director: "ATM productions வழங்கும் ஆத்தா, பயணம்" இது தான் சார் ஓபனிங்.
producer: யோவ்! கதைய முதல சொல்லுய்யா!
director: சார், இது ஒரு கிராமத்த கதை சார்! ஒரு பெரிய....
producer: wait wait...உன் பேர் என்ன சொன்ன?
director: பாரதி கௌதம்.
producer: ஹாஹாஹா...என்னய்யா பேரு இது?
dir: பாரதிராஜா மாதிரி கிராமத்த படத்த கௌதம் மேனன் மாதிரி ரொம்ப ஸ்டைலீஷா எடுக்கனும்னு ஆசை. அதான்...இந்த பேர வச்சுகிட்டேன்!
prod: சரி கதைய சொல்லு!
dir: சார் ஓபினிங் சீன்....ஒரு பெரிய மாட்டுவண்டி, யாருமில்லாத railway station வெளியே நிக்குது. தண்டவாளத்த long shotல காட்டுறோம். அங்க இருக்கற clockஎ close upல காட்டுறோம். பயங்கரமா காத்து அடிக்குது சார்! மரத்துலேந்து இலை எல்லாம் கீழே விழுது சார்.
prod: எனக்கு தூக்கம் வரதுய்யா! catchingங்கா ஒன்னு இல்லையா!??
dir: சார், அதுக்கு தான் சார் வரேன். எப்போதுமே lateஏ வர train அன்னிக்கு மட்டும் சீக்கிரம் வந்துடுச்சு சார்.
prod: இது ரொம்ப புதுசா இருக்கே...வெரி குட்...மேல சொல்லு.
dir: எல்லாரும் நினைப்பாங்க. நேரம் சரியா இருக்குனு. ஆனா, எல்லாருக்கும் அது bad time!- அப்படின்னு பின்னாடி narration voice போடுவோம் சார். அந்த trainலேந்து ஒரு வயசான பாட்டி கண்ணு ஆபிரேஷன் முடிஞ்சு வறாங்க. கூடவே அவங்க பேத்தியும் இருக்கா.
prod: தமன்னா callsheet என்கிட்ட இருக்கு. அவங்கள இந்த ரோல போட்டுடுவோம்.
dir: இல்ல சார். பாட்டியும் பேத்தியும் ஒரு ஆளு தான் சார் பண்ணனும். double action sir.
prod: தமன்னாவே பண்ணுவாங்கய்யா. மேக் போட்டு பேத்தியா நடிப்பாங்க. போடாம பாட்டியா நடிப்பாங்க. அதலாம் நான் பாத்துகிறேன்.... நீ கதைய மேல சொல்லு.
dir: கண்ணாடி போட்ட ஒரு mechanic அதே ரயில வந்து இருங்குறாரு.
prod: அது என்னய்யா கண்ணாடி போட்ட மெக்கானிக்?
dir: பாரதிராஜா படத்துல கண்ணாடி போட்ட ஹீரோ வர மாதிரி நம்ம படத்துலயும் ஹீரோ கண்ணாடி போடுறாரு சார்...
prod: characters மட்டுமே சொல்லிகிட்டு இருக்க...கதைக்கு போய்யா! கதை இருக்கா இல்லையா?
dir: சார் வரேன் சார். இன்னும் நிறைய characters இருக்கு. ஒரு சின்ன பொண்ணு, 16 வயசு பொண்ணு சினிமால நடிக்கனும்னு ஆசைப்பட்டு ஓடி வறா அதே ரயில.
prod: கிராமத்துக்கு ஏய்யா வறா?
dir: ரயில் மாறி ஏறிட்டா சார்! (கண் கலங்குகிறார்)
prod: அப்பரம் என்ன ஆகுது? அந்த 16 வயசு பொண்ணா யார போடலாம்?
dir: நமீதா.
prod: நமீதாவா? நீ சொல்ற கதையவிட இது இன்னும் shockingஆ இருக்கே!
dir: கவலைப்படாதீங்க சார். ரெண்டே மாசம் 35 கிலோ குறைப்பாங்க. 16 வயசா மாறுவாங்க! நான் guarantee சார் அதுக்கு!
prod: சரி கதையில அப்பரம் என்ன ஆகுது.....
dir: புதுசா கல்யாணம் ஆனா ஜோடி, அமெரிக்கா return ஒரு பையன் - இத்தன பேரும் அந்த stationல நிக்குறாங்க. shot freeze!
