Dec 21, 2006

இன்பத்திலிருந்து துன்பம்

பாடத்தைப் படிக்க
ஆரம்பித்தால்
படிப்பு வருவில்லை
கவிதை வருகிறது


எல்லாவற்றையும் மறக்க
துடிக்கும் எனக்கு
நினைவு அலைகள்
என் மனம் என்னும்
கடற்கரையை
மீண்டும் மீண்டும்
தாக்குகின்றன


அலைகள் கொந்தளித்தால்
சுனாமி என்கிறார்கள்
மனம் கொந்தளிக்கின்றதே
இதை என்னவென்று சொல்வது?


செய்த தவறுக்கும் செய்யாத
தவறுக்கும்
மனச்சிறையில்
ஆயுள்தண்டனையை
அனுபவிக்கும் எனக்கு
விடுதலை உண்டோ?


இன்பமாக இருந்ததை எண்ணி
ஆச்சிரியப்பட்டேன்
கடைசியில்தானே புரிந்தது
இன்பம் என்னும் சொல்லில்
ஒரு எழுத்தை
மாற்றினால் அது துன்பமாக
மாறும் என்று
அந்த ஒரு எழுத்து என்
தலைஎழுத்து!

No comments: