Jul 27, 2010

ஆர்யாவும் நந்தாவும்

ஆர்யா நடித்த மதாராஸபட்டினம் படத்தையும் நந்தா நடித்த அனந்தபுரத்துவீடு படத்தையும் பார்த்தேன்.

இரண்டும் வித்தியாசம். ஆர்யா....ம்ம்ம்ம்........ அவருக்காகவே படத்தை இன்னொரு தடவ பார்க்கலாம். படம்- நம்ம ஊரு டைட்டானிக் போல இருந்தாலும் பார்க்க சுவாரஸ்சியமாக இருந்துச்சு. அப்பரம் அந்த புள்ள- ஏமி ஜெக்சன், என்ன ஒரு நடிப்பு! பின்னிட்டாங்க போங்க.

நந்தா நடித்த அனந்தபுரத்துவீடும் நல்லா இருந்துச்சு! நந்தா- செம்ம அழகுங்க!!

(இயக்குனர் சங்கர் அடுத்து 3 இடியஸ்ட்ஸ் படத்தை தமிழில் எடுக்க போகிறார். அதுல விஜயும் சிம்புவும் நடிக்க போவதாக செய்தி!! எனக்கு லேசா இதயம் வெடித்தது)

Jul 11, 2010

மனநிறைவு

எனக்கு மனநிறைவு கொடுக்குற விஷயங்கள் ரொம்ப குறைவு (சிக்கன் பிரியாணி, கரண் ஜோகர் படங்களை தவிர்த்து). எனக்கு இந்த தொண்டூழியம் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் உண்டு. நிறைய மக்களை சந்திக்க நல்ல வாய்ப்பு. அப்படி ஒரு மனநிறைவு நாளாக அமைந்தது சனிக்கிழமை.

காப்பக விடுதியில் 20 பசங்க இருக்காங்க. 7 வயது முதல் 18 வயது உடையவர்கள். இந்த விடுதி இவர்களின் அனைத்து தேவைகளையும் பார்த்து கொள்கிறது. சிலர் குடும்ப பிரச்சனை காரணமாக விடுதியில் இருக்கிறார்கள். சிலருக்கு பெற்றோர்கள் இல்லை. இப்படி ஒவ்வொரு பசங்களுக்கும் ஒரு பிரச்சனை. ஆனால் இந்த 20 பசங்க வெவ்வேறு குடும்பத்திலிருந்து வந்து இருந்தாலும், விடுதியில் அவர்கள் ஒரு குடும்பம் போல் இருப்பதை கண்டு வியந்தேன்.

அதில் ஒரு சின்ன பையன் இருக்கான். 7 வயது தான். பயங்கர சுட்டி! அவனுடைய சொந்த அண்ணன்களும் இந்த விடுதியில் தான் இருக்கிறார்கள். அந்த 7 வயது சுட்டி எப்போதுமே இன்னொரு பையன்கூட தான் இருப்பான். நான் நினைத்தேன் அவன் தான் அவனுடைய அண்ணன் என்று.

அவர்களிடம் பேசி பார்த்தபோது தான் தெரிந்தது, அவன் சொந்த அண்ணன் இல்லை என்று. 7 வயது சுட்டி தான் அங்க ரொம்ப சின்ன வயது பையன். ஆதலால் தன் சொந்த தம்பி போல் பார்த்து கொள்வதாக என்னிடம் சொன்னான். எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பாசம் காட்ட ஒரு மனசு வேணும். அந்த மனசு அவன்கிட்ட இருந்தது.

அவனிடம் தொடர்ந்து பேசினேன். அவனுக்கு வயது 14 தான். ஆனால் அவன் சுட்டியை பார்த்து கொண்ட விதம்..... சொல்ல வார்த்தை இல்லை! இவனுக்கு காற்பந்தாட்ட வீராக வர ஆசை. தேசிய அளவிலான குழுவில் சேர வாய்ப்பு கிடைத்தும் போக முடியவில்லை. காரணம்- படிப்பில் அவ்வளவு சிறப்பாக செய்யாததால்.

எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை! ஒரு நல்ல திறமையான விளையாட்டாளரை இந்த நாடு இழந்துவிட்டது.

அவர்களிடம் பல நடவடிக்கைகளை நடத்தினோம். அவர்கள் முகத்தில் தெரிந்த சந்தோஷம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.....