எழுத்து-இயக்கம்: உங்கள் பாரதி கௌதம்
அப்படினு போடுறோம் சார்!
prod: title credits எல்லாம் editor பாத்து பாரு. அந்த மாட்டுவண்டி எதுக்கு வெளியே நிக்குது?
dir: பின்னிட்டீங்க சார்! ஒரு audienceஆ இந்த படத்துக்குள்ள நீங்க வந்துட்டீங்க. i like it sir. அந்த மாட்டுவண்டில தான் இவங்க எல்லாருமே கிராமத்துக்குள்ள போறாங்க. அந்த மாட்டுவண்டிய ஓட்டுறது அந்த கிராமத்துக்கே தெய்வம் மாதிரி.
prod: ஆமா அந்த ரோலுக்கு யார....
dir: சார் என் friend நவீன்குமார் பண்ணனும் சார். 'அந்த பக்கம் போகாதீங்க இந்த பக்கம் வாங்க' அப்படினு ஒரு ஹிட் படம் எடுத்தாரே அவரு சார்.
prod: ஓ ஆமா ஆமா!
dir: இந்த powerful role அவர் தான் பண்ணனும். என் படத்துல அவர் கண்டிப்பா நடிச்சே ஆகனும்.
prod: அவர் எடுத்த முந்தைய படத்துல கூட நீ நடிச்ச தானே?
dir: ஆமா சார். இப்படி மாத்தி மாத்தி நடிச்சு கொடுக்குறது தானே சார் இப்ப trend!
prod: (தலையில் அடித்து கொண்டார்) அப்பரம் அந்த மாட்டுவண்டிக்கு என்ன ஆகுது?
dir: திடீரென்னு மழை பெய்யுது. வண்டி வழில breakdown ஆவுது?
prod: மாட்டுவண்டி breakdownஆ? டேய் லாஜிக்கே இல்லையடா இதுல!??
dir: சார், வண்டில problem சார். அத சரி பண்ண மெக்கேனிக் கீழே இறங்கி வேலை பாக்குறாரு. அந்த வேலை பாக்குற ஸ்டைல பாத்து தமன்னாவுக்கு காதல் வரது?
prod: பாட்டி தமன்னாவுக்கா? பேத்தி தமன்னாவுக்கா?
dir: சார், பேத்திக்கு தான் சார் காதல் வரது!
prod: இப்படிலாம்கூட காதல் வருமா?
dir: சார் இது ஒரு வித்தியாசமான காதல் சார்! தமிழ் சினிமாவுல இப்படி ஒரு காதல் காட்சிய audience பாத்து இருக்க மாட்டாங்க!
prod: சரி சொல்லு....
dir: இங்க ஒரு பஞ் டயலாக் சார்! மெக்கேனிக் வண்டி சக்கரத்த கழட்டி உருட்டுறாரு. அத பாத்து பாட்டி கேக்குறாங்க, "தம்பி, ஏன் உருட்டுறீங்க?"
அதுக்கு மெக்கேனிக் பஞ் டயலாக் சொல்றாரு,
"உருட்டுறதுல நான் பூனை மாதிரி.
மிரட்டுறதுல நான் யானை மாதிரி."
அப்படியே மெக்கேனிக் கண்கள close upல காட்டுறோம். கண்ணு சிவந்து போகுது சார்.
prod: யோ, பாட்டி சொன்னதுக்கு எதுக்கு டா பஞ் டயலாக்?
dir: சார், audience விரும்புவான் சார். நீங்க பாருங்க? இது தான் 2011 வருஷத்துல ஹிட் பஞ் டயலாக்கா வர போகுது. இந்த ஒரு பஞ் தான் படத்த 100 நாள் ஓட வைக்க போகுது.
prod: (producer தன் கோபத்தை அடக்கி கொள்கிறார்)
dir: repair பண்ணி முடிச்ச பிறகு வண்டி கிளம்புது.... போற வழில மின்னல், இடி, மழை... ஒரே இருட்டு! நாலு பேரு காட்டுக்குள்ளேந்து வராங்க. முஞ்சிய மூடி இருக்காங்க. கண்ணு மட்டும் தான் தெரியுது. கையில எல்லாருமே gun வச்சு இருக்காங்க. வண்டில இருக்குற எல்லாரையும் close upல காட்டுறோம். அப்படியே அடுத்த ஷாட்.... முஞ்சிய மூடி இருக்குற நாலு பேருல ஒருத்தர் மட்டும் name tag போட்டு இருக்காரு.... name tagஎ close upல காட்டுறோம்.
