வேலை கஷ்டம்னு நினைச்சு, கொஞ்சம் நாள் படிக்க போலாம்னு வந்தா, இந்த படிப்பும் என்ன இவ்வளவு கஷ்டமா இருக்குப்பு??
சரி, அந்த வாக்கியத்த மறுபடியும் rephrase பண்ணி சொல்றேன். இந்த மூன்னு மாசத்துல knowledge கண்டிப்பா நிறைய வளர்ந்து இருக்கு. எத்தன புது விஷயங்கள கத்துகிட்டேனு கணக்குல வச்சுக்கு முடியாத அளவுக்கு அவ்வளவு சுவாரஸ்சியமான விஷயங்கள் படிச்சு, ரசிச்சு இருக்கேன். ஒருத்தன் மொழி ஏன் கத்துக்கிறான், அத எப்படி கத்துக்கிறான், ஒரு மொழி கத்துகிட்டு, இன்னொரு மொழிய சுலபமா கத்துக்க முடியுமா? முடியாதா? அத அப்படி மூளைக்குள்ள process ஆவுது. இப்படி ஏகப்பட்ட விஷயங்கள்.சின்ன புள்ளைங்க ஆங்கிலம் கத்துக்கும்போது, ஏன் முதல 'playing, jumping, eating'னு -ing present progressive verb பயன்படுத்துறாங்கனு பல விஷயங்கள பத்தி தெரிஞ்சுக்க ஒரு அபூர்வ வாய்ப்பு இந்த பயணம்.
ஆங்கிலம் மொழி யாருடையது? பரவிகிடக்கும் ஆங்கில ஆதிக்கத்தால் விளைவுகள், பயன்கள்.... இப்படி ஆர்வத்தயும், அதே சமயம் எத்தன மொழி தெரிந்தாலும், நம்ம எல்லாருமே ஏதோ ஒரு வகையில ஒன்னு தானு புரிந்த மூன்னு மாசம் இதுவா தான் இருக்கும்.
அப்பரம் என்ன லா stress?
படிக்கறது stress கிடையாது. அதுக்கு அப்பரம் 2500 வார்த்தைல ஆய்வு கட்டுரை எழுதனும். அது தான் மண்டைய காய வைக்குது.
இப்படி கிட்டதட்ட 9 கட்டுரைகள் மூனு மாசம் எழுதிகிட்டு இருக்கேன். ஒரு கட்டுரை எழுதறதுக்குள்ள, ஒரு கிட்னி காணாம போயிடும். இதுல கட்டுரைனு சுருக்கி சொல்லிட்டேன்- essay, research, analysis. இப்படி ஜில் ஜங் ஜக்குனு மூனா பிரிக்கலாம். எனக்கு மூனுமே வராது, பிடிக்காது. என்ன படிச்சேனு உட்கார்ந்து பேச சொல்லுங்க, வாய் கிழிய, உங்க காது வலிக்க, பேசுவேன். ஆனா, இந்த எழுத்து தான்..... அபிராமி கமல் மடல் எழுதுற மாதிரி....அந்த வார்த்த தான் வரமாட்டேங்குது.
இதுக்கு பத்தாதுனு வாரம் வாரம் quizனு ஒன்னு வச்சு இன்னொரு கிட்னியயும் புடிங்கிட்டாங்க. அதுல கேள்வி என்னான்னு புரிஞ்சிக்க இன்னிக்கு வரைக்கும் முயிற்சி பண்றேன்...ம்ம்ம்...ஹும்... இது ஆவறதுக்கு இல்ல!
அப்பரம் வாரம் வாரம் reflection- அதுக்கு ஒரே ஒரு மார்க் தான். ஆனா, குறைந்தபட்சம் 3 மணி நேரம் செலவு பண்ணனும். ஏனா, 42 பக்கங்கள் படிக்கனும். அந்த ஒரே ஒரு மார்க் பெற.
18 வயசுல படிக்கறதுக்கும், 'ஹாலோ, எனக்கென பெரிய வயாசாச்சு? எனக்கு 18 வயசு தான்' னு பொய் பேசும் மூட்டு வலியும் முதுகு வலியும் முழுசா நம்மகிட்ட ஐக்கியமான வயசுல படிக்கறதுக்கும் கடலளவு வித்தியாசம் இருக்கு, சித்துப்பு!! 2 மணி நேரத்துக்கு மேல ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்க முடியாது. ஏனா என் மண்ட உச்சில சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குது!
