Nov 22, 2012

jab tak hai jaan, துப்பாக்கி, போடா போடி:))

இரண்டு வாரங்களில், மூன்று படங்கள்! (உனக்கு வேலையில்லையா?)
ஆமா இருந்துச்சு, ஆனா படம் பார்ப்பதும் ஒரு கடமை!ஹிஹிஹி...

1) jab tak hai jaan- ஆப்பு நம்மில் மேல் வைக்குறான்!

80 வயதிலும் இயக்குனர் யாஷ்ஜி காதல் படம் எடுத்தது பாராட்டுக்குரியது. பாவம், அவர் போயிட்டார்! நல்ல படங்களை கொடுத்தவர். அவருக்கு மரியாதை செய்வது எல்லாம் சரி தான். அதுக்குனு அவர் எடுத்த எல்லா ஷாட்-களையும் படத்தில் வைத்து மூன்று மணி நேரம் கொடுமை செய்தது எல்லாம் தாங்க முடியல!! மூன்று மணி நேரம்....யப்பா...ஏதோ பாஸ் மீட்டிங்-ல இருந்த மாதிரி இருந்துச்சு. தலவலி தான் மிச்சம்:(((

ஏ.ஆர்!!!!!!!!! என்ன ஆச்சு!!?? ஒரு பாட்டு கூட மனசுல நிக்கல! அடங்க போங்க தல, உங்க மேல ரொம்ப வருத்தம்:(

படத்துல எதுக்கு சண்டை போட்டுக்கிறாங்க? அப்பரம் விபத்து...இரண்டாவது விபத்து....அதுக்கு அப்பரம் சாலை சீன் வரும்போதெல்லாம் மனசு 'பக் பக்' இருந்துச்சு! எங்க மறுபடியும் விபத்து சீன் வச்சு நம்மள ஓரே அடியாய் கொன்னுடுவாங்களோனு பயம்!!!

ஒன்னுமே சொல்றதுக்கு இல்ல! காட்சிகளில் ஒரு ஆழம் கிடையாது! படத்துக்கு ஒரே ஒரு ப்ளஸ்- அனுஷ்கா ஷர்மா. jab we met படத்தில் கரீனா கதாபாத்திரம் மாதிரி ஜாலி ரோல். நல்லா செய்து இருந்தாங்க அனுஷ்கா. bridge கீழே ஷாருக் வெடிகுண்டை அகற்றும்போது, அனுஷ்காவின் ஜாலி வசனங்கள் நல்லா இருந்துச்சு.

வெடிகுண்டு wire தான் கலர் கலரா இருந்துச்சு, மத்தபடி படத்தில் எந்தவித சுவாரசிய கலரும் கிடையாது!

jab tak hai jaan- பானி பூரி போச்சே!!!!!!!!!

2) துப்பாக்கி

35 மார்க் வாங்கும் பையன் 55 மார்க் வாங்கினால், அந்த வகுப்பு ஆசிரியருக்கும் என்ன மகிழ்ச்சி கிடைக்குமோ, அதே மகிழ்ச்சி தான் ஒரு ரசிகையாய் எனக்கு கிடைத்தது. இருந்தாலும், 100க்கு 100 மார்க் வாங்கும் பசங்களோடு தான், நிறைய பேர் ஒப்பிடுவாங்க.:((((((

பல தோல்வி, மொக்கை படங்களை கொடுத்திருந்தாலும், இந்த முறை முடிந்த அளவு நல்லா செய்து இருக்கிறார் விஜய்!வித்தியாசமா ஒன்னுமே பண்ணல. அடக்கி வாசித்து இருக்கிறார். அது போதுமே!
அழகாய் சிரிக்கிறார்,
அளவாய் ஆடுகிறார்,
அநியாயத்திற்கு இளமையாய் தெரிகிறார்.

பார்த்து புளிச்ச போன கதையாய் இருந்தாலும், சூர்யவம்சம் தேவையாணி இட்லியை வைத்து உப்புமா செய்துவதுபோல், முருகதாஸ் ஏதோ ஒரு மாதிரியாய் கலவை செய்து ரசிக்கும் வண்ணத்தில் படம் எடுத்து இருக்கிறார்.

விஜய் தொடர்ந்து இப்படியே நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தப்பி தவறிகூட 'பிரபுதேவா' 'பேரரசு' போன்றவர்களை கனவிலும் நினைக்காமல் இருப்பது நல்லது!


துப்பாக்கி- பீரங்கி
(ps: google google பாடலுக்கு இன்னும் நல்லா நடனம் அமைத்திருக்கலாம்!)

3) போடா போடி

நிறைய பேருக்கு படம் பிடிக்கல. எனக்கு பிடிச்சு இருந்ததுச்சு. நான் சிம்பு ரசிகை அல்ல! இளமை துள்ளும் கதை களம், வசனங்கள், பாடல்கள் என்று பல ப்ளஸ்! முதல் பாதி கொஞ்சம் அருவையாக இருந்தாலும், ரெண்டாவது பாதி தூள்!

பிடிச்ச விஷயங்கள்

1) படம் 2மணி நேரம் தான்!

2) குழந்தை பிறக்கும் காட்சியில், சிம்பு துடித்து கண்ணீர் விடும் நடிப்பு- நல்லா இருந்துச்சு VTVல அந்த பெஞ்சல உட்கார்த்து அழுவும் காட்சி போல்.

3) ஹீரோயின் வரு- பார்க்கவும், சிரித்தாலும் நாட்டாமை போல் இருந்தாலும், துள்ளலான நடிப்பு பார்க்க கியூட்டா இருந்ததுச்சு. சண்டை போட்டு கொள்ளும் காட்சிகளில் பிச்சி வாங்கியிருக்கிறார்!! டான்ஸ் என்றால் என்ன தெரியுமா?நீ ஆடுற டப்பாங்குத்து கிடையாது என நாக்கை மடித்து நக்கல் செய்யும் விதம் அருமை.

4) படம் முடிந்தவிதம். டான்ஸ் போட்டியில் கோப்பையை வென்ற மாதிரி காட்டாமல் முடித்தவிதம் இயல்பு!

5) லண்டன்

6) தரணின் பின்னணி இசை

பிடிக்காத விஷயங்கள்:

1) வரு- கொஞ்சம் வேகத்தை குறைத்து பேசலாம். சில காட்சியில் ஒல்லியாக இருக்கிறார். சில காட்சியில் வேறு மாதிரி இருக்கிறார். continuity missing!!

2)முதல் பாதியின் திரைக்கதை ஓட்டம்

3) முதல் பாதியில் வரும் சிம்பு

4) வரு-வின் முடி அலங்காரம். காதலில் சொதப்புவது எப்படி படத்தில் அமலா பால்-கும் அதே ஸ்டைல். நான் ஈ படத்தில் ஈ-கும் அதே முடி ஸ்டைல்! 

போடா போடி- இளையர்களுக்கு பிடிக்கும் (அப்போ பிடிக்கலனா வயதானவர்களானு கேட்க கூடாது!!!)



2 comments:

Thava said...

மூன்று படங்களையும் ஒரே பதிவுல..கலக்கிட்டீங்க..படிக்க ரொம்ப சுவார்ஸ்யமாகவும் இருந்தது.தொடருங்கள்.நன்றி.

மாணவன் said...

Nice reviews...