Jun 22, 2010

உலக கிண்ணமும் ராவணனும்

உலக கிண்ண காற்பந்து போட்டி ஆரம்பிச்சு திருவிழா மாதிரி போய்கிட்டு இருக்கு. இங்கு சிங்கையில் இதற்காகவே நிறைய பேர் ஒரு மாதம் லீவு போட்டு இருப்பதாக செய்தி வந்துச்சு. சிங்கையில் காற்பந்து பிரியர்கள் ஏராளம். நான் நேத்து portugal vs north korea போட்டியை பார்க்க சென்றேன் வீட்டு பக்கத்தில் இருக்கும் சமூக நிலையத்தில்.

செம்ம கூட்டம். கிட்டதட்ட 400 பேர் வந்து இருப்பாங்க. portugal ஆட்டம் அபாரம்! எதிர் அணியை வீழ்த்தி தள்ளியது. ஒவ்வொரு முறையும் கோல் போடும்போது கூட்டமே அலறியது!! நான் வடகொரியாவை தான் ஆதரித்தேன். ஏன் என்றால் முன்பு நடந்த போட்டியில், வடகொரியா உலகத்தில் முதல் நிலையில் இருக்கும் பெரிசிலை ஒரு கை பார்த்தது.

ஆனால் நேற்று போட்டியில், ரொம்ப சுமாராக விளையாடி தோல்வியை சந்தித்து!:(( portugal 7 கோல்கள் போட்டது. இதுவரை நடந்த போட்டியில் இது தான் ஆக அதிகமான கோல் எண்ணிக்கை.

உலகமே இப்படி விழாக்கோலமாக இருக்க, நம்ம சும்மா இருப்போமா? நானும் களத்தில் இறங்கிவிட்டேன். நாளை நண்பர்களுடன் காற்பந்து விளையாட போகிறேன். :)))
--------------------------------------------------------------------------------------

ராவன்/ ராவணன்- தமிழ் இந்தி ஆகிய இரண்டிலும் பார்த்துவிட்டேன். என் விமர்சனம்- மணி சார், என்னைய இப்படி ஏமாத்திவிட்டீங்களே!!!

படம் ஒன்னும் புரியலை. ராமாயணம் கதை மாதிரி இருக்கு. அது புரியது. அதை இந்த காலத்திற்கு ஏற்ப எடுத்து இருக்கலாம். காடு, காட்டுமிரண்டித்தனமான நடிப்பு, அழுத்தமில்லாத காதல்- இப்படி அனைத்தையும் தவிர்த்து இருக்கலாம். அட போங்க சார்....உங்க மேல ரொம்ப கோபம்!!

ஆவூன்னா, இதிகாசங்களை வச்சு படம் பண்றீங்க! நானும் பண்றேன் -remake of பாட்டி வடை சுட்ட கதை (ஓ...இது இதிகாசம் இல்லையா?)

May 28, 2010

என்ன மாமா சௌக்கியமா?

(பருத்திவீரன் கார்த்தி போல் சொல்லவும்)- என்ன மாமா சௌக்கியமா??

நான் - என்ன ப்ளாக், சௌக்கியமா?

அம்புட்டு நாளா ஆச்சு இந்த ப்ளாக் பக்கம் வந்து, மற்ற ப்ளாக்குகளை படிக்கவும் நேரமில்லை. வெற்றிகரமா வேலைக்கு சேர்ந்து முதல் வாரத்தை ஓட்டிவிட்டேன். போஸ்ட்டர் அடிச்சு ஒட்டாத குறை. மற்றபடி டிரீட் வச்சு கொண்டாடியாச்சு.

ப்ளாக் உலகில் என்ன புதுசா நடக்குது?

எனக்கு தெரிந்த சில ப்ளாக்கர்களும் அவர்களது ப்ளாக்கில் எந்த புது போஸ்ட்களை போடவில்லை போலும். ம்ம்ம்...எல்லாரும் பிஸினு நினைக்குறேன்.

வேலைக்கு சேர்ந்த முதல் வாரத்திலேயே கற்று கொண்ட முதல் பாடம் - உலகம் நம்ம நினைக்குற மாதிரி இல்ல பா! ரொம்ப கஷ்டமான மோசமான உலகம். நம்ம ஏதோ சின்ன குழந்தை மாதிரி, வெளுத்தது எல்லாம் பால்னு நினைச்சுகிட்டு இருந்துவிட்டோம்.

இப்ப நம்மள கடல புடிச்சு தள்ளிவிட்டாங்க. நீந்தி கரை சேர ரொம்ம்ம்ம்ப கஷ்டமா இருக்கபோகுது... பார்ப்போம்!:)