Jun 20, 2018

[பயணம்- movieworld, Gold Coast] சூப்பர்மேனை சந்தித்த போது

Movieworld- Gold Coast, Australia. (உல்லாச பூங்கா)

Brisbaneலிருந்து ஒரு மணி நேரத்தில் உல்லாச பூங்காவிற்கு சென்றுவிடலாம். நுழைவு கட்டணம் கொஞ்சம் பதற வைச்சாலும், வாழ்க்கைல ஒரே ஒரு தடவ போற இடம் இதலாம். ஆக, அத பத்தி ரொம்ப யோசிக்காம போயிடனும். இணையத்தில் கட்டணம் பதிவு செஞ்சா, இன்னும் மலிவு, அங்க நேரடியா போய் டிக்கெட் வாங்கினால் கொஞ்சம் அதிகம்.

 


காலையில் 10 மணிக்கு சென்றுவிடலாம். கூட்டம் அதிகம் இருக்காது. அதுவும் பொது விடுமுறை இல்லாமல், சாதாரணமான வார நாள் என்றால் கூட்டம் அவ்வளவா இருக்காது. நுழைஞ்ச உடனே, நீங்க யார இருந்தாலும், டக்குனு சந்தோஷம் ஆயிடுவீங்க. ஒலிக்கப்படும் பிரமாண்ட இசையும், வண்ணமும், ஏகப்பட்ட உணவு பொருளும், ஐஸ்கீரிமும் உங்கள குதுகலம் படுத்தும். 

கொஞ்சம் நேரம் கழித்து, stunt show நடந்தது. கண் முன்னாடி, பறக்கும் வாகனங்களும், தீப்பொறியும் மிரள வைத்து விட்டார்கள். 

street parade ஒரு நிகழ்ச்சி. சாலையில், superhero மற்றும் wonder woman இன்னும் சில கதாபாத்திரங்கள் வந்து சண்டை, நடனம் என்று பல நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றையெல்லாம் நின்றுபடியே அல்லது அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்தபடியே ரசிக்கலாம். இதுல என்ன சுவாரஸ்சியம் என்றால், இந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கைக்கு எட்டிய தூரத்தில் பார்க்கலாம்.

முதலில் சூப்பர்மேன் வந்தார். அவருடன் தனியாக படம் எடுத்து கொள்ள, 20டாலர் கொடுத்து அந்த பாக்கியத்தை பெறலாம். ஒரு சுற்று சுற்றி விட்டு, சிறிது நேரம் கழித்து, பேட்மேன் வந்தார்.

என் அம்மா, "ரெண்டு பேரும், அதே ஆளு தான்."

நான்: இல்ல மா! இருக்காது.

அம்மா: இல்ல. ரெண்டும் ஒன்னு தான்.

நான்: எப்படி தெரியும்?

அம்மா: ரெண்டு பேருக்கும்....அதே கண்கள்!

நான்: என்னது அதே கண்ணா? 

அங்க வந்த முக்கால்வாசி, குழந்தைங்க தான். கூட அவங்க பெற்றோர், இல்ல தாத்தா பாட்டி இருந்தாங்க. ஆனா, பெரியவங்க சின்னவங்க என்று வயசு வித்தியாசம் இல்லாம, எல்லாருமே ஆச்சிரியத்துடவும் ஆனந்தத்துடவும் பார்த்தோம், ஒவ்வொரு முறையும் ஒரு சூப்பர்ஹீரோ வந்தபோது.  'எதுக்கு தெரியல, ஆனா, நம்மள காப்பாத்த ஒருத்தர் வந்துட்டார். இவரு இருக்கார் பா அது போதும்," என்ற உணர்வும் அடிப்படை ஏக்கம் கலந்த ஆசை தான், எல்லாருக்கும் சூப்பர் ஹீரோக்களை பிடிக்க காரணமாக இருக்கும் என்று அந்நோடி எனக்கு தோன்றியது. 

                                   

No comments: