Aug 18, 2018

கோலமாவு கோகிலா- போதை ஏத்திய tequila

"மாப்பிள்ள இவர் தான் ஆனா இவர் போட்டுருக்கும் சட்டை என்து" சொல்ற மாதிரி, படத்துல நடக்கும் சம்பவங்கள் எல்லாம் சீரியஸ் தான் ஆனா படம் காமெடி படம்.

கோலமாவு கோகிலா.




இந்த படத்தோட இயக்குனர் நெல்சன் கையாண்ட வெற்றி உத்தி நகைச்சுவை. காமெடி படம்னு ரெண்டு வார்த்தைல முடிச்சிகிட்டாலும், டக்-னு சிரிக்க வைக்கும் நகைச்சுவை வசனமும், அத சொல்ற கதாபத்திரங்களும் படத்தோட மிக பெரிய தூண்கள். எல்லாருமே காமெடி பண்ணாலும் சலிப்போ அல்லது 'லொள்ளு சபா' மாதிரிகூட ஆகியிருக்கலாம். ஆனா, அப்படி எந்தவித பிசுரும் இல்லாம, அளவா, அழகா திரைக்கதையை நகர்த்திய விதம் படத்தை ரசிக்க வச்சிருக்கு.

எனக்கு படத்துல பிடிச்ச ஒரு விஷயம், கதைல வர அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வலுவான அழுத்தமான நடிப்பை காட்டியது தான். என்ன தான் நம்ம விஜய் டிவிய கரிச்சு கொட்டினாலும், விஜய் தொலைக்காட்டி நிகழ்ச்சிகள் மூலம் நமக்கு ஏராளமான திறமைசாலிகள் கிடைச்சு இருக்காங்க- தொகுப்பாளர் ஜாக்லின், அரந்தாங்கி நிஷா, சின்ன பையன் ஆனந்த போன்றோர்.

யோகி பாபு மலிகை கடையில வேலை பாக்கும் சின்ன பையன் ஆனந்த வரும் காட்சிகளில் எல்லாம், ஆனந்த் பயபுள்ள அள்ளி சாப்டுருக்கான்!

யோகி பாபு: டேய் இனிமேல அவன் (ஜாக்லினை காதலிக்கும் அன்பு தாசன்) வந்தான் நான் இல்லேனு சொல்லு.

ஆனந்த்: நீ செத்துட்டேனு சொல்றேன்.

யோகி பாபு: என்னாது?

ஆனந்த்: எரிச்சுட்டாங்கனு சொல்றேன்.

இந்த மாதிரி ஏகப்பட்ட சிரிப்பு வெடி படம் முழுக்க தூவி விட்டுருங்காங்க.

நயன் தன் அம்மாவோட மருத்தவ செலவுக்காக, ஒரு கும்பல்கிட்ட வேலை பாக்கபோறாங்க. அங்க கொக்கேன் கடத்துறாங்க. நயன் குடும்பத்தோட 90கிலோ சரக்க கடத்திட்டு போகும் கட்டாயம் ஏற்படுது.
ஒரு கட்டத்துல அந்த கும்பல்கிட்டயும் மாட்டிக்குது. போலீஸும் கண்டுபிடிக்க, எப்படி தப்பிச்சாங்க தான் முழு கதையும். ரொம்ப சாதாரண கதை. ஆனா, கதை போன விதம் மிக நேர்த்தி.

நகைச்சுவைக்காக தனியே காட்சி அப்படினு வகைப்படுத்தாம, எல்லா கதாபாத்திரங்களும் அன்றாட வாழ்க்கைல நம்ம எப்படி பேசுவோமோ அப்படி பேசியிருக்காங்க.

ஒரு காட்சில, நயன்தாரா எத எப்படி கடத்தபோறோம்னு ப்ளான் போட்டு தன் குடும்பத்துகிட்ட  சொல்லிகிட்டு இருப்பாங்க, அப்போ வாய்அடைச்சு போய் பாத்துகிட்டு இருந்த அப்பா சொல்வாரு, "யம்மா, கோகிலானு நான் ஒரு புள்ளைய வளத்தேனு அவ எங்க?"னு சொல்ற situational காமெடியா இருக்கட்டும்,

அம்மாவா வரும் சரண்யா உடம்பு சரியில்லாத மாதிரி நடிச்சு, ஒரு அலமாரில புதைக்கப்பட்ட கொக்கேனோட  சேர்த்து அவங்கள தூக்கி யோகி பாபு வண்டில போட்டுகிட்டு போகும்போது, உணர்ச்சிவசப்பட்ட ஜாக்லின் காதலன் அன்பு தாசன் (ஸ்மைல் சேட்டை புகழ்) சரண்யா கால பிடிச்சுகிட்டு,

"உங்களுக்கு எதாச்சு ஒன்னு ஆச்சுனா ஆண்ட்டி பூமிய புளந்துடுவேன்,
வானத்த கிழிச்சுவேனு," கத்த, அதுக்கு சரண்யா டக்-குனு எழுந்து,

"சேலைய கிழிச்சுடாத பா"னு சொல்ற counter காமெடியா இருக்கட்டும்,

யோகிபாபு தன் வண்டி பின்னாடி பதிக்கப்பட்ட வாசகம்- 'கோகிலமே நீ குரல் கொடுத்தா, உன்னை கும்பிட்டு கண் அடிப்பேன்'

வண்டில ஏறும்போது, அத நயன் கிட்ட படிச்சு காட்டிட்டு, "spelling க்ரட்டா இருக்குல?"னு சொல்ற bonding-in-the moment காமெடியா இருக்கட்டும்

வசனம் எழுதிய இயக்குனர் நெல்சனை பாராட்டியே ஆகனும்.

குறிப்பா, யோகிபாபு வண்டில கடத்திட்டு போகும் sequence. யோகி பாபு அடிக்கும் ஒவ்வொரு ஜோக்-கும் இனி facebook group page டைட்டிலா மாறும்.  முதல் ஷோ படம் பாத்துட்டு செய்தியாளர்கள் அவர்கிட்ட, "படம் எப்படி இருக்கு?"

யோகி பாபு: நடிச்சவங்க கிட்ட கேட்டா எப்படி? நாங்க நல்லா இருக்குது தான் சொல்வோம். போய் மக்கள்கிட்ட கேளுங்க சார்.

இப்படி நிஜ வாழ்க்கையிலும் யதார்த்தமான நகைச்சுவை உணர்வு கொண்ட யோகி பாபு இன்னும் கொஞ்சம் காலத்துக்கு தமிழ் சினிமாவுல் ஒரு ரவுண்ட் வருவார் என்பது நிச்சயம்.

எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச காட்சி, இடைவேளைக்கு முன்னாடி வரும் நயன்தாரா சீன் தான். ரொம்பவே subtleஆ ஒரு நடிப்பு. கோகிலா கதாபாத்திரத்துக்குள்ள இருக்கும் புத்திசாலித்தனத்தையும், அப்பாவித்தனத்தையும், கொஞ்சம் திருட்டுத்தனத்தையும் வெளிகோணர வைச்ச காட்சி. நயன் சினிமா வரலாறுல இது கண்டிப்பா ஒரு 'செம்ம கெத்து' காட்சி.

இப்படி ஏகப்பட்ட ரசிக்கும்படியான விஷயங்கள் இருந்தாலும், படம் இடைவேளைக்கு அப்பரம் கொஞ்சம் நேரம் தட்டு தடுமாறி போச்சு. ஆனா, மறுபடியும் இறுதி கட்டத்துல இழுத்து பிடிச்சு நின்னுட்டாங்க.

இயக்குனர் நெல்சன் சமீபத்தில் கொடுத்த பேட்டில சொல்லியிருந்தார், இந்த படம் முதல ஹீரோ வச்சு பண்ற மாதிரி தான் அமைக்கப்பட்டதுனு.

நெல்சா, நல்ல வேளயா!
அப்படி மட்டும் பண்ணியிருந்தீங்க, திரும்பி திரும்பி அரைக்கப்பட்ட
அரைச்ச மாவு தான் கிடைச்சுருக்கும்,

கோலமாவு கிடைச்சு இருக்காது!

No comments: