Apr 28, 2008

இந்த மனசுக்கு புரியல-பாகம் 1

" ஹலோ சார், வாங்க. how are you?" என்றார் பள்ளி தலைமையாசிரியர் திருமதி லீலா.

" ஓ.. ஐ எம் fine. ஆரம்பிச்சுட்டா? நான் லேட்டா வந்துட்டேனா?" என்று கேட்டார் காரிலிருந்து இருங்கியபடி ரமேஷ்.

ரமேஷ் ஒரு பிரபலமான ஆர்க்கிடேக். சென்னையில் இருக்கும் பல கட்டடங்களின் வடிவமைப்பாளராக இருந்து பெயர் பெற்றவன். அன்று ரமேஷ் தான் படித்த மேரி மாதா மெட்ரிகியூலேஷன் பள்ளியின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தான். அரங்கம் முழுவதும் ஒரே அலங்காரம். வண்ணத் துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தூண்கள், சன்னல்கள் முழுதும் பலூன்கள். பளிச்சென்ற ஆடைகளில் பவனி வந்த பள்ளி மாணவர்கள் என அரங்கமே சரவணா ஸ்டோர்ஸ் தங்ககடை போல் ஜொலித்தது.


சிறப்பு விருந்தினர் வந்துவிட்டார் என்று அறிவித்தவுடன் அரங்கமே கரகோஷத்தால் அலறியது. முழுக்க முழுக்க மாணவர்கள் வழிநடத்தும் நிகழ்ச்சி என்பதால் அவர்களின் ஆதிக்கம்தான் அங்கே. நிகழ்ச்சிகள் படைப்பதிலிருந்து விருந்து உபசரிக்கும்வரை எங்கு நோக்கினும் மாணவர்கள் எறும்புகள் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இப்போது நமது சிறப்பு விருந்தினர் திரு ரமேஷ் சிறப்புரை ஆற்றுவார் என்றதும் அவன் மேடையேறினான்.


ஒலிப்பெருக்கியைச் சரிசெய்து கொண்டு பேச ஆரம்பித்தான் ரமேஷ். "அனைவருக்கும் என் வணக்கம். உங்களைப் பார்க்கும்போது என் பள்ளிநாட்களின் நினைவுகள் என் மனதில் மலருகின்றன. வாழ்க்கையில் பள்ளி நாட்களின் நினைவுகள் எப்பொழுதுமே மனதைவிட்டு நீங்காது. இந்தப் பள்ளியில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன. பலவற்றை அனுபவித்த எனக்கு, என் ஒன்பதாம் வகுப்பில் நடந்த அந்த ஒரு விஷயம் என் நெஞ்சைவிட்டுப் பிரியாத ஒரு அனுபவமாக இருக்கிறது. அந்த வயதில் எது சரி எது தவறு என்று யாருக்குமே தெரியாது. ஆனால் அது ஒரு மறக்க முடியாத அனுபவம்." என்று ரமேஷ் புதிர்போடுவதுபோல் பேசினான்.


பிறகு, அதைப் பற்றி மேலும் எதையும் சொல்லாமல், கல்வி, பெண்கள் முன்னேற்றம் மற்றும் இளையர்களின் கடமைகள் போன்றவற்றை அனைவரும் ரசிக்கும்படி நகைச்சுவையாகப் பேசி முடித்தான்.

விழா முடிந்தவுடன் விருந்து உபசரிக்கும் இடத்திற்குச் சென்றனர். ரமேஷ், பக்கத்தில் பள்ளி தலைவர், துணை தலைவர்கள் இவர்களுக்குப் பின்னால் மற்ற ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசி கொண்டே நடந்தனர்.

வகுப்புகளின் வராண்டாவில் நடந்து கொண்டிருந்த ரமேஷ் ஒரு வகுப்பைப் பார்த்தவுடன் நின்றுவிட்டான். அந்த வகுப்பைக் கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் மின்னல் பாய்ச்சியதுபோல் ஓர் உணர்வு. திடீரென்று ஒரு பூ பூத்ததுபோல் ஓர் உணர்ச்சி. அந்த வகுப்புறையில் தான் அவன் ஒன்பதாம் வகுப்பு படித்தான். மேடையில் அவன் சொல்லவந்த அனுபவம் அந்த வகுப்பில்தான் நடந்தது.

விழா முடிந்து காரில் ரமேஷ் சென்று கொண்டிருந்தான். அவன் கண்பார்வை மட்டும் கார் ஓட்டுவதில் கண்ணாக இருந்தது. ஆனால் அவன் மனம் அந்த வகுப்பையே சுற்றி சுற்றி வந்தது. அவனது நினைவு அலைகள் அங்கு பாய்ந்தன.

பல ஆண்டுகளுக்கு முன் ரமேஷ் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான். லேசாக மீசை வளர ஆரம்பித்தது. பருவ மாற்றத்தால் உடலும் மனமும் பல மாற்றங்களை சந்தித்தன. மீசை வந்தா ஆசை வருமோ?

வகுப்பில் ரமேஷ் அமைதியாகவே இருப்பான். நன்றாக படிப்பான். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பான். நண்பர்கள் வட்டமும் சிறியது தான். எப்போதும் போலவே அன்று ஒரு நாள் அவன் வகுப்பில் படித்து கொண்டிருந்தான். காலை வேளை முதல் பாடம் ஆரம்பிக்க இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. அந்த பத்து நிமிடங்களையும்கூட வீண் அடிக்காமல் அடுத்த வாரத்தில் வர போகும் கணக்கு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டிருந்தான். ரமேஷுக்கு முன் வரிசையில் இருந்த கோகுல்,

"டேய் இங்க பாருடா.. டீச்சர் இல்லன்னு களாஸே ஒரே ஆட்டம் போடுது. நீ என்னடா பண்ணுறே?" என்றான்.

புத்தகத்தில் கவனத்தை செலுத்தி இருந்த ரமேஷ், "இப்படி சத்தம் போடுறது என்ன புதுசா.. எப்போதும் இப்படிதானே." என்று சொல்லிகொண்டே அடுத்த பக்கத்தை திருப்பினான்.

"அது இல்லடா.. உனக்கு ஒரு மேட்டரு தெரியுமா.. இன்னிக்கு புதுசா ஒரு பொண்ணு நம்ம களாஸுக்கு வர போறா." என்றான் கோகுல்.

அவன் சொன்னதை ரமேஷ் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. தனது calculatorயை பையிலிருந்து எடுத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தான். அப்போது உள்ளே புகுந்த வகுப்பாசிரியர் மிஸ் ரத்னா,

" students, இவதான் இந்த களாஸில சேர போற புது பொண்ணு. let's welcome her." என்று சொன்னவுடனே வகுப்பிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.


அப்போதுகூட ரமேஷ் அவனது பாடத்திலே கண்ணாக இருந்தான். அவளது முகத்தைகூட பார்க்கவில்லை. மிஸ் ரத்னா அந்த புது மாணவியைக் காலியாக இருக்கும் ஏதேனும் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொள்ள சொன்னார்.


ரமேஷ் கீழே விழுந்த பென்சிலை எடுக்க குனிந்தான். பென்சிலை எடுக்கும்போது யாரோ பக்கத்தில் நிற்பதுபோல உணர்ந்தான். சற்று கழுத்தை மேலோக்கி பார்த்தபோது அந்த புது பெண்ணின் முகம் 1000 வாட்ஸ் பல்பு போல் பிரகாசித்தது. அந்த பெண்ணின் கண்கள் செதுக்கி வைத்தது போல அழகாக இருந்தன. நீளமான கூந்தல், உடம்போடு ஒட்டிய சீருடை. வசிகரிக்கும் புன்னகையோடு நின்றாள்.

அவளைப் பார்த்த அடுத்த வினாடி ரமேஷின் இதயத்தில் ஒரு மின்னல் பாய்ந்தது. வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதுபோல் ஒரு உணர்வு. ரமேஷுக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்தது. வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி. ஒரு நிமிடம் அவளது முகத்தையே பார்த்து பிரமித்துபோய் நின்றான். அவனுக்குள் இருந்த 'செல்'கள் இடம் மாறி குதித்தன. பூமியைவிட்டு 200 அடி மேலே சென்றவிட்ட ஒரு உணர்வில் நின்று கொண்டிருந்தான்.


"excuse me please. ஹலோ, மை நேம் ஸ் வித்யா. உங்க பேரு?" என்றாள். அந்த நொடி தான் அவன் சுயநினைவுக்கு வந்தான்.


"நான்....ரமேஷ்...." என்று வார்த்தைகள் முட்ட, தொண்டையில் சிக்க,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.


"கொஞ்சம் நகர முடியுமா? பின்னாடி காலியா இருக்குற சீட்ல உட்காரனும்" என்று வெண்ணிலா ஐஸ்கீரிம் மேல் தேன் ஊற்றியதுபோல் அவளது குரல் அவன் காதுகளை வருடியது. அவள் சொன்னவுடன் ரமேஷின் கால்கள் கேட்டு கொண்டன, அவன் அறியாமலேயே!


வித்யா மிகுந்த கவனத்துடன் பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதுமே பாடத்தை உன்னிப்பாகக் கவனிக்கும் ரமேஷுக்கு அன்று ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. அவ்வப்போது வித்யா ரமேஷை பார்க்கும்போது ஒரு சிறு புன்னகையிட்டாள். வித்யா அப்படி செய்யும்போதெல்லாம் ரமேஷுக்குக் கூச்சம் உடம்பெல்லாம் ஊடுருவியது.


"ரீங்ங்....." பள்ளி மணி ஒலித்தது. வகுப்பு முடிந்ததும் பல மாணவிகள் வித்யாவை ஈக்கள்போல் அவளை மொய்த்த வண்ணம் இருந்தன. அவள் எந்த ஊர்? எங்கு வளர்ந்தவள்? குடும்பத்தைப் பற்றி.. அவள் பிறந்ததாள் எப்போது? அவள் வீடு எங்கே? என்று பல கேள்விகனைகளைத் தொடுத்தனர்.


ரமேஷ் வித்யாவிடம் எதையும் பேசவில்லை. ஆனால் மற்றவர்கள் அவளிடம் பேசுவதும் அவனுக்குப் பிடிக்கவில்லை. பொறாமையாக இருந்தது அவனுக்கு. ஆத்திரமும் அழுகையும் கலந்து வந்தது ரமேஷுக்கு. பையை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டமாக ஓடினான் ; வீட்டை அடைந்தான்.


"என்னடா, மூஞ்சிய உம்முனு வச்சிருக்கே? டீச்சர் ஏதாச்சு சொன்னுச்சா. டெஸ்டுல ஏதாச்சு மார்க் காமியா வாங்கிட்டியா? சொல்லு .... என்ன ஆச்சு?" என்று ரமேஷின் பாட்டி கேட்டார். தினமும் பள்ளியில் நடந்ததை தன் பாட்டியிடம் பகிர்ந்து கொள்ளும் ரமேஷ் அன்று பாட்டி கேட்டதற்கு,


" ஒன்னுமில்ல" என்று ஒரே வார்த்தையில் பதிலைக் கூறிவிட்டுச் அவன் அறைக்குள் சென்றான்.


தன் அறை கதவைப் பூட்டிவிட்டு மெத்தையின் மீது விழுந்தான். ரொம்ப நேரம் யோசித்தான். கண் மூடினால், அவனுக்கு அவள் முகம் தான் நினைவில் வந்தது. 'டக்' என்று கண் விழித்து கொண்டு குழம்பிய நிலையில் இருந்தான்.


'ஓ....' என்று குமறி குமறி அழ ஆரம்பித்தான் ரமேஷ். ஏன் அழுகிறான்? எதற்காக அழுகிறான்? என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான். மனதில் ஏற்பட்ட இந்த மாற்றத்திற்கு யாருக்கு பதில் தெரியும்?

(தொடரும்)

21 comments:

Sanjai Gandhi said...

காயத்ரி.. நீ.. அளவுக்கு மீறி அன்லிமிடட் கடுப்பு ஏத்தற.. இதெல்லாம் உன் ஓடம்புக்கு நல்லது இல்ல.. டெக்ஸ்ட்டுக்கு ஜஸ்டிஃபை குடுக்காதனு சொன்னா கேக்க மாட்டியா? ஓவ்வொரு வாட்டியும் நான் போய் அதை சரி பண்ணிட்டு வந்து படிக்கனுமா? ராட்சஷி.. கொலைகாரி... :((

ரசிகன் said...

புதுக்கதையா? இந்த மனசுக்கு புரியலை..படிச்சா புரியும்ன்னு நெனைக்கறேன்:P

படிச்சுட்டு வர்ரேன்:))

Anonymous said...

//ராட்சஷி.. கொலைகாரி... :(//

ithu nalla irruke ;)

hehe...kathaiyoda review full kathaiyum padichuthaan soluven...
plz always send me the uRL when u r publishing new part...

ரசிகன் said...

//துண்டையில் சிக்க,//

என்னது துண்டையில் சிக்கவா? -> தொண்டையில் சிக்க.. இதுலவேற ஒரு எடிட்டர வேற வேலைக்கு வைச்சிருக்கே. எடிட்டர் ஒழுங்கா வேலைபாக்காம தூங்கப் போயிட்டாரோ?:P

ரசிகன் said...

//'ஓ....' என்று குமறி குமறி அழ ஆரம்பித்தான் ரமேஷ். ஏன் அழுகிறான்? எதற்காக அழுகிறான்? என்று தெரியாமலேயே அழுது கொண்டிருந்தான். //


அவ்வ்வ்வ்..ஒருவேளை தமிழ்மாங்கனி கதையில ஹீரோவான சந்தோஷத்துல இருக்குமோ?:P

ஆமா, அதென்ன உங்க ஊர்ல “ஓ”ன்னு தான் அழுவாங்களோ? ”ஓ”ஹோ..:))))

ரசிகன் said...

பளிச்சன்ற -> பளிச்சென்ற
கரவோஷத்தால்-> கரகோஷம்


//லேசாக மீசை வளர ஆரம்பித்தது. பருவ மாற்றத்தால் உடலும் மனமும் பல மாற்றங்களை சந்தித்தன. மீசை வந்தா ஆசை வருமோ?
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))))
மீசையின் மகிழ்மை பத்தி சொன்னதும்,என்னுடைய மலரும் நினைவுகளும் ஞாபகம் வந்துருச்சே.பதிவே போட்டிருக்கோமே.
தாங்கலைங்க.. தாங்க முடியலை..:)))

ரசிகன் said...

////அவன் மனதில் மின்னல் பாய்ச்சியதுபோல் ஓர் உணர்வு. திடீரென்று ஒரு பூ பூத்ததுபோல் ஓர் உணர்ச்சி. //

//அரங்கமே சரவணா ஸ்டோர்ஸ் தங்ககடை போல் ஜொலித்தது.////

அடடா..

ரசிகன் said...

//அந்த பத்து நிமிடங்களையும்கூட வீண் அடிக்காமல் அடுத்த வாரத்தில் வர போகும் கணக்கு பரிட்சைக்கு தயார் செய்து கொண்டிருந்தான்.//

பக்கத்துல வந்து நிக்கற பிகர கூட பாக்காம,இவன்ல்லாம் உருப்படுவான்ங்கறிங்க?

ரசிகன் said...

கதை ஆரம்பமே ரொம்ப உணர்ச்சிகரமா(??) இருக்கு.அதுலயும் கதாநாயகன் “ஓ”ன்னு அழறது ரெம்ப உணர்ச்சிகரமா இருக்கு.

வர்ணனைகள் சூப்பர். நல்ல முன்னேற்றம்.வாழ்த்துக்கள். அடுத்த பகுதி வெளியிடுங்க..:)

Dreamzz said...

hmm :) interesting! teen love a! parpom! seekiram next part pls!

தமிழ் said...

/ரமேஷின் இதயத்தில் ஒரு மின்னல் பாய்ந்தது. வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதுபோல் ஒரு உணர்வு. ரமேஷுக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்தது. வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி/

...............

Divya said...

அழகான தொடக்கம் காயத்ரி,

பள்ளி கால பருவ கோளாருகளுடன் கதை கலைகட்டுது!!!

ஏன் இம்புட்டு அழுகை ரமேஷ்க்கு??.........சீக்கிரம் நெக்ஸ்ட் பார்ட் ப்ளீஸ்!!

Divya said...

\மீசை வந்தா ஆசை வருமோ?\

மீசையின் அளவே...ஓர் ஆணின் ஆசையின் அளவு!!

அப்படின்னு ஒரு பெரியவர் பொன்மொழி சொல்லியிருக்கார் :)))

Divya said...

\\அவளைப் பார்த்த அடுத்த வினாடி ரமேஷின் இதயத்தில் ஒரு மின்னல் பாய்ந்தது. வயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி பறப்பதுபோல் ஒரு உணர்வு. ரமேஷுக்கு உடம்பெல்லாம் ஏதோ செய்தது. வார்த்தைகளால் சொல்லமுடியாத ஒரு உணர்ச்சி. ஒரு நிமிடம் அவளது முகத்தையே பார்த்து பிரமித்துபோய் நின்றான். அவனுக்குள் இருந்த 'செல்'கள் இடம் மாறி குதித்தன. பூமியைவிட்டு 200 அடி மேலே சென்றவிட்ட ஒரு உணர்வில் நின்று கொண்டிருந்தான்.\\

அட்ரா அட்ரா.......சும்மா இளமை துள்ளுது காயத்ரி, கலக்கல்ஸ்!!!

செல்கள் இடமாறி குதித்தன -> எப்படி காயத்ரி இப்படி எல்லாம், சான்ஸே இல்ல, தூள் டக்கர்!!

FunScribbler said...

//டெக்ஸ்ட்டுக்கு ஜஸ்டிஃபை குடுக்காதனு சொன்னா கேக்க மாட்டியா? ஓவ்வொரு வாட்டியும் நான் போய் அதை சரி பண்ணிட்டு வந்து படிக்கனுமா?//

நான் ஒன்னுமே பண்ணலப்பா! அதுவா உங்க கண்ணுக்கு ஜில்லேபி மாதிரி தெரிஞ்சா நான் என்னப்பா பண்ணறது!

//ராட்சஷி.. கொலைகாரி... :((//

அண்ணா, யாருங்கண்ணா அது? இங்க அப்படி யாரும் எனக்கு தெரியாதுண்ணா!

FunScribbler said...

//hehe...kathaiyoda review full kathaiyum padichuthaan soluven...//

ஒகே madam. no problem.:))

FunScribbler said...

//இதுலவேற ஒரு எடிட்டர வேற வேலைக்கு வைச்சிருக்கே//

பாவம் அவரு.. ஜில்லேபிய பார்த்து பார்த்து நொந்து போயிட்டாரு!ரசிகன், நீ சுட்டி காட்டிய எழுத்து பிழைகளை திருத்தி கொண்டேன். நன்றி!:))

FunScribbler said...

//என்னுடைய மலரும் நினைவுகளும் ஞாபகம் வந்துருச்சே.//

அடடே, என்ன ரசிகன், நீங்களும் ஒரு autograph வச்சு இருக்கீங்களா!!ம்ம்..interesting!!

FunScribbler said...

//பக்கத்துல வந்து நிக்கற பிகர கூட பாக்காம,இவன்ல்லாம் உருப்படுவான்ங்கறிங்க?//

ஹாஹா..

//வர்ணனைகள் சூப்பர். நல்ல முன்னேற்றம்//

நன்றி ரசிகன்!

FunScribbler said...

//hmm :) interesting! teen love a! parpom! seekiram next part pls!//

நன்றி dreamz

//...............//

வணக்கம் திகழ்மிளிர்! பதிவ படிச்சுருக்கீங்கன்னு புரியது. ஆனா இது என்ன மொழியல எழுதி இருக்கீங்கன்னு புரியலங்க. :))

FunScribbler said...

ஹாலோ திவ்யா,

//அழகான தொடக்கம் காயத்ரி,//

நன்றி.

//அப்படின்னு ஒரு பெரியவர் பொன்மொழி சொல்லியிருக்கார் :)))//

யாருங்க அவரு! நீங்களா? :))

//செல்கள் இடமாறி குதித்தன -> எப்படி காயத்ரி இப்படி எல்லாம், சான்ஸே இல்ல, தூள் டக்கர்!!//

நன்றி திவ்ஸ். நான் என்னங்க பண்ணறது.. அதுவா வருது. :))