Nov 4, 2008

அஜித்துக்கு பிடிச்ச ஸ் எம் ஸ்

அஜித்து எப்போதுமே இந்த ஸ்எம்ஸை delete செய்யாமல் வைத்து இருக்கிறாராம். ஒரு வேளை ஷாலினி அனுப்பிவச்ச ஏதேனும் ஒரு ஸ்எம்ஸா என்று பார்த்தால் அது இல்லையாம். அவரது நண்பர் அனுப்பிவைத்த ஒரு குறுந்தகவல்

"எந்த துன்பங்கள் வந்தாலும் எந்த தடைகள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. ஏன் என்றால் நான் நூறு முறை ஜெயித்தவன் இல்லை. ஆயிரம் முறை தோற்றவன்"

தன் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால் இதை அழிக்காமல் தன் கைபேசியில் வைத்துள்ளார் தல!

இதை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நண்பர்களுக்கு அனுப்பினேன்! :)

"No matter what type of sorrows hit us hard, do not feel discouraged. We r mentally and physically strong. Not bcos we have met success 100 times, bcos we have struggled thru failures a 1000 times"

3 comments:

பிரியமுடன்... said...

நான் ஒன்று புதுசா....இல்லை இல்லை பழையதை மீண்டும் சொல்லட்டா.....
எவரோ எழுதிய கவிதை இது!
நூறாவது முறையாக கீழே
விழுந்தவனை எழுப்பி
ஆறுதலாக அவன் சொன்னான்!
நீ 99 முறை விழுந்தபின் எழுந்தவனாயிற்றே என்று!
ஒவ்வொரு வீழ்சியிலும் எழுச்சி பிறக்கிறது!!
ஒவ்வொரு தோல்வியும் வெற்றியின் படிக்கட்டுதான்! இதை ஏறும் படிக்கட்டுகளா அல்லது இறங்கும் படிகட்டுகளா என்று நம்மதான் முடிவு செய்யவேண்டும்!!
மின்தூக்கி இயங்கவில்லை என்றால் உன் கால்கள் மிந்தூக்கிகளாக மாறுவதுபோல....உன்னுள் இருக்கும் உன் வலிமை உனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்!

FunScribbler said...

@பிரியமுடன்

//மின்தூக்கி இயங்கவில்லை என்றால் உன் கால்கள் மிந்தூக்கிகளாக மாறுவதுபோல....உன்னுள் இருக்கும் உன் வலிமை உனக்கு என்றுமே உறுதுணையாக இருக்கும்!//

சூப்பர்! இத ஆட்டோ பின்னாலேயே எழுதி வைக்கலாமே!:)

SUDHARSAN said...

nice