"அக்ரம் கான் - son of wasim khan"
இங்க தான் interval block!
எப்படி சார் கதை?
prod: எந்த தீவிரவாதிய்யா name tag போட்டு இருப்பான்?
dir: சார், நம்ம ஒரு வித்தியசாமன படம் எடுக்கறதயே நீங்க அப்பெப்ப மறந்துடுறீங்க!!
prod: சரி 2nd halfல கதை?
dir: இந்த கிராமத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன சம்மந்தம்? the mystery unfolds.......
prod: ஆமா? அப்பவே கேட்கனும்னு இருந்தேன். அந்த மெக்கேனிக் ரோலுக்கு.... யார போடலாம்னு...
dir: கார்த்தி தான் இதுக்கு சரியான மேச்.
prod: யோவ்... அவருக்கும் தமன்னாவுக்கும் ஏதோ கிசுகிசு....
dir: இருக்கட்டும் சார். நம்ம படத்துக்கு அப்பரம் அவங்க ரெண்டு பேரு கல்யாணம் பண்ணிகிட்டா நமக்கு தான் சார் பெருமை.
prod: யோ, அப்படிலாம் ஒன்னும் நடக்ககூடாதுய்யா! இன்னும் ரெண்டு படத்துக்கு தமன்னா கால்ஷீட் வாங்கி வச்சுருக்கேன்ய்யா!
dir: சார், தமன்னா கல்யாணத்துக்கு அப்பரம் நடிக்கமாட்டாங்க சார். அவங்க மாமனாரு ரொம்ப strict! 5 வருஷத்துக்கு அப்பரம் கார்த்தியும் தமன்னாவும் சேர்ந்து ஏதாச்சு சுக்கு காபி விளம்பரத்துல வருவாங்க சார், அப்ப பாத்துக்குங்க சார்!
prod: என்னய்யா நீ வேற......? சரி இந்த படத்துக்கு location எங்க?
dir: america. chicago பக்கத்துல இருக்குற ஒரு கிராமம்.
prod: என்னது? அமெரிக்காவா? யோ.... இந்த கதைக்கு எதுக்கு டா அமெரிக்கா.
dir: சார், போன படத்துல எச்சி துப்புற மாதிரி ஒரு காட்சி இருந்துச்சு. அந்த காட்சியவே நாங்க switzerlandல தான் shoot பண்ணுனோம்.
prod: (கையில் வைத்திருந்த பேப்பரை மேசையில் வீசினார்.) நான் கொலவெறியா போறதுக்குள்ள ஓடி போயிடு! நீ எல்லாம் ஒரு director??? உன்கிட்ட கதை கேட்டேன் பாரு...என்னைய.....
dir: சார் சார்.... கோபம் படாதீங்க சார்! என் குருநாதரின் 'நடுநிசி நாய்கள்' படம்
மாறி 'பரதேசி பன்னிகள்' அப்படினு ஒரு கதை வச்சு இருக்கேன் சார்.... அந்த கதைய கேக்குறீங்களா சார்?
producer: எடு அந்த வெளக்கமாத்த!!!!!!!
Mar 18, 2011
Mar 17, 2011
I hate you!
Friday 1am.
"நெப்போலியன் ஒரு மாவீரன். ஆனா, 'அத' அடிச்சா போதை தலைக்கு ஏறிவிடும். காலையில் எழுந்திருக்க முடியாம செய்துவிடும்." தன் நண்பர்கள் உளறுவதை கேட்டான் ராகுல்.
Friday 745am.
தலை வெடித்துவிடுவது போல் இருந்தது. குடித்து பல வருடங்கள் ஆனதால், 'touch' விட்டுபோச்சு! எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் புரண்டான் ராகுல்.
