Jan 29, 2009

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்-3


தற்போது சைட் அடித்து கொண்டிருப்பது......
பென்னி டயால்!

'மதுரைக்கு போகாதடி....' பாடலை பாடியவர். சென்ற வாரம் காபி வித் அனு நிகழ்ச்சியில் வந்தார். ஓ மை காட்......வாவ்! என்னமா திறமை இருக்கு!

முடி வைத்திருப்பதைவிட இல்லாமல் இருப்பது தான் இவருக்கு இன்னும் அழகை தருகிறது. மொட்டை பாஸ் மாதிரி இருக்கும் அவரிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு! :) (கண்களாலும் சரி குரலாலும் சரி)

high pitch toneல் என்னமா சுலபமா பாடுகிறார். ஆடிகொண்டே பாடும் திறன் ஒரு சிலருக்கு தான் உண்டு. அந்த வகையில் இவர் இரண்டிலுமே கலக்குகிறார்!

Name: Benny Dayal
Age: 23
Birthday: May 13, 1985
Location: Chennai, India
Hometown: Abudhabi
Occupation: HR

oh benny benny........

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (1)

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள் (2)

Jan 28, 2009

9 வருஷ நட்பு இன்னும் தொடரனும்.

பள்ளி நண்பர்களின் சந்திப்பு- 26/01/09

ஒவ்வொரு வருஷமும் குறைந்தது இரு முறையாவது சந்தித்து கொள்வோம். போன வருஷம் அதிகமாகவே இருந்தது. காரணம் எல்லாரும் தங்களது 21வது பிறந்தநாள் கொண்டாடத்தை கொண்டாடினர். ஒவ்வொரு நண்பரின் பிறந்த நாளுக்கும் போய்விடுவோம் (பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்தே...பட்ஜெட் சங்கர் படம் அளவுக்கு ஏறிபோச்சு...அத வேற கதை..)


மதியம் 12 மணிக்கு வந்துடுங்க என்று தோழி ஸ் எம் ஸ் செய்தாள் அதற்கு முன் தினம். எங்களை ஒன்று திரட்டி ஏற்பாடு செய்த தோழிக்கு பெரிய கட் அவுட் வைக்கனும். ஏன்னா, ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லாருக்கும் தெரியும். இதை ஒரு மாதம் முன்பே, தொடங்கிவிட்டாள். கெட்டிக்காரி! (என் ஃபிரண்டாச்சே..:)


அக்காவுக்கும் என் பள்ளி நண்பர்களை நன்கு தெரியும் என்பதால், அக்காவும் வந்தாங்க. நானும் அக்காவும் தான் சொன்ன நேரத்திற்கு சென்றோம். அதுக்கு அப்பரம் ஒவ்வொரு ஆளா வந்து சேர்ந்தாங்க. ஒவ்வொருவரும் ஒரு சாப்பாடு ஐட்டம் கொண்டு வரனும். mee goreng (noodles வகை மாதிரி ஒன்னு), egg fried rice, sambal chicken, sardine fish curry, chicken nuggets, egg masala,chips, biscuits, coke, miranda...என்று பலவகையான சாப்பாடு.

இவ்வளவு வந்துவிடும் என்று தெரியாது. தெரிந்து இருந்தால், இரண்டு நாள் பட்டினியா இருந்திருப்பேன்!:)


நண்பர் விக்கி என்பவர் பாவம். கால்ல ஆப்ரேஷன் அவனுக்கு. இருந்தாலும் பதினாறு வயதினிலே சப்பானி மாதிரி வந்து சேர்ந்துட்டான். எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இவங்க எல்லார்கிட்டயும்- என்ன நடந்தாலும் சரி, சந்திப்பு என்றால் கண்டிப்பா வந்துடுவாங்க.

இன்னொரு தோழியின் தங்கையோட பிறந்தநாள். அப்படி இருந்தும் அன்று, தோழி இங்கு வந்தாள். சாப்பாடு வயிற்றை நிரப்பியது. இவர்கள் பாசம் மனசை நிரப்பியது (ஃபீலிங்ஸ் ஆஃ தளபதி ரஜினி, மம்மூட்டி)

பொங்கலுக்கே வெடி வெடிப்போம். தீபாவளி வந்தா சும்மா விடுவோமா! ஒருத்தர் இரண்டு பேர சந்திச்சுக்கிட்டாலே, முடிஞ்சுது. இதுல பத்து பேரு நாங்க, சும்மா இருப்போமா...கேலிக்கும் கூத்துக்கும் பஞ்சமே இல்ல!

இங்க குரூப்ல இங்களவிட கொஞ்ச வயது அதிகம் முத்து என்னும் நண்பருக்கு தான். அவருக்கு கூடிய சீக்கிரத்தில் கல்யாணம் ஆக போகுது, புது வீடு வாங்கிவிட்டார்- இப்படி அவர் சொந்த கதைய சொல்ல, நாங்க கிண்டல் பண்ண...டைம் போனதே தெரியல.

அப்பரம் இன்னொரு தோழி இருக்கா. சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவள், 1008 தடவ ஃபோன் வரும் அவளுக்கு. சென்னையில் மாமா மகன் ஒருத்தர் இருக்கார் அவளுக்கு. இவளுக்கும் இந்த மாமா மகனுக்கு கல்யாணம் ஆக போகுது. ஆக, இத வச்சே இவள கன்னாபின்னான்னு கிண்டல் அடிப்போம்.

அவள் ஃபோன் attend பண்ணிட்டு வந்தாள்.

