Jan 24, 2012

உன் ஞாபகம்!

கூட்டமாய் ஜாலியாய்
போய் கொண்டிருந்த
தோழி கல்யாணத்தில்
திடீரென்று bore அடித்தபோது
உன் ஞாபகம் வந்ததே?
இதுக்கு பெயர் தான் காதலா?



நண்பனின் வேட்டை

நண்பன், வேட்டை- இரண்டு படங்களையும் பார்த்தேன்.

வேட்டை- இதுக்கு அப்பரம் retire ஆவது நல்லது, maddy! தாவணி போட்டால் தேவையானி/ரம்பா chemistryயை கொண்டு வந்துவிடலாம்னு நினைத்த girlsக்கு ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்- பன்னிக்குட்டி பவுடர் போட்டாலும், அது பன்னிக்குட்டி தான். சமீரா ரெட்டி, நீங்க பேசாமல் கௌதம் மேனன் படங்களில் மட்டும் நடிப்பது நல்லது. அமலா பால், பரவாயில்ல. ஆர்யா, ம்ம்ம்.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.

லிங்கு, ரவுடிகள் சங்கம் எல்லாம் strike பண்ணா, நீங்க யார வச்சு படம் எடுப்பீங்க?

வேட்டை படக்குழுவினர் பொங்கல் நிகழ்ச்சிகள் அடித்த காமெடிகள் தான் நல்லா இருந்துச்சு. ஆனா, படம் பொங்கலுக்கு தேவையில்லாமல் வந்த செங்கல்!!

----------------------------------------

நண்பன் படத்தை பத்தி எல்லாரும் சொல்லியிருப்பாங்க. நான் ஒன்னே ஒன்னு தான் சொல்லனும்- vijay is back!!!

கோழிய வச்சு chicken tikka பண்ணாங்க director raju ஹிந்தியில்.
அதே கோழிய வச்சு செட்டிநாட்டு கோழி குழம்பு பண்ணாங்க director ஷங்கர் தமிழில்.

இரண்டும் ரசிக்கும் வகையில் இருக்கு. ஆகா, அவங்கள பார்த்து காபி அடிச்சிட்டாங்க, டீ ஊத்திட்டாங்க அப்படினு சொல்றத நிறுத்திவிட்டு வேலைய பார்ப்பதே நல்லது:)))))))))))))))))))

Jan 2, 2012

சிக்குபுக்கு காதல்

'அடடா அட மழை டா அடமழை டா' பாடல் alarmtoneஆக 15வது முறையாக ஒலித்தது. ஷாலினியின் அம்மா ஹாலில் இருந்து கத்தினார், " ஷாலு, காலையிலேந்து எத்தன தடவ..... நீ இப்போ எந்திரிக்க போறீயா இல்லையா?"

ஷாலினி சோம்பல்முறிந்து எழுந்தாள். பாதி தூக்கத்தில் கண்களை முழுவதாய் திறக்காமல் கடிகாரத்தை பார்த்தாள். காலை மணி 6.50. திடுக்கிட்டு போனாள்.
மணி 7.05க்கு எல்லாம் இரயில் இருக்க வேண்டுமே! அவன் சரியாய் அந்த நேரத்திற்கு தான் வருவான். அறை கதவை தள்ளிவிட்டு வேகமாய் குளியலறைக்கு ஓடினாள் ஷாலினி.

"slow..slow..ஏன் இந்த அவசரம்?" ஷாலினியின் அம்மா கேட்டாள், செய்தித்தாளின் முக்கியமான பக்கத்தை (சினிமா செய்திகள்) பார்த்து கொண்டே.

"I have important work to do at office. I need to be there early." என்று சொல்லி கொண்டே heater switchயை on செய்தாள் ஷாலினி.

"வேலையா? ஹாஹா...நீ என்னிக்கு அது எல்லாம் பாத்து இருக்க?" கிண்டல் அடித்தார் அம்மா.

"மா..please... don't tease me."

காலை உணவுகூட சாப்பிடாமல் சிட்டாய் பறந்தாள் இரயில் நிலையத்திற்கு.
மணி 7.04. அந்த இரயில் compartmentல் அவனைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள். சரியாக காலை 7.05க்கு அவன் எப்போதுமே அதே compartmentல் ஏறுவான் கையில் sports bag வைத்து கொண்டு.

ஆமாங்க, இது ஒரு காதல் கதை. ஆனா ஹீரோ பெயர் கார்த்திக் இல்லை.

******************************
(மூன்று மாதங்களுக்கு முன்பு)

தனது தோழிக்கு iphone whatsapp மூலம் செய்தி அனுப்பினாள்.

தோழி: நிஜமா வா? what's his name?

ஷாலினி: எனக்கு எப்படி தெரியும்? இன்னிக்கு காலையில trainல பாத்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப cuteஆ இருந்தான். பெயர் எல்லாம் என்ன மூஞ்சில எழுதியிருப்பானா என்ன?

