Apr 2, 2008

நான் அடித்த அட்டகாசம்-april fools' day prank(1)

"என்ன பத்தி நீ என்ன நினைக்குறே. ஒரு பொண்ணா நான் எப்படிப்பட்டவ. நான் ஒரு நல்ல girlfriendஆ இருக்க முடியும்? ம்ம்ம்ம்....என்ன நடந்துச்சுன்னா.. என் கூட சதீஷ்-னு ஒருத்தன் படிக்குறான். நாங்க இரண்டு பேரும் நண்பர்களாகதான் பழகினோம். நாங்க எல்லாம் ஒரு பெரிய செட். கூட்டாளிங்க மொத்தம் 8 பேரு. ஒன்னாதான் இருப்போம்.

அன்னிக்கு ஞாயித்துகிழமை group project meeting இருந்துச்சு. அத முடிச்சுட்டு மத்தவங்க பஸ் எடுத்து போயிட்டாங்க. நானும் சதீஷும் தான் trainல வந்துகிட்டு இருந்தோம். சும்மா எப்போதும் போலவே தான் பேசிகிட்டு இருந்தோம். அவன் திடீர்ன்னு என்கிட்ட 'i love you' சொல்லிட்டான். எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. ஆச்சிரியமா போச்சு. கோபமா வந்துச்சு. அழுதுட்டேன். என் station அப்ப வந்துச்சு. அதனால அவன்கிட்ட ஒன்னும் சொல்லாம வந்துட்டேன். இப்ப நான் ரொம்ப disturbed-ஆ இருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல.... அவன் அப்பரம் எனக்கு போன் செஞ்சேன். ஆனா நான் எடுக்கல. எனக்கு பயமா இருக்கு.

அவன் ரொம்ப நல்லவன். ஆனா, என்னமோ பயமா இருக்கு. எங்க அம்மாகூட நான் வெள்ளிக்கிழமையில கோயிலுக்கு போவேன். அவனும் எங்ககூட வருவான். அவனும் எங்க அம்மாகிட்ட ரொம்ப நல்லா பழகுவான். அவன் கார் வச்சு இருக்கான். அவன் வீடு என் வீட்டிலிருந்து ரொம்ப தூரம். அப்படி இருந்தும் காலேஜ் முடிஞ்சு என்னைய என் வீட்டுக்கிட்ட வந்துவிட்டுடுதான் போவான்.

இப்ப அவன் ஐ லவ் யூ சொன்னதுவச்சு பாக்கும்போது, அவன் என்கிட்ட ஏன் அப்படிலாம் நடந்துகிட்டான்னு தோனுது. நான் தான் அவன புரிஞ்சுக்கல. ஆனா எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. எனக்கும் அவன ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஆனா இப்ப நாங்க படிச்சுகிட்டு இருக்கோம். இதுலாம் சரியா வரும்? பரிட்சை இன்னும் 3 வாரத்துல வர போகுது. அவன்கிட்ட நான் என்ன சொல்ல? நான் ஒன்னும் சொல்லாம இருந்தேனா அவன் என்ன பத்தி ஏதாச்சு தப்பா நினைச்சுக்கிட்டா? i like him alot ஆனா நான் எடுக்குறது சரியான முடிவுதானான்னு தெரியல. ஏய், i am totally disturbed. it's torturing me alot
----------------------

ஹாஹாஹா... இப்படி ஒரு பெரிய கதைய சொல்லி முட்டாள்கள் தினத்தில் என் நண்பர்களை முட்டாள் ஆக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன். கதை முழுவதுமே கற்பனை கதை. ஆனா சொன்ன விதம்!! ஹாஹா... செம்ம காமெடியா போச்சு. என்ன நடந்துச்சுன்னா...

முதல ஒரு தோழியிடம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அவள் உடனே 'ஏய் ஜோக் அடிக்காதே. இன்னிக்கு ஏப்ரல் முதல் தேதி. என்னைய ஏமாத்தாதே.' அப்படி சொல்லிட்டா. ஆஹா, ஊத்திக்கிச்சுன்னு நினைச்சேன்!! சரி இத விடகூடாதுன்னு நினைச்சு, அவள்கிட்ட 'நான் சீரியஸா சொல்லுறது, உனக்கு விளையாட்டா இருக்கா.. பரவாயில்லடி.. என் சோகம் என்கூடவே போகட்டும்'இப்படி கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் விட்டு பார்த்தேன். ஹாஹா.. பொண்ணு ஏமாறல்ல... சரி முதல் முயற்சி சொதப்பல்!!

இத இப்படியே விட்டுவிட கூடாது என்று உள்மனசு டப்பாங்குத்து ஆட, இனி குறுஞ்செய்தி சரிப்பட்டு வராது, நேரடியாகவே போன் செய்து பேசினால்தான் சரிபட்டு வரும் என முடிவு செய்தேன். பேசும்போது நமது நடிப்பு திறமையை அள்ளிவீசலாம் பாருங்க. எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எப்போதுமே ஜாலியாகத்தான் பேசுவேன். கலகலப்பாகதான் இருப்பேன். ஆனா, இதற்காகவே குரலில் சோகத்தை கொண்டு வந்து, அப்படியே அழும்குரலில் பேசினேன். இப்படி ஏமாற்ற எனக்கு கிடைத்த அடுத்த நண்பன், ஜெய். அவனிடம் என் 'சோக காதல் கதையை' சொல்ல, பையன் ரொம்பவே பயந்துட்டான். கொஞ்சம் விட்டு இருந்தால், அடுத்த பஸ் எடுத்து என் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்லி இருப்பான். என்னமா அறிவுரை சொன்னான். எனக்கு சிரிப்பு தாங்க முடியல. நான் பேச பேச, அவனுக்கும் ஒரே சோகமா போச்சு. அவன் பாச மழையில் நனைய எனக்கு ஜலதோஷம் வருவதற்குள் 'ஏய் ஜெய், happy april fools' day' என்று சொல்லி உண்மையை உடைத்தேன். அதுக்கு அப்பரம் பையனுக்கு ஒரே அவமானமா போச்சு!! ஹாஹா... என்னைய திட்டு திட்டுனு திட்டி தீர்த்துவிட்டான். ஆனா உண்மையிலே ரொம்ப பாசக்கார பைய புள்ள!! 20 நிமிஷம் நடந்துச்சு இந்த கூத்து!

ஒருத்தனை ஏமாற்றிவிட்டோம் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. நேற்றுதான் இரண்டு வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தேன். உலகத்தின பாரத்தை இறக்கிவச்ச மாதிரி இருந்துச்சு. இத கொண்டாட வேண்டும் என்று நினைத்ததால், இன்னும் ஒரே ஒரு தோழியிடம் கலாய்க்கலாம்ன்னு நினைச்சு என் பள்ளி தோழிக்கு அழைத்தேன். அவளும் ஏமாந்துவிட்டாள். ஆனால்,அவளுக்கு சந்தேகமாகவே இருந்ததாம். காதல் கதை உண்மையாக இருக்க, அவள் அது ஜோக் என்று சொல்லிவிட்டால், எங்கே என் மனம் புண்பட்டுவிடுமோ என்று எண்ணி அவள் என் கதையை நம்பிவிட்டாளாம். ஹாஹாஹா.. கிட்டதட்ட அரை மணி நேரம், காதல் என்றாலே இப்படிதான். உனக்கு அவனை பிடிச்சுருக்கா? அவன பாக்கும்போது உனக்கு எப்படி இருக்கும்? என்ன தோனுது? இப்ப சொல்லாத, பரிட்சை முடிஞ்ச பிறகு சொல்லு.

இப்படி ரொம்ம்ம்ம்ம்பப, அன்பாக சொன்னாள். தளபதி ரஜினி-மம்மூட்டி, காதல் தேசம் வினித்-அப்பாஸ், நட்புக்காக விஜயகுமார்- சரத்குமார், பட்டியல் ஆரியா-பரத் என்ற வரிசையில் தோழிக்காக எதையும் செய்யும் இவளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். பாதிலேயே என் கூத்தை முடித்திருப்பேன். அவ பேச பேச ரொம்ப சூப்பரா இருந்துச்சா, நானும் அவள் பேச்சை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனா பாவம், என் மேல செம்ம கடுப்புல இருக்கு பொண்ணு. happy april fools' day என்று சொன்னபோது, அவளுக்கு செம்ம கோபம். ஏனா, எனக்கு இப்படி உண்மையில ஒன்னு நடந்துச்சுன்னா, முதல சந்தோஷப்படுற தோழி இவளாக தான் இருப்பாள்! அப்படிப்பட்ட நட்புக்கு நான் ஏமாற்றும் வகையில் ஒரு பொய் சொன்னது சரியில்ல தான். ஆனா, என்ன பண்ணறது... ஹாஹாஹா.... அவளை சமாதானப்படுத்த வேண்டுமுங்கோ!!

என்னடாது, நம்ம கற்பனை கதைக்கு இப்படி ஒரு வரவேற்பா!! என்னமோ தெரியுல 'சதீஷ்' கதை எனக்கு ரொம்ப பிடிச்சுபோய், அடுத்த தோழிக்கு போன் செய்ய சொன்னது மனசு! சுதாவுக்கு போன் செய்து சொல்ல ஆரம்பித்தால்,

// "என்ன பத்தி நீ என்ன நினைக்குறே. ஒரு பொண்ணா நான் எப்படிப்பட்டவ. நான் ஒரு நல்ல girlfriendஆ இருக்க முடியும்?//

என்று சொன்னவுடனே சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். எப்படி கண்டுபிடித்தே என்று கேட்டால், உன்ன பத்தி எனக்கு தெரியும். இன்னிக்கு என்னடா உன் லொள்ளு வரலையேன்னு நினைச்சேன். அதான் உஷாரா இருந்தேன். பிறகு, முழு கதையை அவளிடம் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தாள். முழு கதையை கேட்டு இருந்தால்கூட அவள் நம்பி இருந்திருக்க மாட்டாளாம். ஏன்னா, அவள் சொன்னாள்,

"உன்ன பத்தி எனக்கு தெரியும்டி, உனக்கு இப்படிலாம் செய்ய வராது. நீ ரொம்ப straightforward. உனக்கு பிடிச்சுருந்தா ஒகே சொல்லி இருப்பே. பிடிக்கலன்னா, நோ சொல்லி இருப்பே. இப்படி போட்டு குழப்பி இருக்கமாட்டே. இத ஒரு பெரிய விஷயமா யாருக்கிட்டயும் சொல்லி இருக்க மாட்டே. அப்படியே சொன்னாலும், காமெடியா சொல்லி இருப்பதவிர சீரியஸா சொல்லி இருக்கமாட்டே." என்றாள்.

அவ்வ்வ்வ்வ்.... என்ன ரொம்ப நல்லா புரிஞ்சுவச்சுருக்கா!! சும்மா இருந்த என்னை, இன்னும் இருவரிடம் இதே கதையை சொல்லு என்று உஸ்பேத்தினாள் சுதா. அவர்கள் இருவரும் ஏமாற, மொத்தம் 6 பேரிடம் சொல்ல அதில் 4 பேர் ஏமாந்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் மூழ்கினேன்.
ஆனால், ஏமாந்த எல்லாரும் சொன்ன பொதுவான கருத்து,

  • எனக்கும் இப்படி நடந்து இருக்க.. நானும் குழம்பி இருக்கிறேன் (அட மக்கா, உனக்கும் காதல் அனுபவமா, என்கிட்ட சொல்லவே இல்ல..)
  • இப்ப உனக்கு முக்கியம் உன் படிப்பு
  • உண்மையில அவன பிடிச்சுருந்தா.. ஒகே சொல்லிடு

ஹாஹாஹா... என்னத்த சொல்ல.... கதையைவிட நான் குரலில் காட்டிய சோகம்தான் வெற்றிக்கு காரணம். இப்படி ஏப்ரல் முதல் தேதி சூப்பரா போனுச்சு. இன்னொரு ஒரு கூத்து அடித்தேன். அது வேறு ஒரு கதை.(பிறகு சொல்கிறேன்) இப்படி செய்வது விளையாட்டுத்தனமாக இருந்தாலும், அவர்கள் நட்புக்கும் நண்பனுக்கும்/தோழிக்கும் கொடுக்கும் மரியாதை ரொம்ப பெரிசுப்பா!! பிரச்சனை என்றுவந்தால், ரொம்பவே அக்கறை எடுக்கும் இவர்களுக்கு சிங்கப்பூர் கடற்கரையில் சிலை வைக்க வேண்டும்!!!!!!

புலி வருது புலி வருது என்று சொல்லி ஏமாற்றிவிட்டேன், உண்மையில் ஒரு நாள் புலி வரபோகுது, அன்னிக்கு இருக்குதடி எனக்கு!!!

22 comments:

மங்களூர் சிவா said...

மீ த பர்ஸ்ட்டு

மங்களூர் சிவா said...

ஏப்ரல் 1 ம் தின வாழ்த்துக்கள்

மங்களூர் சிவா said...

பாதி படிச்சேன் கொட்டாவி வருது . அப்புறமா படிக்கிறேன்

மங்களூர் சிவா said...

சதீஷ்க்கு பதில் சிவான்னு இருந்தா கொட்டாவி வராதோ என்னமோ!?!?!

வினையூக்கி said...

:))))

Dreamzz said...

//புலி வருது புலி வருது என்று சொல்லி ஏமாற்றிவிட்டேன், உண்மையில் ஒரு நாள் புலி வரபோகுது, அன்னிக்கு இருக்குதடி எனக்கு!!! //

ithuku repeatu!
nalla thaan ammani emathareenga :)

Thamizhmaangani said...

//nalla thaan ammani emathareenga :)//

நன்றிங்கோ..

Thamizhmaangani said...

//பாதி படிச்சேன் கொட்டாவி வருது //

சிவா, எனக்கு பொய் சொன்னால் பிடிக்காது!

Thamizhmaangani said...

//சதீஷ்க்கு பதில் சிவான்னு இருந்தா கொட்டாவி வராதோ என்னமோ!?!?!//

அட பாவி!!

ரசிகன் said...

டமிலு..... ஹாஹ்ஹா.... கலக்கல்தான் போங்க..:)))))

ரசிகன் said...

// மங்களூர் சிவா said...

ஏப்ரல் 1 ம் தின வாழ்த்துக்கள்//

SEE முட்டாள் தினத்திற்க்கு சரியா வாழ்த்து சொல்லிக்கிறாங்க :))))

ரசிகன் said...

//ஒருத்தனை ஏமாற்றிவிட்டோம் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. //

அடப்பாவி மக்கா.. இந்த பொண்ணுங்களே இப்படிதானோ :P:P:P

ரசிகன் said...

//நீ ரொம்ப straightforward. உனக்கு பிடிச்சுருந்தா ஒகே சொல்லி இருப்பே. பிடிக்கலன்னா, நோ சொல்லி இருப்பே. இப்படி போட்டு குழப்பி இருக்கமாட்டே. இத ஒரு பெரிய விஷயமா யாருக்கிட்டயும் சொல்லி இருக்க மாட்டே. அப்படியே சொன்னாலும், காமெடியா சொல்லி இருப்பதவிர சீரியஸா சொல்லி இருக்கமாட்டே." என்றாள்././

சைக்கிள் கேப்புல... சொந்த பெருமையெல்லாம் விளம்பரமா? (கேக்க வேண்டியவங்கள்ல்லாம் நோட் பண்ணிக்கோங்கப்பா..:P:P:P )

ரசிகன் said...

