்கை போடு போடுகிறது!
நமக்குள் ஒருவித போராட்டம் இருக்கு.
"the person that we are." Vs "the person that we want to be."
இந்த இரண்டுக்கும் நடக்கும் போராட்டம் தான் படத்தின் கதை. கடைசியில் ஜெயிப்பது முதல் வகை தான்! படத்தில் மட்டும் இல்லை, நிஜ வாழ்க்கையிலும் அது தான் ஜெயிக்கும். படத்தின் இரண்டாம் பாதியில் நிறைய emotions, யதார்த்தமான வசனங்கள். i could easily relate with the film என்று ஒரு வரியில் சொல்லலாம்.
கதையாக இருந்தாலும் சரி, நிஜத்தில் இருந்தாலும் சரி, in every ordinary love jodi, there is always an extraordinary love story. படம் பார்க்கும்போது அது புரியும்.
என்னை பிரமிக்க வைத்தது ஷாருக்கானின் தைரியம். அவருக்கு இருக்கும் பெரிய stardom, market value ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் இப்படி ஒரு படத்தில் நடிக்க முன் வந்தது படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் என்றே கூறலாம். அப்பரம், girl-next-door போன்ற முக அமைப்பில் இருக்கும் புதுமுகம் அனுஷ்கா.
படத்தில் இன்னும் காமெடி அளவை கூட்டியிருக்கலாம். ஆனா, படத்துக்கு ஒரு serious tone maintain பண்ண வேண்டும் என்ற காரணத்தால் என்னவோ, காமெடி சில இடங்களில் மட்டுமே இருக்கிறது. இருந்தாலும், என்னை பொருத்தவரை
rab ne bana di jodi- every couple's mirror!