அக்கா: ஏய், can u come and eat first? who was that on the line?
அவள்: overseas call...
நான்: அப்பரம், அத்தான் சாப்பிட்டார? மாமியார் சாப்பிட்டாங்களா? மாமனார் சாப்பிட்டாங்களா?
இவங்களாம் சாப்பிட்டு பிறகு தான் இவ சாப்பிடுவாள். இவங்க சாப்பிடலன்னா, பச்சை தண்ணிகூட பல்லுல படாது பாப்பாவுக்கு!

என்று சொல்லி முடிப்பதற்குள் என்னைய அடிக்க ஓடி வர, நானும் ESCAPE!

அப்பரம் உலக கதை, சொந்த கதை, சோக கதை. sydneyயில் படித்து கொண்டிருக்கிறாள் இன்னொரு தோழி. அவளை 'sydney-return' என்று கிண்டல் அடிப்போம். ஏன் என்றால் அவள் இட்லியைகூட spoon/forkல் தான் சாப்பிடுவாள்.

ஏதோ ஒன்னு பேசிகிட்டு இருந்தபோது, ஆஸ்பித்திரி என்ற வார்த்தை வந்துவிட்டது. உடனே அக்கா, "ஏய் guys, எனக்கு ஒரு கவிதை தோனுது."

எல்லாரும் ஆர்வமாய் அவள் சொல்வதை கேட்க,

"ஆஸ்பித்திரி போனா ஒரு கற்பஸ்திரி
புள்ள பொறந்த பிறகு தெரிஞ்சுது
அவள் history!"

என்றாள்.

பக்கத்திலுள்ள கல்ல எடுத்து தூக்கிபோட்டனர் சிலர். ஆஹா ஓஹோ என்று பாராட்டினர் சிலர். இதுக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் குழம்பி இருந்தனர் சிலர்.

அதற்கு அப்பரம், guessing-the-movie-name விளையாட்டை விளையாடினோம். இரு குழுக்களாய் பிரித்தோம். ஒரு படத்தின் தலைப்பை பாவனை செய்து தன் குழுவை அத்தலைப்பை சொல்ல வைக்கனும். கேள்வி படாத பட பெயர்லாம் வந்துச்சு... செம்ம காமெடியா போச்சு. எல்லாருக்குள்ளயும் ஒரு நடிப்பு திறமை இருக்குப்பா!

இதுல டாப் காமெடி என்னவென்றால் 'sydney-return' அடிக்கும் கூத்து தான். எல்லா படத்துக்கு ஒரே மாதிரியான பாவனை செய்து காட்டி எங்களை கொலைவெறிக்கு ஆளாக்கினாள்!!!

நேரம் 430 ஆகிவிட்டது. சில புகைபடங்களை எடுத்து கொண்டு வீடு திரும்பினோம்.

அடிச்சு போட்ட மாதிரி உடல் சோர்வு ஏற்பட்டது. இத்தனைக்கும் நாங்க அதிகமா ஒன்னுமே பண்ணல!???!!! :)

Jan 23, 2009

கடைசி நாளாக இருந்திருக்கும்...

வெள்ளிக்கிழமை மாலை 4 மணி. அம்மா ஃபோன் செய்தார்.

"காயத்ரி. வேலை முடிஞ்சுட்டு...அழைக்க வரீயா?"

"சரி மா" என்று சொல்லி முடித்து கார் சாவியை எடுத்து கொண்டேன்.

4.10 ஆகிவிட்டது. அம்மா வேலை இடத்திற்கு செல்ல இரண்டு வழிகள் உண்டு. expressway மற்றும் normal ரோட். normal ரோட் வழியாக செல்லலாம் என்று மனசு சொல்லியது. ஆனால் ஏனோ தெரியவில்லை expressway பக்கம் திருப்பினேன். கொஞ்ச தூரம் சென்றேன். இடது பக்கம் திரும்புவதற்காக slip roadல் நிறுத்தி main roadல் ஏதேனும் கார் வருதா என்று பார்த்தேன்.

மணி 4.20

நிறுத்தி இருக்கும் வேலையில் பின்னால் இருந்து ஒரு மினி வேன் 'படார்' என்று என் காரை மோதி தள்ளியது! வந்த வேகத்தில் கார் ஒரு குலுங்கு குலுங்கியது!

தூக்கி வாரி போட்டது என் மனம், என் உயிர்!

ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்!

சீட் பெல்ட் போட்டு இருந்தேன். இல்லையெனில் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே தூக்கி ஏறியப்பட்டிருந்திருப்பேன்.

steering wheelலை டக்கென்று பிடித்து கொண்டேன். இல்லை என்றால், மூக்கு, வாய், பல் எல்லாம் போயிருக்கும்!

ஷாக், கோபம், ஏரிச்சல், படபடப்பு என்று லட்ச உணர்வுகள் ஒரே சமயத்தில்!

காரிலிருந்து இறங்கி வேன் ஓட்டுனரை பார்த்தேன். அவரும் அவரது காரிலிருந்து வெளியே வந்தார். வயது 65வது இருக்கும். அந்த சின்ன slip roadல் எதுக்கு அவருக்கு இந்த வேகம்?

என் கார் பின் பகுதி உடைந்து போனது.
அதை பார்த்தவுடன்
ஏரிமலை போல் கோபம் கொப்பளிக்க "don't you know how to drive? %&*#*#(#"

கெட்ட வார்த்தை அருவி போல் கொட்டியது.
கொஞ்சம் கோபம் தணிந்தது போல் உணர்ந்தேன்.