அவசர அவசரமாய் ஆபிஸுக்கு கிளம்பினாள் ராஜி. ராகுல் பார்ட்டிக்கு சென்றுவிட்டு இரவு....அதிகாலை இரண்டு மணிக்கு தான் வந்தான். ராஜிக்கு கோபம். படு கோபம்!
"ஐ எம் சாரி." அவளின் முகத்தை பார்க்க மனமில்லாமல் ராகுல். ராஜி பதில் பேசவில்லை.
"where is this white dupatta? வச்ச இடத்துல இருக்க மாட்டேங்குது." தேடலை தொடர்ந்தாள் ராஜி. அவளின் கோபம் உச்சத்தில் இருப்பதை அறிந்து கொண்டான் ராகுல். எதுவும் பேசாமல் அவள் தேடி கொண்டிருந்த துப்பட்டாவை எடுத்து கொடுத்தான்.
"ஐ எம் really சாரி, ராஜி." தலையை தேய்த்து கொண்டே கூறினான்.
documentsகளையும் fileகளையும் தன் லெப்டாப் பையில் வைத்தாள் ராஜி. chargeலில் இருந்த தனது கைபேசியை handbagல் போட்டாள். மேசையில் இருந்த cereal packetயை அவிழ்த்து ஒரு கிண்ணத்தில் கொட்டினாள். microwave ovenல் சுட வைத்த பாலை கலந்தாள் கிண்ணத்தில். ராகுலின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. பூனைபோல் பாவமாய் நின்றான் கதவு அருகில்.
"என் தப்பு தான்...." என்றபடி ராஜியின் அருகில் உட்கார்ந்தான் ராகுல்.
cereals சாப்பிட்டபடி, "இல்ல ராகுல், எல்லாம் என் தப்பு."
முழித்தான் ராகுல்.
"உன்னைய லவ் பண்ணேன்ல அது என் தப்பு. கல்யாணத்துக்கு அப்பரம் நீ தண்ணி அடிக்க மாட்டேன் என்கிட்ட promise பண்ணினத நம்புனேன்ல அதுவும் என் தப்பு. it's ok ராகுல்.... நீ தண்ணி அடி. தம் அடி....என்ன வேணும் ஆனாலும் செய். just leave me alone." ராஜியின் சினம் வெளிப்பட்டது.
"அப்படி இல்ல ராஜி...." அவளது கையை தொட்டான்.
வெடுக்கென்று கையை எடுத்தாள் ராஜி.
"உனக்காக எவ்வளவு நேரம் wait பண்ணேன் தெரியுமா? நீ friends கூட வெளியே போக வேண்டாம்னு சொல்லல. atleast எத்தன மணிக்கு வருவேன்னு சொன்னா... i could have slept peacefully right? நைட் 2 மணி ஆகியும் வரலைன்னா, நான் என்னென்னு நினைக்குறது?" பட பட படவென்று கொட்டி தீர்த்தாள்.
அவள் பக்கம் உள்ள நியாயமும் ராகுலுக்கு புரிந்தது.
"phoneல battery இல்ல." ராகுல் பாவமாய்.
"all guys say this same DAMN excuse!" கிண்ணத்தை சமையலறையில் வைப்பதற்காக சென்றாள். பின்னாடியே நாய்குட்டி போல் தொடர்ந்தான் ராகுல்.
"உன் ஃபோன்ல charge போச்சு சரி. உன் friends ஃபோன்ன கேட்டு ஒரு sms பண்ணியிருக்கலாமே?" கேள்வியால் மடுக்கினாள் ராஜி.
ராகுல், "அது இல்ல....எல்லாருமே கொஞ்சம் பிஸியா..."
"தண்ணி அடிச்சுகிட்டு இருந்தீங்க! " வாக்கியத்தை முடித்தாள் ராஜி.
"தண்ணி அடிச்சுகிட்டு இருந்தோம்னு localலா பேசாத. சும்மா ஒரு ஜாலிக்காக..." இழுத்தான் ராகுல்.
"then why the HELL did you promise me that you won't drink after marriage?" கையில் இருந்த செய்தித்தாளை சோபாவில் கோபத்தில் எறிந்தாள்.
