படம் பார்த்தாச்சு! ராஞ்ஜனா படத்தில் வந்த Aaja aaja dil ke gaaon பாடலை கேட்ட முதல், தினமும் அப்பாடலை ஒரு முறையாவது கேட்பதுண்டு. அந்த பாடலுக்கு அடிமையாகிவிட்டேன். பாடல்கள் நல்லா இருந்தாலும், குறைந்தபட்ச எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க போனேன்.
இப்ப வர எல்லாம் படத்துக்கும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் போகிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால், வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு ஒரு மகான் சொல்லியிருக்காரு!
ஆக, படம் எப்படி இருந்துச்சு?
நம்ம வீட்டு புள்ள முதன் முதலாக வெளியூர் போக போது என்றால் குடும்பமே ஏர்போட் சென்று வழி அனுப்பி வச்சு பெருமைபடுமே, அந்த மாதிரி தான் உணர்ந்தேன் தனுஷ இப்படத்தில் பார்க்கும்போது. தனுஷ் நடித்த படங்களின் ரசிகை இல்லை. இருந்தாலும், ஏதோ ஒருவித பெருமை!
இப்படத்தில் 'ஏன்' நடித்தார் என்று தெரிந்துகொள்ள நீங்களே படத்தைப் பாருங்க.... (ம்ம்ம்.... டிவிடி வரட்டும்) அவருக்கு பிடித்த 3 பகுதிகள்- பள்ளி பருவம், வாலிப பருவம், அதுக்கு அப்பரம் பொறுப்பான பையன்.
சின்ன வயதில் காதல், துரத்தி துரத்தி காதல், அப்பரம் தோல்வி, ஹீரோயின் பிடிக்கவில்லை என்று சொல்ல, அப்பரம் கதை எங்கோ போய்....அரசியலை தொட்டு நிக்குது!
இசை- பரவாயில்ல
நடிப்பு- தனுஷ். பல தமிழ் படங்களில் பார்த்த நடிப்பு தான். ஹிந்திக்கு புதிதாய் தெரியும். ஹிந்தி ரொம்ப நல்லா பேசியிருக்கார்!
சோனம் கபூர் பரவாயில்ல. பள்ளி பருவ காலத்தில் அவர் தோன்றும்போது தனுஷுக்கு பெரியம்மா மாதிரி இருந்தார். மேக்-கப் இல்லாமல் நடித்து இருக்கிறார். வாரிசுகளின் பெண்பிள்ளைகள் நடிக்கும்போது இது தான் பிரச்சனை. எனக்கு என்னமோ அவங்க அப்பா மாறுவேஷம் போட்டு நடிப்பதுபோல் தெரியும். (போடா போடி பார்க்கும்போது, தனிப்பட்ட முறையில் சிரித்தேன். )
நடிகைகளைப் பெற்ற நடிகர்களுக்கே தெரியும்
அது ஏன் காமெடி என்று!
தனுஷின் நண்பன் நடிப்பு அபாரம்! அபே டியோல் ஒகே நடிப்பு.
பனாரஸ் அழகிய காட்சிகள்.
பிடிக்காத விஷயங்கள்
1) 89774 முறை அறை கொடுக்கும் காட்சிகள்
2) தனுஷுக்கு தோழியாய் வருபவரை தேவையில்லாமல் அடித்து விளையாடும் காட்சிகள்.
3) கையை அறுத்து கொள்ளும் காட்சி
4) திடீர் திடீர்னு சோனம் கபூர் கதையைவிட்டு காணாமல் போய்விடுகிறார். அது ஏன்?
5) அரசியலை புகுத்தியது.
இந்த படத்தில் shahid kapoor நடிக்க வேண்டியதாக இருந்ததாம். அப்படினு ஒரு செய்தி படிச்சேன். அப்படி இருந்திருந்தால், கொஞ்சம் காசு மிச்சமாயிருக்கும். தனுஷ் என்னதான் பண்ணியிருக்கார் என்பதை பார்க்க தான் படத்தையே பார்த்தேன். நிறைய பேர் அதுக்கு தான் போய் இருப்பாங்கனு நினைக்குறேன்.
படத்தில் தெரிந்த தனுஷ்- சோனம் chemistryவிட அவங்க promotionகளில் தெறிக்கும் chemistry தான் பார்க்க நல்லா இருக்கு. ம்ம்ம்...பேசமா promotionகள மட்டும் பார்த்து இருக்கலாமோ!
*****************************************************
தற்போது முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல். புது ஹிந்தி படம் 'சென்னை எக்ஸ்ப்ரஸ்' படத்தில் வரும் 1,2,3,4 get on the dance floor!
*****************************************************
லீவு முடிச்சு வேலைக்கு போக வேண்டும் என்று நினைத்தாலே துக்கம் தொண்டையை அடைக்குது!
:(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((
******************************************************
இன்று ரசித்து பார்த்த ஒரு simple short film. ஒரு சிறுகதை படித்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு உணர்வை தந்தது இப்படம்!
முக்கியா கடைசி காட்சி- ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். அவர்களே அவர்களுக்கு பிடித்த முடிவை அமைத்து கொள்ளட்டும் என்று சொல்லும் ஒரு படம்!
4 comments:
short film chaaancela
Ӏ ԁo not even know how I enԁed
up herе, but I thought this ρost waѕ good.
I don't know who you are but definitely you are going to a famous blogger if you aren't alreaԁy
;) Cheeгѕ!
Havе a look аt my web-site; search engine placement
Anonymous: thanks boss for your wishes!!!
Short film sema. Try to share more short films :)
Post a Comment