Nov 3, 2008

தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்(1)...



பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம். இது பறவைகளுக்கு மட்டும் இல்ல, பசங்களுக்கும் தான்! தற்போது நான் பார்த்து ரசிக்கும் ஒருத்தர் தான், விஜய் டிவி நாடகம் 'காக்கி'யில் நடிக்கும் ராகவன் கதாபாத்திரத்தில் வருபவர். பெயருக்கு ஏற்ற உருவம், உயரம், அழகு(ஐயோ.. நான் வெட்கப்படலேங்க...) எல்லாம் இருக்கு அவருக்கு. ராகவனை பாத்தா, எனக்கு சத்யம் விஷால் தான் ஞாபகத்துக்கு வருது. ராகவன் வருவதாலேயே இந்த நாடகத்தை பார்க்கிறேன், ரசிக்கிறேன் (சைட் அடிக்கிறேன்)





(நடுவில் இருப்பவர்)









அன்னிக்கு தோழியோட பேசிகிட்ட இருந்தபோது, அவ சொன்னா "ஜோடி நம்பர் ஒன் michael ரொம்ப handsome di"

நான் உடனே "i think sampath looks gr8 too"

அவ என்னைய பாத்து ஒரு மாதிரியா கேவலமா லுக் விட்டாள்.


உண்மையிலேயே சொல்றேன், சம்பத் வயதுக்கு அவர் அழகு தான். என்னவோ தெரியல...அவர்கிட்ட ஒரு magnetic attraction இருக்கு. நான் நினைக்குறேன், அவர் சிரிப்பும்(killer smile) மீசையும் தான்!

ஒரு நேரத்துல இரண்டு பேரா? ஆமாங்க அப்பரம் ஆண்டவன் எதுக்கு இரண்டு கண்களை கொடுத்தார்....ஹிஹி..

இன்றைய நிலவரப்படி இவர்கள். இந்த நிலை நாளைக்கோ அல்லது ஒரு வாரம் கழித்தோ, அல்லது அடுத்த மாதமே மாறலாம்...


காத்திருப்போம்!

9 comments:

பிரியமுடன்... said...

என் இனிய தமிழ்மகளுக்கு
என் இனிய தமிழ் வணக்கம்!
என்ன இது?
எதுக்கு?
என்னாது....சின்னப்புள்ள தனமாயிருக்கு!
தப்பேயில்ல....கொஞ்சம் கூட
தப்பேயில்ல....
ஆண்களுக்கு பெண்கள் என்றுமே குறைந்தவர்கள் கிடையாது!
நான் கூட ஒரு இரண்டு மூன்று பேரை சைட் அடிக்கிறேனே....
அப்ப பெண்கள் நீங்கள் அடிப்பதில் தப்பேயில்ல...நடக்கட்டும்!
ஆயிரம் கண் வேண்டும் என்று
ஆத்தாகிட்ட வேண்டிக்கொள்ளுங்கள்!

Sanjai Gandhi said...

ஹிஹி.. நான் கூட அந்த அசிஸ்டெண்ட் கமிஷணரா வர கருப்பழகிய ரொம்பவே சைட் அடிக்கிறென்.. :)

பொண்ணுன்னா அப்டி தான் இருக்கனும்.. என்னா அழகு என்னா அழகு..

சும்மா வெள்ளத் தோல் வச்சிருக்கிற பொண்ணுங்களை விட இந்த மாதிரி கருப்பழகி தான் எனக்கு பிடிக்கும். :))

.... அண்ணனுக்கு தங்கச்சிக்கும் ஒரே சீரியல்ல வரவங்க தான் பிடிச்சிருக்காங்க...

என்னா குடும்பம்டா இதுன்னு கேக்கறவங்களுக்கு.. சரியான குர்குரே குடும்பம் எங்களோடது.. :))

ச.பிரேம்குமார் said...

அது சரி தான் காயு. நல்லா தான் சமத்துவத்த கடைப்பிடிக்கிறீங்க :)

FunScribbler said...

@பிரியமுடன்
//ஆயிரம் கண் வேண்டும் என்று
ஆத்தாகிட்ட வேண்டிக்கொள்ளுங்கள்!//

அப்பரம் நான் தினமும் 1000 பதிவு போட வேண்டியது வரும்:)

FunScribbler said...

@சஞ்சய் அண்ணா,

அண்ணா, வாங்கண்ணா! அந்த தமயந்தி பொண்ணா? ஒகே, கூல். அப்படி ஒரு பொண்ண தேடி உங்க முன்னாடி நிறுத்துறேன்.
நான் அண்ணனுக்கு செய்யாம வேற யாருக்கு செய்வேன்...(feelings of கிழக்கு சீமையிலே ராதிகா):)

கருணாகார்த்திகேயன் said...

அண்ணனும் தங்கையும் சேர்ந்து நல்ல சமத்துவமும், பாசமும் காட்டுறிங்க...

Revathyrkrishnan said...

காயூ... நானும் உங்க கட்சிதான்... கண்டிப்பா சம்பத் ரொம்பவே attractive... என் ஃப்ரன்ட்க்கு அவர ரொம்ப பிடிக்கும் சென்னை28 படத்துல...

FunScribbler said...

@ரீனா

//காயூ... நானும் உங்க கட்சிதான்... கண்டிப்பா சம்பத் ரொம்பவே attractive... என் ஃப்ரன்ட்க்கு அவர ரொம்ப பிடிக்கும் சென்னை28 படத்துல.//

நம்ம கட்சிக்கு பலம் சேர்க்கும் ரீனாவே, நீர் வாழ்க! :)

sri said...

Kannadi check pannunga.

LOL

yeah our (you comma I not you and I LOL) chemistry works in mysterious ways, we may not even explain why our heart flaps for someone whom everyone dont like.