தொடர்ந்தாள், " ok fine. friends மீட் பண்ணியிருந்த. everyone compelled you to drink. fine! then why did you have to lie to me that you didn't drink? am I that stupid to believe all your nonsensical ridiculous excuses? என்கிட்ட நீ பொய் சொன்னேலஅது தான்.... i can't and I won't forgive you for that!" சரமாரியாய் சாடினாள் ராஜி.
friday 815am.
"why I am wasting time on people who don't love me as much I love them?" சத்தமாய் முணுமுணுத்தாள், ராகுலுக்கு கேட்கும்படி. ஆபிஸுக்கு கிளம்பினாள்.
அவள் காரில் செல்வதை பார்த்தான் வீட்டின் ஜன்னல் வழி. படுக்கையில் விழந்தான் மறுபடியும். ஆபிஸுக்கு போக மனமில்லை. ராஜியின் கோபம் அவனை ஏதோ செய்தது. இனி எந்த தண்ணி பார்ட்டிகளுக்கும் போக கூடாதுன்னு முடிவு செய்தான். ஆயிரம் யோசனைகள் அவனுக்குள் ஓட, கைபேசி sms alert செய்தது.
From: ராஜி செல்லம்
body ache painkillers and panadol tablets are on the table. please do take them. I still love you, idiot!:))))))) hugssssss. I am sorry.

Mar 16, 2011
தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-14
வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் உங்களவிட்டு போகல!! இப்ப தான் பயணம் படத்தை டிவிடில பார்த்து முடித்தேன். படம் சூப்பர்!!!!!!! நாகா அர்ஜுனா அதைவிட சூப்பர்! இந்த வயசலயும்....ஐயோ....முடியலங்க....என்னமா அழகா fitஆ இருக்காரு!! simply superb!
சார், நாகா அர்ஜுனா, சார்! (சார் ரம்பா சார் என்ற பாணியில் படிக்கவும்)
கண்ணும் இரண்டும் ஆயிரம் பேசுதுங்க! அட போங்க சார், உங்க மகனவிட நீங்க இன்னும்.... (சாரி அமலா ஆண்ட்டி)
படத்தில் அவர் சொல்லும் ஆங்கிலம் டயலாக் அனைத்தும் சூப்பர்!
especially, "you're old but not experienced!!" என்ற வசனத்தை பல முறை rewind செய்து பார்த்தேன்:) loved it to the core:)
பின்னிட்டாரு!!!
சைட் அடிக்கவைத்த அம்சம்: கண்கள், mannerism.
கொசுறு: இவர்கூட இந்த படத்தில் நடித்த இன்னொரு ஆபிசரும் சூப்பர்! blue சட்டைக்காரின் பெயர் என்னவோ??? *winks*

Mar 14, 2011
இது தாண்டா chemistry!
புதுசா வந்திருக்கும் sunrise விளம்பரம் facebookல் பட்டைய கிளப்புது. நானும் பார்த்தேன். சூர்யாவையும் ஜோவையும் மறுபடியும் பார்ப்பதற்கு நல்லா இருக்கு. இருந்தாலும்..ம்ம்ம்...chemistry ரொம்பவே மோசம். அந்த onscreen chemistry அவ்வளவாக எடுப்படவில்லை(எனக்கு).
காரணங்கள் பல உண்டு.
1)நடிக்குறாங்கய்யா!?? இயல்பான நடிப்பை தந்து இருக்கலாம். சூர்யாவின் நடிப்பு ரொம்ப artificalலாக இருந்தது.
2) வசனங்கள்- romantic ad ஹிட்டாக வேண்டும் என்றால் அதிகபட்ச வசனங்கள் இருக்ககூடாது. பின்னணி இசையில் பின்னி இருக்க வேண்டும்.
3) காட்சி அமைப்பு/இடம்: location சரியில்லை. sunrise விளம்பரம் என்பதால் காலை நேரத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். இருந்தாலும், அதை இன்னும் ரம்மியமாக காட்டியிருக்கலாம். அதிகமான வெளிச்சத்தை குறைத்து இருக்கலாம். this colour combination is very improper for a romantic ad!
ஒரு நல்ல romantic ad எப்படி இருக்க வேண்டும் என்றால்....இப்படி இருக்கனும்....

Subscribe to:
Posts (Atom)