Jan 1, 2017

துருவங்கள் பதினாறு- 2017 படைக்க வருது வரலாறு

துருவங்கள் பதினாறு. இப்படி  தரமான படங்களை மட்டும் தமிழ் சினிமா 2017ல் கொடுக்க முன்வந்தால், யாரலையும் அடிச்சுக்க முடியாது நம்மை! நல்ல சினிமாவை பார்க்க துடிக்கும் அனைவருக்கும், துருவங்கள் 16 ஒரு புத்தாண்டு பரிசு தான் போங்க!



துருவங்கள் 16- என்னய்யா இப்படி கலக்கி இருக்கான் பையன் என்று வாய் பிளந்தேன் நான். இயக்குனர்- கார்த்திக் நரேன். இப்போது தான் 22 வயதாம். படம் ஆரம்பிக்கும் போது 21 வயது. அப்போ நினைத்து பாருங்க, இக்கதைய யோசிச்சு இருக்கும்போது 20 வயதுகூட முழுசா ஆகி இருக்காது. இருந்தும், இக்கதைய யோசிச்சு திரைக்கதையை பிரமாதமாய் அமைத்ததற்கு, கார்த்திக் நரேன் அவர்களே, hats off bro!!

ஒரு கொலை, இல்ல இல்ல இரண்டு கொலைகள் நடக்கின்றன ஒரே நாளில் கிட்டதட்ட ஒரே இடத்தில்- கொலையை யார் பண்ணியிருப்பா? இதற்கு காரணம் என்ன? இது தான் கதை. இந்த மாதிரி கதையெல்லாம் ஜெய் சங்கர் காலம் முதல் நாம் பார்த்து பழகி இருந்தாலும், து.16 தனியா தனித்து கம்பீரமாய் நிற்கிறது.

முடிவு எனக்கு அவ்வளவு திருப்தியாக இல்லாவிட்டாலும், படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து கடைசி வரைக்கும், என்னை நகர விடாமல் செய்தன- காட்சியமைப்பு, நடிப்பு, பிண்ணனி இசை.

non-linear narrative- கதை கேட்ட ரகுமானே, முழு படத்தை பார்த்தபிறகு தான் அவருக்கே படம் புரிந்ததாம். ஆனாலும், இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். படம் பார்ப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக 'chronological order'ல் சம்பவங்களை கூறுவார் காவல் அதிகாரி ஒருவர் ஒரு காட்சியில். ரொம்பவே ரசித்தேன். "உலக சினிமா என்று நான் எந்த ஒரு வெங்காயத்தை எடுத்தாலும், அதை நீ பார்த்தே ஆகனும்." என வீராப்பு பேசும் இயக்குனர்கள் நிறைந்த சினிமாவில், ரசிகனையும் அரவணைத்து அவனுக்கு புரியும்படி காட்சிகள் வைத்தது, மிக சிறப்பு.

ஒரு இடத்தில், காவல அதிகாரி சாட்சி ஒருவரை காவல் நிலையத்திற்குள் அழைத்து செல்வார். அப்போது அழைத்து செல்லும்போது, அந்த அதிகாரி அங்கு சுத்தம் செய்து கொண்டிருக்கும் ஒருத்தியிடம், "பின்னாடி போய் கிளின் பண்ணுங்க. இலையெல்லாம் நிறைய கிடக்குது" என்பார். சொல்லிகொண்டே சாட்சியை உள்ளே அழைத்து போவார். ரொம்பவே யதார்த்தமான வசனம், கதை போக்கு. இயல்பு நிலைக்கு அப்படியே ஒட்டிய ஒரு ஓட்டம். இப்படி நிறைய காட்சிகள், "backdrop movements and characters"; நிரம்பி இருக்கும். 


ரகுமான் கதாபாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் பண்ணியிருக்கலாம். ஆனா, ரகுமான் மாதிரி வராது. விசாரணை நடக்கும் ஒரு வீட்டில். வாகனத்தில் என்ன இருக்கு என்று கான்ஸ்டபல் ஒருவரை பார்க்க சொல்வார். ஆனால், கான்ஸ்டபல் வண்டி பூட்டி இருக்கு என்பார். அதற்கு, ரகுமான், "அப்படியா?" என்று கூறியபடி வாகனத்தில் கதவை திறப்பார். "அதான் திறந்துகிடக்குதே" என்பதை முகபாவத்தில் காட்டுவார் பாருங்க.....செம்ம செம்ம செம்ம ஜீ!! 

படத்தில் எனக்கு பிடித்த என்னொரு விஷயம்- பிண்ணனி இசை. டமால் டுமீல் என்று இசையை இறைச்சலாய் அமையும் இந்த மாதிரி காவல் அதிகாரி கதைகள். பீரை மோராய் குடிக்கும் அதிகாரிகள், சிங்கம், புலி, சிறுத்தை, பல்லி, ஓனாய் போன்ற சத்தங்களும் நிறைந்தால் தான் ஒரு போலீஸ் கதை வெற்றி பெரும் என்ற காலம் போய் இப்படி ரொம்ப சாந்தமான நீரோட்டத்துடன் ஒரு போலீஸ் கதை!! இசை தனியாக இல்லாமல், திரைக்கதையை 'அலேக்கா' தூக்கி கொண்டு போய் இருக்கிறது. 


கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குள் ஒரு நாவல் படித்த, அதுவும் ஒரு நல்ல சுவாரஸ்சியமான நாவல் படித்த திருப்தி!! 

இயக்குனர் பல இடங்களில் கதை சொல்லி இருக்காராம். ஆனால், தயாரிப்பாளர் தயாராக இல்லையாம். ஆக, தனது அப்பாவுக்கு ஃபோன் போட்டு சொல்லியிருக்காராம். அவரும் நமே படத்தை எடுப்போம் என்று நம்பிக்கை கொடுத்து இருக்கிறார்! அப்படி எடுக்கப்பட்ட படம் தான் 'துருவங்கள் 16'.

எங்க வூட்டுல எல்லாம் படம் டிக்கேட் எடுக்கவே உதவி செய்ய மாட்டாங்க! கார்த்திக், உங்களுக்கு நல்ல support system அமைந்திருக்கு! விடாமல், இது போன்ற நல்ல படங்களை மட்டும் தாங்க, bro!! 


துருவங்கள் 16- கண்டிப்பா பார்க்க வேண்டிய படம்.


No comments: