Nov 9, 2007

தீபாவளிக்கு என் வீட்டுக்கு விஜய் வந்தாரு!

pre deepavali என்றால் தீபாவளிக்கு முன்னால் செய்தவை. முறுக்கு சுட்டது, வீடு சுத்தம் செஞ்சது எல்லாம்.post deepavali என்றால் தீபாவளிக்கு மறுநாள் என்னவெல்லாம் செய்கிறோம் என்பது. இப்போ நான் செஞ்சுகிட்டு இருப்பதுகூட postdeepavali நடவடிக்கை தான். அதாவது இதை எழுதுவதை தான் சொன்னேன். தீபாவளி அன்று எங்கவீட்டுல அவ்வளவு பிரமாண்டமாக ஒன்னும் செய்ய மாட்டோம். சாப்பிடுவோம், தொலைக்காட்சி தொடர்ந்து பார்ப்போம்! தீபாவளி அன்றுதான் என்றைக்குமே கிடைக்காத ஒரு தூக்கம் வரும். அதை நல்லா அனுபவிப்போம்.

இந்த வருஷம் தீபாவளியும் அப்படிதான் போனுச்சு. பக்கத்துவீட்டு சீன அண்டைவீட்டாருக்கு பலகாரம் கொடுத்தேன். வருஷம் வருஷம் அவங்க கேட்குற அதே கேள்வி "ஓ.. தீபாவளி உங்களோட new year மாதிரியா?"
அதுக்கு நான் சொல்லும் பதில், "இல்ல... அது வேற இது வேற"
ஒவ்வொரு வருஷமும் நான் சொல்லி சொல்லி அலுத்துபோச்சு. அப்பரம் பலகாரம் கொடுக்கவந்த இடத்துல அவங்ககிட்டு தீபாவளி கதை பத்தி சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா? அதுவும் அவங்களுக்கு அவ்வளவா ஆங்கிலம் தெரியாதுவேற...

சரி ஒரு வீட்டுல கொடுத்துட்டேன். இன்னொரு வீட்டுக்கு போனேன். இங்கதான் செம காமெடி. இந்த வீட்டு aunty தான் கொஞ்சம் தெரிந்தவங்க. அவரோட கணவர் என்னை பார்த்துஇல்லை. நான் அவங்க வீட்டு கதவை தட்டியதும் அவர் கணவர்தான் திறந்தார். அவர் என்னை பார்த்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ரொம்ப குழம்பியவர் போல் தெரிந்தார். நான் கையில் ஒரு பெரிய தாம்பாலத்தில் பலகாரத்தை தூக்கி கொண்டு நின்றேன். "தீபாவளி sweets" என்று சொன்னதும், அவர் நினைத்து கொண்டார் நான் ஸ்வீட் விற்க வந்திருக்கும் salesgirl என்று! அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன். "வேண்டாம், இதலாம் நாங்க சாப்பிட மாட்டோம்" என்று அவர் கண்கள் சொல்லியது! என்னால் சிரிப்பு தாங்க முடியவில்லை. சரி சரி அவர் நம்மை துரத்தி அடிப்பதற்கு நான் உடனே ," aunty, எங்க? இன்னிக்கு தீபாவளி. நான் அங்கிட்டு மேல் மாடியில் குடியிருக்கிறோம்? என்று சுருக்க சொன்னேன் ஆங்கிலத்தில். அவருக்கு லேசாக புரிந்திருக்கும் நினைக்கிறேன். நல்ல வேளை aunty வந்துட்டாங்க. அவங்ககிட்டு கொடுத்துவிட்டு நான் ஓரே ஓட்டமா வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்பரம் தொடர்ந்து தொலைக்காட்சி தான். காலையில் ஆரம்பிச்சு ராத்திரி வரைக்கும் விஜய் எங்கவீட்டுல இருந்தாரு. ஏனா... எல்லாம் நிகழ்ச்சிலையும் அவர் தான். படமும் அவர் படம் தான் (கில்லி). எங்க உள்ளூர் தொலைக்காட்சிலையும் அவர் படம் தான்! அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு! (கொஞ்சம் bore ஆச்சு.ஹிஹிஹி)

சாய்ங்காலம், அப்படியே தோழி வீட்டுல் கொஞ்சம் கூத்தடிச்சுட்டு, வந்து வீட்டுல தூங்கிட்டேன்...
அம்முட்டுதாங்க!!!

5 comments:

Anonymous said...

/ விஜய் எங்கவீட்டுல இருந்தாரு. ஏனா... எல்லாம் நிகழ்ச்சிலையும் அவர் தான். படமும் அவர் படம் தான் (கில்லி). எங்க உள்ளூர் தொலைக்காட்சிலையும் அவர் படம் தான்! அதனால கிட்டுதட்ட விஜய் வீட்டுக்கு வந்த மாதிரி இருந்துச்சு! (கொஞ்சம் bore ஆச்சு.ஹிஹிஹி)/

GOOD ONE.I agree with you.

Rumya

FunScribbler said...

ஹாஹாஹா... நான் ஒரு விஜய் ரசிகையாக இருந்தாலும்.. நேத்திக்கு கொஞ்சம் ஓவரா போச்சு அவர் வந்தது!!

Divya said...

\\அவர் நினைத்து கொண்டார் நான் ஸ்வீட் விற்க வந்திருக்கும் salesgirl என்று! அவர் முகத்திலிருந்தே அதை அறிந்து கொண்டேன்.\\

நைசா ஸ்வீட்ஸ் வித்துட்டு அங்கிள் கிட்ட காசு வாங்கியிருக்கலாம்!

Anonymous said...

ஹ்ம்ம் என்னுடைய தீபாவளி மாதிரிதான் இருக்கு உங்க தீபாவளியும்.சிங்கப்பூரில் தீபாவளியா?

FunScribbler said...

ஆமாங்க துர்கா.. சிங்கையில்தான் தீபாவளி!!