பொங்கலுக்கு வந்த படங்களில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் என்றால் பிரிவோம் சந்திப்போம் எனலாம். கதை ஒன்றும் பெரிய கருத்து சொல்லும் கதை அல்ல. சாதாரண கதை தான். கல்யாணமான பெண் தனிமையில் இருந்தால் என்ன ஏற்படும் என்பதை படமாக எடுத்துள்ளார் இயக்குனர் கரு.பழனியப்பன். செட்டியார் வீடுகளில் நடப்பவற்றை கதை களமாக எடுத்தது வித்தியாசமாக இருந்தது. மனிதனுக்கு உறவுகள் முக்கியம் என்பதை அழகாக எடுத்து சொல்லிய படம். முதல் பாதி கலகலப்பு. இரண்டாம் பாதி விறுவிறுப்பு என்று படத்தை சற்று யதார்த்தமாக நகர்த்தி சென்றது படத்தின் திரைக்கதை. வசனங்களும் சரி, நடிப்பும் சரி... ரொம்பவே யதார்த்தமாக காட்சியளித்தது. பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை இக்காலத்தில் எடுத்து இருப்பது இயக்குனரையும் தயாரிப்பாளரையும் கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும்.இருந்தாலும்... சில கேள்விகள்
*சினேகா படித்து புள்ள.. அப்படி இருக்க, தனிமையில் ரொம்பவே வாடுவதாக காட்டியது என்னால் ஏற்க முடியவில்லை. இணையம், புத்தகம் என்று எத்தனையோ விஷயங்கள் இருக்கே...
*தனியாக வந்தபிறகு, தோழிகளுக்கு 'போன்' செய்து பேசி இருக்கலாம்.
*கல்யாணம் ஆனபிறகு, சேரன் தன் பெரிய குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் காட்டியது நெருடலை வரவழைத்தது.
பாடல்கள் சுமார் ரகம் தான். சில இடங்களில் 'லாஜிக்' இடித்தாலும், படத்தின் ஓட்டத்தால் அது அவ்வளவாக தெரியவில்லை. சினேகாவின் நடிப்பு படு சூப்பர்!! பல இடங்களில் பாஸ்கர் மற்றும் கஞ்சா கறுப்பு அடிக்கும் ஜோக் அருமை! ஜெய்ராம் இயல்பாக நடித்து படத்துக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார்.
பிரிவோம் சந்திப்போம்- படத்தை பார்ப்போம் சிந்திப்போம்!!
Jan 31, 2008
Jan 8, 2008
வெற்றிக்கு கிடைத்த வெற்றி!!
வெற்றிப்படம் தரும் இயக்குனர்களுக்கு, நடிகர்கள் கார் பரிசளிப்பது அஜித் தொடங்கி வைத்த கலாச்சாரம். இந்த கார் கலாச்சாரத்தை சத்யராஜ் ஒரு படத்தில் கலாய்த்திருப்பார். இருந்தாலும், கொடுப்பது பலலட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் என்பதால், இந்த கலாச்சாரத்தை பாராட்டியே ஆக வேண்டும்.
தனுஷூக்கு 'பொல்லாதவன்' வெற்றி அதிக சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. அதே சந்தோஷத்துடன், வெற்றிமாறனை அழைத்து, பாஸ், வீடுவரைக்கும் போயிட்டு வரலாம் என காரில் ஏற்றியிருக்கிறார்.வீட்டுக்கு என்று சொல்லி தனுஷின் கார் சென்றது, ஹோண்டா கார் ஷோரூமுக்கு.
அங்கு சென்றதும் கார் சாவியொன்றை வெற்றிமாறனின் கையில் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். (வெற்றிமாறனுக்கு கார் ஓட்ட தெரியுமா?)பல்சர் பைக்கை வைத்து படமெடுத்ததற்கு கார் பரிசாக கிடைத்ததில் வெற்றிமாறனுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. தனுஷூக்கும் மகிழ்ச்சிதான், வெற்றிமாறனின் அடுத்தப் படத்திலும் தனுஷ்தானே ஹீரோ!
(நன்றி- cinesouth.com)
ஆமா... பைக் வச்சு படம் எடுத்ததாலே கார் பரிசா!! அப்ப கார் வச்சு படம் எடுத்து இருந்தா.. கப்பல் பரிசா கொடுத்து இருப்பாய்ங்கலோ...
நானும் எடுக்குறேண்டா 'கார்' வச்சு ஒரு படம்!!!

Jan 3, 2008
பையன் டூஷனுக்கு போய் இருக்கான்-கவிதை
பையன்
அறை முழுவதும்
புத்தகங்கள்-உலக அரசியல்
விண்வெளி, வேதியல்,இயற்பியல்
ஆங்கில இலக்கியம்!
திருக்குறள் புத்தகமும்
இருந்தது
ஆங்கிலம் மொழிபெயர்ப்புடன்!
ஏசர் மடிக்கணினி
நட்சத்திரங்களை பார்க்கும்
தொழில்நுட்ப பைனோர்க்கியுலஸ்
ஜன்னல் பக்கத்தில்.
அறை சுவர் முழுவதும்
அறிவியல் கண்டுபிடிப்பு
கணக்கு வரிசை
சுவரொட்டிகள்
இரவு பத்து மணி ஆகியும்
பையன் வரவில்லை.
கணக்கு டூஷன்
அறிவியல் டூஷன்
நீச்சல் வகுப்பு
வைலீன் வகுப்பு
முடித்து
பத்து முப்பதுக்கு வந்தான்
LKG படிக்க போகும்
என் மூன்று வயது
சித்தி பையன்!
அறை முழுவதும்
புத்தகங்கள்-உலக அரசியல்
விண்வெளி, வேதியல்,இயற்பியல்
ஆங்கில இலக்கியம்!
திருக்குறள் புத்தகமும்
இருந்தது
ஆங்கிலம் மொழிபெயர்ப்புடன்!
ஏசர் மடிக்கணினி
நட்சத்திரங்களை பார்க்கும்
தொழில்நுட்ப பைனோர்க்கியுலஸ்
ஜன்னல் பக்கத்தில்.
அறை சுவர் முழுவதும்
அறிவியல் கண்டுபிடிப்பு
கணக்கு வரிசை
சுவரொட்டிகள்
இரவு பத்து மணி ஆகியும்
பையன் வரவில்லை.
கணக்கு டூஷன்
அறிவியல் டூஷன்
நீச்சல் வகுப்பு
வைலீன் வகுப்பு
முடித்து
பத்து முப்பதுக்கு வந்தான்
LKG படிக்க போகும்
என் மூன்று வயது
சித்தி பையன்!
Subscribe to:
Posts (Atom)