தோழி: சரி, பையன் எப்படி இருப்பான்?

ஷாலினி: சொல்ல வார்த்த இல்ல...

தோழி: அடங்குடி! தூ...தூ... சொல்லு!

ஷாலினி: curly hair, very tall, smooth complexion, shahid kapoor nose, sharp eyes, great structure and அவன் smile பண்ணுவான் பாரு.... பாத்துகிட்டே இருக்கலாம்னு தோணும்.

தோழி: சரி... இப்ப என்ன பண்ண போற?

ஷாலினி: love தான்.

தோழி: எப்படி?

ஷாலினி: அதலாம் தெரியாது... ஆனா பிடிச்சுருக்கு. இவன் தான் எனக்கு அப்படின்னு தோணுது. அவன் பாத்த முதல் என்னென்னமோ மாற்றம். மழை பிடிச்சுருக்கு. இளையராஜா பாட்டு கேட்க ஆரம்பிச்சுட்டேன். அடிக்கடி எனக்குள்ள நானே சிரிச்சுக்குறேன். உலகமே என்னைய பாக்குற மாதிரி ஒரு feeling. bossகூட நல்லவனா தெரியுறான். அப்போ இது love தானே?

*************************************
முகம் தெரியாமல் ஒரு காதல் கோட்டை மாதிரி, பெயர் தெரியாமல் ஒரு காதல். தினமும், அவன் அதே compartmentல் வருவான். அதே இருக்கையில் அமர்வான். ஷாலினி சரியாக அதே நேரத்தில் செல்வாள். அவன் எதிர் இருக்கையில் அமர்வாள். தினமும் பார்த்து கொள்வதால், அவ்வபோது அவனிடமிருந்து ஒரு சின்ன புன்னகை. அவன் புன்னகையித்துவிட்டான் என்றால், அன்று இரவு தோழிகளுக்கு எல்லாம் party! இப்படி சென்று கொண்டிருந்த ஒரு தலை ராகத்தில் tune change mamu!

அவனுடைய பெயரை கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று இன்று முடிவு எடுத்தாள் ஷாலினி. 7.05க்குள் இரயில் நுழைந்தாள். வழக்கம்போல் அவள் அமரும் இருக்கையில் இருந்தாள். ஆனால், அவன் அங்கு வரவில்லை. அவள் மனதில் ஆயிரம் யோசனைகள்.

இந்த பொண்ணுங்களே இப்படி தான்? ரொம்ப யோசிப்பாங்க. சில நேரங்களில் ரொம்ப ரொம்ப ரொம்ப யோசிப்பாங்க.

ஏன் அவன் வரவில்லை? டைம் ஆச்சு? இரயில் கிளம்பிட போகுது? ஐயோ... என்ன ஆச்சு அவனுக்கு? fever? flu? வேற வேலை இடத்துக்கு போயிட்டானா? ச்சே... நான் அப்பவே அவன்கிட்ட.....

என்று யோசித்தவளின் யோசனைகளுக்கு முற்று புள்ளி வைத்தாற்போல் அவன் இரயிலுக்கு நுழைந்தான். போன உயிர் திருப்பி வந்ததுபோல் இருந்தது. ஆனால்....

அவன் கையில் 4 வயது குழந்தை!

ஷாலினியின் மனம் சுக்கு நூறாகியது! திருப்பி வந்த உயிர் மீண்டும் மாயமாய் மறைந்து சென்றது. நாளை வெளிவர வேண்டிய ரஜினி படம் இனி வரவே வராது என்று கேட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது ஷாலினிக்கு. குழந்தையின் பிச்சு விரல்கள் அவனது நெஞ்சில் அடித்து விளையாடியபோது, விதி விளையாடுவதுபோல் உணர்ந்தாள் ஷாலினி.

அழுகை அழுகையாய் வந்தது ஷாலினிக்கு. ஏதோ ஒரு மயானத்தில் தனியாக நிற்பதுபோல் உணர்ந்தாள். அதிகமாய் யோசிக்கும் ஷாலினிக்கு என்ன யோசிப்பது என கூட தெரியாமல் திண்டாடினாள். தொண்டையில் துக்கம் அடைக்க, கையில் இருந்த iphone whatsapp அலறியது.

தோழி: மச்சி, how? success? what's his name?

ஷாலினி: he's married. அவனுக்கு 4 வயசுல ஒரு குழந்தை இருக்கு.

தோழி: omg!! என்ன கொடும இது!

*************************************

ஷாலினி இறங்கும் அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கியவன், குழந்தையை அவன் அம்மாவிடம் கொடுத்தான்.

அவனது அம்மா, "சித்தப்பாவுக்கு, bye சொல்லு!"

