Sep 5, 2008

நான் ரொம்ப மோசம்

நான் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போறத பத்தி சிலருக்கு தெரிஞ்சிருக்கும். மூனு மாசம் ஆச்சு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போய்.... நேத்திக்கு என் கிரிக்கெட் குழுவில் இருக்கும் தோழி ஒருத்தியின் 21 வயது பிறந்தநாள் கொண்டாட்டம். நட்பு கிடைத்து கிட்டதட்ட 2 மாசம் தான் ஆயிருக்கும். ஆனா கொஞ்சம் நெருக்கமா பழகிவிட்டோம்.close frens போல ஆகிவிட்டோம். அவ தங்கச்சியும் கிரிக்கெட் குழுவுல இருக்கா..என் அக்காவும் கிரிக்கெட் குழுவுல இருக்கா! ஆக நாங்க ஒரு பெரிய gang மாதிரி பழகிட்டோம்.8 மணிக்கு சென்றோம். பயங்கரமா அலங்கரித்து ரொம்ப பிரமாண்டமா இருந்துச்சு இடம். சாப்பாடு மணம் ஒரு பக்கம் தூக்கலா இருந்துச்சு. கிரிக்கெட் சட்டை, track pants, shortsல தோழியை பார்த்து, நேத்து அவ போட்டிருந்த பச்சை சேலையில் பொண்ணு ரொம்ப அழகாவே இருந்தா.கிரிக்கெட் நண்பர்கள் நாங்க தான் அங்க dominating gang. கிட்டதட்ட 20 பேரு!! கேக் வெட்டினார்கள். அப்பரம் இரவு உணவு. அதுக்கு அப்பரம் தான் மேட்டரே இருந்துச்சு. எத்தனை லிட்டர் பெப்சி குடித்தேன்னு தெரியல்ல...


போட்டோ எடுக்கனும்னு கூப்பிட்டாள் தோழி. சரி நம்பி போனோம் முன்னாடி. அங்க stageக்கு போனபிறகு, டான்ஸ் ஆடனும்னு சொல்லிட்டா. எங்களில் சிலருக்கு கூச்சமா இருந்துச்சு. ஆக, நாங்கள் சும்மா கைதட்டி கொண்டிருந்தோம். 2, 3 பேரு தான் ஆடினார்கள். அதுவும் ஹிந்திக்கார பொண்ணுங்க...அப்ப ஓம் சாந்தி ஓம் ஹிந்தி பாடல்கள் ஒலித்தன. ஓரத்தில் நின்று கொண்டிருந்த என்னைய இழுத்துகிட்டு மேடைக்கு சென்றன. பங்கரா டான்ஸ் ஆட சொன்னார்கள்.நான் ஒன்னும் தெரியாத பாப்பா போல முகத்தை வைத்து கொண்டு ' i dun know man' என்றேன். அப்போது ஆடுவதற்கு mood வரவில்லை. இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டேன். என் அக்கா ஏற்கனவே அங்க மத்தவங்க கூட ஆடிகிட்டு இருந்தாள். நான் ரசித்து பார்த்தேன். அப்பரம் திடீரென்னு இரண்டு பேரு என்னைய தூக்கி கொண்டு மேடையில் போட்டனர்!


அந்த நொடி "மொச்சை கொட்ட பல்லழகி, முத்து முத்து சொல்லழகி" என்ற ஒரு செம்ம குத்து பாடலை போட, எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. டப்பாங்குத்து தானா வந்தது. எல்லாருக்கும் ஆச்சிரியம்! அப்படி ஆரம்பித்தேன் காலில் சலங்கையை கட்டி கொண்டு...930 மணிக்கு ஆரம்பித்த ஆட்டம், 1115 மணி வரைக்கும் நிறத்தவில்லை. folk, western, hindi remix, english, salsa, tango என்ன வரதோ, எல்லாத்தை குத்து குத்துன்னு ஆட்டம் போட்டேன்!!

