Dec 15, 2008

விடுமுறை to நியூசிலந்து (2)



துளசி கோபால், ஹாலோ.....!! நான் அங்க சென்றது 5 ஊர்களுக்கு- auckland, christchurch, queenstown, dunedin and rotoura. நீங்க எங்க இருந்தீங்க? தேடி தேடி பார்த்தேன், ஆள காணும்! (அவ்வ்வ்....escape)

சரி முந்திய பகுதியில் மௌரி கலாச்சாரத்தை பத்தி சொல்லி கொண்டிருந்தேன்ல. ஆமாங்கோ ரொம்ப வித்தியாசமான ஒரு கலாச்சாரம். அதுல எனக்கு பிடிச்சது என்னவென்றால் அங்க உள்ளவர்கள் அந்த கலாச்சாரத்தை அவ்வளவு பெருமையாக எண்ணுகிறார்கள். (நம்மில் பலர் பார்த்து பின்பற்ற வேண்டிய விஷயம்:)

அவர்கள் கலாச்சாரத்தில் வணக்கம் சொல்லும்விதம்- இருவரும் வணக்கம் சொல்லவேண்டும் என்றால், இருவரின் மூக்குகளை உரசி கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று ஒரு வீர நடனம், பாடல். இப்படி வீரம் நிரம்பிய அவர்களது நடனத்தை ஆடுவதற்கு காரணம், காட்டில் வாழும்போது எதிரிகளை துரத்துவதற்காம்.



ஆகவே தான் இன்றைய நிலையிலும்கூட ஒவ்வொரு rugby போட்டி நடக்கும்முன்பு நியூசிலந்து குழுவினர் தங்களது மௌரி நடனத்தை (haka) ஆடுவார்களாம். ஆம், இந்தியாவிற்கு எப்படி கிரிக்கெட்டோ அப்படி தான் rugby நியூசிலந்துக்கு. அந்நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றகூடிய வல்லமை கொண்டது அவ்விளையாட்டு.

lord of the rings, narnia போன்ற படங்கள் நியூசிலந்தில் உள்ள மலைபகுதிகளில் எடுத்ததாம். ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு! sheep shearing farm(agrodome) மற்றும் rabbit shearing இடங்களுக்கு சென்றோம். எப்படி sheep shearing செய்கிறார்கள் என்பதை கண் முன் காட்டினர். அந்த ஆடுகளை மெய்க்க நாய்கள் இருக்கின்றனர். அந்த நாய்கள் ஆடுகளை திடல்களில் மெய்க்க விட்டு திரும்பி கொண்டு வருமாம். அந்த நாய்கள் பாதுகாப்பாக ஆடுகளை கொண்டு வர பல பயற்சிகள் எடுத்துள்ளன. குரைக்காதாம்! ஆனால் கண்களாலே ஆடுகளை மிரட்டுமாம்!!



அங்கு சென்று பார்த்தபிறகு என் மனதில் தோன்றியது “ஆடுகளை/மாடுகளை பார்த்து கொள்வது ஒரு கலை!”. ஆனா நம்ம ஊருல என்ன சொல்றோம்,படிப்பு வரலன்னா ‘மாடு மெய்க்க தான் நீ லைக்கு’. !! :)


பின்னர், mrs jones அவர்களின் பூந்தோட்டத்திற்கும் பழ தோட்டத்திற்கும் சென்றோம். அடேங்கப்பா.... எவ்வளவு பூக்கள்! அங்க போய் வளைச்சு வளைச்சு நானும் அக்காவும், தங்கையும் பல படங்களை எடுத்தோம். jump shot, boys ale ale shot, பூ பக்கத்துல நிக்கிற மாதிரி, பின்னாடி நிக்கிற மாதிரி, அந்த காலத்து பாரதிராஜா படங்களில் வந்த மாதிரி- இப்படி சில பல படங்களை எடுத்து கொண்டோம்.



பிரமாண்டமான இன்னொரு இடம் ‘milford sound' என்ற இடம். நீர்வீழ்ச்சி, மலைகள் என்று இயற்கை அழகு நிரம்பி வழியும் இடம். இந்த இடத்துக்கு செல்ல 5 மணி நேரம் பயணம் செய்ய வேண்டு. காலை உணவு முடித்தவுடனே கிளம்பிவிட்டோம்.

எனக்கு பஸ் பயணம் ஒத்துவராது என்பதை அன்று தான் புரிந்து கொண்டேன். வாந்தி வாந்தியா வர மாதிரி ஒரு உணர்வு. ஆனால் வெளியே வர மாட்டேங்குது! சரி முழிச்சு இருந்தால்தானே இந்த பிரச்சனை, ஆக சட்டென்று தூங்கிவிட்டேன். அதுக்கு அப்பரம் பரவாயில்லை.

இன்னொரு விஷயம். நிறைய நாட்கள், பஸில் தான் அதிக நேரம் பயணம் செய்தோம். தூக்கமா வரும். நானும் என் தங்கையும் ‘பஸில் எப்படி தூங்குவது” அப்படின்னு ஒரு புத்தகம் எழுத போறோம். எங்க அனுபவங்களில், பல varietyயான தூங்கும் techniqueக்களை கண்டுபிடித்துவிட்டோம்ல:)

milford sound இடத்தை அடைந்துவிட்டோம். cruiseலில் சுற்றி பார்க்கலாம். எனக்கு cruiseலில் செல்வது பிடிக்கும். ரொம்ப குளிர் காற்று அடித்தது. ரொம்ப நல்லா இருந்தது!


நியூசிலந்திலில் உள்ளவர்கள் விரும்பி ஈடுபடுவது சாகச விளையாட்டு. அப்படி ஒரு விளையாட்டு தான் jetboat ride. 60km/hr வேகத்தில் போகும் boat. அது 360degree சுற்றும் வேற. இதுக்கு தனியா காசு கட்டனும். NZ$90. milford sound (NZ$225) இடத்துக்கும் தனியா காசு கட்டனும். இரண்டுமே optional tour.
என்பதால். ஏற்கனவே ஏகப்பட்ட செலவு. ஆக நான் போகவில்லை என்றுவிட்டேன்.

jetboat rideக்கு அக்கா, தங்கச்சி மற்ற சுற்றுலா உறுப்பினர்கள் சிலர் சென்றனர். NZ$90 காசுக்கு சிங்கையில் நான் 7 plates of chicken rice அல்லது 8 plates of mutton briyani அல்லது 9 movie tickets வாங்கலாம் என்று மனதில் கணக்கு போட்டு கொண்டிருந்த போது அம்மா என்னிடம் NZ$100 பணத்தை நீட்டி,

“அப்பரம் மேல shopping போக டைம் கொடுப்பாங்களாம். உனக்கு என்ன விருப்பமோ அத வாங்கிக்கோ’ என்றார்.

ஆஹா....!!

இப்படி ஒன்னு நடக்கனும்னு தெரிஞ்சி இருந்தா, அக்காவையும் தங்கச்சியும் போக வேண்டாம்னு சொல்லி NZ$300 collection பண்ணி இருக்கலாமே! அம்மா கொடுத்த NZ$100 சிங்கைக்கு வந்து இங்க பணத்தை மாற்றி இங்கு செலவு பண்ணலாம்னு ப்ளான்.

என் அம்மா என் பொறந்த நாள் அன்னிக்கு பணம் கொடுப்பாங்க. ஆனா மறுநாளே marketல things வாங்கனும், அத வாங்கனும், இத வாங்கனும் சொல்லி பணத்த திருப்பி வாங்கிட்டு போயிடுவாங்க. அந்த மாதிரி இந்த NZ$100 ஆயிவிடுமோன்னு அந்த பணத்தை பத்திரமா வைச்சுருக்கேன் என் கைபையில்.

அக்காவும் தங்கச்சியும் boat ride முடித்துவிட்டு வந்தனர்.

அப்பரம் cadbury chocolate factoryக்கு சென்றோம். எப்படி அதை தயார் செய்கிறார்கள், அதன் வரலாறு பற்றி கூறி factory tourக்கு அழைத்து சென்றனர். ரொம்ப சூப்பரா இருந்துச்சு!! அங்கேயே இருக்கலாம்னு தோணுச்சு. அதில் ஒரு அறை உண்டு- sensory evaluation room. அதில் புதிய சாக்கெலட்களை ருசி பார்ப்பதற்கு ஆட்கள் வருவார்களாம். அது அதன் அவர்கள் முழு நேர வேலையாம்! அந்த வேலைக்கு யாருச்சு போக விரும்புறீங்களா? :)

நியூசிலந்தில் எந்த ஒரு சின்ன town மாதிரி இருந்தாலும், அங்க எப்படியாவது ஒரு north indian உணவகம் இருந்துவிடும்! இந்தியன் உலகம் முழுவதும் இருக்கிறான் என்று நினைக்கையில் பெருமையாக உள்ளது.

நான் பார்த்த இடங்களில் எனக்கு பிடித்த ஊர் -queenstown. சின்ன நகரம் தான். ஆனா குளிர் காற்றும் அந்த மலை சார்ந்த பகுதியும் simply superb! the most romantic place என்றுகூட சொல்லலாம்!:)

வெளியூர் போனாலே souvenirs வாங்க வேண்டும். நெருங்கிய இரண்டு நண்பர்களுக்கு மட்டும் chocolates மற்றும் new zealand cap வாங்கினேன்.

