ஏ எட் லூ
பட் லா லூ....."
இப்படி தான் ஹாரிஸின் பிண்ணனி இசையில் வார்த்தைகள் வந்த விழ, ஒன்னும் புரியல. படமே அதே மாதிரி தான். ஒன்னும்...ம்உம்...
இப்பலாம் படம் பிடிக்கல-னு சொல்ல முடிய மாட்டேங்குது! சொன்னா, உலக போர் தொடங்கும் அளவுக்கு சண்டைக்கு வராங்க! அதான் புரியல-னு எழுதுனேன். படம் மேல தப்பில்ல. படம் புரியும் அளவுக்கு எனக்கு தான் அறிவும் முதிர்ச்சியும் பத்தல்ல.
கெம்ஸ்ட்ரி பத்தல்ல
கதைக்கும் எனக்கும் கெம்ஸ்ட்ரி பத்தல்ல. காலேஜ் படிக்கும்போதே நான் கெம்ஸ்ட்ரி வகுப்பு இருக்கும்போது, பக்கத்து காலேஜ் கெண்டீன் போய்டுவேன். இப்படிப்பட்ட என்னை இந்த படத்துக்கு அழைச்சுட்டு போனதெல்லாம் பெரிய தப்பு. அதுவும் 'லவ்' கதாபாத்திரம் chemical equation சொல்லும்போதெல்லாம் யப்பா சாமி, exit எங்கப்பா??
விக்ரமும் நயன் தாராவுக்கும் உள்ள கெம்ஸ்ட்ரி- சுத்தம்! விறுவிறுப்பான காட்சிகளாக இருந்தாலும் சரி, காதல் காட்சிகளாக இருந்தாலும் சரி. அவங்க காதல் முழுக்க காரில் உட்கார்ந்து வசனம் பேசிய
ஹேல்லன்னா பாட்டுக்கு கொடுத்த பில்-டப்புக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல. நயன் தாரா அழகும் ஒளிப்பதிவாளரின் கை வண்ணமும் தான் கண்ணுக்கு குளிர்ச்சி.
தண்ணீர்ல கண்டம் இல்ல, மலேசியாவில் தான்.
நம்ம ஆளுங்க கொஞ்ச காலத்துக்கு இந்த மலேசியாவ பின்புலம் வச்சு படம் எடுப்பதை தவிர்க்கலாம்னு - சிவகாமி கம்பியூட்டர் சொல்லுது. இருமுகன் படத்தில் சில காட்சிகளும் நடிகர்களும் 'கபாலி' படத்தை நினைவுப்படுத்துகிறது.
இந்த ரித்விக்காவா, யாருச்சும் காப்பாத்துங்களேன் பா??
மலேசியா காவல்துறையை சரமாரியாக கிண்டல் செய்வதை அவங்க எப்படி எடுத்துக்கு போறாங்க? கபாலி படத்தை சென்சார் செய்தது போல் இப்படத்தை செய்திருந்தால், ரொம்ப மகிழ்ச்சி. படம் சீக்கிரமா முடிஞ்சு இருக்கும்.
இதில் என்ன ஒரு விஷயம் எனக்கு பிடிச்சுருந்துச்சுனா, முடிந்தவரை live locationல படமாக்கப்பட்டது தான். லிட்டில் இந்தியா என்று கூறபடும் bricksfield, யதார்த்தம்.
7ஆம் அறிவும், ஸ்பீடும்.
சீரியஸ் காமெடி- இருமுகனின் sci-fi என்று சொல்லப்படும் பலவும் சீரியஸ் காமெடியாக அமைந்ததே தான் படத்தின் பலவீனம். 7ஆம் அறிவு படத்தில், ஸ்ருதி எப்படி நரம்பை சொரிந்துவிட்டால், DNA activate ஆகும் என டக்கால்ட்டி வேலை செஞ்சிதே அதே மாதிரி, இங்க ஸ்பீடு மாத்திரை நுகர்ந்தால், 5 நிமிடத்துக்கு தன்னை மறந்து இருப்பாங்களாம்?
அதை நுகராமலேயே படத்த பார்த்துட்டு நாங்க மயக்கத்துல தான் டா இருந்தோம்!
இதுகூட பரவாயில்ல. நயன் தாரா சொல்லும் பாருங்க ஒரு flashback. ஸ்பீடு மாத்திரை சாப்பிட்டு பிறகு, மண்டைக்கு பின்னாடி கிடந்த நினைவுகள், 4 வருஷமா access பண்ணாத நினைவுகள்னு ஏதோ அப்பாத்தா பீரோ பின்னாடி கிடந்த பழைய photo album மாதிரி சொன்ன போது வந்துச்சு பாருங்க குபீர் சிரிப்பு. இது தான் யா படத்துலே மிக பெரிய காமெடி.
எதுக்கு மச்சான், இந்த 'லவ்'?
லவ் கதாபாத்திரம் cross-dresser என்பவர். பொதுவாக transgender, gay, cross-dresser- என பலர் உள்ளனர். இவர்கள் போன்றோர்களுக்கு வித்தியாசங்கள் உண்டு. எத்தனை பேருக்கு இது தெரியும்?
இயக்குனர் ஒரு பேட்டியில், லவ் கதாபாத்திரம் 'transgender' இல்லை என்றார். சரி, ஆனா ஏன் படத்தில் தேவையில்லாமல் பெண்கள் உடை மாற்றும் இடத்திலிருந்து 'லவ்' நடந்து வரும் ஒரு காட்சி. என்ன தான் சொல்ல வரீங்க?
"இந்த உலகத்துக்கே நீ ராஜா நான் ராணி" என்ற வசனம் எதை குறிக்கிறது? படத்துக்கும் இந்த வசனத்துக்கும் என்ன பொருத்தம்?
தமிழ் சினிமாவில் இதுவரை cross-dresserகளையும் திருநங்கைகளையும் சரியாய் சித்திரத்தது இல்லை. இப்படமும் அப்படியே அமைந்துவிட, தானும் ஒரு சராசரி இயக்குனர் என்பதை நிருபத்திவிட்டார் ஆனந்த் ஷங்கர்.
'லவ்'- வின் பின்புலம் என்ன? அவர் ஏன் இப்படி ஆனார் என்பது கதைக்கு தேவையில்லாமல் இருக்கலாம். சரி ரைட்டு. இப்படி 'ஸ்பீடு' மருந்து தயாரிக்கும் ஒருத்தர் சும்மா ஒரு விஞ்ஞானியாக இருந்திருக்கலாமே? cross-dresserஆக இருக்க வேண்டிய அவசியம்?
ஹாரிஸ் ஜெய்ராஜ் இசை, நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
விக்ரம்
என்ன தான் உயிர கொடுத்து நடித்தாலும், சரியா அமைய மாட்டேங்குது-னா, ஐ எம் சாரி சார்!
3 comments:
இது ஒரு அரை குறையான சயின்ஸ் ஃபிக்சன் தமிழ் வணிக சினிமா....
ஏங்க..சிலந்தி பூச்சி கடிச்சா கையிலேர்து கம்மு விடலாம்ன்னு வெள்ளகாரன் சொன்னா நம்புவிங்க எங்க தலைவி சொன்னா நம்பமாட்டிங்களா..😢😢😢
@anand, hahaha ஆனா அவன் நடுவுல போய் 'ஹேலேனா ஹேலேனா"வோ கண்ணைவிட்டு கண்ணம் தொட்டுனு போய் ஆடி பாடிட்டு வர மாட்டேன். வெளக்காரன் கம்மு விட்டானு கம்முனு அத மட்டும் கடைசி வரைக்கும் செய்வான்! நம்பறதுக்கு கொஞ்சம் ஈசியா போகும்.
Post a Comment