'உன் இன்மையை உணர்கிறேன்.'
இப்படிக்கு
நீச்சல் குளம் அருகே நிற்கும்
மிஸ்டர் அழகன்
என்று ஒரு சின்ன தாளில் கிறுக்கிவிட்டு, தாளை மடிக்கினான். நீச்சல் குளம் அருகே, பிள்ளைகள் விளையாடி கொண்டிருந்தனர். அவர்களில் ஊதா நிறம் சட்டை போட்டிருந்த குழந்தையை கூப்பிட்டான். அவள் பிஞ்சு கையில், எழுதிய கடிதத்தை மடக்கி ஒரு சாக்லெட்-யும் கொடுத்து, அவள் காதில் ஏதோ சொன்னான்.
அக்குழந்தையும் அவன் சொன்னதை கேட்டது. நீச்சல் குளம் முழுதும் சங்கீத் விழாவிற்காக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பலூன்கள் ஏராளமாய் கிடந்தன. கவனமாய் தாண்டிமெதுவாய் நடந்து சென்றது அக்குழந்தை. அழகாய் சென்று மருதாணி போட்டிருந்து கொண்டிருந்தவள் கையை இழுத்தது. அக்குழந்தையை தூக்கி முத்தமிட்டு என்ன என்று கேட்டாள் அமுதா. குழந்தை, கடிதத்தை கொடுத்துவிட்டு சிரித்தது. மறுபடியும் விளையாட ஓடிவிட்டது.
கடிதத்தை பிரித்து படித்தாள் அமுதா. ஆனால், அதனை கண்டு கொள்ளாமல்
தனது தோழிக்கு மருதாணி போடும் வேலையை தொடர்ந்தாள்.
மறுபடியும், இன்னொரு கடிதம் எழுதினான்-
'நான் சிகரெட் பிடிக்க போறேன்.' :))))
இப்படிக்கு
உன் இன்மையை தாங்காத
மிஸ்டர் அழகன்
மறுபடியும் குழந்தையை தூதுவிட்டான். குழந்தைக்கும் இந்த விளையாட்டு பிடித்தவளாய், ஓடி வந்து அமுதாவிடம் கடிதத்தை கொடுத்தது. அவள் பிரித்து படித்தாள். கடிதம் மேல் இருந்த பார்வை அவனை தேடும் பணியில் இறங்கியது.
"எங்க அமு போற?" என்று கையில் மருதாணியுடன் கேட்ட மணப்பெண்ணிடம்,
அமுதா, "கொஞ்சம் நேரம் வேட் பண்ணு." என்று சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்டு மெதுவாய் நகர்ந்தாள்.
"ஹாலோ மிஸ்டர் அழகன், என்ன இது?" என்றாள் அமுதா அவன் நிற்கும் இடத்தை கண்டுபிடித்தவுடன். யாருமே இல்லாத ஒதுக்குபுரமான இடம். நிலா வெளிச்சம் மட்டும் ஒளி வீசியது. 'டார்லிங் டம்மக்கு' இசை அரங்கத்தை நிரப்பியது.
புன்னகையித்தபடி நின்று கொண்டிருந்த விஜய், "காதல் கடிதம்."
"கண்றாவி!! அது என்ன இன்மை இன்மை....ஏதோ சின்மயி மாதிரி....." என்றாள் அமுதா, புருவங்களை சுருக்கி. அவள் பேசும்போது ஆடிய தோடும், குலுங்கிய பச்சை வளையல்களையும் கண்கொட்டாமல் பார்த்தான் விஜய்.
"நான் உன் இன்மையை உணர்கிறேன்-னா, i miss youனு அர்த்தம்." என கூறி கொண்டே அவளை நோக்கி நடந்தான்.
வாய்விட்டு சிரித்த அமுதா, "என்ன உனக்கு அதுக்குள்ள இன்மை, சின்மயி?? இங்க தானே இருக்கோம்."
"செம்ம boring di. " எரிச்சலுடன் விஜய் பேசிகொண்டே பின்தலையை சொரிந்தான்.
அமுதா, "this is our best friend's sangeet. how can you say it's boring?"
வேண்டுமென்றே மறுபடியும், விஜய் சற்று சத்தமாய், "boring" என அழுத்தி சொன்னான்.
அருகே சென்று அமுதா, அவனது கையை செல்லமாய் அடித்தபடி, "stop it vijay!"
"உனக்கு தான் indian functionsனா பிடிக்காத. அப்பரம் ஏன் வந்த?" என்றாள் அமுதா, புருவங்களை ஏற்றியவாறு.
இன்னும் பக்கத்தில் வந்த விஜய், "indian functions பிடிக்காது. ஆனா, indian girls பிடிக்கும். especially பச்சை வளையல் போட்டு இருந்தா..." என்றவாறு அமுதாவின் வலது கையை பிடித்து, அவளை சுவரோடு சாய்த்தான்.
"hoi! பொண்ணு கைய பிடிச்சு இழுத்துட்டான்னா, பஞ்சாயத்த கூப்பிடுவா?" புன்னகையித்து கொண்டே சொன்னாள் அமுதா.
ஒரு செண்டிமீட்டர் புன்னகையை பதிலாய் வீசினான் விஜய்.
அமுதா, "அது என்ன? சிகரெட் பிடிக்க போறேன்? சொன்ன promise எல்லாம் மறந்து போச்சா?
விஜய், "ஒரு கவித சொல்லட்டா?
smoking hot-aa நீ இருக்கும்போது
smoking எனக்கெதுக்கு?"
சொல்லி முடித்துவிட்டு சிரித்தான்.
அமுதா, "அட பாருடா!! fb statusஆ போடு மச்சி. லைக்ஸ் பிச்சிக்கும்!" என அவனது தலைமுடியை கலைத்தாள்.
அவனது சட்டை collarயை சரி செய்தவாறு, "இந்த லெட்டர்லாம் எழுதி இம்சை பண்ணாம, whatsapp me. இப்ப phoneல charge ஏறி இருக்கும்னு நினைக்குறேன்." என்றவுடன் அவ்விடத்தை விட்டு காலி செய்தாள்.
மறுபடியும்,
' ஐ லவ் யூ' என்று ஒரு தாளில் எழுதி, அக்குழந்தையிடம் கொடுத்தான்.
குழந்தை கடிதத்தை வாங்கி கொண்டு,
"அப்பா, i am tired. நீங்களே அம்மாகிட்ட கொடுத்திடுங்கோ" என்றது.
1 comment:
meh
Post a Comment