கிரிக்கெட் பயிற்சிகள் போது, கொஞ்ச சீரியஸா இருப்பேன். நானா இப்படி ஆடுவது என்று எல்லாருக்கும் ஷாக்!! எனக்கே அதிர்ச்சியாகா தான் இருந்துச்சு. குடித்த பெப்சியில் எவனோ ecstasy pillsயை போட்டுவிட்டானு நினைக்குறேன்.

அம்மாடி ஆத்தாடி பாடலுக்கு சிம்புகூட இந்த அளவுக்கு வேகமா ஆடி இருக்கமாட்டான். அந்த அளவுக்கு....ஐயோ....இப்ப நினைச்சாகூட... (எனக்கே கொஞ்ச அதிர்ச்சியா இருக்கு...)

ஏற்கனவே கால் வலி. அதையும் மறந்து ஆடினேன். நான் ரொம்ம்ப மோசம்ங்க....

துன்பத்துல சிரிக்கனும்னு திருவள்ளுவர் சொன்னாரே. ஒரு வேளை அப்படி பின்பற்றினேனோ! (யப்பா...என் போதைக்கு, வள்ளுவரை ஊறுகாய் ஆகிட்டேன்ய்யா...அவ்வ்வ்வ்...என்னைய மன்னிச்சிக்கோ ஐயா!)

எங்களை வெளியே தூக்கிபோடாத குறை!! இடத்தை பூட்டிவிட்டு செல்லும் வரை, டான்ஸ் டான்ஸ் டான்ஸ், குத்து, கும்மாங்குத்து தான்! நாங்கள் ஆடுவதை பார்த்துவிட்டு, தோழியின் சித்தப்பாவும், சித்தியும் ஆட ஆரம்பித்துவிட்டார்கள். :)))

வீட்டுக்கு வந்தோம். வரும் வழியில்

நான்: அக்கா, கடந்த 2 மணிநேரம் நடந்த விஷயத்தை நீயும் மறந்துடு. நானும் மறந்துடுறேன்.

அக்கா: ஏ...ஆமா...வீட்டுல கேட்டா என்ன சொல்றது?

வீட்டை அடைந்தோம்.. அம்மா தூங்கிவிட்டார். அப்பா சன் டிவி பார்த்து கொண்டிருந்தார்.

அப்பா: என்ன இவ்வளவு லேட்டு?

நாங்கள்: லேட்டா தான் கேக் வெட்டினாங்க...அதான்...

எங்கள் மனசாட்சி: அநியாயம எங்கள கொன்னுட்டீங்களே!அவ்வ்வ்....

அடித்த போட்ட பன்னி மாதிரி தூங்கினோம். ஓவர் சத்தம், ஆட்டம் உடல் வலியை ஏற்படுத்தியது. ஓவர் பெப்சி, தொண்டை வலியை ஏற்படுத்தியது. தலைவலி வேற..... கால் வலி போய் இப்ப மத்த வலி!!!

யப்பா.....முடியல.... ஆனாலும் ரொம்ப நாளைக்கும் அப்பரம் குஷியாக ஃபீல் பண்ணியது மனசு! அப்பரம் நாங்களும் யூத் என்பதை அடிக்கடி நிருபிக்க வேண்டாமா!

வரும் சனிக்கிழமை இன்னொரு பிறந்தநாள் கொண்டாட்டம் வர போகுது, ஆருயிர் தோழியின் பிறந்த நாள் வேற... அடுத்த ஆட்டத்துக்கு ரெடி!!

19 comments:

தமிழன்-கறுப்பி... said...

me the first!

தமிழன்-கறுப்பி... said...

\
"நான் ரொம்ப மோசம்"

\

அது சரி...

தமிழன்-கறுப்பி... said...

\
குடித்த பெப்சியில் எவனோ ecstasy pillsயை போட்டுவிட்டானு நினைக்குறேன்
\
நம்புறோம்...:)

தமிழன்-கறுப்பி... said...

\
ஏற்கனவே கால் வலி. அதையும் மறந்து ஆடினேன். நான் ரொம்ம்ப மோசம்ங்க....
\

எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

தமிழன்-கறுப்பி... said...

\
அந்த நொடி "மொச்சை கொட்ட பல்லழகி, முத்து முத்து சொல்லழகி" என்ற ஒரு செம்ம குத்து பாடலை போட, எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல. டப்பாங்குத்து தானா வந்தது.
\

என்னதான் இங்கிலிஸ் பாட்டு கேக்கிறா மாதிரி பீட்டர் விட்டாலும் நம்ம ரத்தத்துக்கு அதுதாங்க ஸ்பீடு ஏத்துற மாட்டர்...:)

M.Rishan Shareef said...

நம்ம பதிவுலகத்துல இத்த இன்னான்னு கேக்க ஆருமே இல்லியா ?

Divya said...

சரி லூட்டி அடிச்சிருப்பீங்க போலிருக்கு, எஞ்சாய்!!!

பிரியமுடன்... said...

ரொம்ப ஆட்டமா போச்சு உங்களுக்கு ம்ம்ம்! ஆடுங்கள்..ஆடுங்கள்...காலில் இருக்கும் சலங்கை அறுந்துவிழும் வரை ஆடுங்கள்!

கோடம்பாங்கம் ஏரியா...
ஆட்டம் போட்டு வாரியா
குத்தாட்டம் என்கூட ஆடவர்ரியா...

கரகாட்ட காயத்திரியாக மாறிவிட்டீர்கள் போலவே! வாழ்த்துக்கள்!
ஆடும் வயதில்
ஆடாமல்
தல்லாடும் வயதிலா
ஆடமுடியும்!
ஆடுங்கள்...மேடை இடிந்துவிழும் வரை
ஆடுங்கள்!

Anonymous said...

Pepsi?!? try drinking baygon spray, that's got lesser poison!

FunScribbler said...

@தமிழன்

//என்னதான் இங்கிலிஸ் பாட்டு கேக்கிறா மாதிரி பீட்டர் விட்டாலும் நம்ம ரத்தத்துக்கு அதுதாங்க ஸ்பீடு ஏத்துற மாட்டர்...:)//

நூத்துல ஒரு வார்த்தை!:)

FunScribbler said...

@ஷெரிப்

//நம்ம பதிவுலகத்துல இத்த இன்னான்னு கேக்க ஆருமே இல்லியா ?//

என்ன?

(கேட்டாச்சு..போதுமா?)

priyamudanprabu said...

///
"நான் ரொம்ப மோசம்"
////

இப்பவாச்சு ஒத்துகுட்டீங்களே
நீங்க ரொம்ப நல்லவருங்க.....

Karthik said...

//நான் ரொம்ப மோசம்

Oops, Very old n known stuff. Anything new?
:)

Karthik said...

//'i dun know man'

Hi Muscular..
Hi Popular..
Spectacular..
She's a bachelor.. But,

Pappu Cant Dance Saala!
:D

Shwetha Robert said...

title potu oorukey soliteeya,remba thairiyamthan unaku:))

ரசிகன் said...

//நான் ரொம்ம்ப மோசம்ங்க....//

:P:P:P neenga roomba nallavanga ( unmaiya othukkaravanga nallavanga thaaney:P)

ரசிகன் said...

//துன்பத்துல சிரிக்கனும்னு திருவள்ளுவர் சொன்னாரே. ஒரு வேளை அப்படி பின்பற்றினேனோ! (யப்பா...என் போதைக்கு, வள்ளுவரை ஊறுகாய் ஆகிட்டேன்ய்யா...அவ்வ்வ்வ்...என்னைய மன்னிச்சிக்கோ ஐயா!)
//

:)))))))))))))

MyFriend said...

அம்மணி, நீங்க ஆடுற டான்ச்ஸை கொஞ்சம் வலையேத்தி எங்களுக்கும் காட்டுறது? :-)

FunScribbler said...

@மை ஃபிரண்ட்

//அம்மணி, நீங்க ஆடுற டான்ச்ஸை கொஞ்சம் வலையேத்தி எங்களுக்கும் காட்டுறது? :-)//

இத பாத்துட்டு உலக அழிஞ்சு போச்சுன்னா.. வேண்டாப்பா, வேண்டாம்!:)