கொஞ்ச நாளைக்கு முன்னாடி, நாங்க ஒரு வீடியோ போட்டில கலந்து கொண்டு உங்களிடம் ஓட்டு போட சொன்னோம்ல, அதுக்கு மூன்றாவது பரிசு கிடைச்சுருக்கு அக்காவுக்கு. ஒரு ipod. உங்களது பொன்னான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்த அனைவருக்கும் கோடி நன்றிகள்!:) நீங்க போட்ட ஒவ்வொரு வாக்குகளும் இப்போ இசையா மாறியிருக்க. அத கேட்கபோறேன்னு நினைச்சா கண்ணு கலங்குது...(feelings of singapore, india, srilanka...வேற எங்கிருந்தோ ஓட்டு போட்டீங்களோ அந்த ஊரையலாம் சேர்த்துக்குங்க..அவ்வ்வ்)
இலவச டிவிடி பிளேயர், வேட்டி சட்டை, பட்டுபுடவை, 10 பவுன் தங்க சங்கிலி, ஒரு வைர மோதிரம்...இப்படி உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை தான். ஆனா...பட்ஜெட் இடிப்பதால், அடுத்த முறை செயல்படுத்த முயற்சிக்கிறோம்! :)
இதுல இன்னொரு காமெடி என்னென்னா.... இந்த ipodட்ட எப்படி ஆப்ரேஷன் செய்வது என்று..ச்சி..ஐ மின் எப்படி ஆப்ரேட் செய்வது என்று தெரியவில்லை. 'எடிசனின்' கடைசி பேத்தி என்ற முறையில் நான் தற்சமயம் இந்த 'ஆப்ரேஷனில்' தீவிரமாக உள்ளேன். பல முயற்சிகளை செய்துவருகிறேன்.
நேற்று பரிசளிப்பு விழா. எந்த ஒரு பரிசளிப்பு விழாவுக்கு போனாலும் எனக்கு இந்த மன்னன் படத்தில் வந்த ரஜினி-கவுண்டர் காமெடி நினைப்புக்கு வந்துவிடும். அவர்கள் தங்க சங்கிலியும், மோதிரமும் வாங்க போகும் காட்சி கண்முன்னே வந்துவிடும். அப்படி தான் நேற்றுக்கும் போய் உட்கார்ந்தவுடனே எனக்குள்ளே ஒரு சிரிப்பு! அந்த உரை, இவர் பேச்சு, அந்த பேச்சு... என்று கொலை அறுவை...உஷ்ஷ்ஷ.... எப்படா விடுவாங்கன்னு இருந்துச்சு.
ஏகப்பட்ட பேட்டி, புகைப்படம் எடுத்து கொள்வது என்று அக்காவை சுற்றி ஏராளமான மக்கள். நான் அக்காவின் பையை தூக்கி கொண்டு ஒரு ஓரத்தில் நின்றேன். இப்ப தான் தெரியுது.. ஏன் இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாகிறார்கள் என்று! ஹாஹாஹா....:)
பரிசளிப்பு விழா நடந்த இடம் raffles place. night lifeக்கு உகந்த ஒரு ஏரியா..... ஒரு உணவகத்தின் வெளியில drums வாசிச்சாங்க பாருங்க.... அங்கேயே கொஞ்ச நேரம் நின்று பார்த்துட்டு இருந்தேன். இந்த இடத்துக்கு எல்லாம் அடிக்கடி போக முடியாது என்பதால் நான் அக்காவிடம்
"அக்கா...கொஞ்ச நேரம் இங்கேயே சுத்திட்டு போலாமா?" என்றேன். அவரும் ஒகே என்றுவிட்டார்! நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அந்த இடம், வெளிச்சம் குறைவாக இருந்தாலும், அதில் இருந்த அழகு, ஏகப்பட்ட நடவடிக்கைகள், சாப்பாட்டுகடைகள், நிறைய வெள்ளக்காரன்ஸ்...
எத பாக்குறது...எத விடுறதுன்னு தெரியாம முழிச்சேன்(ஐயோ....நான் சாப்பாட்டு கடைகள சொன்னேன்....முறைக்காதீங்க:) இடம் ரொம்ப பிடிச்சுபோச்சு.
இந்த பதிவை எழுதிகொண்டிருக்கும்போது, ipodட்ட எப்படி ஆப்ரேட் செய்வது என்று googleலில் கண்டுபிடித்துவிட்டேன். சரி நான் போய் இசையில் சங்கமம் ஆகிறேன். .....
10 comments:
ஒரு நாள் டைரக்டர்.. இனி நிரந்தர டைரக்டர் ஆகிருங்க!!!!
(முதல்வன் மாதிரி ரசிகர்கள் எல்லாம் உங்க வீட்டுல திரண்டு நின்னு உங்கள படம் டைரக்ட் பண்ண சொல்லறது மாதிரி எல்லாம் கற்பனை பண்ணி பாக்க கூடாது!! ஹி ஹி )
@ புவனேஷ்
//ஒரு நாள் டைரக்டர்.. இனி நிரந்தர டைரக்டர் ஆகிருங்க!!!!//
இப்படி உசுபேத்தி உசுபேத்தியே வாழ்க்கைய ரணகளமா ஆக்கிடுறாங்கய்யா!! அவ்வ்வ்வ்
//மரியாதையா ஓட்டு போட்டு போங்க.. :-)//
(விஜயகாந்த்த வெச்சு பயமுருத்தியுமா இத மாத்தல?) தேமுதிக சார்பாக தளம் நடத்தும் உங்களுக்கு வாழ்த்துகள்!!
//இப்படி உசுபேத்தி உசுபேத்தியே வாழ்க்கைய ரணகளமா ஆக்கிடுறாங்கய்யா!!//
ஹலோ நீங்க டைரக்ட் பண்ணறது எங்களுக்கு தான் ரணகளம்.. ஹி ஹி..
@புவனேஷ்
//தேமுதிக சார்பாக தளம் நடத்தும் உங்களுக்கு வாழ்த்துகள்!!//
ஆஹா...ஏன்? ஏன்? நான் பாட்டுக்கும் சும்மா தானே இருந்தேன்... ஏன்? இந்த கொல வெறி!
@புவனேஷ்
//ஹலோ நீங்க டைரக்ட் பண்ணறது எங்களுக்கு தான் ரணகளம்.. ஹி ஹி.//
ஆஹா..வந்துட்டாங்கய்யா வந்துட்டாங்க! மறுபடியுமா? முடியலப்பு முடியல்ல...
nanri ya???
singapore kku air ticket eppa anupureenga? ;)
வாவ் ipod கிடைச்சிருக்கா, சூப்பர்!!
அக்காவிற்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க:)
@karthik
//singapore kku air ticket eppa anupureenga? ;)//
ஹாலோ...ஹாலோ...சாரிப்பா...காதுல விழல...signal சரியா இல்ல... இங்க...ஹாலோ...ஹாலோ!
@திவ்ஸ்
//அக்காவிற்கு என் வாழ்த்துக்களை சொல்லிருங்க:)//
சொல்லிடுறேன் குருவே:)
Post a Comment