Jan 3, 2008

பையன் டூஷனுக்கு போய் இருக்கான்-கவிதை

பையன்
அறை முழுவதும்
புத்தகங்கள்-உலக அரசியல்
விண்வெளி, வேதியல்,இயற்பியல்
ஆங்கில இலக்கியம்!
திருக்குறள் புத்தகமும்
இருந்தது
ஆங்கிலம் மொழிபெயர்ப்புடன்!

ஏசர் மடிக்கணினி
நட்சத்திரங்களை பார்க்கும்
தொழில்நுட்ப பைனோர்க்கியுலஸ்
ஜன்னல் பக்கத்தில்.
அறை சுவர் முழுவதும்
அறிவியல் கண்டுபிடிப்பு
கணக்கு வரிசை
சுவரொட்டிகள்

இரவு பத்து மணி ஆகியும்
பையன் வரவில்லை.
கணக்கு டூஷன்
அறிவியல் டூஷன்
நீச்சல் வகுப்பு
வைலீன் வகுப்பு
முடித்து
பத்து முப்பதுக்கு வந்தான்
LKG படிக்க போகும்
என் மூன்று வயது
சித்தி பையன்!

7 comments:

மங்களூர் சிவா said...

என்ன படிப்பு ரொம்பா கஷ்டமோ??

எவன்டா இந்த பரிச்சைய கண்டுபிடிச்சதுன்னு ஒரு கவுஜ

இப்ப இத்தினி ட்யூஷன்னு இன்னொரு கவுஜ

ஒண்ணும் சரியில்லியே!!

ரசிகன் said...

யதார்த்தம் நல்லாத்தேன் இருக்கு தமிழ் மாகானி..

ரசிகன் said...

காலம் செய்த கோலம்..ஊர்ல சின்ன வயசுலயே பொதி சுமக்கும் பிஞ்சுகளை பாக்கும் போது கஷ்டமாத்தேன் இருந்துச்சு..இங்கத்தேன் ரெண்டு பேப்பர் நோட்ஸும் ,பள்ளிக்கூடத்துல தனி கணிணி பொட்டியும் வச்சிருக்காங்களே.. நம்ம நாட்டுலயும் எப்ப ஏட்டு சுரக்காய் நெலம மாறுமோ?...

FunScribbler said...

//ஒண்ணும் சரியில்லியே!!//

அப்படி ஒன்னுமில்ல சிவா... சும்மா.. தான் எழுதினேன். புள்ளைங்க படுற பாடு தானே இது!

FunScribbler said...

//யதார்த்தம் நல்லாத்தேன் //

நன்றி ரசிகன்

N Suresh said...

இன்றைய பிள்ளைகளின் தோளின் பாரங்கள், கற்று முடிந்ததும் அறிவை பாரமாக்கிக் கொண்டிருக்கிறது

Anonymous said...

நல்ல திருப்பம்.

by
mcxmeega@gmail.com