போலிஸுக்கு ஃபோன் செய்து நடந்தவற்றை கூறினேன்.

"மேடம், யாருக்காச்சு அடிப்பட்டு இருக்கா?"

"இல்லை"

"அப்போ, நீங்க அவரோட கார் நம்பரை மட்டும் எடுத்துங்கோ, insurance claim பண்ணிடுலாம். " என்று முடித்துவிட்டார்.

"what the *(#&#@#$%?"

எனக்கு உதவி தேவைய்யா!! தனியா நின்னு தவிச்சுகிட்டு இருக்கேன்!

உடனே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஃபோன் செய்தேன்.

அதற்குள், வேன் டிரைவர் அவசரப்படுத்தினான். 'why are you wasting my time?' என்று அவர் என்னை பார்த்து கேட்டார். கோபம் மலையையும் தாண்டிவிட்டது. அவர் தண்ணி அடித்து இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். உலற ஆரம்பித்தார், ஒரு இடத்தில் இல்லாமல் அங்கயும் இங்கயும் திரிந்தார். கண்கள் சிவப்பா இருந்துச்சு.

நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். "ஹாய் வீரா...." என்று ஆரம்பித்து நடந்தவற்றை கூறினேன். அவன் ரொம்ப உதவி செய்தான். அவன் சொன்னதுபோல் செய்தேன்.

மறுபடியும் ஃபோன் செய்தேன் காவலர்களுக்கு.

நான்: இங்க ஒரு accident. வேன் டிரைவர் என் வண்டியை இடித்துவிட்டான். ஆனா, இங்க சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார். சண்டை போடுகிறார். தண்ணி அடிச்சுட்டு ஓட்டி இருக்கிறார் என்று சந்தேகபடுறேன்.

(நண்பர் கொடுத்த ஐடியா படி நடந்தேன்.)

உடனே காவலர்கள் வந்தார்கள். அப்பா, அம்மா வந்துவிட்டார்கள். நான் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மட்டும் தான் ஃபோன் செய்தேன். வீட்டிலுள்ள அக்காவுக்கு விஷயத்தை சொல்லவில்லை. ஆனா, அதற்குள் அம்மா ஃபோன் செய்து "காயத்ரிக்கு accident" என்று முழுவிவரத்தையும் சொல்லாமல் விட்டார்.

அக்கா பாவம்! பயந்துபோய் ஓடி வந்தார்.

காவலர்கள் வந்தார்கள். என்னுடைய details எடுத்து கொண்டு, என்னிடம் கேட்டார்.

"உங்களுக்கு அவர் குடித்து இருக்கிறார் என்று எப்படி தெரியும்?"

உள்மனசு: ம்ம்...அவருக்கு நான் தான் ஊத்தி கொடுத்தேன்.

எனக்கு ஆச்சிரியமாக இருந்தது அவர் கேள்வி. "madam, i didn't say he was drunk. i reported that he might be drunk. i said i just suspect so."

என் பதிலை கேட்டு விட்டு அவரிடம் சென்றார். ஏதோ details எடுத்து கொண்டார்.

கொஞ்ச நேரம் விசாரணைக்கு பிறகு, வேன் டிரைவர் எங்கள் காரை சரி செய்து கொடுக்கிறார் என்று வாக்குறுதி கொடுத்தார்.

உடனே கார் workshopக்கு சென்றோம். அங்கே அவர் என்ன செய்தார் தெரியுமா?

mechanicக்கிடம் சென்று "bumperர சும்மா glue போட்டு ஒட்டி கொடு" என்றார்.

இவரை என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், mechanic நியாயமானவர். உண்மையை சொல்லிவிட்டார். ஒழுங்கான முறையில் எல்லாவற்றையும் செய்தார்.

car bumper, car sensor light, boot area என்று பல இடங்களில் உடைந்துகிடந்தவற்றை சரிசெய்து கொடுத்தார்.
வேன் டிரைவர் அப்பரம் வந்து என் அப்பாவிடன் 'you happy, i happy. everything ok." என்று சொல்லிவிட்டு கைகுலுக்கிவிட்டு சென்றார்.

என்னிடமும் வந்து கை கொடுத்தார். நான் கண்டுகொள்ளாமல் நின்றேன்!

வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, அம்மாவுக்கு மனசு சரியில்லை.

"அப்பவே ஜோசியக்காரன் சொன்னான்..." என்று ஆரம்பித்தார்.

"சட்னி அரைக்கும்போது, கீழே விழுந்துட்டு jar... அப்பவே நினைச்சேன்.." என்றார்.

ஆஹா... இத கேட்ட பிறகு, வேன் டிரைவர் இடித்ததால் கொடுத்த ஷாக் எவ்வளவோ பெட்டர் என்று தோன்றியது!

சும்மா அரட்டை-3

தோழியின் chat status- 'I can't wait for 6th feb to end.' இதை பார்த்தவுடன் அவளின் chat windowவ திறந்து பேச ஆரம்பித்தேன்.

நான்: ஏய் என்னச்சா..... ஏன் 6th feb?என்ன கல்யாணமா உனக்கு?

தோழி: உதை வாங்குவே. இல்லடி, அன்னிக்கு தான் என்னோட insurance policy module பரிட்சை. அது முடிஞ்சதுன்னா, அங்க தல வச்சு படுக்கவே மாட்டேன்! யப்பா சாமி... போதும் அங்க போய் கிளாஸ் படிச்சது.

