Apr 30, 2008

இந்த வீட்டை கொள்ளையடிக்க போறேன்!



























































































இந்த பெரிய வீட்டு(மாளிகை??)க்கு சொந்தக்காரர் நம்ம golf player tiger woods தான்!!

Apr 29, 2008

இந்த மனசுக்கு புரியல- பாகம் 2

"இது என்ன சின்னபுள்ளதனமா இருக்கு. போய் முகம் கழுவு. அழுகுறத நிறுத்து. you are old enough. just concentrate with your own work." என்று மனசாட்சி கண் எதிரே வந்து சொல்வதை உணர்ந்தான் ரமேஷ்.


மனசாட்சி சொல்வது சரி என்று நினைத்துக் கொண்ட ரமேஷ் உடனே சென்று முகம் கழுவி விட்டு வந்தான். கண்ணாடி எதிரே நின்றான். கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து, " ஏய் ரமேஷ், உனக்கு என்ன ஆச்சு? இந்த மாதிரி வீலிங்ஸ் உனக்கு வரக் கூடாது. this is very wrong. அவள பத்தி நினைக்காதே. ஒகே!" என்று ரமேஷ் தனக்குள்ளே ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.


அடுத்த நாள் காலையில் பள்ளிக்குப் போனான். நேற்று உறுதி எடுத்திருந்தாலும் அவன் மனதில் ஏதோ ஒரு சஞ்சலம். காற்றில் அடித்துக் கொள்ளும் சன்னல்கள் போல ரமேஷின் மனம் அடித்துக் கொண்டிருந்தது.


" ஏய் ரமேஷ். அவள பத்தி நினைக்காதே! pleasssee...." என்று தனக்குள்ளே ஆயிரம் முறை சொல்லி கொண்டு மனதோடு போராடி கொண்டிருந்தான். அன்று வித்யா பள்ளிக்கு வரவில்லை. பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் குரல் மட்டும்தான் ரமேஷின் காதுகளுக்குச் சென்றது. அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்று தெரியாமல் புரியாமல் பாடத்தைக் கவனிக்க முடியாமல் தவித்தான். பாடத்தை கவனிக்கவும் விருப்பமில்லை.


" ஐயோ, அவளுக்கு என்ன ஆச்சு. ஏன் வரலே? இவள் இருந்தாலும் ஒரு மாதிரியா இருக்கு. இல்லாம போனால் ஒரு மாதிரியா இருக்கு. என்னடா பொழப்பு இது? என்று முணுமணுத்துக் கொண்டதைப் பார்த்தவிட்டார் ஆசிரியர்.


" ஏய் ரமேஷ், what are you doing? பாடத்தைக் கவனிக்காம என்ன யோசனையில இருக்குறே?" என்று ஆசிரியர் திட்டியதைக் கண்டு ரமேஷ் மிரண்டு போனான்.

அதற்குள் வகுப்பின் மூலையிருந்து ஒரு மாணவன் , " டீச்சர், அவன் மனசு எங்கேயோ அலைபாயுது" என்று ரமேஷின் இதயத்தை 'scan' செய்து பார்த்ததுபோல் கூவினான். இதை கேட்டதும் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கைகொட்டி சிரிக்க, கும்மாளம் அடிக்க, வகுப்பு ஒரு நிமிடம் ரகளையானது.


" ஓகே. that's enough. பாடத்தைக் கவனிப்போம்," என்று ஆசிரியர் வகுப்பையும் ரமேஷையும் பார்த்து அதட்டினார். பிறகு, பாடங்கள் நடந்தன. ஆனால் ரமேஷுக்கு தான் கோபம்!

" இந்த வித்யானாலே நமக்கு திட்டு, அவமானம். ச்சே..... இனிமேலே அவள பத்தி நினைக்கவே கூடாது!!!" என்று கோபத்தில் மறுபடியும் ஒரு உறுதி எடுத்துக் கொண்டான்.


அன்று மதியம் உணவு இடைவேளையின்போது எப்போதுமே தன் நண்பர்களுக்காகக் காத்திருக்கும் இடத்தில் காத்திருந்தான் ரமேஷ். அது ஒரு அற்புதமான இடம். அப்படிப்பட்ட இடம் ஒன்று இருக்கிறது என்று அந்தப் பள்ளியில் சிலருக்குதான் தெரியும். அந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிட அந்த சிலருக்கு அவ்வளவு விருப்பம். அதனால்தான் முன்கூட்டியே இடத்தைப் பிடிக்க ரமேஷ் அங்கு சென்றுவிடுவான். மொட்டை மாடிக்குச் செல்லும் ரகசிய வழி அது. அந்த மாடிக்கு வழி வகுக்கும் படிகளிலிருந்து பார்த்தால் தூரத்திலிருக்கும் மெரீனா கடற்கரை அழகாகத் தெரியும். ஜில்லென காற்று, சுகமான காற்றின் மெல்லிசை, அந்த இதமான கடல் சாரல் என இயற்கையின் இருப்பிடமாக இருப்பதால்தான் அந்த இடத்திற்கு அவ்வளவு மவுசு!!


நண்பர்கள் வந்துவிட்டார்களா என்று கீழே எட்டிப் பார்த்தான் ரமேஷ். பழைய நண்பர்களுடன் 'புது தோழி! 'வித்யா!


ரமேஷுக்கு ஆச்சிரியம்!அதிர்ச்சி! "இன்று வகுப்பிற்கு வராதவள் எப்படி இங்கு?" என்று குழம்பிபோனான். அவனுடைய பழைய நண்பர்களான கலா, காஞ்சனா, கோகுல், சந்தோஷ் ஆகியோர் புது மருமகளைப் புகுந்த வீட்டிற்கு அழைத்துவருவது போல் அழைத்து வந்தனர் வித்யாவை.


"ஏய் ரமேஷ் நம்ம வித்யா வந்துட்டா. ஏதோ காலையிலே தலைவலியாம், அதான் வரல காலையில," என்று ரமேஷின் குழப்பத்திற்குப் பதில் சொன்னதுபோல் இருந்தது கலாவின் பேச்சு.


மற்றவர்கள் அரட்டையடித்து கொண்டே சாப்பிட்டார்கள். ஆனால், ரமேஷுக்குச் சாப்பிடமுடியவில்லை. வித்யாவைக் கண்டாலே ரமேஷ் பிரம்மை பிடித்ததுபோல் ஆகிவிடுகிறான். அவனுக்கு மனதில் கோடிக்கணக்கான எண்ணங்கள் ஓடின. வார்த்தைகளை முழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். எவ்வளவுக்கு எவ்வளவு தள்ளி போக நினைத்தானோ அவ்வளவுக்கு அவ்வளவு வித்யாவின் பேச்சாலும் செயலாலும் ஈர்க்கப்பட்டான்.


வித்யாவின் கணிவான பேச்சு, அடக்கமான செய்கை, எல்லோரிடமும் பழகும் தன்மை, ஆசிரியரிடம் பணிவு, மற்ற தோழிகளுக்கு உதவ வேண்டும் என்னும் மனப்பான்மை என்று பலவற்றால் ரமேஷ் கவரப்பட்டான். வித்யாவிடம் பேசாமலேயே அவளுடைய மாபெரும் 'ரசிகன்' ஆனான். வித்யாவைப் பற்றி சிந்திக்கக் கூடாது, நினைக்கக் கூடாது என்று எத்தனை உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றை ரமேஷால் ஒரு நொடிகூட கடைபிடிக்க முடியவில்லை.


ரமேஷுக்கு வித்யாவின் மீது இருந்த அந்த விசித்திரமான 'ஈர்ப்பு' நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. தோட்டத்தில் வளரும் ரோஜா செடியைப் பார்த்து பார்த்து ரசிப்பதுபோல ரமேஷ் வித்யாவைப் பார்த்தான் ; ரசித்தான். அவனுக்கு தோழிகள் இருந்தாலும் யாரிடமும் இப்படிப்பட்ட ஒரு உணர்வு ஏற்படவில்லை.

"வித்யாவை நான் காதலிக்கிறேனா?" என்று ரமேஷின் மனம் ஒரு கேள்வி எழுப்பியது.

வித்யாவுக்குப் பிடித்த விஷயங்கள் என்ன, பிடிக்காதது என்ன என்பதை யாருக்கும் தெரியாமல் கண்டுபிடித்து அவற்றை தானும் செய்து பார்க்க வேண்டும் என ரமேஷ் ஆசை கொண்டான். இவ்வாறு எல்லாம் செய்து கொண்டு வந்தாலும், ரமேஷ் வித்யாவிடம் நேருக்கு நேர் பார்த்தால் தயக்கம்! ரமேஷ் வித்யாவிடம் ஒரு வார்த்தைகூட முகத்தைப் பார்த்துப் பேசியதில்லை. பேசவும் தைரியமில்லை. இவ்வாறு நொடிகள் நிமிடங்கள் ஆகின. நிமிடங்கள் நாட்கள் ஆகின. நாட்கள் மாதங்கள் ஆகின.

ஆனால் அவன் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் கிடைக்காமல் தேடி அலைந்தான்.

பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்துவிட்டன. பள்ளி விடுமுறை ஆரம்பிக்க இன்னும் ஒரு வாரம்தான் இருந்தது. பள்ளி மாணவர்கள் எல்லாம் ஓரே குஷியாக் இருந்தனர். வழக்கம்போல் வகுப்பு சத்தம்போட்டு கொண்டிருந்தது. அப்போது வகுப்பாசிரியர், " students listen here. நம்ம வித்யா வேற பள்ளிக்குப் போயிட்டா. அவ அப்பாவுக்கு திடீரென்று எங்கோ transfer கிடைச்சுட்டு. அதான் உடனடியா கிளம்பிட்டா. உங்களுக்கு எல்லாம் 'ஆல் தி பெஸ்ட்' சொல்ல சொன்னா," என்று சொல்லி முடித்தார்.


சிலர் கவலையாக இருந்தனர். சிலர் அதை அவ்வளவு பெரிதாக எண்ணவில்லை. ஆனால் ரமேஷுக்குதான் அது துயரச் செய்தியாக மாறியது. கண்கள் குளமாகின. தொண்டைக் குழியில் சோதனையும் வேதனையும் சிக்கிக் கொண்டன. அப்போது ஆசிரியர் ரமேஷிடம் ஒரு கடிதத்தை நீட்டி,

" ரமேஷ், நேத்து ராத்திரி வித்யா என் வீட்டுக்கு வந்தா. டீசி வாங்கி கிட்டுப் போக வந்தா. கிளம்புறத்துக்கு முன்னாலே இந்த லெட்டரை கொடுத்தா. உங்கிட்ட கொடுக்க சொன்னா. இந்தா.... லெட்டர்." என்றார். ரமேஷ் அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தான் கடிதத்தை...


'ஹலோ ரமேஷ், நான் ஏன் லெட்டர் எழுதுறேனு உனக்கு ஆச்சிரியமா இருக்கும். I want to thank you for everything that you have done. இந்த வருஷத்திலே ஒரு நாள்கூட நீ என்கிட்ட சகஜமா பேசியதில்ல. ஆனா உண்மைய சொல்ல போனால் நீதான்ப்பா என் best friend. நட்பு என்கிறது ஒரு ஆள் என்னோரு ஆள்கிட்ட கொடுக்கிற encouragement and support தான். நீ நல்ல படிக்கிறத பார்த்து நானும் நல்ல செய்ய வேண்டும் என்று தோணும். அதனாலதான் என்னால இந்த வருஷம் ஐந்தாவது ரேங் வாங்க முடிஞ்சுது.

உன்ன பார்த்து நான் நிறைய நல்ல விஷயங்கள் எல்லாம் கத்துகிட்டேன். நானாச்சு வந்து உங்கிட்ட பேசியிருக்கலாமேன்னு நீ நினைப்பே. ஆனா உங்கிட்ட பேச வரும்போது எல்லாம் எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கும். ஏன்னு சொல்ல தெரியல. ஆனா இந்த classல எனக்குக் கிடைச்ச நல்ல friend நீதான்பா. ஆல் தி பெஸ்ட் டு யூ ரமேஷ். உன்ன மறக்கமாட்டேன்!!



இப்படிக்கு
உன்னிடம் பேசாமல் போன
உன் அன்பு தோழி வித்யா'



இதை படித்ததுமே குளமாகியிருந்த கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வந்தது. வித்யா என்கிற ஒரு நல்ல தோழியின் உண்மையான நட்பை இழந்தவிட்டோமே என்ற தவிப்பு ரமேஷின் மனதில் அலையாகப் பாய்ந்தது. ரமேஷ் சிந்தித்தவை, அவன் எண்ணங்கள் எல்லாம் தவறு என்று புரிந்துகொண்டான். வித்யாவிடம் அந்நொடியே அவளிடம் பேசவேண்டும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனம் துடித்தது.


திடீரென்று பின்னால் ஆட்டோவின் சத்தம் கேட்டுக் காரிலிருந்த ரமேஷ் சுயநினைவுக்கு வந்தான். அச்சம்பவம் ரமேஷின் மனதிரையில் ஒரு படமாக ஓடி முடிந்ததை உணர்ந்த ரமேஷ் வீட்டை அடைந்தான். கடந்த பல ஆண்டுகளாக ரமேஷ் வித்யாவின் முகவரியை அறிந்து கொள்ள பல முயற்சிகள் செய்தான். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

வித்யா பக்கத்திலிருந்தபோது ரமேஷால் நல்ல தோழனாக இருக்கமுடியவில்லை. இப்போது வித்யா பக்கத்தில் இல்லை, ஆனால் நல்ல தோழனாக இருக்க வேண்டும் என்று ரமேஷின் மனம் ஆசைப்பட்டது . இத்தனை ஆண்டுகளில் ரமேஷ் பல நல்ல நண்பர்களைப் பெற்றிருந்தாலும் வித்யாவின் நட்பை பெறமுடியாமல் போனது இன்றைக்கும் அவனுக்கு ஒரு குறையாகவே தெரிகிறது.

தன் அறைக்குச் சென்ற ரமேஷ் கணினியைத் திறந்தான். பல இணைய பக்கங்களில் அறிவிப்பு விடுத்திருந்தான். இன்றைக்காவது வித்யாவிடமிருந்து ஏதேனும் செய்தி வராதா என்று ஏக்கத்துடன் தன் ஈமெயிலைப் பார்க்கத் தொடங்கினான் ரமேஷ்....

***முற்றும்***

Apr 28, 2008

இந்த மனசுக்கு புரியல-பாகம் 1

" ஹலோ சார், வாங்க. how are you?" என்றார் பள்ளி தலைமையாசிரியர் திருமதி லீலா.

" ஓ.. ஐ எம் fine. ஆரம்பிச்சுட்டா? நான் லேட்டா வந்துட்டேனா?" என்று கேட்டார் காரிலிருந்து இருங்கியபடி ரமேஷ்.

ரமேஷ் ஒரு பிரபலமான ஆர்க்கிடேக். சென்னையில் இருக்கும் பல கட்டடங்களின் வடிவமைப்பாளராக இருந்து பெயர் பெற்றவன். அன்று ரமேஷ் தான் படித்த மேரி மாதா மெட்ரிகியூலேஷன் பள்ளியின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தான். அரங்கம் முழுவதும் ஒரே அலங்காரம். வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள், சன்னல்கள் முழுதும் பலூன்கள். பளிச்சென்ற ஆடைகளில் பவனி வந்த பள்ளி மாணவர்கள் என அரங்கமே சரவணா ஸ்டோர்ஸ் தங்ககடை போல் ஜொலித்தது.


சிறப்பு விருந்தினர் வந்துவிட்டார் என்று அறிவித்தவுடன் அரங்கமே கரகோஷத்தால் அலறியது. முழுக்க முழுக்க மாணவர்கள் வழிநடத்தும் நிகழ்ச்சி என்பதால் அவர்களின் ஆதிக்கம்தான் அங்கே. நிகழ்ச்சிகள் படைப்பதிலிருந்து விருந்து உபசரிக்கும்வரை எங்கு நோக்கினும் மாணவர்கள் எறும்புகள் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்போது நமது சிறப்பு விருந்தினர் திரு ரமேஷ் சிறப்புரை ஆற்றுவார் என்றதும் அவன் மேடையேறினான்.


ஒலிப்பெருக்கியைச் சரிசெய்து கொண்டு பேச ஆரம்பித்தான் ரமேஷ். "அனைவருக்கும் என் வணக்கம். உங்களைப் பார்க்கும்போது என் பள்ளிநாட்களின் நினைவுகள் என் மனதில் மலருகின்றன. வாழ்க்கையில் பள்ளி நாட்களின் நினைவுகள் எப்பொழுதுமே மனதைவிட்டு நீங்காது. இந்தப் பள்ளியில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. பலவற்றை அனுபவித்த எனக்கு, என் ஒன்பதாம் வகுப்பில் நடந்த அந்த ஒரு விஷயம் என் நெஞ்சைவிட்டுப் பிரியாத ஒரு அனுபவமாக இருக்கிறது. அந்த வயதில் எது சரி எது தவறு என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்." என்று ரமேஷ் புதிர்போடுவதுபோல் பேசினான்.


பிறகு, அதைப் பற்றி மேலும் எதையும் சொல்லாமல், கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளையர்களின் கடமைகள் போன்றவற்றை அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவையாகப் பேசி முடித்தான்.

விழா முடிந்தவுடன் விருந்து உபசரிக்கும் இடத்திற்குச் சென்றனர். ரமேஷ், பக்கத்தில் பள்ளி தலைவர், துணை தலைவர்கள் இவர்களுக்குப் பின்னால் மற்ற ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டே நடந்தனர்.

வகுப்புகளின் வராண்டாவில் நடந்து கொண்டிருந்த ரமேஷ் ஒரு வகுப்பைப் பார்த்தவுடன் நின்றுவிட்டான். அந்த வகுப்பைக் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் மின்னல் பாய்ச்சியதுபோல் ஓர் உணர்வு. திடீரென்று ஒரு பூ பூத்ததுபோல் ஓர் உணர்ச்சி. அந்த வகுப்புறையில் தான் அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். மேடையில் அவன் சொல்லவந்த அனுபவம் அந்த வகுப்பில்தான் நடந்தது.

விழா முடிந்து காரில் ரமேஷ் சென்று கொண்டிருந்தான். அவன் கண்பார்வை மட்டும் கார் ஓட்டுவதில் கண்ணாக இருந்தது. ஆனால் அவன் மனம் அந்த வகுப்பையே சுற்றி சுற்றி வந்தது. அவனது நினைவு அலைகள் அங்கு பாய்ந்தன.

பல ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். லேசாக மீசை வளர ஆரம்பித்தது. பருவ மாற்றத்தால் உடலும் மனமும் பல மாற்றங்களை சந்தித்தன. மீசை வந்தா ஆசை வருமோ?

வகுப்பில் ரமேஷ் அமைதியாகவே இருப்பான். நன்றாக படிப்பான். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பான். நண்பர்கள் வட்டமும் சிறியது தான். எப்போதும் போலவே அன்று ஒரு நாள் அவன் வகுப்பில் படித்து கொண்டிருந்தான். காலை வேளை முதல் பாடம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்த பத்து நிமிடங்களையும்கூட வீண் அடிக்காமல் அடுத்த வாரத்தில் வர போகும் கணக்கு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டிருந்தான். ரமேஷுக்கு முன் வரிசையில் இருந்த கோகுல்,

"டேய் இங்க பாருடா.. டீச்சர் இல்லன்னு களாஸே ஒரே ஆட்டம் போடுது. நீ என்னடா பண்ணுறே?" என்றான்.

புத்தகத்தில் கவனத்தை செலுத்தி இருந்த ரமேஷ், "இப்படி சத்தம் போடுறது என்ன புதுசா.. எப்போதும் இப்படிதானே." என்று சொல்லிகொண்டே அடுத்த பக்கத்தை திருப்பினான்.

"அது இல்லடா.. உனக்கு ஒரு மேட்டரு தெரியுமா.. இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு நம்ம களாஸுக்கு வர போறா." என்றான் கோகுல்.

அவன் சொன்னதை ரமேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தனது calculatorயை பையிலிருந்து எடுத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தான். அப்போது உள்ளே புகுந்த வகுப்பாசிரியர் மிஸ் ரத்னா,

" students, இவதான் இந்த களாஸில சேர போற புது பொண்ணு. let's welcome her." என்று சொன்னவுடனே வகுப்பிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


அப்போதுகூட ரமேஷ் அவனது பாடத்திலே கண்ணாக இருந்தான். அவளது முகத்தைகூட பார்க்கவில்லை. மிஸ் ரத்னா அந்த புது மாணவியைக் காலியாக இருக்கும் ஏதேனும் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொள்ள சொன்னார்.


ரமேஷ் கீழே விழுந்த பென்சிலை எடுக்க குனிந்தான். பென்சிலை எடுக்கும்போது யாரோ பக்கத்தில் நிற்பதுபோல உணர்ந்தான். சற்று கழுத்தை மேலோக்கி பார்த்தபோது அந்த புது பெண்ணின் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல் பிரகாசித்தது. அந்த பெண்ணின் கண்கள் செதுக்கி வைத்தது போல அழகாக இருந்தன. நீளமான கூந்தல், உடம்போடு ஒட்டிய சீருடை. வசிகரிக்கும் புன்னகையோடு நின்றாள்.

அவளைப் பார்த்த அடுத்த வினாடி ரமேஷின் இதயத்தில் ஒரு மின்னல் பாய்ந்தது. வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதுபோல் ஒரு உணர்வு. ரமேஷுக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்தது. வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி. ஒரு நிமிடம் அவளது முகத்தையே பார்த்து பிரமித்துபோய் நின்றான். அவனுக்குள் இருந்த 'செல்'கள் இடம் மாறி குதித்தன. பூமியைவிட்டு 200 அடி மேலே சென்றவிட்ட ஒரு உணர்வில் நின்று கொண்டிருந்தான்.


"excuse me please. ஹலோ, மை நேம் ஸ் வித்யா. உங்க பேரு?" என்றாள். அந்த நொடி தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.


"நான்....ரமேஷ்...." என்று வார்த்தைகள் முட்ட, தொண்டையில் சிக்க,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.


"கொஞ்சம் நகர முடியுமா? பின்னாடி காலியா இருக்குற சீட்ல உட்காரனும்" என்று வெண்ணிலா ஐஸ்கீரிம் மேல் தேன் ஊற்றியதுபோல் அவளது குரல் அவன் காதுகளை வருடியது. அவள் சொன்னவுடன் ரமேஷின் கால்கள் கேட்டு கொண்டன, அவன் அறியாமலேயே!


வித்யா மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதுமே பாடத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் ரமேஷுக்கு அன்று ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. அவ்வப்போது வித்யா ரமேஷை பார்க்கும்போது ஒரு சிறு புன்னகையிட்டாள். வித்யா அப்படி செய்யும்போதெல்லாம் ரமேஷுக்குக் கூச்சம் உடம்பெல்லாம் ஊடுருவியது.


"ரீங்ங்....." பள்ளி மணி ஒலித்தது. வகுப்பு முடிந்ததும் பல மாணவிகள் வித்யாவை ஈக்கள்போல் அவளை மொய்த்த வண்ணம் இருந்தன. அவள் எந்த ஊர்? எங்கு வளர்ந்தவள்? குடும்பத்தைப் பற்றி.. அவள் பிறந்ததாள் எப்போது? அவள் வீடு எங்கே? என்று பல கேள்விகனைகளைத் தொடுத்தனர்.


ரமேஷ் வித்யாவிடம் எதையும் பேசவில்லை. ஆனால் மற்றவர்கள் அவளிடம் பேசுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமையாக இருந்தது அவனுக்கு. ஆத்திரமும் அழுகையும் கலந்து வந்தது ரமேஷுக்கு. பையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினான் ; வீட்டை அடைந்தான்.


"என்னடா, மூஞ்சிய உம்முனு வச்சிருக்கே? டீச்சர் ஏதாச்சு சொன்னுச்சா. டெஸ்டுல ஏதாச்சு மார்க் காமியா வாங்கிட்டியா? சொல்லு .... என்ன ஆச்சு?" என்று ரமேஷின் பாட்டி கேட்டார். தினமும் பள்ளியில் நடந்ததை தன் பாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் ரமேஷ் அன்று பாட்டி கேட்டதற்கு,


" ஒன்னுமில்ல" என்று ஒரே வார்த்தையில் பதிலைக் கூறிவிட்டுச் அவன் அறைக்குள் சென்றான்.


தன் அறை கதவைப் பூட்டிவிட்டு மெத்தையின் மீது விழுந்தான். ரொம்ப நேரம் யோசித்தான். கண் மூடினால், அவனுக்கு அவள் முகம் தான் நினைவில் வந்தது. 'டக்' என்று கண் விழித்து கொண்டு குழம்பிய நிலையில் இருந்தான்.


'ஓ....' என்று குமறி குமறி அழ ஆரம்பித்தான் ரமேஷ். ஏன் அழுகிறான்? எதற்காக அழுகிறான்? என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான். மனதில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு யாருக்கு பதில் தெரியும்?

(தொடரும்)

Apr 23, 2008

நேத்திக்கு அடிச்ச போத இன்னும் தெளியல்ல..

(warning: இந்த பதிவு சும்மா ஜாலிக்காக தான். படிங்க, சிரிங்க, ஆனா சீரியஸா எடுத்துக்காதீங்க! மாணவர்கள் பரிட்சை முடிஞ்சா எப்படியல்லாம் சிந்தனைகளை அள்ளிவீசுவாங்க என்பதை பின்வரும் சிந்தனை துளிகள் விளக்கும்.. )

சரி ஆரம்பிக்கலாமா..


சிந்தனை 1:

நீ விரும்புற markயை விட
உன்ன விரும்புற markயை வச்சு
சந்தோஷம் படு!

- அக் 'மார்க்' நல்ல பசங்க சங்கம்


சிந்தனை 2:


எல்லாம் மார்க்-க்கும் நல்ல மார்க் தான்
மண்ணில் பிறக்கையிலே
அது pass மார்க் ஆவதும்
fail மார்க் ஆவதும் ஆசிரியரின் கையினிலே!!

-வகுப்பு கடைசி வரிசை மாணவர்கள் சங்கம்


சிந்தனை 3:


படிச்சு பார்த்தேன் ஏறவில்ல
குடிச்சு பார்த்தேன் ஏறிடுச்சு

- பொல்லாதவன் தனுஷ்






சிந்தனை 4:

'மார்க்'க பார்த்து கேட்ககூடாத கேள்வி,

நீ நல்ல மார்க்கா? கெட்ட மார்க்கா?


-நையாண்டி தர்பார் மக்கள்





சிந்தனை 5:

உன் பேரு? pass mark. ஏய் pass mark, உன்மேல ஆசைப்படல

அழகா இருக்கேன்னு நினைக்கல

ஆனா இதலாம் நடந்துடுமோன்னு பயமா இருக்கு.

யோசிச்சு சொல்லு!

- அலைபாயும் மாணவர்கள் சங்கம்


சிந்தனை 6:

பக்கத்த மாணவனிடமிருந்து 'பிட்' அடிக்க உதவியாக இருக்கும் பாடல்
"தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பெச்சு கா!"

-அகில உலக நமிதா மன்றத்தின் மாணவர்கள் பிரிவு சங்கம்

சிந்தனை 7:

கணக்கு மாணவர்களின் தேசிய கீதம்
"ஒன்னுமே புரியல்ல உலகத்துல. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது."

-கணக்கு பரிட்சையினால் நொந்து noodles ஆகி போனவர்கள் அமைப்பு

சிந்தனை 8:

படிக்காம போனா 'fail'டா
படிச்சுட்டு போனா 'pass'டா
கிரிக்கெட் ஆடறத்துக்கு முன்னாடி 'toss'டா
பரிட்சையில கோட்டைவிட்டா காலேஜுக்கு
மறுபடியும் கட்டனும் 'fees'டா

டண்டனக்கா டன்னுக்கு டக்கா!

- TR வாரிசுகள் சங்கம்

சிந்தனை 9:

pass mark இல்லையெனில் 'டாஸ்மார்க்'
- உலக மாணவர்களின் புலம்பல் மன்றம்

Apr 22, 2008

நம்மில் ஒருவன்



வாழ்க்கை

வாழ்வதற்கா?

பிழைப்பதற்கா?






பிடிக்காத படிப்பு

விருப்பமில்லாத வேலை

புரியாத அதிகாரிகள்

மதிக்காத உறவுகள்

புரிந்துகொள்ளாத காதலி

தொடமுடியாத வெற்றிகள்

பெறமுடியாத செல்வங்கள்

அடையமுடியாத ஆசைகள்






நினைத்து பார்த்தான்






கடைசியில் மிஞ்சியது

யாருக்கும் தெரியாமல்

அழுத அழுகையும்

அழுகை நனைத்த

தலையணையும்!






வாழ்க்கை

வாழ்வதற்கா?

பிழைப்பதற்கா?

Apr 14, 2008

யாரடி நீ மோகினி- பிடிச்சுருந்துச்சு!

யாரடி நீ மோகினி படம் பார்த்தேன். ரொம்ப நாள் எதிர்பார்த்த படம். ரொம்ப நாளைக்கு அப்பரம் ரசித்து ரசித்து பார்த்த படம் எனலாம். படத்தின் மிகப்பெரிய பலமே காமெடி தான். வாழ்க்கையில் வரும் யதார்த்தமான காமெடியை காட்சியில் கொண்டு வந்த இயக்குனருக்கு முதல் பாராட்டு.

தனுஷ் காமெடியில் பின்னி இருக்கிறார். இருந்தாலும், மாமனாரை 'காப்பி' அடிக்கும் சில காட்சிகள் படத்தில் இருப்பது ஏதோ வலிந்து சேர்க்கப்பட்ட காட்சி போல இருக்கு.
- வயலில் பாம்பை தூக்கி கொண்டு பயப்புடுவது நடிப்பது அண்ணாமலை ரஜினி மற்றும் முத்து படத்தில் வருவது போல் இருந்தது.
இருப்பினும், இயல்பான நடிப்பை வழங்கியுள்ளார். அப்பரம்.. நம்ம நயன்.. அட.. நயனுக்கு நடிக்க தெரியும் என்று பெயர் வாங்கி கொடுக்கபோகும் படமாக அமைந்தவிட்டது இப்படம். 'அலைபாயுதே' மற்றும் 'கண்ட நாள் முதல்' கார்த்திக் நடிப்பில் இன்னும் தேரவேண்டும். அதே நடிப்பு. வெள்ளக்காரன் தமிழ் பேசுவது போல் அங்கங்கே அவர் தமிழ் உச்சரிப்பு உள்ளது. கொஞ்சம் ஸ்டைலாக இருந்தாலும், இந்த கதாபாத்திரத்துக்கு ஒட்டவில்லை.

இப்படத்தில் நடிப்பு பொருத்தவரை முதல் இடத்தில் இருப்பவர் ரகுவரனைதான். என்னமா இயல்பாக நடிச்சுருக்காரு!!! வில்லனாக நடித்த ரகுவரனா இவர் என்று சொல்லும் அளவுக்கு நடிப்பு பிரமாதம். காமெடி பேச்சிலும் நடவடிக்கையிலும் வசனங்களிலும் நான் பார்த்தது ஒரு உண்மையான மிடில்-கிளாஸ் அப்பாவை தான்!! இரண்டாவது இடம், நயனுக்கு தங்கச்சியாக நடித்த பொண்ணு, சரண்யா!! சூப்பர் ஜாலியான கதாபாத்திரம்! படத்தை பார்த்தா உங்களுக்கே புரியும்!

படத்தில் எனக்கு ரொம்ப பிடித்தது 'பாலக்காடு' ரீமிக்ஸ் மற்றும் அதை பாடலாக்கிய விதம்! செல்வராகவனின் கதை, திரைக்கதையா இது என்று சற்று வியப்பாக உள்ளது. அவர் வசனங்கள் பல இடத்தில் 'நச்'! புதுமையாக நகைச்சுவை கதையை சொல்லி அசத்தியுள்ளார். எப்போதுமே சோகமான கதைக்களத்துடன் படைப்புகளை கொடுக்கும் ராகவன் இம்முறை வேறு கோணத்தில் குடும்பத்தோடு பார்க்கவேண்டிய காதல் கதையை சொல்லி இருக்கிறார்.

இருந்தாலும், அவர் காதலில் தப்பு செய்பவர்கள் பெண்களே என்று சொல்லவருவது போல் தோன்றியது. ஒரே ஒரு இடத்தில் நயன் சொல்லும் 'பொண்ணுங்க நான் கொஞ்சம் டைம் எடுத்துதான் சொல்லுவோம்' என்று. அதற்கு தனுஷ் 'என்னடி டைம் வேணும்? வாழ்க்கைங்கறது இப்படிங்கறதுக்குள்ளே முடிஞ்சு போயிடும்...' என்பார். ஆக உடனே முடிவு எடுக்கனும் என்று சொல்ல வருவதுபோல் இருந்தது.

இருப்பினும் செல்வராகவன் ஏதோ ஒரு நடுநிலையாகவே திரைக்கதையை நகர்த்தி செல்வதால், படம் ரசிக்கும் வண்ணம் உள்ளது. செல்வராகவன் லாஜிக் ஓட்டைகளையும் சற்று பார்த்து சரி செய்து இருக்கலாம்.தெலுங்கு ரீமேக் என்ற போதிலும் இயக்குனராவது சரிசெய்து இருக்கலாம். எனக்கு பிடித்தது கிளைமேக்ஸ் காட்சி தான்.. அப்படியே செல்வராகவனின் 'touch'.

ஆக மொத்தத்தில்,

யாரடி நீ மோகினி- பேஷா பாக்கலாம் ஒய்!

Apr 9, 2008

காதல் கணக்கு


ஓர் எழுத்து கவிதை "நீ"

இரண்டு எழுத்து கவிதை "நாம்"

மூன்று எழுத்து கவிதை "காதல்"

நான்கு எழுத்து கவிதை "இதழில்"

ஐந்து எழுத்து கவிதை "கொடுத்தேன்"

ஆறு எழுத்து கவிதை "முத்தங்கள்"

Apr 2, 2008

நான் அடித்த அட்டகாசம்-april fools' day prank(1)

"என்ன பத்தி நீ என்ன நினைக்குறே. ஒரு பொண்ணா நான் எப்படிப்பட்டவ. நான் ஒரு நல்ல girlfriendஆ இருக்க முடியும்? ம்ம்ம்ம்....என்ன நடந்துச்சுன்னா.. என் கூட சதீஷ்-னு ஒருத்தன் படிக்குறான். நாங்க இரண்டு பேரும் நண்பர்களாகதான் பழகினோம். நாங்க எல்லாம் ஒரு பெரிய செட். கூட்டாளிங்க மொத்தம் 8 பேரு. ஒன்னாதான் இருப்போம்.

அன்னிக்கு ஞாயித்துகிழமை group project meeting இருந்துச்சு. அத முடிச்சுட்டு மத்தவங்க பஸ் எடுத்து போயிட்டாங்க. நானும் சதீஷும் தான் trainல வந்துகிட்டு இருந்தோம். சும்மா எப்போதும் போலவே தான் பேசிகிட்டு இருந்தோம். அவன் திடீர்ன்னு என்கிட்ட 'i love you' சொல்லிட்டான். எனக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. ஆச்சிரியமா போச்சு. கோபமா வந்துச்சு. அழுதுட்டேன். என் station அப்ப வந்துச்சு. அதனால அவன்கிட்ட ஒன்னும் சொல்லாம வந்துட்டேன். இப்ப நான் ரொம்ப disturbed-ஆ இருக்கேன். என்ன செய்யறதுன்னு தெரியல.... அவன் அப்பரம் எனக்கு போன் செஞ்சேன். ஆனா நான் எடுக்கல. எனக்கு பயமா இருக்கு.

அவன் ரொம்ப நல்லவன். ஆனா, என்னமோ பயமா இருக்கு. எங்க அம்மாகூட நான் வெள்ளிக்கிழமையில கோயிலுக்கு போவேன். அவனும் எங்ககூட வருவான். அவனும் எங்க அம்மாகிட்ட ரொம்ப நல்லா பழகுவான். அவன் கார் வச்சு இருக்கான். அவன் வீடு என் வீட்டிலிருந்து ரொம்ப தூரம். அப்படி இருந்தும் காலேஜ் முடிஞ்சு என்னைய என் வீட்டுக்கிட்ட வந்துவிட்டுடுதான் போவான்.

இப்ப அவன் ஐ லவ் யூ சொன்னதுவச்சு பாக்கும்போது, அவன் என்கிட்ட ஏன் அப்படிலாம் நடந்துகிட்டான்னு தோனுது. நான் தான் அவன புரிஞ்சுக்கல. ஆனா எனக்கு என்ன செய்யுறதுன்னு தெரியல. எனக்கும் அவன ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஆனா இப்ப நாங்க படிச்சுகிட்டு இருக்கோம். இதுலாம் சரியா வரும்? பரிட்சை இன்னும் 3 வாரத்துல வர போகுது. அவன்கிட்ட நான் என்ன சொல்ல? நான் ஒன்னும் சொல்லாம இருந்தேனா அவன் என்ன பத்தி ஏதாச்சு தப்பா நினைச்சுக்கிட்டா? i like him alot ஆனா நான் எடுக்குறது சரியான முடிவுதானான்னு தெரியல. ஏய், i am totally disturbed. it's torturing me alot
----------------------

ஹாஹாஹா... இப்படி ஒரு பெரிய கதைய சொல்லி முட்டாள்கள் தினத்தில் என் நண்பர்களை முட்டாள் ஆக்கலாம்ன்னு முடிவு செஞ்சேன். கதை முழுவதுமே கற்பனை கதை. ஆனா சொன்ன விதம்!! ஹாஹா... செம்ம காமெடியா போச்சு. என்ன நடந்துச்சுன்னா...

முதல ஒரு தோழியிடம் குறுஞ்செய்தி அனுப்பினேன். அவள் உடனே 'ஏய் ஜோக் அடிக்காதே. இன்னிக்கு ஏப்ரல் முதல் தேதி. என்னைய ஏமாத்தாதே.' அப்படி சொல்லிட்டா. ஆஹா, ஊத்திக்கிச்சுன்னு நினைச்சேன்!! சரி இத விடகூடாதுன்னு நினைச்சு, அவள்கிட்ட 'நான் சீரியஸா சொல்லுறது, உனக்கு விளையாட்டா இருக்கா.. பரவாயில்லடி.. என் சோகம் என்கூடவே போகட்டும்'இப்படி கொஞ்சம் ஓவரா பீலிங்ஸ் விட்டு பார்த்தேன். ஹாஹா.. பொண்ணு ஏமாறல்ல... சரி முதல் முயற்சி சொதப்பல்!!

இத இப்படியே விட்டுவிட கூடாது என்று உள்மனசு டப்பாங்குத்து ஆட, இனி குறுஞ்செய்தி சரிப்பட்டு வராது, நேரடியாகவே போன் செய்து பேசினால்தான் சரிபட்டு வரும் என முடிவு செய்தேன். பேசும்போது நமது நடிப்பு திறமையை அள்ளிவீசலாம் பாருங்க. எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எப்போதுமே ஜாலியாகத்தான் பேசுவேன். கலகலப்பாகதான் இருப்பேன். ஆனா, இதற்காகவே குரலில் சோகத்தை கொண்டு வந்து, அப்படியே அழும்குரலில் பேசினேன். இப்படி ஏமாற்ற எனக்கு கிடைத்த அடுத்த நண்பன், ஜெய். அவனிடம் என் 'சோக காதல் கதையை' சொல்ல, பையன் ரொம்பவே பயந்துட்டான். கொஞ்சம் விட்டு இருந்தால், அடுத்த பஸ் எடுத்து என் வீட்டுக்கே வந்து ஆறுதல் சொல்லி இருப்பான். என்னமா அறிவுரை சொன்னான். எனக்கு சிரிப்பு தாங்க முடியல. நான் பேச பேச, அவனுக்கும் ஒரே சோகமா போச்சு. அவன் பாச மழையில் நனைய எனக்கு ஜலதோஷம் வருவதற்குள் 'ஏய் ஜெய், happy april fools' day' என்று சொல்லி உண்மையை உடைத்தேன். அதுக்கு அப்பரம் பையனுக்கு ஒரே அவமானமா போச்சு!! ஹாஹா... என்னைய திட்டு திட்டுனு திட்டி தீர்த்துவிட்டான். ஆனா உண்மையிலே ரொம்ப பாசக்கார பைய புள்ள!! 20 நிமிஷம் நடந்துச்சு இந்த கூத்து!

ஒருத்தனை ஏமாற்றிவிட்டோம் என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது. நேற்றுதான் இரண்டு வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வந்தேன். உலகத்தின பாரத்தை இறக்கிவச்ச மாதிரி இருந்துச்சு. இத கொண்டாட வேண்டும் என்று நினைத்ததால், இன்னும் ஒரே ஒரு தோழியிடம் கலாய்க்கலாம்ன்னு நினைச்சு என் பள்ளி தோழிக்கு அழைத்தேன். அவளும் ஏமாந்துவிட்டாள். ஆனால்,அவளுக்கு சந்தேகமாகவே இருந்ததாம். காதல் கதை உண்மையாக இருக்க, அவள் அது ஜோக் என்று சொல்லிவிட்டால், எங்கே என் மனம் புண்பட்டுவிடுமோ என்று எண்ணி அவள் என் கதையை நம்பிவிட்டாளாம். ஹாஹாஹா.. கிட்டதட்ட அரை மணி நேரம், காதல் என்றாலே இப்படிதான். உனக்கு அவனை பிடிச்சுருக்கா? அவன பாக்கும்போது உனக்கு எப்படி இருக்கும்? என்ன தோனுது? இப்ப சொல்லாத, பரிட்சை முடிஞ்ச பிறகு சொல்லு.

இப்படி ரொம்ம்ம்ம்ம்பப, அன்பாக சொன்னாள். தளபதி ரஜினி-மம்மூட்டி, காதல் தேசம் வினித்-அப்பாஸ், நட்புக்காக விஜயகுமார்- சரத்குமார், பட்டியல் ஆரியா-பரத் என்ற வரிசையில் தோழிக்காக எதையும் செய்யும் இவளையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டும். பாதிலேயே என் கூத்தை முடித்திருப்பேன். அவ பேச பேச ரொம்ப சூப்பரா இருந்துச்சா, நானும் அவள் பேச்சை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனா பாவம், என் மேல செம்ம கடுப்புல இருக்கு பொண்ணு. happy april fools' day என்று சொன்னபோது, அவளுக்கு செம்ம கோபம். ஏனா, எனக்கு இப்படி உண்மையில ஒன்னு நடந்துச்சுன்னா, முதல சந்தோஷப்படுற தோழி இவளாக தான் இருப்பாள்! அப்படிப்பட்ட நட்புக்கு நான் ஏமாற்றும் வகையில் ஒரு பொய் சொன்னது சரியில்ல தான். ஆனா, என்ன பண்ணறது... ஹாஹாஹா.... அவளை சமாதானப்படுத்த வேண்டுமுங்கோ!!

என்னடாது, நம்ம கற்பனை கதைக்கு இப்படி ஒரு வரவேற்பா!! என்னமோ தெரியுல 'சதீஷ்' கதை எனக்கு ரொம்ப பிடிச்சுபோய், அடுத்த தோழிக்கு போன் செய்ய சொன்னது மனசு! சுதாவுக்கு போன் செய்து சொல்ல ஆரம்பித்தால்,

// "என்ன பத்தி நீ என்ன நினைக்குறே. ஒரு பொண்ணா நான் எப்படிப்பட்டவ. நான் ஒரு நல்ல girlfriendஆ இருக்க முடியும்?//

என்று சொன்னவுடனே சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். எப்படி கண்டுபிடித்தே என்று கேட்டால், உன்ன பத்தி எனக்கு தெரியும். இன்னிக்கு என்னடா உன் லொள்ளு வரலையேன்னு நினைச்சேன். அதான் உஷாரா இருந்தேன். பிறகு, முழு கதையை அவளிடம் சொல்ல, விழுந்து விழுந்து சிரித்தாள். முழு கதையை கேட்டு இருந்தால்கூட அவள் நம்பி இருந்திருக்க மாட்டாளாம். ஏன்னா, அவள் சொன்னாள்,

"உன்ன பத்தி எனக்கு தெரியும்டி, உனக்கு இப்படிலாம் செய்ய வராது. நீ ரொம்ப straightforward. உனக்கு பிடிச்சுருந்தா ஒகே சொல்லி இருப்பே. பிடிக்கலன்னா, நோ சொல்லி இருப்பே. இப்படி போட்டு குழப்பி இருக்கமாட்டே. இத ஒரு பெரிய விஷயமா யாருக்கிட்டயும் சொல்லி இருக்க மாட்டே. அப்படியே சொன்னாலும், காமெடியா சொல்லி இருப்பதவிர சீரியஸா சொல்லி இருக்கமாட்டே." என்றாள்.

அவ்வ்வ்வ்வ்.... என்ன ரொம்ப நல்லா புரிஞ்சுவச்சுருக்கா!! சும்மா இருந்த என்னை, இன்னும் இருவரிடம் இதே கதையை சொல்லு என்று உஸ்பேத்தினாள் சுதா. அவர்கள் இருவரும் ஏமாற, மொத்தம் 6 பேரிடம் சொல்ல அதில் 4 பேர் ஏமாந்துவிட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் மூழ்கினேன்.
ஆனால், ஏமாந்த எல்லாரும் சொன்ன பொதுவான கருத்து,

  • எனக்கும் இப்படி நடந்து இருக்க.. நானும் குழம்பி இருக்கிறேன் (அட மக்கா, உனக்கும் காதல் அனுபவமா, என்கிட்ட சொல்லவே இல்ல..)
  • இப்ப உனக்கு முக்கியம் உன் படிப்பு
  • உண்மையில அவன பிடிச்சுருந்தா.. ஒகே சொல்லிடு

ஹாஹாஹா... என்னத்த சொல்ல.... கதையைவிட நான் குரலில் காட்டிய சோகம்தான் வெற்றிக்கு காரணம். இப்படி ஏப்ரல் முதல் தேதி சூப்பரா போனுச்சு. இன்னொரு ஒரு கூத்து அடித்தேன். அது வேறு ஒரு கதை.(பிறகு சொல்கிறேன்) இப்படி செய்வது விளையாட்டுத்தனமாக இருந்தாலும், அவர்கள் நட்புக்கும் நண்பனுக்கும்/தோழிக்கும் கொடுக்கும் மரியாதை ரொம்ப பெரிசுப்பா!! பிரச்சனை என்றுவந்தால், ரொம்பவே அக்கறை எடுக்கும் இவர்களுக்கு சிங்கப்பூர் கடற்கரையில் சிலை வைக்க வேண்டும்!!!!!!

புலி வருது புலி வருது என்று சொல்லி ஏமாற்றிவிட்டேன், உண்மையில் ஒரு நாள் புலி வரபோகுது, அன்னிக்கு இருக்குதடி எனக்கு!!!