Jul 7, 2014

அழுதால், தப்பா மச்சி?




ஆட்டம் ஆரம்பிக்கும்போது, அழுகை
ஆட்டம் நடுவே, அழுகை.
ஆட்டம் முடிக்கும்போது, அழுகை.
தேசிய கீதம் பாடும்போது, அழுகை.

இப்படி அழுதால், எப்படி உலக கிண்ணத்தை ஜெயிக்க முடியும் என பெரிய கேள்வி அம்பு பிரேசில் நாட்டு ஆட்டக்காரர்களின் பாய்ந்து உள்ளது.

நிறத்தனும். எல்லாத்தையும் நிறுத்தனும்-னு சொல்ற மாதிரி இந்த அழுகையையும் நிறுத்த சொல்லுது இவ்வுலகம். எனக்கு என்னமோ இது பெரிய விஷயமா தெரியல.

நீங்களே யோசிச்சு பாருங்க! 22 வயசுல, மிகப் பெரிய பொறுப்பை உங்க தல மேல வச்சா எப்படி இருப்பீங்க? கொஞ்சம்  கூட்டநெரிசலில் நடந்து போனாவே, எனக்கெல்லாம் கை கால் நடுங்கும். அப்படி இருக்கும்போது, சின்ன பசங்கள உலக அரங்கில் இறக்கிவிட்டு, விளையாட சொன்னால், அது மிக பெரிய போராட்டம் தான்.

மன அழுத்தம் தாங்க முடியாமல், அறையில் ஒளிந்து கொண்டு நம்ம அழுதால் தப்பில்லை. ஆனா, எல்லாருக்கும் முன் அவங்க அழுதால் தப்பா, மச்சி?

அழுகை ஒன்னும் கோழைத்தனம் இல்லை.
அழுகை ஒரு வகையான வீரம் தான்!

 நேமார் மீது உள்ள கண்மூடித்தனமான காதலினால், இத சொல்லல. ஜெயிக்க வேண்டும் என பசியால் அழுபவனுக்கு, அந்த அழுகை வீரம் தான்! பிறக்கும்போது அழுகிறோம், இறக்கும்போது அழுகிறோம், இதுக்கு நடுவே கொஞ்சம் அழுகிறோம்- இத தப்பு-னு சொல்ற உலகத்த புரிஞ்சிக்க முடியல.

அழுகை இயற்கையான ஒரு விஷயம். கொஞ்சம் அழுதுட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டுட்டு எழுந்து பாருங்க. எல்லாமே சரியா போன மாதிரி இருக்கும். அழுகைக்கு அப்படி ஒரு சக்தி உண்டு. அதனால, இந்த பசங்கள அழ வேண்டாம்-னு சொல்றது, முட்டாள்தனம்!

22 வயசுல உலகமே திரும்பி பார்க்குற அளவுக்கு அவங்க இருக்காங்க! 22 வயசுல, நம்ம எத கிழிச்சோம்-னு பார்த்தா, வூட்டுல உள்ள calendar தேதிய கூட கிழிச்சு இருக்க மாட்டோம்!

சமீபத்தில், பயிற்சியின் போது, பிரேசில் நாட்டை சேர்ந்த ஊனமுற்ற சிறுவன் ஒருவன் எழுதிய கடிதம், ஆட்டக்காரர்கள் அனைவரையும் நெகிழ வைத்தது!

மனித நேயம் இருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி- கண்ணீர் தான்.

இந்த அழுகை, தப்பு என்றால்......

இருந்துட்டு போகட்டும்!

1 comment:

Venkat said...

உண்மை, அழுகும் பொது உள்ளம் தூய்மை பெரும், வலிமையுரும், தெளிவு கிடைக்கும், இது கண்ணீரின் வலிமை. இதனை தவறாக எல்லோரும் கொல்லைதனம் என்று கருதுகிறார்கள், அதனால்தான் உலகில் மனிதம் மாய்ந்து உள்ளம் கடிதாகி வருகிறது. இறைவனிடம் அழுகிறோம், தாயிடம் அழுகிறோம், மனைவியிடம், குழந்தைகளிடம், உண்மை நண்பர்களிடம் அழுகிறோம், ஏனென்றால் அவர்கிளிடம் நம்மை முழுமையாக ஒப்டைக்கிறோம், அழும் பொது நம் ego அழிந்து நம் உண்மை சொருபம் நமக்கு போலபடுகிறது. அழுகை பலவீனம் என்ற தவறான கருத்தை பரப்பிய புனியவன் யார் என்றுதான் தெரியவில்லை.