நான்: ஓ அந்த கம்பெனிக்கு போய் தனியா coaching கொடுப்பாங்களே அங்கவா... i thought u like that personal trainer?...அவரு பெயருகூட... என்னமோ சொன்னியே!

தோழி- கோபிநாத்! :)

நான்: அட வெட்கத்த பாரு....

தோழி: நாங்க ரொம்ப closeஆ போயிட்டோம்.

நான்: நெருக்கம்ன்னா... ஒரு 0.00001 cm?

தோழி: அடியே!!!!

நான்: சரி கூல் கூல்.....

தோழி: but i had a crush on him too. but....

நான்: ஏய்... அவர் படம் இருக்கா... நான் பாக்கனும்!

தோழி: என்கிட்ட இல்லையே...

நான்: அப்பரம் என்ன படிச்ச கிளாஸுல.... அவர் நம்பர் வாங்கனோமா... இமெயில் அட்ரஸ வாங்கனோமா... இப்படி இத பத்தி பேசமா..நீங்க என்ன பண்ணீங்க?

தோழி: ஏய், அவர் தப்பா நினைச்சுப்பாரு.... he will think that i like him or what so ever...

நான்: ச்சே.. இந்த பொண்ணுங்களே இப்படி தான்...

தோழி: ஒய்... என்ன இந்த பொண்ணுங்களே இப்படி தான் சொல்ற... என் இடத்துல நீ இருந்து பார் உனக்கு தெரிஞ்சு இருக்கும்...

நான்: அப்படி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா.. இந்நேரம் அவங்க பாட்டி பொறந்த தேதி முதல் அவங்க தாத்தா retire ஆனா தேதி வரை full detailsவோட இருந்திருப்பேன்... நீ சுத்த வேஸ்ட்டு! don't be a girl, be a WOMAN!

தோழி: ம்ஹும்ம்ம்....

நான்: சரி சரி... அவரோட பெயரு...... கோபிநாத் ரைட்டு?

தோழி: ஆமா... என் கேட்குற திருப்பி... என்ன பண்ண போற?

நான்: facebookல search பண்ணி பாத்தா, எதாச்சு மாட்டாது?... அதுக்கு தான்.

தோழி: ஏய் அப்படி இருந்தா எனக்கும் லிங் கொடு....

நான்: ஆமாங்கடி....

நான்: ஏய், search results...வந்தாச்சு... gopalakumar gopinath, gaeesh gopinath, senthil gopinath.... சிங்கப்பூர் networkல இவங்க தான் மாட்டுனாங்க.... ஆனா யாருக்குமே படங்கள் இல்ல.

தோழி: அவருக்கு facebook இல்லன்னு நினைக்குறேன்.

நான்: no facebook? does he have a life? இந்த காலத்துல இதுகூட இல்லாம...oh god, இந்த மாதிரி பசங்கள நீ தான் பா காப்பாத்தனும்....

தோழி: இல்லடி, அவருக்கு அதுக்கலாம் டைம் இல்ல.

நான்: அப்ப, நாங்க மட்டும் என்னவாம் டைம பாக்கெட்குள்ளயா வச்சுகிட்டு திரியுறோம்.

தோழி: அப்படி இல்லபா... அவருக்கு அதுல interest இல்ல. ஆனா, நிறைய படம் பார்ப்பாரு... நம்மள மாதிரியே. என்கிட்ட எல்லாத்தையும் சொன்னாரு... late night 1, 2 மணிக்கு தான் படுக்க போவாராம்.

நான்: ஹாஹா.... எல்லாத்தையும் சொல்ற அளவுக்கு closaa...சரி சரி...ரைட்டு!

தோழி: i won't say he is thattttt good-looking, but he is cute.

நான்: இங்க பாரு... பசங்கல அஞ்சு வகை இருக்கு....

தோழி: ஐயோ போதும்டி.... எத்தன தடவ இதயே சொல்லி அறுப்பே.

நான்: ஏய் theory புரிஞ்சா தான்...practicalல நல்லா செய்ய முடியும்.

தோழி: ஒய்...ரொம்ப ஓவரா போது... உனக்கும் ஒரு நாள் இருக்குடி.... உன்கிட்ட எவனாச்சு மாட்டிக்கிட்டு முழிக்க போறான்..

நான்: அபச்சாரம், அபச்சாரம்! யார பாத்து என்ன வார்த்த சொல்லிட்ட... நான் ஆஞ்சநயா பக்தை!! ஜெய் ஆஞ்சநயா!

தோழி: அட கடவுளே! இது ரொம்ம்ம்ப டி உனக்கு! கொடுமை கொடுமை!

நான்: உண்மை கசக்கும் மகளே! anywayz all the best for exam!

தோழி: thanks. meet you at the gathering on monday. tc.

Jan 21, 2009

கள்ளச்சிரிப்பழகா..

கடவுள் 'அழகு'
என்பதை உருவாக்கி
எங்கே வைப்பதென்று
தெரியாமல்
உன் கன்னத்தில்
வைத்தான்!
மிச்சமீதியை உன்
உதட்டில் சேர்த்தான்!

அந்த அழகை
ரசிக்க மட்டுமல்ல
ருசிக்கவும் பிறந்தவள்
நான்!


யார் செய்த தவமோ,
போன ஜென்மத்தில்
பிறந்த வண்டும் பூவும்
இந்த ஜென்மத்தில்
உன் உதடுகளாகவும்
என் உதடுகளாகவும்
மறுபிறவி எடுக்க!




குலதெய்வ கோயிலுக்கு
குடும்பமே புறப்பட
'தலைவலிக்குது நான் வரல'
என்று பொய் சொல்லி
கள்ளச்சிரிப்புடன்
என்னை பார்த்தாய்,
நான் என்ன செய்ய?
எனக்கு பொய் சொல்ல வராதே!


அழகான காயங்கள்
நொடிபொழுதில் ரசிக்க
வைக்கும் மாயங்கள்.
நம்மையே நாம்
மறந்து போவதால்
முத்தமும்
ஒருவித தியானம் தான்!


'ஒன்னு தரவா?' என்று
கெஞ்சி கேட்கிறாயா!
கிறுக்கா,
கேட்காமலே கொடுத்தால்
என்னவாம்?


எத்தனையோ கவிதைகளை
நான் படித்திருந்தாலும்,
என்னை கெஞ்சலாகவும்
கொஞ்சலாகவும்
ரசிக்கும் கவிதை,
நீயடா!


என்னை அப்படி பார்க்காதடா
நான் வெட்கப்படுவதைவிட
என் வெட்கங்கள்
தனியே நின்று
அதிகமாய் வெட்கப்படுகின்றன.



Jan 20, 2009

என்னை காதலிக்க வைத்துவிட்டான்

ஒரு காலத்தில் முற்றிலும் வெறத்த ஒன்றை, இப்போது முற்றிலும் விரும்ப ஆரம்பித்துவிட்டேன்.

பிடிச்சுருக்கு, ரொம்ப பிடிச்சுருக்கு....

புத்தகம் என்றாலே அலர்ஜி ஆகும் எனக்கு, இப்போது அவை மீது தீராத மோகம் வந்துவிட்டது.

எனக்கு பொதுவா ப்ளாக்கில், இணையத்தில் படிக்க பிடிக்கும். நம்ம வசதிக்கேற்ப, ஒரு நேரத்தில் நாலு ஐந்து விஷயங்களை படிக்கலாம். ஆனா, புத்தகம் என்றால்...ஒரே ஒரு focus தான் இருக்கும்.

எப்படி புத்தகம் படிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் வந்துச்சுன்னா...

ஒரு நாள் என் அக்கா ஒரு புத்தகத்தை நீட்டி, 'இத படி, ரொம்ப சூப்பரா இருக்கு' என்றாள்.

வாங்கி புத்தகத்தின் தலைப்பை பார்த்தேன் "one night @ the call centre by chetan bhagat"

"ஓ.. indian writer?" என்றேன்.

"படிச்சு பாரு...ஒரு இரவுல ஒரு ஃபோன் வருது.. அதுவும் கடவுள் ஃபோன் பண்றாரு..." என்றாள் அக்கா.

அட நல்லா இருக்கே என்று சொல்லி கொண்டே படிக்க ஆரம்பித்தேன். பொதுவா அக்காவுக்கு பிடிச்சது எனக்கு 100% பிடிக்கவே பிடிக்காது. எனக்கு பிடிச்சது அக்காவுக்கு 200% பிடிக்கவே பிடிக்காது.

அக்கா- அஜித் ரசிகை, வியாழன் சைவம், பிடிச்ச கலர் ப்ளாக்
நான் - விஜய் ரசிகை, வாரத்துக்கு எட்டு நாளும் அசைவம், வெள்ளை பிடிக்கும்.

அக்கா கொடுத்த புத்தகமாச்சே...சும்மா பார்ப்போமே என்று புரட்டி பார்த்தேன். ஆனா, எங்கள் இருவருக்கும் பிடித்த முதல் விஷயமே இந்த புத்தகம் தான்!

don't judge a book by its cover என்பார்கள். ஆனா, you can judge a book by its second page. ஏன்னா, அதுல தானே எழுத்தாளர் படம் போட்டு இருக்கும். ஹாஹா...

படிக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் 25 பக்கமாவது படித்துவிடுவேன். அடுத்த என்ன ஆகும்... எப்ப அந்த ஃபோன் வரும் என்று ஆர்வத்தை தூண்டிவிட்டார் எழுத்தாளர். கதையை முடித்தவுடன் ஏதோ அதிகமாய் அறிவு கூடியது மாதிரி ஒரு உணர்வு. :)

அதற்கு அப்பரம் தான் தோன்றியது, புத்தகம் படிப்பது எவ்வளவு சுவாரஸ்சியமான ஒன்று என்று! பிறகு, அதே எழுத்தாளர் எழுதிய 'five point someone' புத்தகத்தை படிக்க தொடங்கிவிட்டேன்.

அக்காவுக்கு நன்றி!
புத்தகம் படிக்கும் ஆசையை தூண்டிவிட்டு, அவைமீது காதல் ஏற்படுத்தி, என்னை காதலிக்க வைத்துவிட்ட சேத்தன் பக்காத்விற்கு நன்றி!

chetan bhagat's website

Jan 13, 2009

என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுபாடு-200வது பதிவு

பொங்கல் திருநாள் வாழ்த்துகள் அனைவருக்கும். மாட்டு பொங்கல் வாழ்த்துகள் சிலருக்கும்! :)
பொங்கல் பொங்கி வரும் வேளையில் உதிக்கும் சந்தோஷம் எவ்வளவு பெரியதோ, அதே அளவு சந்தோஷம் இந்த வலைப்பூவிற்கும் உண்டு. இன்று தனது 200வது பதிவை தொட்டுவிட்டது.

