நினைக்கிற இக்காலத்தில் இது எந்தளவுக்கு உண்மை என்று புரியாமல் தான் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
இருந்தாலும், 'cult' film தான். தான் சொல்லவந்ததை இயல்பாக, யாருக்கும் பயப்படாமல், மூன்று மணி நேரத்தில் கதையை தோய்வு இல்லாமல் எழுதி இயக்கிய புது இயக்குனர் சந்தீப்புக்கு, 'you're a fucking awesome talented film-maker, man!"
in-dept characterisation- அர்ஜுன் ரெட்டி. இவன் எப்படிப்பட்டவன் என்பதை முதல் இரண்டு மூன்று காட்சிகளிலே நமக்கு புரிந்துவிடுகிறது. அதுவும் அழத பழசான காட்சி அமைப்புகள் இல்லை. இப்படிப்பட்ட குடிகாரனா ஒரு மருத்துவர் என்று ஆச்சிரியப்பட வைக்கிறார் இயக்குனர். அப்படி ஆச்சிரியப்பட வைக்கும் தருணத்தில் நம்மை 'flashback'க்கு அழைத்து செல்கிறார். சரியான இடங்களில், மிக பொருத்தமான அளவில் flashbackகள் நிறைந்த திரைக்கதையில் பாதி வெற்றியை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சந்தீப்.
மூன்று மணி நேரத்தில் ஒரு நவீன தேவதாஸின் வாழ்க்கையை சித்தரித்ததை தாண்டி, நம்மையும் அவ்வாழ்க்கைக்குள் கைபிடித்து நடக்க வைத்துள்ள படம் இந்த அர்ஜுன் ரெட்டி. கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் திரிக்காமல் ஒளிக்காமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் துணிவுடன் காட்டியிருப்பது ஓர் அசலான சினிமாவுக்கான அடிப்படைத் தேவை என்பதை ‘அர்ஜுன் ரெட்டி’ உணர்த்திவிடுகிறது.
குழந்தைத்தனம் நிரம்பி வழியும் முகம் ப்ரீத்தியாக நடித்திருக்கும் ஷாலினி பாண்டேவுக்கு. எந்த உணர்ச்சியையும் எளிதில் காட்டிவிடாதவர், வீட்டில் நடக்கும் பிரச்னைக்குப் பிறகு, விஜயைக் கட்டிப்பிடித்து சமாதானப்படுத்த முற்படும் காட்சி, பூங்காவில் மீண்டும் அர்ஜுனைச் சந்திக்கும்போது அழுதுகொண்டே கோபமாகத் திட்டும் காட்சி போன்றவற்றில் மிரட்டுகிறார்.
"women have restrictions at home, arjun" என்று ஷாலினி சொல்ல, எவ்வளவு தான் படித்து இருந்தாலும், பெரிய இடத்தில் இருந்தாலும், பல பெண்களின் நிலைமை, இயலாமை அது தான். அதை ஒற்றை வரியில் சொன்ன விதம், சபாஷ்!
ஷாலினி அர்ஜுன் வீட்டுக்கு சென்று அவனை சமாதானப்படுத்தும்போது, அவனது அறையை சுற்றி பார்த்துவிட்டு, "இங்க தான் நமக்கு first night நடக்க போகுதா?" என்று கேட்க, அதுக்கு அவன் எரிச்சலாய், "bloody 549th night?" என்பதெல்லாம் தமிழுக்கும் சரி, தெலுங்கு சினிமாவுக்கு சரி ரொம்பவே புதுசு. கொச்சையாக இருக்கே என்று சிந்திக்கவிடாமல், நம்மையும் தலையாட்டி புன்னகை செய்ய வைத்திருக்கிறது கதையோட்டமும், அவர்கள் காதலின் ஆழமும்.
இப்படி வெற்றி கொடிகளை பல இடங்களில் நட்ட படத்தில் எனக்கு நெருடல்களாக தெரிந்தன பல விஷயங்கள்.
1) அர்ஜுன் என்பவன் யார் என்றே தெரியவில்லை என்ற போதிலும், மருத்தவம் படிக்கும் ஷாலினி, எப்படி ஒரு பையன் திடீரென்று கூப்பிட்டு, முத்தம் கொடுத்தால் ஏற்றகொள்கிறாள், செருப்பை கழட்டி அடிக்காமல்?
2) அர்ஜுன் is a male chauvinist. கல்லூரி வகுப்பில், ஒரு குண்டான பெண்மணியுடன் ஷாலினியை உட்கார வைத்து, அவளை தோழி ஆக்கிக்கோ, " one fat chick and a beautiful chick make a good combo." என்று வசனம் பேசிய சிகரெட் நாத்தம் பிடிச்ச பய, சிறிது காலம் கழித்து, நண்பனின் தங்கைக்கு பார்த்த மாப்பிள்ளை, பெண்களை பத்தி இழிவா பேசியதற்கு சண்டை பிடிக்கிறான்! எப்படி, பாஸ்?
அப்படியே அர்ஜுன் இடைப்பட்ட காலத்தில் மாறியிருந்தாலும், எப்படி மாறினான் என்பதை எந்த ஒரு காட்சியிலும் காட்டவில்லையே, பாஸ்.
3) அர்ஜுன் கோபக்காரன். படம் முழுக்க எதுக்கு எடுத்தாலும் கோபம். குடிபோதை வேற. வேலையை இழக்கிறான். ஷாலினியை விட்டு பிரிகிறான்.
ஆனா, கடைசில அவனுக்கு எல்லாமே கிடைத்துவிடுகிறது. அப்போ என்ன பண்ணாலும், யாரை அடித்தாலும் சரி, கடைசியில எந்த தண்டனையும் இல்லாமல் வெற்றியும் சந்தோஷமும் கிடைத்துவிடுகிறது. அவன் தேவதாசாக தனியாக வீட்டில் வாழ்ந்த நாட்களில் கூட அவன் அவ்வளவு பெரிய கஷ்டத்தை ஒன்றும் சுமக்கவில்லை. கர்ப்பனி பெண்ணாக தனியாக இருந்த ஷாலினியை விடவா இவன் கஷ்டப்பட்டு இருப்பான்?
4) climax காட்சியில் பூங்கா பெஞ்சில் அமர்ந்து, ஷாலினி அர்ஜுனிடம், " கல்யாணம் ஆன மூனாவது நாளே வீட்ட விட்டு வெளியே வந்துட்டேன். உன் புள்ள இது. என் புருஷம் சுண்டுவிரல்கூட பட்டத்தில்ல" என்று சொல்லும்போது, அட ச்சை! என்ன டா இது. சந்தீப் மிகப்பெரிய எழுத்தாளன் சிந்தனையாளன் என்று நினைத்தோமே, கடைசில இவனும் ஒரு சினிமாக்காரன் தானா என்று தோன்றியது.
5) அர்ஜுன் ரெட்டியின் அர்த்தமில்லாத ஆத்திரத்தை தேவையில்லாமல் கொண்டாடிய படமோ இது?
இப்படி நினைச்சு பாருங்க.
அனிதா ரெட்டி என்று ஒரு கோபக்கார புள்ள.
அனிதா மொட்டைமாடியில் காலையில் படுத்துகிடக்க, அங்கு காயந்த துணியை எடுக்க வந்த, ஆண்ட்டி "என்ன என் நைட்டிய போத்தி இருக்க" என்று கூற, அதற்கு அனிதா போத்திய நைட்டிய கழுட்டி, ஆண்ட்டி தன் கையில் வைத்திருந்த அங்கிள் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு, தண்ணீர் டேங்கில் பியர் பாட்டிலை மொண்டு குடிக்கிறாள்,
'அர்ஜுன் ரெட்டி' ஒரு cult movie என்பவர்கள் 'அனிதா ரெட்டி' என்றிருந்தால் அதையும் கொண்டாடி இருப்பார்களா?
இப்படி தான் எனக்கு படம் முழுக்க சிந்தனை ஓடியது.
இப்படி தானே நிலம்பரி கோபம் அடைந்தாள், கடைசில அவங்கள கொன்றது.
இப்படி தானே திமிர் படத்தில் நடித்த கோபக்கார ஷரேயாவையும் கொன்றார்கள்.
'கொடி' படத்தில் நடித்த திரிஷாவுக்கு இதே நிலைமை தான்.
பொண்ணுங்க பண்ணா ரத்த காவா.
பசங்க பண்ணா தக்காளி தொக்கா?
அட போங்கய்யா!
************************************
அகோரி இல்ல, சுடுகாடு இல்ல, டீ தோட்டம் இல்ல, பீச் ஹாவ்ஸ் இருக்கு. ஏகப்பட்ட ஜலபுலஜங்ஸ் சீன்னு இருக்கு. அதுல ஒரு 12 lip-to-lip சீன் இருக்கு. 37 தடவ படத்துல நிறைய பேரு பேச்சு வார்த்தைல 'fuck' வார்த்தைய ரொம்பவும் யதார்த்தமா பயன்படுத்துறாங்க.
அப்பா விக்ரம் தன் மகன் துருவ தமிழ்ல அறிமுகப்படுத்த போறாரம் பாலாவ வச்சு.
தம்பி துருவ், என் அனுபவுத்துல சொல்றேன். எப்படி பெத்தவங்கள புரிஞ்சுகிறது கஷ்டமோ அத மாதிரி, பிள்ளைங்க நமக்கு எது புடிக்கும் புடிக்காதுனு கடைசி வரைக்கும அவங்களுக்கு புரியாது.
இது தான் நல்லதுனு நமக்கிட்ட வந்து சொல்வாங்க. அதயெல்லாம் கேட்கனும்னு அவசியமில்ல.
பிடிக்காத கல்யாணத்துல பொண்ணோ மாப்பிளையோ முதல் நாள் ஓடி போறது இல்லையா? அந்த மாதிரி படம் shooting முதல் நாள் எங்கயாச்சும் ஓடி போய்டு தம்பி!
இல்ல, இல்ல, அப்பா சொன்ன சரி தான். நான் பாலா கையில அடி வாங்கினா தான் சினிமாவுல சீமாசானத்துல உட்காந்து ரசிகர் மன்ற 6 அடி மாலை போடுவாங்கனு நீ நினைச்சினா, கடைசில எலும்புகூடு மாலைகூட கிடைக்காது தம்பி.