Apr 6, 2014

சிவகார்த்திகேயன் மேல எனக்கு பொறாமையா? ஏய் ஏய் எஏஏஏஏய்!

 பல்கலைகழகத்தில் psychology படித்துகொண்டிருக்கும் தங்கச்சிகூட கோட் போடாமலே ஒரு வாக்குவாதம் நடந்தது நேத்து.

நான்: டிவில இருந்தபோது பிடித்த சிவகார்த்திகேயன இப்ப படத்துல சுத்தமா பிடிக்கல. அது ஏன்?

தங்கச்சி: இட் ஸ் conspiracy theory!

நான்: அப்படின்னா?

தங்கச்சி: நம்மள மாதிரியே லூசுத்தனமா பேசிகிட்டு இருந்த பய, இப்ப 10 கோடி வாங்குறானே நம்ம இன்னும் வாழ்க்கைல ஒன்னுமே பண்ணாம இப்படியே இருக்கோமே-னு ஆழ்மனசு சொல்றதுக்கு பெயரு தான் conspiracy theory!!

நான்: அவன் மேல எனக்கு என்ன பொறாமை?

தங்கச்சி: பொறாமை இல்ல. பொறாமை வேற இது வேற. பொறாமைங்கறது ஒரே வேலை பார்க்கும் ரெண்டு பேருக்குள்ள வரது. இது அப்படி இல்ல பாரு.

நான்: அதான் கேட்குறேன்? அப்பரம் ஏன்?

தங்கச்சி: மனஷன் புத்தி. மனஷன் மனசு.

நான்: இது தப்பில்லையா??

தங்கச்சி: தப்பு தான்!

நான்: எப்படி இத குணப்படுத்துறது.

தங்கச்சி: தமிழ் படமெல்லாம் பாக்காம இருந்தாவே போதும்!!

*****************************************************************************


மான் கராத்தே- முடியல அண்ணாத்த!!! 

எல்லாம் படங்களிலும், தண்ணி அடிப்பதுபோலவும், அதுக்கு ஒரு பாட்டு, வேலை வெட்டி இல்லாம, பொண்ணு பின்னாடி சுத்துறது, சில டபுள் மீனிங் காமெடி வைத்து கொண்டு இந்த படத்த குடும்பத்தோடு வந்து பாருங்க என்பதும்.....

முடியல அண்ணாத்த!

கதை எழுதியவர் முருகதாஸாம்!! 

முடியல அண்ணாத்த!!

இந்த படத்துக்கு ஹான்சிகா தான் உயிரோட்டம் என்று எல்லாம் promoக்களில் சொல்வது....

முடியல அண்ணாத்த!

சிவா, ஒரு வட்டத்துக்குள்ள உன்னையே...உங்களயே நீங்கள் பூட்டி வைச்சிக்காதீங்க!!

முடியல அண்ணாத்த!



(படத்தில் எனக்கு பிடித்த ஒரே ஒரு சின்ன விஷயம்....மறுபடியும் தேவா குரலில் ஒரு பாடலை கேட்டது மட்டும் தான்)

Mar 20, 2014

ஜஸ்ட் சும்மா (20/3/14)

விரும்மாண்டி படம் போல் ஆளாளுக்கு ஒரு கதையை சொல்கிறார்கள் இந்த காணாம போன விமானத்தை பற்றி.

மனஷன் கண்டு பிடித்த மிஷின்-களும்
மிஷினை கண்டு பிடித்த மனஷன்-களும்

இருக்கும்வரை உண்மைகள் புதைக்கப்படும்! 21ஆம் நூற்றாண்டில் இதை கண்டுபிடிக்க இவ்வளவு போராடுகிறோம்! நாம் அனைவரும் ஒன்னுமே இல்லை என்பதை புலப்படுத்துவதாக தான் இதை நான் பார்க்கிறேன்.

உண்மை விரைவில் வெளியே வரும்! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிச்சயம் ஒரு விடை கிடைக்கும்.

*****************************************************************************

இளையராஜாவின் 1000வது படத்துக்கு இயக்கம் பாலா! (சரி..)
இதில் கரகாட்ட நாயகன் சசிகுமார் (ஐயோ!!....)
நாயகி வரு சரத்குமார் (ஐயோ ஐயோ......)


சரி இந்த படத்திலாவது சொப்பனசுந்தரியை யாரு வச்சு இருந்தாங்கன்னு சொல்லிடுங்க பா????

*****************************************************************************
பாலாவை கலாய்த்து ஒரு பாடல்!! வரிகள் 'வாலு' படத்தில். எழுதியது மதன் கார்க்கி என்று கேள்விபட்டேன்.

ஷங்கர் படம் போலே காதல் பிரமாண்டமா சொல்லட்டா
மணிரத்னம் போலே நான் கொஞ்சம் பேசட்டா
கௌதம் மேனன் போலே இங்கிலீஷ்ல் சொல்லட்டா
பாலா படம் போலே உன்னை பிச்சு திங்கட்டா


@1.51

*****************************************************************************

பாடலில் கோச்சடையன் பத்தியும் வரும்!! ஐயோ கோச்சடையன் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது..... இது தான்!!



இது தீபிகாவா? இது தீபிகாவா?

தீ குளிப்போம், தோழர்களே!!!!!!!

*********************************************************************************

Feb 26, 2014

தற்போது சைட் அடிக்கப்பட்டு கொண்டிருப்பவர்கள்-26

1) சமீபத்தில் 'highway' ஹிந்தி படம் பார்த்தேன். படம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. அதுக்கு ஒரு காரணம் ரண்டிப் ஹூடா!


     
அப்படி ஒரு நடிப்பை வழங்கி இருந்தார் ரண்டிப் ஹூடா! அந்த அழுவுற காட்சியலாம்.....யப்பா!! ஓடி போய் திரைக்குள்ள புகுந்து ஆறுதல் சொல்லன்னும்னு இருந்துச்சு!! கிட்டதட்ட ஒரு கெட்டவன் கதாபாத்திரம்....ஆனாலும் பிடிச்சு இருந்துச்சு.

சிறப்பு அம்சம்: வில்லத்தனமான முகத்தில் ஏதோ ஒரு அப்பாவித்தனம் கண்களில்.

அப்பரம், இவரின் முந்தைய புகைப்படங்களை பார்த்தேன். அட, எப்படி இவ்வளவு நாள் நம்ம கண்ணுல்ல படாம இருந்தார்னு தோணுச்சு:))




காதல் கவ்வும் success meet!

ஓடாத படத்துக்கு எல்லாம் success meet  வைக்குறாங்க!
இதுக்கு இருக்க கூடாதா?

ஹிஹிஹி!! முதலில் 'காதல் கவ்வும்' குறும்படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றிகள் கொடிகள்! facebook, twitter, youtube வழி படத்தை பார்த்தும் கருத்து சொல்லியும் ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!



படம் பார்த்த ஒரு சில பேர் ஒரு படி மேலாக சென்று விமர்சனம் செய்து இருக்கிறார்கள்.

http://theguruproject.wordpress.com/2014/02/19/short-film-kadhal-kavvum-by-gayathiri/

ஆக, மறுபடியும் அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய நன்றி!!!:)))