ஆமாங்க... கடந்த 4 வருஷமா ஓடிகிட்டு இருக்கும் பயணத்தில் ஒரு மையக்கல். நிறைய மொக்கையான விஷயங்களுக்கு இடையில் சில நல்ல பதிவுகளை தந்து உள்ளேன் என்ற மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

எந்த தடையும் இன்றி, இன்னும் நிறைய பதிவுகளை தாங்கி நிற்க வேண்டும் என்று என் வலைப்பூவை நான் வாழ்த்துகிறேன்!:)

Jan 11, 2009

எல்லாம் புகழும் இறைவனுக்கே!




பட்டாம்பூச்சி விருது கொடுத்து இருக்காங்க எனக்கு. கொடுத்த வள்ளல்கள் மகா பிரபு பிரியமுடன் பிரபு மற்றும் சின்ன தம்பி கார்த்திக்.

ஆஸ்கார் விருது கிடைச்ச மாதிரி இருக்கு. ரொம்ப சந்தோஷமா இருக்கு. என் வலைப்பூவையும் படிக்க வாசகர்கள் இருக்காங்கன்னு நினைக்கும்போது... ஃபீலிங்ஸ் ஆப் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் கண்ணுல வழியுது.

199வது போஸ்ட் இது. இப்படிப்பட்ட ஒரு தருணத்தில் இப்போன்ற விருது இன்னும் உற்சாகத்தை கொடுக்கிறது. முழுமையான சந்தோஷம் என்பது நமக்கு கிடைத்த சந்தோஷத்தை மற்றவர்களிடம் கொடுத்து சந்தோஷப்படுவதே ஆகும். (இது கோழி பிரியாணிக்கு மட்டும் ஒத்துவராது...:)


இப்போ இந்த விருதை மூன்று பேருக்கு கொடுக்கவுள்ளேன்.


வினையூக்கி- ஒரு பக்க கதை எழுதுவதில் வல்லவர், நல்லவர். நிறைய தகவல்களும் பகிர்ந்து கொள்வார் அவரது வலைப்பூ மூலம். நான் விரும்பி படிக்கும் வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.


ஸ்வேதா- ரொம்ப நல்ல பொண்ணு. (ஐ... நல்ல ஜோக் அடிக்குறேன்ல..) ஸ்.எம்.ஸை பகிர்ந்து கொள்வதில் இவர் கிள்ளாடி. மொக்கை ஸ் எம் ஸாக இருந்தாலும் சரி, ஜாலியான ஸ் எம்ஸாக இருந்தாலும் சரி அவரது வலைப்பூவில் போட்டு தாக்கிடுவார். இவரது வலைப்பூவை படித்து ரசித்து சிரித்து இருக்கிறேன்.


நவீன் - இவர் மனுஷனே இல்ல... ஐயோ... வேட் வேட்... அதையும் தாண்டி ஒரு மிகப்பெரிய தெய்வ கவிஞன் சொல்ல வந்தேன். காதல் கவிதைகள் எழுதுவதில் டாக்டர் பட்டம் எடுக்க போகிறார். (என்னால் முடிந்த கிசுகிசு...):)

Jan 8, 2009

ஒரு நாள்- இயக்குனர் ஆனேன்

என் இனிய தமிழ்மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிரோஜா பேசுகிறேன். மொக்கை, மகா மொக்கை, காதல் கவிதை, காலேஜ் கலாட்டா என்று உங்கள் கண்களுக்கு இதுவரைக்கும் வெறும் மருந்து கொடுத்து கொண்டிருந்த நான் இனி மண்வாசனை மாறாத ஒரு விருந்து கொண்டுக்க வந்துள்ளேன்.ஏதோ கள்ளிப்பால் கொடுக்காமல்.......(cut)......

யப்பா...கொஞ்ச அப்படியே பாரதிராஜா மாதிரி பேச முயற்சி செஞ்சு பாத்தேன்...முடியல...ஹாஹா....சரி எதுக்கு இந்த லீடு சீன்னா... இரண்டு குறும்படம் இயக்கியுள்ளேன். பொறுங்க பொறுங்க...ரொம்பலாம் கற்பனை வேணாம்...ஒரு போட்டிக்காக இந்த வீடியோ செய்தோம்.

இரண்டு நிமிடங்களுக்குள் இந்த வீடியோ இருக்க வேண்டும். கொடுத்த தலைப்பு “ஏதேனும் பூகம்பமோ, இயற்கை பேரிடரோ, அல்லது வேறு ஏதேனும் அவசர காலத்தில், நீங்க எதை பாதுகாக்க நினைப்பீர்கள்?”

ஒரு பெரிய தல, நடு தல, சின்ன தல- அதாங்க அக்கா, நான், தங்கச்சியும் யோசிக்க ஆரம்பித்தோம். முதல் வீடியோ

மூலக்கதை- அக்கா
கதை, வசனம், நடிப்பு- தங்கச்சி
திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவாளர்,எடிட்டிங்- நான் தான் (டி ஆர முந்திகொள்ள ஆசையில்ல...)

வீட்டின் அறை தான் லொக்கேஷன். இரண்டே இரண்டு ஷாட் தான். ஆக, முதலே ஒத்திகை பார்த்து கொண்டோம். காட்சி இப்படி போகும்....தங்கச்சி கோபத்துடன் அறையின் கதவை படார்னு சாத்தனும். இரண்டு மூனு முறை அதையே ஒத்திகை பார்க்க, எங்க வீட்டு பணிப்பெண் சமையலறையிலிருந்து “ஏய் என்னங்கடி கதவ போட்டு உடைக்கிறீங்க.... அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என்று கத்தினார்.

சரி சரி, வளரும் கலைஞர்களுக்கு எதிர்ப்பு வர தான் செய்யும். அதையும் தாண்டி நாங்க வீடியோவை எடுத்து முடித்தோம். ஒரு கட்டத்தில் பூகம்பம் வந்தது போல் மேசை ஆட வேண்டும். அதற்காக அக்கா மேசை கீழ் உட்கார்ந்து மேசையை அசைத்து அசத்திவிட்டார். உண்மையிலேயே பூகம்பம் வந்ததுபோல் இருந்துச்சு! அதுக்கு அப்பரம் என்ன நடந்ததுன்னு வீடியோவ பார்த்து தெரிஞ்சிக்குங்கோ....

இரண்டாவது குறும்படம். அதே தலைப்பு ஆனால் விஷயம் வேற. எங்களது பள்ளியை பாதுகாக்க ஆசைப்படுகிறோம் என்பது தான் விஷயம். அக்கா பேசுவார். இதற்காக மூடப்பட்ட பள்ளிக்கு சென்றோம். பள்ளி 5 வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்டது. அங்கு சென்று வேலையை முடித்தோம்.

நான் கற்று கொண்டது தெளிவான ஒலிப்பதிவுக்கு மைக் பயன்படுத்த வேண்டும் அல்லது re-recording செய்ய வேண்டும். இரண்டுமே செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் படத்தை உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்று sun pictures...ச்சி...ஐ மின் akka pictures (எங்க அக்காவின் தொல்லை காரணமாக...) கேட்டு கொண்டதால் செய்ய முடியவில்லை.

இப்போ வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் வீடியோவிற்கு சென்று உங்கள் பொன்னான முத்திரைகளை போட வேண்டும். pls vote for the videos by clicking on the right side of the 5th star. அதுக்கு தான் 5-ஸ்டார் ரேட்டிங். நிறைய வோட்ஸ் இருந்தால், பரிசு கொடுப்பார்கள்....:)

கண்டிப்பாக வோட்ஸ் போடுங்கோ! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ஏன்னா இது வித்தியாசமான படம் (எல்லாரும் சொல்றாங்களே...அதான் நானும் சொல்றேன்:)

* ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்க இப்படங்கள்!

links for the video

http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18560.html


http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18498.html

Jan 6, 2009

புதிய பாதை

இந்த வருஷம் முதல் நான் indian classical keyboard கத்துக்க போறேன். இது வரைக்கும் western படிச்சுகிட்டு இருந்தேன்... இப்ப புதிய பாதையில் பயணிக்க இந்த ஏற்பாடு. இந்த வாரம் புது வகுப்பு ஆரம்பிக்க போகுது. ரொம்ம்ப ஆர்வமா இருக்கு...ஆனா அதே சமயம் கொஞ்சம் nervousaa இருக்கு.... :(

இந்த வருஷத்தின் தீர்மானம்/பெரிய கனவு, ஆசை என்னவென்றால் ஒரு இசை கச்சேரி செய்ய வேண்டும் என்பதே. நான் கீபோர்ட், அக்கா கித்தார் வாசிக்க கத்துக்க போறாங்க. என்னொரு தோழியும் கித்தார் வாசிப்பா. அப்படியே தங்கச்சிய ஒரு பாட்டு பாட சொல்லி, நாங்க ஒரு performance பண்ணனும்னு எனக்கு ஆசை! நிறைவேறினால், என் வரலாற்றில் நான் எழுதி கொள்வேன்ய்யா!!:)

Jan 4, 2009

நாளைக்கு ஸ்கூல்!

நாளைக்கு 3வது வருஷத்தின் 2வது semester. அவ்வ்வ்வ்வ்...இரண்டு மாசமா லீவு. நாளைக்கு காலேஜ் ஆரம்பிக்க போகுதுன்னு நினைச்சா அழுவாச்சியா வருதுப்பா!

லீவுல என்ன பண்ணலாம்னு நினைச்சு அத செய்யுறதுக்கு முன்னாடியே லீவு முடிஞ்சுட்டே...

அவ்வ்வ்வ்வ்.....

Jan 2, 2009

மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல.... என்னை போய்.....

2009 வின் புது வரவு!

8 வருஷமா எங்க வீட்டுல வேலை செஞ்ச பணிப்பெண் இந்த வருஷத்தோட ஊருக்கு போறாங்க. அவங்களுக்கு கல்யாணமாம். திருப்பி வர மாட்டாங்க. பணிப்பெண் என்றாலும் எங்க குடும்பத்துல அவரும் ஒருத்தர். அக்கா, தங்கச்சி, எனக்கும் நல்ல தோழி! அவங்க கிளம்புறது கொஞ்ச கஷ்டமா இருக்கு.... இருந்தாலும் என்ன செய்ய....

சிங்கையில பொதுவா பணிப்பெண்கள் இருந்தால் தான் குடும்ப வண்டி ஓடும். அதுவும் எங்க வீட்டுல கட்டாயம் தேவையான ஒன்று. ஆக, ஒரு புது பணிப்பெண் தேடனும். சென்ற வாரம், ஒரு maid agencyக்கு போனாங்க அம்மாவும் அப்பாவும். எனக்கு தெரியாது இந்த மாதிரி maid agencyகிட்ட 4 மாசத்துக்கு முன்னாடி register பண்ணிவச்சாங்க அப்படி இப்படின்னு.

ஏன் இந்த மாதிரி முக்கியமான விஷயங்கள எங்கிட்ட சொல்லாம விட்டுடீங்கன்னு சரியான கோபத்துல இருந்தேன். கார் ஓட்டிகொண்டே

“ஆமா, ஆமா முக்கியமான விஷயத்துலாம் சொல்லிடாதீங்க. அப்பரம் வீட்டுல ஏதாச்சு நடந்தா...உனக்கு தெரியாதா...நீயும் இந்த வீடுல தானே இருக்கேனு...ஒன்னு சொல்வீங்க...” என்றேன் கோபத்துடன்.

அம்மா: சொல்லிட்டேனு நினைச்சேன்....

நான்: அது எப்படி நினைக்க முடியும்...மறந்துட்டேனு சொல்லுங்க...

maid agency வந்து அடைந்தோம். அவர்கள் இருவரும் மட்டுமே உள்ளே சென்றனர். கார் பார்க் செய்ய இடமில்லாததால் நான் வேறு இடத்திற்கு சென்று கார் நிறுத்தினேன். காரில் நான் உட்கார்ந்து தோழிக்கு ஸ் எம் ஸ் அனுப்பி கொண்டிருந்தேன்.

25 நிமிடம் கழித்து அம்மா ஃபோனில் அழைத்தார்....

அம்மா: காயத்ரி, கார அங்க எங்கயாச்சும் பார்க் பண்ணிட்டு இங்க வா.

நான்: why?

அம்மா: இங்க ஒரு பொண்ணு இருக்கா....வந்து இந்த பொண்ண பாரு.

எனது மனம்: ஆஹா, மாப்பிள்ள பாக்க வேண்டிய வயசுல என்னைய போய் பொண்ண பாக்க வைக்குறாங்களே! என்ன கொடுமை விநாயகா இது!

நான்: பொண்ணா? நானா? நீங்களே decide பண்ணுங்க...நான் வந்து என்னதான் பண்ண போறேன்.

ஃபோனை வைத்துவிட்டேன். 2 நிமிடம் கழித்து அப்பா அழைத்தார். சரி இந்த தடவையும் ‘பிகு’ பண்ணா, சோறு கிடைக்காது என்று நினைத்து.. அவர்கள் சொன்ன இடத்திற்கு சென்றேன். ஒருத்தர் நின்று கொண்டிருந்தார். ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருந்தாங்க..

அம்மா: இவங்க தான். நீ ஏதாச்சு கேள்வி கேட்கனும்னா கேட்டுக்கோ.

அந்த பொண்ணை பார்த்து

“நீங்க எந்த ஹீரோவோட ரசிகர்?” என்று கேட்க வாய் துடித்தது. ஆனால் சொற்களை முழுங்கி கொண்டு

நான்: ஐயோ நான் என்ன கேட்க.... ஒன்னுமில்ல...

என்று சொல்லியபடி அவரை பார்த்து சிரித்து வைத்தேன். பதிலுக்கு அந்த பொண்ணும் சிரித்தார்.

வீட்டில் எத்தனையோ துடைக்க வேண்டிய fanகள் இருந்தாலும், அசைக்க முடியாத மூன்று fanகள் உள்ளன

அஜித் fan- என் அக்கா
விஜய் fan- நான்
சிம்பு fan- என் தங்கச்சி...

புதுசா வரவங்க எந்த கட்சியில சேர போறாங்கன்னு தெரியல...let's wait and watch :)

Jan 1, 2009

Ups & Downs of my 2008

சென்ற வருஷத்துல கொஞ்ச சாதனை, கொஞ்ச கஷ்டங்கள். படிப்புன்னு சொல்ல போனால், எப்பவுமே கில்லி தான். இதே மாதிரி செஞ்சுட்டு வந்தா, நல்லா இருக்கும். என்ன ஒன்னு, அதுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டபடுனும். இந்த பரிட்சை நேரத்த நினைச்சாவே, படு காண்டாக்கீதுப்பா!

சந்தோஷமான தருணங்கள்-
2008ல நான் சாதிச்சது பாத்தீங்கன்னா... 150வது போஸ்ட் வலைப்பூவில். keyboard கத்துகொண்டது. யோகா செய்ய தொடங்கியது. அப்பரம்....ம்ம்ம்... வாழ்க்கையில செமையா கொண்டாடிய என் தோழி ஒருத்தியின் பிறந்தநாள் கொண்டாட்டம். என் weightயை சீராக வைத்திருப்பது. தேசிய கிரிக்கெட் அணியில் சேர்ந்தது....

கஷ்டமான தருணங்கள்:
காலில் muscle fibre torn ஆனது. கை வலி. இப்படி நிறைய உடல்நல குறை ஏற்பட்டது. ஆபரேஷன் வரையில் செல்ல வேண்டியதா போச்சு. ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். நிறைய மாதங்கள் வலைப்பூ பக்கமே வரவே இல்ல! வீட்டில் பல கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு, அதனால் நிறைய பிரச்சனைகள், மனவேதனைகள். இதனாலேயே, கிரிக்கெட் அணியிலிருந்து என்னை விலக சொன்னார்கள். இப்படி நான் ஆசைப்பட்டது என் கையைவிட்டு போனது.

எல்லாம் வருடமும் நல்லா இருக்கவேண்டும் என்பதே ஆசை. அத்தனைக்கும் ஆசைபடுவோமே! :) புத்தாண்டு வாழ்த்துகள் என் வலைப்பூவுக்கு... உங்களுக்கும்!