Oct 8, 2017

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்- 30

For Maathevan-
கண்டவனையெல்லாம்
interview எடுத்து

காண்டாக்குற

கன்னங்குழி சிரிப்புல
Cool ஆகுற.

எடை கூடியும் அழகா தெரியுற
புள்ளத்தாச்சி பொண்ணு
போல
உன் எடை கூடியும்
அம்சமா இருக்குற.

கருப்பு சட்டை
வெள்ளை வேட்டில
"கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா"
முத்துகுமார் வரிகள
ஞாபகம்படுத்துற,
கஜினி சூர்யா போல
என் உலகத்த
மறக்கடிக்குற.

நீ சொல்லிய Movie review
பலவற்றில எனக்கு
உடன்பாடு இல்ல
இருந்தாலும் ரசிச்சு
பாத்து இருக்கேன்
படிக்காத மாணவன்
கிறுக்கி தள்ளிய தேர்வு
பதிலகளை திருத்தும்
ஆசிரியர் போல.

நீ பேசும் தமிழுக்கு
என்னை அடிமையாக்கியவனே,
30 வயசுல
Semi-retiredஆன
என் வயிற்று பட்டாம்பூச்சிகளுக்கு
CPR கொடுத்தவனே!

படம் முடிந்து
Generalஆ
Exitடை தேடும்
General Audience போல
நானும் தேடுகிறேன்
இந்த
ஆலாதி Admirationக்கு
ஒரு பெயரை.

No comments: