முதலில் எல்லாருக்கும் பெரிய நன்றி! கடந்த 8 வருடங்களாய் இந்த வலைப்பூவில் எழுதி வருகிறேன். இது எனது 451வது பதிவு! ஆதரவு தந்த அனைவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி! இப்போது தான் ஆரம்ப கால பதிவுகளை சற்று புரட்டி பார்த்தேன்!!
ப்ப்ப்ப்பா!!! என சொல்ல வைத்தது. ஆரம்பகால பதிவு சிலவற்றை என்னாலேயே படிக்க முடியல இப்போ! நீங்களெல்லாம் படித்து, ஊக்குவித்து நல்லபடியாய் கருத்து சொல்லி, இந்த அளவுக்கு வளர்த்துவிட்டு இருக்கீங்க! உங்க தைரியத்திற்கும் பொறுமைக்கும் மிக பெரிய நன்றி!
இன்னும் நிறைய எழுதனும்னு ஆசை. அதுக்கு எதிரியாய் வேலை என்ற விஷயம் இருந்தாலும், முடிந்தவரை எழுதுகிறேன்!
இன்னொரு முறை எல்லாருக்கும் நன்றி.
*******************************************************************************
தில்லு முல்லு படத்தை ரொம்ப குறைந்த எதிர்பார்ப்புடன் தான் பார்க்க சென்றேன். அந்த கொஞ்சம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் அதிர்ச்சி கொடுத்துவிட்டது.
இன்றைய சூழலில் தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்ய என்ன அவசியம்? பழைய தில்லு முல்லு கேசட் எல்லாம் அழிந்துவிட போகுதா என்ன?
புதுசா படத்தை எடுத்தா, அதை மட்டும் பார்த்து கருத்து சொல்லனும். compare எல்லாம் பண்ணகூடாது என்று மனதை ஒருநிலை படுத்தி படத்தை பார்த்தாலும், பழைய படத்துடன் ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியவில்லை.
காட்சிக்கு காட்சி ஒரு லிங் இல்லாமல் போகுது. முக்கியமான சில காட்சிகளை வைத்தே தீர வேண்டும் என்பதால் வலுகட்டாயமாய் திணித்த காட்சிகள் போல் தெரிந்தது. அப்பரம், அகில உலக நாயகன் சிவா....ம்ம்ம்.... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல!
இசை..ம்ம்ம்... ஒன்னும் சொல்றதுக்கு இல்ல.
பிரகாஷ்ராஜ்...வசூல்ராஜா படத்தில் இருப்பது போல் இருந்தார்...பரவாயில்ல...
சந்தானம் வந்தாலே கொஞ்ச 'பகீர்' என்று தோணுகிறது....அடுத்த என்ன மொக்கை அல்லது முகம் சுளிக்கும் வசனத்தை பேச போகிறாரோ என்று...இந்த படத்தில்...தேவையில்லாது கதாபாத்திரம்..
மொத்தத்தில் உப்பு திண்ணால் தண்ணீர் குடித்து ஆக வேண்டும் என்பதுபோல், இந்த தில்லு முல்லு படத்தை பார்த்தால், பழை தில்லு முல்லு படத்தை பார்த்தே தீர வேண்டும்.
ஆக, பழைய தில்லு முல்லு படம் மீண்டும் ஒருமுறை வெற்றி வாகை சூடியுள்ளது!
4 comments:
வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள். சிறுகதை பார்ட் 2 எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்தேன். சீக்கிரம் பாஸ்.
என்ன அக்கா சொல்லுறே... எங்கண்ணன் அகில உலக சூப்பர் ஸ்டார் எ பகைச்சிகிட்ட நலத்துக்கில்ல.. ஹிஹி
எனக்கென்னவோ படம் நல்லா காமடியாத்தான் இருந்திச்சு.. வள நாள் பிறகு வயிறு வலிக்க சிரிச்சமில்லே.... அக்கா நாங்க மொக்க கமடிகெல்லாம் சிரிப்போம்!!
M good luck ... expecting more interesting pa ...
Post a Comment