Sep 28, 2013

நயன்தாராவின் brother ஆர்யா!


ராஜா ராணி படம் பார்க்க தூண்டிய நிறைய விஷயங்களில் ஒன்று இயக்குனர். முதல் பட இயக்குனர் என்றாலும் அவர் பேட்டிகளில் காட்டிய நம்பிக்கை. அட, இந்த சின்ன வயசுல....
என்று மால்குடி சுபா போல் பாராட்ட வச்சது.
படம் பார்த்தேன் நேற்று.

கலர் படம்! இது கலர்ஃல்லான படம்!

பிடித்த விஷயங்கள்


1) படத்தில் வந்த வீடுகள். நயன் ஆர்யா வீடாகா இருந்தாலும் சரி, சத்தியராஜ் வீடாகா இருந்தாலும் சரி, ஆர்யாவின் பாஸ் வீடாகா இருந்தாலும் சரி, அவ்வளாவு அழகு!!

கலை இயக்குனரே, சபாஷ்!!

2) படத்தில் செம்ம அழகா தெரிந்தவர் சத்தியராஜ். அப்பாவாக நடித்து, கலக்கிவிட்டார்! அழகிலும் சரி நடிப்பிலும் சரி ஒரு படி மேலே சென்றுவிட்டார்.

நயன் காதல் தோல்வி அடைந்தவுடன், நயன் அழுவும் காட்சியில், சத்தியராஜ், "நீ அழதே, எனக்கும் அழகை வரது." என்று சொல்லும்போது டாப் கிளாஸ் நடிப்பு இருவருமே!


3) சில cute and sharp வசனங்கள்.

4) நயன் நயன் நயன்!!!! இந்த இரண்டு வருடத்தில் எங்கோ சென்று நடிப்பு பயிற்சி எடுத்து இருக்கிறாரோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. அப்படி ஒரு அழகான நடிப்பு.

5) நயன் தனது அப்பாவை 'டார்லிங் டார்லிங்' என்று அழைக்கும்போது....

6) ஜீவியின் பிண்ணனி இசை! அற்புதம்! பாடல்களில் கொஞ்சம் 'வடை போச்சே' தான்.









இவ்வளவு அழகான கூட்டத்தை வைத்துகொண்டு, கதையில் இன்னும் அழுத்தத்தை கொடுத்திருக்கலாமோ என தோன்றுகிறது. அப்பரம், ஆரம்பித்திலிருந்தே ஏன் நயன் ஆர்யா மோதி கொள்கிறார்கள்? அதற்கு என்ன காரணம்? புரியல. உட்கார்ந்து பேசி இருக்கலாமே!

அடிக்கடி வரும் மருத்துவமனை காட்சிகள்- பிடிக்கவில்லை!

அப்பரம் அடிக்கடி 'brother brother''னு சொல்வது..ம்ம்ம்....

மொத்தத்தில், நான்கு ஐந்து படம் பார்த்த ஃலிங் வருது! ஒரு முறை பார்க்கலாம்!

3 comments:

கவிதை வானம் said...

படத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளில் வரும் அனைத்து உருவங்களும் அழகு...ராஞ்சனா படமும் இப்படித்தான் இருந்தது ...நல்ல விமர்சனம்

Unknown said...

பாட்டே இல்லாமல் இருந்திருந்தாலும் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும் போல.. நீளமும் குறைந்திருக்கும்

Anonymous said...

I found these same review in some other sites too.