//உண்மையில் ஒரு நாள் புலி வரபோகுது, அன்னிக்கு இருக்குதடி எனக்கு!!!//

ஆஹா... அப்டியா சங்கதி..:)))))
அப்போ ஒரு எதிர்பார்ப்புல தான் ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்க :P:)))))))

ரசிகன் said...

//இப்படி உண்மையில ஒன்னு நடந்துச்சுன்னா, முதல சந்தோஷப்படுற தோழி இவளாக தான் இருப்பாள்! //

அடடா.. என்னே ஒரு நட்பு.இப்படியல்லவோ இருக்க வேண்டும்.:))))

//பிரச்சனை என்றுவந்தால், ரொம்பவே அக்கறை எடுக்கும் இவர்களுக்கு சிங்கப்பூர் கடற்கரையில் சிலை வைக்க வேண்டும்!!!!!!//

ஏன் இந்த கொலைவெறி :)))))

Thamizhmaangani said...

ஹாலோ ரசிகன்,

//அடப்பாவி மக்கா.. இந்த பொண்ணுங்களே இப்படிதானோ :P:P:P//

யோவ், என்னய்யா இது!! நாங்க ரொம்ப பாவம்!

//சைக்கிள் கேப்புல... சொந்த பெருமையெல்லாம் விளம்பரமா? (கேக்க வேண்டியவங்கள்ல்லாம் நோட் பண்ணிக்கோங்கப்பா..:P:P:P )//

சொந்த பெருமையா? உண்மைய சொன்னா, ரசிகனுக்கு ஏன் காதுலேந்து புகை வருது? அப்பரம் கேக்க வேண்டியவங்களா? யாருங்க அது... எனக்கு ஒன்னும் தெரியாதுப்பா.. இந்த ஆட்டத்துக்கு நான் வரல சாமியோ!!

Thamizhmaangani said...

//ஒரு எதிர்பார்ப்புல தான் ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்க :P:)))))))//

அட நீங்க வேற, வெந்த புண்ணுல ஆசிட் ஊத்தாதீங்க..

ரசிகன் said...

//Thamizhmaangani said...

//ஒரு எதிர்பார்ப்புல தான் ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்க :P:)))))))//

அட நீங்க வேற, வெந்த புண்ணுல ஆசிட் ஊத்தாதீங்க..
//

ஹய்யய்யோ .. என்ன மேட்டரு???

Divya said...

செம கலாட்டா போலிருக்கு....!!!!

\\ஒருத்தனை ஏமாற்றிவிட்டோம் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. \\

இதுவல்லவோ சந்தோஷம்!!

நல்லாயிருக்கு உங்க அட்டகாசம்!

sathish said...

கொஞ்சம் late'அ உங்க பதிவுக்கு வந்துட்டேனு நினைக்குறேன்! உங்க கலாட்டாவுக்காக நீங்க உபயோகிச்ச பெயர சொல்றேன் :))

sathish said...

//மங்களூர் சிவா said...
சதீஷ்க்கு பதில் சிவான்னு இருந்தா கொட்டாவி வராதோ என்னமோ!?!?!
//

எனக்கு கொட்டாவி வரலீங்கோவ்!!!

Thamizhmaangani said...

//கொஞ்சம் late'அ உங்க பதிவுக்கு வந்துட்டேனு நினைக்குறேன்! உங்க கலாட்டாவுக்காக நீங்க உபயோகிச்ச பெயர சொல்றேன் :))//

அவ்வ்வ்வ்....:))