Jun 19, 2013

காதல் கவ்வும் (பகுதி 2)- சிறுகதை

பகுதி 1

காலை மணி 10 ஆனது. வாசல் கேட்-டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் அஷ்வின். மாடியில் நின்று கொண்டிருந்தாள் அனிதா. அவன் வருவதை பார்த்தாள். ஆனால், ஒன்றும் அலட்டி கொள்ளாமல் அப்படியே நின்றாள்.

அஷ்வின் நேராக மாடிக்கு சென்றான். சாக்லெட் மில்க் ஷேக் குடித்தவாறு கைபேசியில் பேஸ்புக் பார்த்து கொண்டிருந்தாள். அனிதா அருகே வந்து நின்றாள் அஷ்வின். ஒன்றும் கேட்காமல் இருந்தாள் அனிதா. சிறிது நேரம் கழித்து, அஷ்வின்,

"ஐ எம் சாரி, அனிதா." என்றான். நடந்து வேறு பக்கமாய் சென்றாள் அனிதா. அவளை பின் தொடர்ந்தவன் மறுபடியும் அவள் பக்கத்தில நின்றான் அஷ்வின்.

"ஐ எம் ரியலி சாரி, மா. இனிமே இப்படி செய்ய மாட்டேன்." என்றான்.

"என்ன திடீரெனு ஞானம்?" என்றாள் அவள். பார்வை கைபேசியில் இருந்தது.

அவள் இடுப்பை அணைக்க, அவனது வலது கை சென்றது. அதை கவனித்தாள் அனிதா. தலை குனிந்து கைபேசியை பார்த்து கொண்டிருந்தவள், தலை நிமிர்ந்து அஷ்வினை பார்த்து முறைத்தாள்.

"ஒகே ஒகே. சாரி சாரி.... ஞானம் எல்லாம் ஒன்னுமில்ல" என்று சமாளித்தான்.


*************************************************************
இரவு மணி 11 ஆனது.

அஷ்வின் தனது நண்பன் ரமேஷிடம் நடந்ததை தொலைபேசியில் சொன்னான்.ரமேஷின் மனைவி,திவ்யா, வேலை விஷயமாக வெளியூர் சென்று இருப்பதால், தனது வீட்டிற்கு வர சொன்னான் ரமேஷ்.

அஷ்வின், "மச்சான்...நான் செம்ம டென்ஷன்ல இருக்கேன் டா..." என்றான் ரமேஷின் வீட்டு சோபாவில் உட்கார்ந்தவாறு. உட்கார்ந்தவன், சற்று சோபாவில் கைவைத்து பார்த்தான்.

"டேய்....ஏன் டா சோபா ஈரமா இருக்கு?" என்றான் அஷ்வின்.

தரையில் உட்கார்ந்திருந்த ரமேஷ் சோபா மேசையில் chips பாக்கேட்களை திறந்தபடி, " அதுவா? towelல அங்கே போட்டேன் டா...அதான்... நீ தள்ளி உட்காரு மச்சான்!"

தனது கால்சட்டை ஈரமாக போனதை சுட்டி காட்டி, "டேய்! ஈரமா போச்சு டா! நான் என்ன பண்ண?" என்றான் அஷ்வின்.

ரமேஷ், "ஐயீயே...ஏன் டா என் பொண்டாட்டி மாதிரியே எதுக்கு எடுத்தாலும் கத்துற?" என்று சிரித்தவன், "டேய் மச்சான், என் ரூம்ல போய் வேற shorts மாத்திக்கோ.

அறைக்கு சென்ற அஷ்வின் மறுபடியும் கத்தினான். வாயில் chipsகளை போட்டவாறு, ரமேஷ் அறைக்கு சென்றான். "என்ன மச்சான் உன் பிரச்சன?"

மெத்தையில் மலை போல் குவிந்துகிடந்த துணிகளை சுட்டிகாட்டிய அஷ்வின், "டேய் என்ன டா இது?"

ரமேஷ், "ஓ இதுக்கு தான் சத்தம் போட்டீயா? cupboard சுத்தம் செய்ய சொன்னா திவ்யா. போன வாரம் எடுத்து வெளியே போட்டேன். இன்னும் செய்யலடா."
ரமேஷ் அந்த 'மலை'யிலிருந்து ஒரு புது shorts எடுத்து அஷ்வின் கையில் திணித்தான்.

அஷ்வின், "இதலாம் எப்ப டா உள்ள எடுத்து வைக்க போற?"

ரமேஷ், "86 வருஷம் கொடுத்தாலும். பொண்டாட்டி வரத்துக்கு ஒரு நாள் முன்னாடி தான் சுத்தம் செய்யுவோம்!!! உனக்கு தெரியாதா மச்சான்?" என்றபடி ஒரு chips பாக்-கேட்-டை முடித்தான்.

ஹாலுக்கு மறுபடியும் வந்தனர். "உனக்கு சோடா மிக்ஸ் பண்ணனுமா வேண்டாமா?" கேட்டான் ரமேஷ். ஏதோ யோசனையில் இருந்தான் அஷ்வின்.
அஷ்வினின் தோளை தட்டினான் ரமேஷ்.

ரமேஷ், "டேய், சோடா வேணுமா?"

இருவரும் பேசி கொண்டே தங்களது கடமைகளை தொடங்கினர். ரமேஷ், "உன் சோகம் எனக்கு புரியது மச்சான். திவ்யாவும் அப்படி தான். இந்த ரெண்டு வாரமா நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா!! ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"

இரண்டாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

அஷ்வின், "திவ்யாவுமா? she was our very good collegemate, மச்சான்."

ரமேஷ், "எல்லாமே friendஆ இருக்கும்வர தான். கல்யாணம் நடந்தா...அவ்வளவு தான். அத பண்ணு. இத பண்ணு. அத செய்யாத. இத செய்யாத. ஏன் bill கட்டல்ல? காய்கறி வாங்கிட்டு வா. electrician கூப்பிட்டு. சித்தி பொண்ணுக்கு காது குத்து function.........ஐயோ ராமா!!" என்றவன் இரண்டாவது பாட்டில்லை திறந்தான்.

அஷ்வின், "ஏன் டா அப்படி?"

ரமேஷ், "திவ்யாவா இருந்தாலும் சரி, திரிஷாவா இருந்தாலும் சரி. கல்யாணத்துக்கு அப்பரம் பொறுப்பு வரும்னு எதிர்ப்பார்ப்பாங்க!! தக்காளி, அது தான் தமிழ்லே நமக்கு பிடிக்காத வார்த்தையாச்சே!!!."

மூன்றாவது chips பாக்-கேட் திறக்கப்பட்டது.

பேசி கொண்டு இருக்கையில், அஷ்வின், "டேய் ரொம்ப சூடா இருக்குது ஹால். ஹால் ஏ.சி switch on பண்ணுடா. "

ரமேஷ், "repair டா...."

அஷ்வின், "அப்பரம் ஏன் டா electricianஎ கூப்பிடல?"

ரமேஷ், "டேய்!! பொண்டாட்டி வைரஸ் உனக்கு வந்துருச்சுனு நினைக்குறேன்! ரொம்ப கேள்வி கேட்காத!!" என்றவன் மூன்றாவது பாட்டில்லை திறந்தான்.

போதை தலைக்கு ஏறியது ரமேஷ்க்கு.

அஷ்வின், "are you ok?"

ரமேஷ், "ஐ மிஸ் திவ்யா!!ச்சே... எனக்கு அழுகையா வருது மச்சான்!"  என கத்த ஆரம்பித்தான். அவனை சமாளிக்க முயன்றான் அஷ்வின்.

அஷ்வின், "ரெண்டு வாரம் சந்தோஷம். பொண்டாட்டி வைரஸ் அப்படி இப்படினு சொன்னே!"

ரமேஷ், "ohh izz it? நானா? நானா?" என்று சந்தரமுகி ஜோதிகா போல் நடித்தான். ரமேஷுக்கு ரொம்ப முத்தி போய்விட்டதால், அஷ்வின் அவனை அறைக்கு அழைத்து செல்ல முற்பட்டான்.

ரமேஷ், "உனக்கு ஒரு உண்மை தெரியுமா, அஷ்வின்?"

அஷ்வின், "என்ன?"

ரமேஷ், "இந்த ரெண்டு வாரம் ரொம்ப கஷ்டமா இருக்கு. i really miss her da. i really love her."