*முற்றும்*

Dec 26, 2011

ஜஸ்ட் சும்மா (27/12/12)

நண்பன் பட பாடல் பட்டைய கிளப்பிவிட்டது. வெளியான முதல் நாளிலிருந்து எனது தின 'சுப்ரபாதமாக' ஒலித்து கொண்டிருக்கிறது 'அஸ்கு லஸ்கு' பாட்டு!

Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
... ஒரு காதல் உந்தன் மேலே

அத்தனை மொழியிலும்
வார்த்தை ஒவ்வொன்றும் கொய்தேன்.
மொத்தமாய் கோர்த்துதான்
காதல் செண்டொன்று செய்தேன்!
16 மொழிகளில் 'காதல்' வார்த்தைகளை வைத்து ஒரு பாட்டு! பின்னிட்டாரு மதன்கார்கி!! ஒரு சிலர் நினைக்கலாம்- என்ன டா இது, தமிழ் பாட்டுல தமிழே வராதா என்று! அதற்கு பதில் அடி கொடுக்கும் வகையில் 'நாடிமானி' எனும் வார்த்தையை பயன்படுத்தி இருப்பார் பாடலில்.

நாடிமானி என்றால்? அட நம்ம stethoscope.

அப்பரம் எனக்கு ரொம்ப பிடித்தது கணக்கு ஐடியாக்களை வைத்து பாடலை எழுதியது!

முக்கோணங்கள் படிப்பேன்/ உன் மூக்கின் மேலே
(Triangles, I study on your nose)
விட்டம் மட்டம் படிப்பேன்/ உன் நெஞ்சின் மேலே
(Width and depth I understand, from your heart)
மெல்லிடையோடு வளைகோடு / நான் ஆய்கிறேன்!

(Curve line, I explore on your waistline)

(http://nandinikarky.blogspot.com/2011/12/lyrics-asklaska-setsquare-sthethoscope.html)

மதன்கார்கியின் மனைவியின் வலைப்பூ இது! அதில் இந்த பாடலை பற்றி விளக்கம் இருக்கு:)))
**********************************************************************************

3 பட பாடல்களையும் கேட்டேன். ம்ம்ம்.... கொலவெறி மட்டும் தான் அதிரடி. மற்றவை எல்லாம்..ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!

*********************************************************************************
புது வருஷம் வர போகுது. லீவும் முடிய போகுது! வேலை மறுபடியும் ஆரம்பிக்க போகுது...ஐயோ! :((((((((((((

*********************************************************************************

ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு நாள், காலையில் எழுந்து பார்த்தேன். வீட்டில் யாருமே இல்லை! யப்பா....ரொம்ப நாள் கழித்து, தனிமை! ரொம்ப பிடித்து இருந்தது அந்த அமைதியான சூழல்! தனிமை, கொஞ்சம் பிடிக்கும்:) ரொம்ப பசிக்க ஆரம்பித்தது. ஆக, சமையலறைக்கு சென்றேன். இருந்தது வெறும் 2 ரொட்டி துண்டுகள். சும்மா sandwich சாப்பிடலாம் என்று தோன்றியது. ஆனால், அடுத்து நொடி ஒரு ஐடியா வந்தது. சூரியவம்சம் தேவையாணி இட்லி உப்புமா செய்தது போல் ஏதேனும் புதுசா செய்யகூடாதுனு?

எனக்கு தெரிந்த பொருட்களை வைத்து 'egg bread kothuprata' செய்தேன். ரொட்டி துண்டுகளை சின்னதாய் வெட்டினேன். அதில் முட்டையை ஊற்றி வெங்காயத்தையும் சேர்த்து பொரித்தேன். பிறகு, chilli pasteயை சேர்த்து உப்பு கலந்து மறுபடியும் ஒருமுறை பொரியல்! சாப்பிட்டு பார்த்தேன்...அட.. கொஞ்ச நல்லாவே இருந்ததுங்க!



ஆனால், சமையல் என்பது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். அது எல்லாருக்கும் சுலபத்தில் இஷ்டமான ஒன்றாக இருப்பதில்லை! இதை பலமுறை பல போஸ்ட்களில் சொல்லி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை, சமையல் என்பது 'therapy' போல்

எப்பவாவது செய்வது, எப்போதுமே செய்ய முடியாதுங்க:))))))))))))))))

*********************************************************************************

தோழி ஒருத்திக்கு கிரிஸ்மஸ்க்காக ஒரு சின்ன பொம்மை வாங்கி கொடுத்தேன். அதுக்கு பெயர் வைக்க ரொம்ப யோசித்தோம். பெயர் வைப்பது என்றால் எங்களுக்கு ரொம்ப இஷ்டம்.

தோழி: வித்தியாசமான பெயரா இருக்கனும்.
நான்: ம்ம்ம்....வித்தியாசமான பெயர்னா? அப்போ நீ வித்தியாசன்னு தான் வைக்கனும்.
தோழி: சூப்பர்!! வித்தியாசன்!:))))))
*********************************************************************************