இந்த வாரம் முழுக்க லீவு என்பதால் கிட்டதட்ட வாழ்க்கையையே facebookகிலும் youtubeலும் அர்பணித்துவிட்டேன். அதில் என்னை கவர்ந்த 3 வீடியோக்களின் தொகுப்பு தான் இது.
1) குறும்படம்: ஜீ-பூம்-பா
இயக்குனர் பாலாஜியே (காதலில் சொதப்புவது, மாரி படம் இயக்குனர்) இப்படத்தில் குறும்படத்தின் நாயகன். என்ன தான் கதைனா பார்த்தா?
அட இப்படம் short and sweet என சொல்ல வைத்தது. வீட்டில் பார்த்த மாப்பிளையை காபிஷாப்பில் பார்க்கும் செல்கிறாள் நாயகி. அங்க என்ன நடக்குது தான் கதை. இதில் என்னொரு சுவாரஸ்சியம் என்னவென்றால், முழு நீள படத்தின் ஒரு காட்சியாம் இக்குறும்படம்! அப்படி செதுக்கி இருக்கார் இயக்குனர் விக்னெஷ் விஜய்குமார்.
2) கூடமேல கூட வச்சு பாடலை parisல் எடுத்திருந்தா....
தமிழ் சினிமாக்களில் வெளிநாட்டு படபிடிப்பு பாடல்கள் ரொம்ப சாதாரணமா போச்சு. ஆனா சில பாடல்கள் எந்த லொக்ஷ்னலில் எடுத்தாலும், அழகாக தான் இருக்கும். நாம் அனைவருக்கும் பிடித்த "கூட மேல கூட வச்சு" பாடலை, பாரிஸ்சில் வசிக்கும் இக்காதல் ஜோடி இப்பாடலுக்கு மேலும் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் நான் பார்த்து ரசித்த வீடியோ
3) குறும்படம்: husBANned.
செம்ம ஜாலியான ஒரு குறும்படம். கணவர்களின் கஷ்டங்களை புட்டு புட்டு வைக்கும் படம்.
எனக்கு பிடித்த வசனம்.
கணவர்: sunday வராத வாரம் இருக்கலாம். ஆனா சண்டையே வராத வாழ்க்கை கிடையாது.
அவரது நண்பன் (கல்யாணம் ஆக போகும் நண்பன்): செத்து போச்சு!
க: என்னது?
ந: உங்க sense of humor
க: அதான் married life!
2 comments:
Ok ok athai vudunga. Eppo unga adhutha padaippu . I'm waiting .. Especially with Singapore Tamil slang will be more good. Atleast this time i expect some non-love story. Try pannunga please.
ungalukku oru mail pottirukken. Athu unga influence use panni ethavathu pannunga. ungalukku punniyama pogum.
Post a Comment