Aug 6, 2013

ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா! இரண்டாம் உலகம் பார்க்க வா!

இரண்டாம் உலகம் trailerரை அனைவரும் பார்த்து இருப்பீங்க. பாடல்களை இன்னும் நான் கேட்கவில்லை.

செல்வராகவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவருக்குள் இருந்த ஆதங்கத்தையும் கோபத்தையும் ரொம்ப தைரியமாக சொல்லியிருந்தார். ரொம்ப தைரியம் வேண்டும் அவ்வாறு பேச. அந்த தைரியசாலி 'இரண்டாம் உலகம்' போன்ற படத்தை எடுத்ததில் ஆச்சிரியமில்லை.


ஆனால் எனக்கு சில கேள்விகள். அவரின் கோபம் நியாயமானதாக இருந்தாலும் சிலவற்றை ஒரு ரசிகராய் ஏற்ற கொள்ள முடியவில்லை.

1) ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கே தமிழ் subtitle போடுங்க என்று சொல்பவர்கள் நம் மக்கள் என்றார் அந்த பேட்டியில்.

புரியலையே பாஸ்! தூய தமிழில் வந்த பழைய காலத்து படங்களையெல்லாம் நாங்கள் பார்த்து ரசிக்கவில்லையா? கை தட்டவில்லையா? புரியும் தமிழில் படம் எடுத்தால் நாங்கள் ரசிப்போமே, பாஸ்!

2) ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தோல்வி.

அரிவாளை கொண்டு, tata sumo tyreயை கிழிக்கும் காவிய காட்சிகளை இன்னும் எடுத்துகொண்டிருக்கும் பலபேரில், நீங்கள் வித்தியாசமானவர் தான்!

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மேல் வைத்திருந்த எதிர்பார்ப்பு என் ஒரு வாரம் உணவுக்கு தடையாய் போனது. படத்துக்கு குடும்பத்தோடு சென்று என் அம்மாவிடம் நல்லா வாங்கி கட்டி கொண்டது தான் மிச்சம். இந்த படத்துக்கு கூட்டிகிட்டு போன உனக்கு ஒரு வாரம் சோறு கிடையாது என்று என் அம்மா திட்டியது இன்னும் நினைவில் இருக்கிறது.

எது பண்பாடு? எது கலாச்சாரம்? எதை காட்ட சில (அருவருப்பான) காட்சிகளை வைத்தீர்கள்?

இரண்டாம் உலகம் பாடல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து சொன்னது தான் நினைவுக்கு வருகிறது

"செல்வராகவன் படங்களில் வெற்றிப்படம்,
தோல்விப்படம் என்று எதுவும் இல்லை.
புரிந்துகொள்ளப்பட்ட படம்,
புரிந்துகொள்ளப்படாத படம் என்றுதான் உண்டு"


ஒரு சாதாரண ரசிகையாய், எனக்கு புரியும் விதம் படம் பார்க்க ஆசைப்படுகிறேன். சில சமயங்களில், செல்வா ரொம்ப வேகமாய் செல்கிறாரோ என்றும் தோன்றும்.

செல்வா
நீ கண்ணாடி
போட்ட கமல்
அல்லவா?


உலக சினிமா எடுக்கனும். அப்போ தான் நம்ம தரம் உயரம். உங்க ஆசை, விருப்பம் எல்லாமே புரியது. தரம் உயர, புரியாத சினிமா எடுக்க தேவையில்லை, உலகம் நம்மை பார்த்து வியக்கும் சினிமா எடுத்தாலே போதும்.

'children of heaven' என்ற iranian/persian படம் பல விருதுகளை பெற்றது.  அண்ணன் தங்கை இருவர்களுக்கு இடையே நடக்கும் ஒரு சின்ன போராட்டம். கதை அவ்வளவு தான்! எந்த கிராஃபிக்ஸும் பயன்படுத்தவில்லை. புரிந்ததே, பாஸ்!

3) ஓ.....ஹாலிவுட் படங்களை மட்டும் ரசிச்சு பாக்குறீங்க?

அவதார் படம் எத்தன பேருக்கு புரிந்ததுனு கேட்டு பாருங்க!! நம்மில் பல பேர் இங்கிலேஷ் படத்துக்கு போயிட்டு வந்தேன் என்று கூறி பெருமிதம் அடைபவர்கள் தான் அதிகம்!

கிராஃபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம்னு சொல்லல. ரசிக்கும் வண்ணம் பயன்படுத்துங்க!


'இரண்டாம் உலகம்' படத்தின் trailerரை பார்த்துவிட்டு எனக்கு கொஞ்சம் பயமா தான் இருக்கு. சில காட்சிகள் ஆயிரத்தில் ஒருவன் படத்தை நினைவூட்டியது. எனினும், வெற்றி பெற வாழ்த்துகள் செல்வா!!  

தேர்வுக்கு முதல் நாள் படித்து 90 மார்க் வாங்கும் மாணவர்கள் நிறைந்த கூட்டத்தில் தினந்தோறும் கஷ்டப்பட்டு படித்து, தேர்வில் ஒரு மார்க்-கில் தோல்வி பெறும் மாணவனின் அவஸ்தையைவிட அதை பார்க்கும் ஆசிரியரின் வலி அதிகம்!

 உங்க படங்கள் புரிந்து கொள்ளாமல் போன போது, அந்த 'ஆசிரியரின் வலி' என் போன்ற பல ரசிகர்களுக்கு இருந்தது.



காதல் கொண்டேன், 7g rainbow colony படங்கள் வந்தபோ
முதல் ஆளா, முதல் டிக்கெட் வாங்கினவன் எல்லாம் நம்ம
பயலுக தான்!
இப்போ  அதையெல்லாம் விட்டுபுட்டு
ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா
இரண்டாம் உலகம் பார்க்க வா-னா
எப்படி வருவான்?

அவன் மெதுவாத்தான் வருவான்!
மெதுவாத்தான் வருவான்!

4 comments:

மாணவன் said...

//இப்போ அதையெல்லாம் விட்டுபுட்டு
ஆயிரத்தில் ஒருவன் பார்க்க வா
இரண்டாம் உலகம் பார்க்க வா-னா
எப்படி வருவான்?

அவன் மெதுவாத்தான் வருவான்!
மெதுவாத்தான் வருவான்!//

இந்த வசனத்த பார்த்தவுடனே... சமீபத்துல விஷ்வரூபம் பட பிரச்சினையின்போது கார்க்கி டப்பிங்க் பண்ணியிருந்த வீடியோதான் டக்கென்னு நினைவுக்கு வந்தது.... :-)
https://www.youtube.com/watch?v=A8Hmajg0Awg&list=TLsU1bjG_XsME


Kiruba said...
This comment has been removed by the author.
ராஜ் said...

சூப்பர் பாஸ். என்னோட மனசுல இருக்கிறதை அப்படியே கேட்டு இருக்கீங்க.

Anonymous said...

Boss ungalala mattum eppadi pa ippadi....