ராத்திரி குளிர் வேற அடிக்கும் சீசன் இது. இங்க brisbaneல சாய்ந்திரம் 5 மணிக்கெல்லாம் இருட்டிடும். அதுக்கு அப்பரம் சின்ன தம்பி கவுண்டமணி மாதிரி, 'டேய், 6 மணிக்கு மேல, ஒரு ரூபா கொடுத்தாலும், நான் வேல பாக்க மாட்டேன்' னு கூவுவாரே அந்த மாதிரி, 6 மணிக்கெல்லாம், தூக்கம் கண்ண சொக்கும். விடியற்காலைல 3 மணிக்கு, நல்ல தூங்கிட்டு இருக்கும்போது, வலது கண்ணுலேந்து தண்ணி கொட்டும். என்ன ஆச்சுனு போய் கண்ணாடில பாத்தா,
'ஜாதி ஜாதினு கத்துறீயே, ஜாதியா டா உன்ன பெத்துச்சு?" னு விஜயகாந்த் ஒரு படத்துல சொல்லும்போது அவருக்கு கண்ணு சிவப்பா துடிக்குமே அந்த மாதிரி, கண்ணு சிவப்பா ஆயிடும் எனக்கு. இது தான் மன உளைச்சலின் உச்ச கட்டம்னு நினைச்சு மூஞ்சிய ஜில் குழாய் தண்ணில கழுவிட்டு படுத்துடுவேன்.
'இதுக்கே பயந்தா எப்படி, இன்னும் ஒரு spessal item இருக்கு'னு வடிவேல் சொல்ற மாதிரி,
அடுத்த நாள், 6 வேளை சாப்பிடுவேன். சும்மா ஒரு தட்டு உணவு இல்ல. 6 பெரிய விருந்து சாப்பிடுவேன். அதுக்கு அப்பரம் 2 நாள், சாப்பிட்டேனாகூட தெரியாத அளவுக்கு assignments செய்ய பார்ப்பேன். நான் செய்றேனோ இல்லையோ, அது என்னைய நல்லா வச்சு செய்யும்.
வீட்டுல இருந்தா, சாப்பிட்டுகிட்டும் தூங்கி கிட்டும் இருப்பேன், அதனால, பள்ளி நூலகத்துக்கு போயிடுவேன். கிட்டதட்ட 10 மணி நேரம் வேலைய முடிக்க முயிற்சி பண்ணும்போது தான், அந்த திகில் சம்பவம் நடக்கும்.
'டேய், எவ்வளவோ பாத்துட்டோம், இதலாம் சப்ப மேட்டர். என்னால முடியும்'னு மனசுக்குள்ள, சக்தி கொடுனு ராகம் பாடும்போது, இடது கை சுண்டுவிரல ஒரு சொட்டு தண்ணி ஜொலிக்கும். என்ன டா ஆச்சுனு, விரல கண்ணுகிட்ட கொண்டு போனா, தக்காளி, அழுதுகிட்டு இருக்கேன்.
எனக்கு தெரியாமலே நூலகத்துக்கு நடுவே உட்கார்ந்து அழுத நாட்கள் ஏராளம்.
அப்போ, கட்டம்போட்ட சிவப்பு சட்டை, ஒரு french பையன் நூலகத்துக்குள்ள நுழைவான். எப்படி frenchனு உனக்கு தெரியும்னு கேட்காதீங்க? சரி italianன கூட இருக்கலாம். நான் தான் சோகத்துல அழதுகிட்டு இருக்கேன்ல. ஏன் கிட்ட ரொம்ப கேள்வி கேட்காதீங்க, ப்ளீஸ்!
அழகான பையன் முன்னாடி அழ கூடாதுனு விறுவிறுனு 'வேர்த்த' கண்ண துடைச்சிகிட்டு,
சரி விரியா விடுனு மனசுக்கு ஆறுதல் வார்த்த சொல்லும்போது, மறுபடியும் பசிக்கும்.
1 comment:
பாட்டிக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி லீவ் லெட்டர் குடுத்துட்டு ஓடி வந்துடுங்க பாஸ்....😂😂😂😂
Post a Comment