அஷ்வின், "சரி ஒகே ரைட்டு. நீ கீழே விழுமா நடந்து வா" என்றபடி ரமேஷின் கையை பிடித்து கொண்டு அறைக்கு சென்றான்.

மேலும் 'உளறினான்' ரமேஷ், " கோபம் ரொம்ப வரும் அவளுக்கு. ஆனா ராத்திரி அப்படியே நாய்க்குட்டி மாதிரி வந்து நெஞ்சுல சாஞ்சி பா!! சாரி கேட்பா. அவ என்னோட முதல் பாப்பா.... சரியா பா?"

அஷ்வின் ஒரு வழியாய் அவனை அறை படுக்கையில் 'போட்டான்'.

ஹாலுக்கு வந்து சோபாவில் இவனும் விழுந்தான். யோசித்தான். ரொம்ப யோசித்தான்.

************************************************************************

"சொந்தமாவே யோசிச்சு. நான் செஞ்ஜது தப்பு-னு தோணிச்சு..." என்று பதில் சொன்னான் அஷ்வின்.

"நீ சொந்தமா யோசிச்சே?? சரி நம்பிட்டோம்...." நக்கல் அடித்தாள் அனிதா, அவனைப் பார்த்து.

தொடர்ந்தாள் அனிதா, "சொந்த புத்தி இருக்கறவன் தான் செத்து போக போறேனு சொல்வானா....என்னையும் செத்து போ-னு சொன்னே?" முகத்தை சுவர் பக்கம் திரும்பினாள் அனிதா.

"சேர்ந்து சாகலாம்னு ஒரு ஐடியா...அதான் திரும்பி வந்தேன்." புன்னகையித்தான் அஷ்வின்.

புன்னகை கலந்த செல்ல கோபத்துடன் அவனை முறைத்தாள் அனிதா.

அஷ்வின், "புன்னகை மன்னன் படம் பார்த்தீயா? அந்த மாதிரி. i am kamal. you are rekha."

அனிதா, "அப்ப கூட....நான் செத்து போய்டுவேன். நீ பொழைச்சுகிட்டு ஒரு ரேவதிகூட டான்ஸ் ஆடலாம்னு ஐடியா!"

காமெடியாய் பேசினோம் என நினைத்து புன்னகையித்த அஷ்வின், அவள் சொன்னதை கேட்டு சிலையாய் நின்றான். அவனது முகத்தில் தெரிந்த ஆச்சிரிய ரேகைகளை கண்டு வாய்விட்டு சிரித்தாள் அனிதா.

அனிதா, "லூசு...காலங்காத்தால...சாவு...அது இது-னு... நீ போய் தூங்கு. உன் கண்ண பாத்தாவே தெரியுது. ராத்திரி முழுக்க தூங்கலனு."

அஷ்வின், "நான் தூங்கறது இருக்கட்டும். நீ ரொம்ப சோகத்துல இருந்திருக்க போல..."

அனிதா, "உனக்கு எப்படி தெரியும்?"

அஷ்வின், "சோகத்துல இருக்கும்போது தான் சாக்லெட் மில் ஷேக் எல்லாம் குடிப்பாங்களா?"

விளையாட்டாய் சோகமாய் முகத்தை வைத்தவாறு, "ஆமா பா, ரொம்ப சோகம். அதான் சாக்லெட் மில் ஷேக்!"

அஷ்வின், "எனக்கும் வேணும்."

அனிதா, "அடடே முடிஞ்சு போச்சு. சரி கீழே வா செஞ்சு தரேன்." என்றவள் கீழே கிளம்பு முற்பட்டாள். அவள் கையை பிடித்து இழுத்து, சுவரோடு சாய்த்தான் அஷ்வின்.

அஷ்வின், "உன் உதட்டுக்கு மேல கொஞ்சம் இருக்கு. அது போதும் எனக்கு...."

காதல் கவ்வும்!!

*முற்றும்*

3 comments:

Anonymous said...

Nice story... Keep it up boss

Sri Saravana said...

super akka :) எங்கடா கனநாளா எந்தக்கதையையும் காணோமே எண்டு பார்த்தன்... வந்துடிச்சி.... சூப்பர்

FunScribbler said...

saravana: boss! your comment for this post is the 4000th comment in this entire blog!!!

THANKS!:))