நான் செய்த சாதனை பற்றி சொல்லியே ஆக வேண்டும். dunedin என்ற ஊரில் தான் world's steepest street உண்டு. அது 33 degree அளவில் இருக்கும். அதில் நடக்க வேண்டும். கொஞ்ச கஷ்டமா தான் இருந்துச்சு. சாலையில் இரு பக்கமே வீடுகள். இந்த வீடுகளில் இருப்பவர்கள் எப்படி தான் ஒவ்வொரு நாளும் கீழேயும் மேலேயும் இறங்கிபோறாங்களோ.

அந்த சாலையில் ஏறிமுடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். எனக்கும் ஒன்னு கிடைத்தது.:)

christchurchல் தான் கடைசி நாள் தங்கினோம். ஞாயிற்றுகிழமை என்பதால் தெருக்களில் கூட்டமே இல்லை- ஒரு சில குண்டர் கும்பல்களை தவிர! ஆமாங்கோ! கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. தண்ணி அடித்துவிட்டு ஒரு கும்பல் எங்களை பார்த்து ஏதோ சொல்லிகொண்டு சென்றனர். உங்க ஊர்ல நீங்க ரவுடின்னா, எங்க ஊருல நாங்களும் பெரிய ரவுடி தான் என்ற முகபாவத்தோடு நடந்து சென்றோம்.

சாலையை கடக்கும்போது பேருந்தில் பஸ் ட்ரைவர் ஒருவர் எங்க அப்பாவை பார்த்து சிரித்தார். அருகில் சென்றுபார்த்த போது தெரிந்தது அவரும் ஒரு தமிழர் என்று!

நல்ல பல நினைவுகளுடன் வீடு திரும்பினோம். சிங்கையிலிருந்து வரும்போது விமானத்தில் இருந்த குறை போகும்போது இல்லை. திரும்பி வந்த விமானத்தில் நிறைய ஆண் flight attendant இருந்தாங்க (அதுவும் அழகா..) ஹாஹாஹா....

9 comments:

சந்தனமுல்லை said...

ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு! சுருக்கமா நிறைய விஷயத்தை சொல்லிட்டீங்க! :-))

வடுவூர் குமார் said...

எங்கள் ரீச்சர் எங்கு இருக்கிறார் என்று கேட்டதை வனமையாக கண்டிக்கிறோம்.
:-0)))

துளசி கோபால் said...

அடடா.... இந்தக் கிறைஸ்ட்சர்ச்சுலே தானேங்க 21 வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டுக் கிடக்கேன்.
ஃபோன்புக்லே பார்த்தாலும் இருப்பேனேங்க...... சரி. போகட்டும் நல்லாதான் எஞ்சாய் செஞ்சுருக்கீங்க.

மில்ஃபோர்ட் போனது நல்லதுங்க. இந்தமாதிரி ஒரு அனுபவம் வேற எங்கும் கிடைக்காது.

பால்ட்வின் தெருவிலேதான் புதுக் கார் வாங்குனவுடன் ஓட்டிக்கிட்டுப்போய் ப்ரேக் சரி இருக்கான்னு பரிசோதிப்போம்:-))))

ஆயில்யன் said...

//ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு! சுருக்கமா நிறைய விஷயத்தை சொல்லிட்டீங்க! :-)//


நான் இதைத்தான் சொல்லணும்ன்னு நினைச்சேன் அதுக்குள்ள தங்கச்சி அவசரப்பட்டு சொல்லிடுச்சு

ஸோ எனக்கு ரிப்பிட்டேய்ய்பய் போடற தவிர வேற வழியே இல்லை :!

Sumi Raj said...

செலவு இல்லாமல் சுத்திக் காட்டீங்க....

நாகை சிவா said...

நல்ல பயணக்குறிப்பு...

நமக்கு எப்படி இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் டோ அது போல நியூசி Vs ஆஸி ரக்பி... சும்மா அனல் பறக்கும். நியூசி தான் டாப் :)

நியூசி ஆளுங்க கொஞ்சம் டேஞ்சர் பார்ட்டிங்க தான். அண்டா அண்டாவா இல்ல பேரல் பேரலா குடிப்பாங்க அடித்தடினா முன்னால நிப்பாங்க...

பழகினால் மிகவும் இனிமையான மக்கள்...

FunScribbler said...

@சந்தனமுல்லை

நன்றி:)

FunScribbler said...

@துளசி

//21 வருசமாக் குப்பை கொட்டிக்கிட்டுக் கிடக்கேன்.//

இல்லையே சுத்தமா தானே இருந்துச்சு நியூசிலந்து.

//பால்ட்வின் தெருவிலேதான் புதுக் கார் வாங்குனவுடன் ஓட்டிக்கிட்டுப்போய் ப்ரேக் சரி இருக்கான்னு பரிசோதிப்போம்:-))))//

ஹாஹா...

Anonymous said...

Hi,

I am new here..First post to just say hi to all community.

Thanks