Feb 25, 2018

காற்றில் மறைந்த கீதம்


விவரம் தெரியும் வரை ஸ்ரீதேவி தான் உண்மையான முருகன் சாமி என்று நினைத்தேன்.

இன்று காலை 8 மணி இருக்கும். வெளியே நடக்க போகலாம் என்று காலணியை மாட்டியவாறு, கைபேசியில் டிவிட்டர் பக்கம் சென்றேன். அதிர்ச்சி செய்தி. ஸ்ரீதேவி பற்றி. இல்லை அப்படி ஒன்றும் இருக்காது என்று
மற்ற இணையதளங்களை புரட்டி பார்த்தேன்.

உண்மை தான்.

54 வயது. cardiac arrest. மனம் பாரமாகிவிட்டது. ஸ்ரீதேவி பாடல்கள் ரொம்ப பிடிக்கும். இணையத்தளங்களை படிக்க படிக்க, அதே இரங்கல் செய்தி. டிவிட்டர் பக்கம், பல பிரபலங்கள் #RIPsridevi டிவிட்டு போட, என்னமோ செய்தது மனசு.

நான் நடக்க சென்றுவிட்டேன்.


எப்போதும் playlistலுள்ள பாடல்களை தான் கேட்பேன். ஆனா, இன்னிக்கு, விரல் youtube பக்கம் போனது.  ஸ்ரீதேவிஹிட்ஸ் பாடல்களை தேடி சென்றது. புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றனும்னு சொல்வாங்களேன் அந்த மாதிரி, முதல் பாடலே, "காற்றில் எந்தன் கீதம்...."



கேட்ட முதல் வரியிலேயே, கண்கள் குளமாகிவிட்டன. கண்ணீருடன், தொடர்ந்து நடந்தேன். "காற்றில் எந்தன் கீதம்" பாடலில், ஒரே ஒரு மைக், அருவி சாரல், ஸ்ரீதேவி- எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத பாடல். அந்த பாடலில், தன் முகபாவனையால் முழுதாய் படம் பார்ப்பவர்களை வசீகரித்து இருப்பார். இப்போ இந்த மாதிரி பாடல்களை 'சுமந்து' செல்ல யாரு இருக்கா சொல்லுங்க?

"ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"னு வசனத்தை சொல்லாத ஆள் இருக்கா?

இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் பார்த்துட்டு, தியெட்டரில் கண்ணீர் மல்க எழுந்து நின்று கைதட்டிய ஞாபகம் அலைமோதியது.

நேற்று இரவு, அவங்க துபாயில் உறவினர் ஒருத்தர் கல்யாணத்தில் சந்தோஷமாக நடனமாடிய வீடியோவை பார்த்தேன். துக்கம் தாங்கமுடியவில்லை.

ஸ்ரீதேவியின் அன்றாட உடற்பயிற்சி உணவு பழக்கத்தை பற்றி படிக்க நேர்ந்தது. இப்படி இருந்தும், எப்படி? ஏன்?

மாரடைப்பு வர பல காரணங்கள் இருக்கு.
விதி.
நேரம்.
'எமன் கூப்ட்டான்'

இப்படி ஆளுக்கு ஒரு காரணம் சொன்னாலும், மனம் இன்னும் லேசாய் விசும்பி கொண்டு தான் இருக்கிறது.

Feb 13, 2018

காமம் comes first( கவிதை)


மஞ்சத்தில் தஞ்சம் புகுந்தபடி
நாம் கிடக்க,

வெறும் போர்வையை மட்டும்
ஆடையாய் கோர்க்க,
வேர்வை காய்ந்த முதுகில்
உன் ஆள்காட்டி
விரலும்
நடுவிரலும்,
மயிலிரகாய்
கழுத்திலிருந்து
கீழே வருட
மறுபடியும் புரிந்தது
எவ்வளவு பெரிய
வித்தைக்காரன் நீ என்று!

