2013 எப்படி போனுச்சு இவ்வுலகில்.....
அது சத்தியமா தெரியாது.
ஆனா என் 2013 எப்படி போனுச்சுன்னா....இப்படி தான்!
ரொம்ப நொந்த நிலைமை தான்! வேலை, வேலை வேலை.... ஷ்ஷ்ஷ்ப்பா!!!
வேலையை விட்டு விடலாம் என்று பார்த்தால், 'வாழ்க்கைல சோறு ரொம்ப முக்கியம்' என்பதால் முடியவில்லை! இருக்கும் விலைவாசிக்கு, பரதேசியாக இருக்க முடியாது பாருங்க.
வலைப்பூ பக்கமும் அதிகம் வர முடியவில்லை. காரணம் வேலை என்று ஒரு புரமாக இருந்தாலும். இந்த facebook, twitter, whatsapp ஆகியவை ரொம்ப ஊடுறுவி விட்டது வாழ்க்கையில். இவை விட்டு விலகி மறுபடியும் வலைப்பூ பக்கத்தில் நிறைய எழுத வேண்டும் என்பதே 2014 ஆண்டின் ஆசை.
கிட்டதட்ட twitter பக்கம் போகவில்லை கடந்த 2 வாரமாய். கைபேசியில் இருந்து twitter applicationயை தூக்கிவிட்டேன். facebookயை அதே போல் செய்தேன். ஆனா, மறுபடியும் பதிவு இரக்கம் செய்துவிட்டேன். ப்ச்.. சரி விட்டு புடிப்போம்.
facebook பக்கம் மூலம் செய்திகள் தெரிந்தாலும், வர வர மத்தவங்க வாய் சும்மா இருப்பதில்லை. ஏதாச்சு அவங்க போட, அதுக்கு நம்ம பதில் சொல்ல....ஷ்ஷ்ஷ்ப்பாபா முடியல!
அப்பரம் whatsapp வந்த பிறகு, நல்ல தூங்க முடியவில்லை!!
ஆக 2014 ஆண்டில் நல்ல உறக்கம் வேண்டும் என்பதால், ஒரு முடிவு எடுத்துள்ளேன்.
வலைப்பூ பக்கத்தில் கடந்த சில பதிவுகள் எல்லாம் வெறும் சினிமா பத்தி தான். சுத்த ஃபோர் அடித்துவிட்டது. ஆக, அறிவுபூர்வமாக....
ஹிஹிஹிஹிஹிஹாஹாஹா...ஐயோ மச்சி, அறிவுபூர்வமாக என்றவுடன் எனக்கே சிரிப்பு தாங்கல! சரி சரி, எனக்கு அதலாம் வராது. எனக்கு வருவதை எழுத முற்படுகிறேன்.
ஆனா, இந்த facebook பக்கம் மட்டும் போக மாட்டேன்....
அப்பரம்....
கொஞ்சம் wait...கைபேசில ஏதோ facebook notification வந்து இருக்கு.
3 comments:
Hai Mango,
I like ur short stories....why not u write more stories in 2014.....
sanmath AK: thanks. will def write short stories.
Please write your short story.i like it very much.
Post a Comment