Sep 20, 2011

நீதானே என் பொன்வசந்தம்
பூஜா பெட்டிகளை கட்டினாள். எல்லா பெட்டிகளும் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்தாள். "அம்மா, 4 bags தானே கொண்டு போறீங்க?" என்று சத்தமாக கேட்டாள் அறையில் இருக்கும் அம்மாவிற்கு கேட்கும்படி.

"yes பூஜா. அந்த red colour bag இருக்கா? அது ரொம்ப முக்கியம். உங்க தாத்தா அத மறக்காம எடுத்துட்டு வர சொன்னாங்க." என்று கூறி கொண்டே ஹாலுக்கு வந்தார். பூஜாவின் அப்பாவும் தயாராகினார்.

"பூஜா, 2 நாலு தனியா இருந்துப்பேல. உனக்கு பயமா இருந்துச்சுன்னா சமீரா ஆண்ட்டி வீட்டுக்கு போ." என்றார் அப்பா பாசத்துடன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த அப்பாவை கட்டிபிடித்த பூஜா, "don't worry dad. i will be fine. I am a big girl." என்றபடி புன்னகையித்தாள். பதில் புன்னகை வீசினார் அப்பா.

"friendsகூட late night phoneலே பேசிகிட்டு இருக்காத! be a good girl nah?" கட்டிபிடித்து நெற்றியில் அன்பாய் முத்தமிட்டார் அம்மா. வீட்டிற்கு வெளியே பெட்டிகளை வைத்து கொண்டிருந்த வேளையில் ஒருவர் கையில் 'donation card' எடுத்து வந்தார். அவர், "சார்...donation collect பண்ணுறோம்...உங்களால முடிஞ்சத கொடுங்க" என்று புன்னகையுடன் கூற, பூஜாவின் அப்பா,

"பூஜா, என் ரூம்ல காசு இருக்கு...give it to him. நாங்க கிளம்புறோம்..." என்று பைகளை தூக்கி கொண்டு புறப்பட்டார். கையில் donation card வைத்திருந்தவர் பூஜாவின் பெற்றோர்கள் போகும்வரை வெளியே நின்று கொண்டிருந்தார். போனவுடன் வீட்டின் உள்ளே நுழைந்து கதவை பூட்டினார். பணத்துடன் வந்த பூஜா திடுக்கிட்டு போனாள். அவளை அணைத்தபடி சோபாவில் விழுந்தான்.

"விமல், விடு! என்ன பண்ற?" அவள் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றாள்.

"நானும் எவ்வளவு நேரத்துக்கு தான் நல்லவனாவே நடிக்குறது?" சிரித்தான் விமல், அவள் கழுத்தோரத்தில் சுவாசம் நுகர்ந்தபடி.

"விமல். stop it! இப்ப தான் கிளம்புனாங்க. மறந்து வச்சுட்டேனே ஏதாச்சு திரும்ப எடுக்க வந்தாங்கன்னா?" விமலை தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்து தனது சட்டையை சரிசெய்து கொண்டாள்.

"hahahaha...நீ நிறைய தமிழ் படம் பாக்குற." அவளது தொடையில் கைவைத்தபடி பதில் அளித்தான். தொடர்ந்தான், "ஒரு நாள் முழுசா டைம் spend பண்ணலாம்னு சொல்லிட்டு ஒன்னுமே பண்ணவிட மாட்டேங்குறீயே?" செல்லமாய் கோபித்து கொண்டான்.

"பாவம் பையன் தனியா hostelல இருக்கானே. company கொடுக்கலாம்னு பார்த்தா...சார் ரொம்ப எதிர்பார்ப்போட வந்துட்டாரோ?" அவனது கன்னத்தை கிள்ளி, அவனது தலைமுடியை கோதிவிட்டாள்.

"அத்தனைக்கும் ஆசைப்படுனு டிவியில எல்லாம் சொல்றாங்க!" பாவமாய் முகத்தைவைத்து கூறினான் விமல்.

"டேய், அது ஆன்மிகம் டா!" சிரித்தாள் பூஜா.

"நித்தியாந்தா கூட தான் ஆன்மிகவாதி!" சொல்லிவிட்டு சிரித்தான்.

"oh my god...you're crazy!" சோபாவில் இருந்த cushionகளை அவன்மீது எறிந்தாள்.

"ஏய் ஏய்..stop it ma," சிரித்து கொண்டே அவளைத் தடுத்தாள். "சரி சரி...what do you want? coffee or tea?" என்றாள் பூஜா. அவன் பதில் அளிப்பதற்கு முன் முந்தி கொண்டாள்,

"please da... coffee or tea? or me...அப்படினு romantic dialogue எல்லாம் வேண்டாம். ஏற்கனவே பல novelsல சொல்லிட்டாங்க."

புன்னகை மாறாத விமல், "no da எனக்கு எதுவும் வேணாம். it's ok."

பூஜா, "why da?" கீழே விழுந்த cushionகளை சோபாவில் அடுக்கி வைத்தாள். அவளுக்கு உதவி செய்தான் விமல்.

விமல், " காபி, டீ எல்லாம் என்னோட future wifeக்கு பிடிக்காது. so நானும் குடிக்கறத stop பண்ணிட்டேன்." பூஜாவிற்கு காபி, டீ எல்லாம் சுத்தமாய் பிடிக்காது.

"ம்ம்...so ஐயா impress பண்ண try பண்ணுறார்..." அவன் கண்களைப் பார்த்து சொன்னாள் பூஜா.

"அப்படியலாம் ஒன்னுமில்ல. 21 வருஷமா குடிச்ச காபி போதும்," என்றவன் டிவி பக்கத்தில் கண்டபடி கிடந்த புத்தகங்களைப் பார்த்து, "oh gosh, என்னது இவ்வளவு books??" என்றான்.

"ஓ.. அதுவா..dad bought books from an online shop. நேத்திக்கு தான் வந்துச்சு. ஆனா, arrange பண்ணாம அப்படியே போட்டு போயிட்டாரு," என்று பதில் அளித்த பூஜா, வெளியே மழை சாரல் அடித்ததால் ஹாலில் உள்ள ஜன்னலை சாத்தினாள். ஏற்கனவே ஹாலில் போட்டிருந்த ஏ.சி குளிரும், வெளியே மழை குளிரும் ரொம்ப இதமாய் இருந்தது.

"cool weather, hot girlfriend- ஒரு மனுஷனுக்கு வேற என்ன வேணும்?" என்றவன் புத்தகங்களை டிவி பக்கத்தில் இருந்த கண்ணாடி அலமாரியில் 'topics' பிரகாரம் அழகாய் அடுக்கி வைக்க ஆரம்பித்தான். அவன் சொன்னதை கேட்டு சிறியதாய் வெட்கம் கலந்த புன்னகையை வீசினாள். அவன் புத்தகங்களை அழகாய் அடுக்கி வைப்பதை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் பூஜா, தனது கன்னங்களில் கை வைத்தவாறு.

"ம்ம்.. விமல்..ரொம்ப நல்லா வீட்டு வேலை பாக்குற... எனக்கு கவலையே இல்ல," என்றாள் பூஜா.

"எத்தன நாளைக்கு தான் பொண்ணுங்களே எல்லா வேலைகளையும் பாக்குறது? நாங்களும் இதலாம் பண்ணுவோம். actually, இப்போ எல்லா பசங்களுக்கு எல்லா வேலையும் தெரியுது. பொண்ணுங்க தான் ரொம்ப மோசம்!!" அலமாரியில் உள்ள 3 அடுக்குகளை முடித்தான்.

"ஹாஹா...of course. இனி நாங்க வேலை முடிஞ்சு வருவோம். dinner செஞ்சு நீங்க தான் தரனும்!!" என்றவள், சோபா உட்கார்ந்து வேலை பார்த்துகொண்டிருந்த விமல் பக்கத்தில் உட்கார்ந்து அவன் தோள்மீது தலைசாய்த்தாள்.

********
"சொல்லு ராஜி, எப்படி இருக்க?" பூஜாவின் அம்மா தனது தோழியிடம் கைபேசியில் பேச, பூஜாவின் அப்பா பெட்டிகளை 1st class compartmentல் எடுத்து வைத்தார்.

"where are you?" என்று வினாவினார் ராஜி.

"நானும் செல்வாவும் ஊருக்கு போய்கிட்டு இருக்கோம். my sis-in-law's brother's engagement. அப்பா ரொம்ப வறுபுறுத்திட்டார். that's why we have to go. " என்றார் பூஜாவின் அம்மா.

மறுமுனையில் இருந்த ராஜி, "oh god. really? இங்க semma boring di. அவரும் டெல்லிக்கு ஆபிஸ் வேலையா கிளம்பிட்டார். உன்னைய வந்து பாக்கலாம்னு இருந்தேன்."

பூஜாவின் அம்மா, "ஐயோ.. நேத்து சொல்லியிருந்தாகூட உனக்கும் சேர்த்து டிக்கெட் போட்டு இருந்து இருக்கலாம். அப்பாவும் உன்னைய பத்தி அடிக்கடி கேட்டுகிட்டு இருப்பார். இப்போ பூஜா மட்டும் தான் தனியா வீட்டுல இருக்கா. i tell you what...."

********
"alright done." வேலை முடித்த களைப்பில் பூஜா மடியில் படுத்து கொண்டான் விமல். அவளது கையைப் பிடித்த விமல் உள்ளங்கையில் இதழ் பதித்தான். தரையில் கிடந்த கருப்பு rubber bandயை எடுத்து விமலின் மூக்கின் கீழே விளையாட்டாய் ஒட்டிப் பார்த்தாள்.

"மீசை வை டா. உனக்கு ரொம்ப அழகா இருக்கும், " புன்னகையித்தாள் பூஜா.

"ஹாலோ, மீசையில்லாமல் இருந்தா தான் city girls எல்லாம் பார்ப்பாங்க." என்றான்.

"சார், நீங்க மீசை வச்சீங்கன்னா A centre, B centre, C centreனு எல்லா ஏரியா பொண்ணுங்களும் உங்கள தான் பார்ப்பாங்க," என்று பூஜா சொன்னதை கேட்டு எழுந்து உட்கார்ந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான் விமல். கூடவே சேர்ந்து சிரித்து மகிழ்ந்தாள் பூஜா.

**********

ராஜி பலமுறை பூஜா வீட்டிற்கு ஃபோன் செய்து பார்த்தார். ஆனால் யாரும் எடுக்கவில்லை.

**********

"ரொம்ப பசிக்குது டா..." பூஜா கூற, அவளை தூக்கி கொண்டு சமையல் அறைக்கு சென்றான்.

"சரி சொல்லு, உனக்கு என்ன வேணும்?" கேட்டான் விமல்.

"நீ என்ன பண்ணாலும் சாப்பிடுறேன்...." என்றாள் பூஜா.

"சுடுதண்ணி ஒகேவா???" என்றவனின் முதுகில் செல்லமாய் அடித்தாள் பூஜா.

அவன் சமையல் வேலைகளை செய்யும் அழகை பார்த்து மறுபடியும் அசந்துபோனாள். காய்கறிகளை வெட்டி கொண்டிருந்தான் விமல். பின்னாடியிலிருந்து அவனை கட்டிபிடித்த பூஜா, "marry me now!"

பின்னாடி இருந்த பூஜாவை தனக்கு முன்னால் மெதுவாய் இழுத்தான், " பக்கத்து தெரு supermartல தாலி விக்குறாங்களா என்ன?"

பூஜா பாட ஆரம்பித்தாள், "தாலியே தேவையில்ல நான் தான் உன் பொன்ஜாதி..." பாடிவிட்டு சிரித்தாள்.

**************

ராஜி பூஜாவின் கைபேசிக்கு அழைத்தாள். ஆனால், கைபேசி ஹாலில் இருந்தது.

*************

"சூடா இருக்குபோது பாத்து...." பூஜா கூற, விமல் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கினான். கோழி குழம்பு வாசம் சமையல் அறை முழுவதும் பரவியது. ஒரு தட்டில் சாதம் போட்டு, குழம்பையும் காய்கறிகளையும் வைத்து பூஜாவிற்கு கொடுத்தான் விமல்.

"ஊட்டிவிடேன்...ப்ளீஸ்...." கெஞ்சினாள் பூஜா. புன்னகையித்துகொண்டே விமல் ஊட்டிவிட்டான்.

**************

ராஜி பூஜாவின் apartment lift lobbyக்கு வந்துவிட்டாள். மின் தூக்கியில் நுழைந்த ராஜி 7ஆம் நம்பரை அழுத்தினாள்.

**************

"நீயும் சாப்பிடு." என்று பூஜாவும் விமலுக்கு ஊட்டிவிட்டாள். "ஐயோ எனக்கு போதும்." என்று வேண்டாம் என விமல் கூறியும் ஊட்டுவதை நிறுத்தவில்லை பூஜா.

**************

மின் தூக்கியிலிருந்து வெளியே வந்தாள் ராஜி. பூஜாவின் வீட்டை நோக்கி நடந்தாள். அப்போது ராஜியின் கைபேசி அலறியது.

**************

"இன்னும் கொஞ்சம் ப்ளீஸ்..." விடவில்லை பூஜா.

"மா...போது மா... எனக்கு fullலா இருக்கு." மேலும் கெஞ்சினான் விமல்.

**************

"என்ன ராஜி, வீட்டுக்கு போயிட்டீயா?" என்றார் பூஜாவின் அம்மா.

"am just outside your house." பதில் அளித்தாள் ராஜி.

"house phone கொஞ்சம் problem நினைக்குறேன். i wanted to inform pooja. but anyway, i have sent her a sms." என்றார் பூஜாவின் அம்மா.

"நான் ஃபோன் பண்ணி பார்த்தேன். but அவ எடுக்கல. i've sent her a sms too. don't worry. i will manage."

ஃபோன்னை கட் செய்துவிட்டு calling bellலை அழுத்தினாள் ராஜி.

பூஜாவுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அதிர்ச்சியில் இருந்தாள்.

பூஜா கதவின் ஓட்டை வழி பார்த்தாள். நெற்றியில் அடித்த பூஜா, " oh gosh. it's raji aunty. அவங்க ஏன் இப்ப இங்க வந்தாங்க...?"

"relax pooja. நீ போய் கதவ open பண்ணு." என்று விமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கூறினான்.

"are you mad? உன்னைய இங்க பார்த்தாங்க. நம்ம இரண்டு பேரும் finished!!" கைகள் நடுங்கியது பூஜாவிற்கு.

calling bell மறுபடியும் ஒலி எழுப்பியது.

"நீ போய் கதவ ஓபன் பண்ணு..." என்றவன் சமையல் அறைக்குள் சென்றான்.

"அங்க போய் என்ன பண்ண போற.... " tension தலைக்கு ஏறியது பூஜாவிற்கு.

"just do what I say..." என்றான் விமல்.

பயம் கைகளில், படபடப்பு மனதில், குழப்பத்தில் கதவை திறந்தாள் பூஜா.

"ஹாய் குட்டி!" என்றார் ராஜி செல்லம். தொடர்ந்தாள், "why did you take such a long time to open?" வீட்டிற்கு நுழைந்தாள் ராஜி.

"what were you doing?" என்ற ராஜி மேசையில் இருந்த சாப்பாடு தட்டை கவனித்தார்.

"ஓ...you were eating ah?" என்று கூறி முடிப்பதற்குள் சமையல் அறையிலிருந்து விமல் வெளியே வந்தான்.

கையில் சின்னதாய் ஒரு plastic bag, அதில் இருந்தது சில screwdriverகளும், plumber பொருட்களும்.

"madam, no problem. இப்ப tapல தண்ணி சரியா வருது. நீங்க ஒரு தடவ போய் check பண்ணிக்குங்க..."

*முற்றும்*

11 comments:

sulthanonline said...

கடைசி லைன் படித்து முடிக்கும் வரை செம த்ரில்லா கதைய எழுதியிருக்கீங்க. beautiful intresting romantic love story.

FunScribbler said...

sulthan: thanks:))

Kumaresh said...

nice one...sema thrilling a kondu poneenga aana climax matum tamil cinema la patha mathiri aiduchu.....

ஷக்தி said...

Romantic mmmmmmm

சதீஸ் கண்ணன் said...

i liked the romantic part more than the suspense

Raja said...

Cool one. Nalla irundhudu. Climax is really nice. :-)

எவனோ ஒருவன் said...

Very romantic and nice.

Anonymous said...

அடி பாவி. நீயே ஐடியா கொடுப்பே போல இருக்கே. சின்னப்பசங்க எல்லாம் இவ ப்ளொக் படிக்க கூடாது. கடைசி வரிகள் கொஞ்சம் கெஸ் பண்ணக் கூடியதாக இருந்துச்சு. மே பி, முதல் வேடம் போட்டிருக்காட்டி கொஞ்சம் கெஸிங் பண்ண முடியாமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Pu..Ka..Ra..Prabhu said...

wavvvvvvvv... Very interesting romantic story.. i loved this more compare to your other love stories..

F.NIHAZA said...

ஐயோ உங்க கதை அத்தனையும் சூப்பர்....
வாசிக்க வாசிக்க தெவிட்டாது....

இப்போதான் உங்க தளத்தை விசிட் செய்திருக்கிறேன்.....

FunScribbler said...

kumaresh: நன்றி boss!
satheesh: அப்படியா? நன்றி நன்றி:)

அனாமிகா: நன்றி தல! என்ன ஆளே காணும்?:))

nihaza: வலைத்தளத்திற்கு வந்தமைக்கு நன்றி அக்கா!:))