புயல் அடித்து ஓய்ந்த
நிசப்தம் கலைக்க,
“Wake up baby Ma” 
காதுமடல் உரச
உன் உள்ளங்கை
மட்டும் திருட்டுத்தனமாய் 
என் இடுப்பை
அணைக்க
என்னிடம் பதில் இருந்தும் அமைதிகாக்கிறேன்.
கொஞ்சம் நேரம்
உன் மூச்சுகாற்று படரட்டும்.

கைபேசியில் நீ எதையோ 
தேடிகொண்டிருக்க,
மூன்று நாட்கள் ஷேவ் செய்யாத தாடியும்
அதில் ஓரமாய் மலர்ந்த நரை முடியும்
லேசாய் இடிக்கும் குட்டி தொப்பையும்

அனைத்தையும் நான் ரசிக்க,

“why are you so hot?” 
இதழ் பதித்தேன் 
கன்னக்குழிக்கும் தாடைக்கும் இடையே,
நீ வெட்கப்பட்டு புன்னகையிக்கும்
இடம் எதுவென்று அறிந்தே. 

“baby ma, how do I delete this in fb?”
அவனுக்கு தெரியவில்லை.

சொல்லி கொடுத்தேன்.

நேற்று இரவு போல்.

facebookல் யார் யாரோ போட்ட
படங்களை பார்த்து நக்கல் அடித்து

சேர்ந்து சிரிக்க,
கல்யாணம் செய்ய போகும் 

அவனது பள்ளி நண்பன் ஒருவனது
படத்திற்கு, 
“காமம் comes first da.” என்று கிண்டல்
செய்து வாழ்த்து கூற,

“baby ma, evening ஆச்சு டா. Get up” 

என அவன் எழ,
மீண்டும் தேடல்கள்
முளைத்த ஆசைகள்
கலைந்த ஆடைகள்.




Feb 12, 2018

'முதல் இரவும்' முதல் பிரியாணியும்

8 வருஷம் வேலை செஞ்சதுபோதும். ரொம்ப 'போர்' அடிக்குது. (போரும் நடந்தது) வேற ஏதாச்சு சுவாரஸ்சியமா பண்ணலாம்னு முடிவு எடுத்து, ஆஸ்திரேலியாவுல கால் அடி எடுத்து வச்சாச்சு. masters of applied linguistics அப்படினு ஒரு படிப்பு. இது என்ன, யாரு, எப்படி- அப்படினு சத்தியமா ஒன்னு தெரியாது. படிப்பு முடிய 1.5 வருஷம் ஆகும். அதுக்குள்ள கண்டுபுடிச்சிடுறேன்.




மொழி சம்மந்தப்பட்ட விஷயம்னு இணையத்தளத்துல போட்டு இருந்துச்சு. அந்த ஆர்வத்தோடும், ஆசையோடும், ஏதோ ஒரு இதோடும் மறுபடியும், காலேஜ்க்கு பைய தூக்கிட்டு கிளம்பிட்டேன்.

"மாப்பு, படிப்பு என்ன அவ்வளவு சீப்பா போச்சா'னு என் குலசாமி கவுண்டமணி சத்தியராஜ்கிட்ட ஒரு படத்துல சொல்வார்ல, கவுண்டமணி எங்கிட்டயும் சொல்றது மாதிரி தான் தினமும் காதுல கேட்குது. எந்த தைரியத்துல படிக்க கிளம்பிட்டேனு கேள்விய மனசுக்குள்ள ஒரு 1000 தடவ கேட்டு இருப்பேன். என்னனெமோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமானு ஒரு குருட்டு தைரியம், முரட்டு நம்பிக்கை.


தனிமையில் ரசித்து கழித்த முதல் இரவு 10 Feb. வாழ்க்கையில் தனிமைபடுத்தப்பட்ட தருணங்கள் ஏராளம். ஆனா, தனியாக வாழ்ந்த நாட்கள் இல்ல. ஆக, இந்த அனுபவம் புதுசு. இந்த இரவு புதுசு. கடிகார முள் சத்தம், சாலையில் கடந்த சென்ற பெரிய லாரியின் எஞ்சீன் சத்தம், சுழலும் காற்றாடி சத்தம், பக்கத்துவீட்டு பையன் நடந்து சென்றபோது அவரின்           காலடி சத்தம், என் கைப்பையின் வார் லேசாக நாற்காலி மேல் தட்டி கொண்டிருந்த சத்தம், நிம்மதியின் நிசப்தம், ரொம்பவே ரசித்தேன். மறுநாள் பிரியாணி செய்ய போகிறோம்னு ஒரு அலாதி சந்தோஷத்துடன், 'முதல் இரவு' நல்லிரவாக அமைந்தது.

முதன் முதலாக சமையல் செய்றதுங்கறது  science practical மாதிரி. சில பல தட்டுகள் உடையும், சில பல காயங்கள் ஏற்படும். இதலாம் தாண்டி தான் பிரியாணிய அடை முடியும். அந்நிய மண்ணில் நான் சமைத்த முதல் உணவு- பிரியாணி என்று நாளைக்கு வரலாறு பேசட்டும்!

பிறந்த குழந்தைய மருத்துவமனை அறையில் வைப்பாங்க, அப்ப வெளியே நின்னு எட்டி பார்க்கும் தந்தை மாதிரி தான் நானும் பார்த்தேன்.

கண் கலங்கிட்டேன்.






Dec 26, 2017

திரி- 2 (தொடர்கதை)


Coffee-vending machineல், இருக்கும் QR code ஒன்றை ஸ்கேன் செய்தான் சீலன் தனது கைபேசியிலுள்ள application மூலம். machineல் உள்ளே இருந்த காபி குவளைகள் பளிச்சென்று மின்னியது. தனக்கு ஒரு latte குவளையும், காபி மிஷினில் சாய்ந்தபடி நின்று கொண்டிருந்த யுவிக்கு ஒரு cappacino குவளையும் ஆர்டர் செய்ய பொத்தான்களை அழுத்த அவனது விரல்கள் முற்பட்டபோது, சீலனின் கையை தடுத்து, யுவி, “எனக்கு வேணாம். I will just share your latte.” என்றான்.

‘confirm’ ஆர்டர் பொத்தானை அழுத்துவதற்கு முன், யுவி, 25% sugar என்பதை அழுத்திவிட்டு சீலன் முகத்தைப் பார்த்து, “you’re getting old, pappu”
யுவி சொன்ன உண்மையை ஆமோதித்தவாறு, புன்னகையித்தான் ‘பப்பு’.

சூடான காபியை நுகர்ந்தபடியே சீலன், “ammamma embarrasses me all the time. எத்தன தடவ சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க.” காபி குவளையை உதட்டில் வைத்து கொஞ்சம் குடித்துவிட்டு, யுவியிடம் குவளையை நீட்டினான். 

“இப்ப யாரு?”

“ஏதோ அபியாம்.”


குவளையை வாங்கி கொண்ட யுவி, சீலனின் மீசையில் லேசாய் படர்ந்த காபி சொட்டுக்களை துடைத்தவாறு, “அம்மம்மாகிட்ட சொல்லு, அபி வேணாம். யுவி போதும்னு.”

சின்னதாய் புன்னகையுடன் சீலன், “I wish it was that easy.”


கைபேசியில் குறுந்தகவலுக்கு பதில் அளித்தபடி காபி மிஷினை நோக்கி நடந்தவந்த ஜெகன், சீலனைப் பார்த்து ஆச்சிரியமாய், “ஹேய் சீலன், எப்படி இருக்கீங்க?”

“ஐ எம் குட். நீங்க ஜெகன்?”

“always fantastic.”

பக்கத்திலிருந்த யுவியை ஜெகனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் சீலன். ஜெகனும் ஒரு காபியை வாங்கி கொண்டான். காற்பந்து, புது வருடம், கார் விலை ஆகியவற்றை பேசி கொண்டிருந்தனர் மூவரும். சீலன் முகத்தைக் கவனித்த ஜெகன்,

“you look dull. என்ன? பாட்டி… torture தாங்க முடியலயா?”

“பாட்டி சொன்னாங்களா?”

“சீலன், you are old enough to take your own decisions. உங்க மனசுக்கு என்ன தோணுதோ அத செய்ங்க, ரொம்பலாம் யோசிக்க கூடாது..” என்று சொல்லிவிட்டு ஜெகன் வாய்விட்டு சிரித்தான்.

சிரித்து கொண்டே ஜெகன், “hey why not both of you come join me tonight at dollar room. செம்மயா இருக்கும் பார்ட்டி இன்னிக்கு.” என்று சொல்லிவிட்டு கண் சிமிட்டி, “special party. You know what I mean, right?” 

பதில் புன்னகை வீசிய சீலன் வேண்டாம் என்று நாசுக்காய் சொன்னான்.

மறுபடியும் ‘mark boi’யிடமிருந்து அலைபேசி வர, கிளம்பினான் ஜெகன்.

காபியை உறுஞ்சி குடித்தான் யுவி. மழை வர அறிகுறிகளை காட்டிய வானம் கொஞ்சமாய் இருண்டது. சுற்றியிருந்த மரங்களிலிருந்த இலைகள் வீணையை மீட்டிய விரல்கள்போல் விளையாடி அசைய, குளிர் காற்று சீலனின் முகத்தில் வீச, 10-வினாடி நிம்மதியையும் அதே நேரத்தில் ஒருவித சஞ்சலத்தையும் தந்தது.
பெருமூச்சு விட்ட சீலன், “எல்லாத்தையும் சொல்லிடலாம் ஆனா….”

காபி குவளையை சீலனிடம் நீட்டிய யுவி, “அப்பரம் என்ன?”

“it’s going to hurt everyone.”

“இப்ப மட்டும் என்ன?”

முழித்தான் சீலன்.

“மத்தவங்க கஷ்டப்பட கூடாதுனு நீ உனையே கஷ்டப்படுத்திகிட்டு இருக்க, பப்பு. What is the worse that can happen?”

“இல்ல விடு யுவி. இத பத்தி நிறைய பேசியாச்சு. அப்பரம் கடைசில சண்டை தான் வரும்.”
“you are not true to yourself. And I am equally confused. என் நிலமல யோசிச்சு பாரு. What am I suppose to do?”

“எவ்வளவு வருஷம் ஆனாலும் வேட் பண்ணலாம்னு சொன்ன?”

மௌனம் பேசியது. மௌனம் மட்டுமே பேசியது. குடித்து முடித்துவிட்ட காபி குவளையை தூக்கி ஏறிந்தான் சீலன். வலது கட்டவிரலால் தனது இடது கைரேகை ஒவ்வொன்றாய் வருடி கொண்டிருந்தான் சீலன்.

“யுவி, நான் வெளியே வேட் பண்றேன். அம்மம்மா வந்தாங்கனா, கார்கிட்ட அழைச்சுட்டு வந்துரு.”

“why are you running away from the problem?”

யுவி அவ்வாறு கூறியதும், மனதில் எரிமலை வெடித்ததுபோல் இருந்தது. புருவங்களை சுருக்கி, சீலன் ஒரு குழப்ப பார்வை விட்டான். முறைத்தான். அவ்விடத்தைவிட்டு வேகமாய் நடந்தான். 


கோயிலிருந்து 300மீட்டர் தூரத்திலுள்ள ஒரு பஸ் டாப். காலியான இருக்கை இரண்டு இருந்தன. அதில் ஒன்றில் அமர்ந்து, தன் கோபத்தை தணிக்க கண்களை இறுக்க மூடி கொண்டு வாய் வழியாய் சுவாசத்தை உள் இழுத்தான்.

பின்தொடர்ந்த யுவி, “see, this is you. Always running away from the problem.”

 வேகமாய் நடந்து வந்த காரணத்தால் அவனுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது என நினைத்து கொண்ட சீலனுக்கு உண்மையாகவே anxiety attack வந்தது. தனக்குள் என்ன நடக்கிறது என்று புரிந்தும் புரியாலும் மூச்சை இழுத்து பிடித்தான்.

யுவி, “கொஞ்சம் வருஷத்துக்கு முன்னாடி, நம்ம Canada போய் settle ஆகலாம்னு சொன்னே. அப்பரம்… வேணாம்ணு சொன்னேன்.” பேருந்து நிறத்து இடத்தில் கத்தினான். அவ்வழியே சென்ற ஒரு சீன கிழவி அவர்களை ஒரு மாதிரியாய் பார்த்தார்.

யோகா வகுப்பில் சொல்லி கொடுத்ததை அறைகுறையாக செய்ய தொடங்கினான் சீலன். யுவி கத்துவது கொஞ்சம் கேட்டது. மண்டையில் ஏதோ அலைகள் கல்லை இடிப்பதுபோல் உணர்ந்தான். இந்த மாதிரி நிறைய முறை anxiety attack வந்திருக்கிறது. அப்போதும் இதே மாதிரி ஏதேதோ செய்து மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சி செய்வான்.

“அப்பர்ம்…. இல்ல இங்க இருப்போம்….35 வயசு ஆன பிறகு ஒரு வீடு வாங்கலாம். ஒன்னா இருக்கலாம்னு சொன்னேன். இப்போ… back to square one.”

கண்களை திறந்தான். இருண்ட வானம் அப்படியே இருந்தது. தலை இன்னும் சுற்றி கொண்டிருந்தது. லேசாக வேர்வை. கட்டைவிரல் நடுங்கியது. தண்ணீர் குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியது. யுவி பையில் ஏதேனும் இருக்குமா என யுவியிடம், “யுவி, do you have water?”

யுவி காதில் எதுவும் விழவில்லை.

“சீலன், உனக்கு உங்க அப்பா அம்மா அம்மம்மா எல்லாரும் முக்கியம். But not me….”

இரு கரங்களாலும் தலையை பிடித்தவாறு கீழே குனிந்தான். வாந்தி வருவதுபோல் இருந்தாலும் சமாளித்து கொண்டான். மறுபடியும் யுவியிடம்,
“ யுவி, தண்ணி இருக்கா?”

யுவி எந்த பதிலும் சொல்லவில்லை.

யுவியை விட்டு விட்டு மெதுவாய் கார் நிறுத்திய இடத்திற்கு நடந்தான் சீலன். வாகன பின்புறத்தை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தார் பாட்டி. பாட்டியை கண்டவுடன் இன்னும் மின்னல்வேகத்தில் கால் அடி வைத்தான் அவன் மயக்கதில் துடித்தாலும். கார் கதவை திறந்தவாறு, “அம்மம்மா, கோயிலுக்குள்ளயே வேட் பண்ண வேண்டியது தானே?”

“எங்க யுவி?”

“அவன் mrtல போறேனு சொல்லிட்டான்.”

“ஏண்டா கொஞ்சம் வேட் பண்ணி நமக்குகூட வந்துருக்கலாம்ல.”

கார் ஏசியை போட்டுவிட்டு, தண்ணீர் பாட்டிலிருந்து தண்ணீரை மடமடவென்று குடித்து முடித்தான். கைபேசியை chargeல் ஏற்றிவிட்டு, reverse gearயை மாற்றினான். வாகனம் பின்னாடி நகர, பாட்டி, “சீலா, அபி அம்மாகிட்ட பேசினே. கிறிஸ்துமஸ் லீவு அன்னிக்கு அபி free தான். நீ போய் பாத்து பேசுறீயா? நல்ல பொண்ணுடா.”

கைபேசி குறுந்தகவல் ஒலி எழுப்பியது. ஸ்கீரினை unlock செய்தபோது, ஒரு whatsapp செய்தி தெரிந்தது. யுவியிடமிருந்து,

“I don’t think this is working out. Again. Bye.”

தகவலை படித்துவிட்டு கைபேசியை chargeல் வைத்துவிட்டு, reverse gearலிருந்து ‘Drive’ gearக்கு மாற்றிவிட்டு, காரை வேகமாய் செலுத்தினான்.


*முற்றும்*