என் இனிய தமிழ்மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிரோஜா பேசுகிறேன். மொக்கை, மகா மொக்கை, காதல் கவிதை, காலேஜ் கலாட்டா என்று உங்கள் கண்களுக்கு இதுவரைக்கும் வெறும் மருந்து கொடுத்து கொண்டிருந்த நான் இனி மண்வாசனை மாறாத ஒரு விருந்து கொண்டுக்க வந்துள்ளேன்.ஏதோ கள்ளிப்பால் கொடுக்காமல்.......(cut)......
யப்பா...கொஞ்ச அப்படியே பாரதிராஜா மாதிரி பேச முயற்சி செஞ்சு பாத்தேன்...முடியல...ஹாஹா....சரி எதுக்கு இந்த லீடு சீன்னா... இரண்டு குறும்படம் இயக்கியுள்ளேன். பொறுங்க பொறுங்க...ரொம்பலாம் கற்பனை வேணாம்...ஒரு போட்டிக்காக இந்த வீடியோ செய்தோம்.
இரண்டு நிமிடங்களுக்குள் இந்த வீடியோ இருக்க வேண்டும். கொடுத்த தலைப்பு “ஏதேனும் பூகம்பமோ, இயற்கை பேரிடரோ, அல்லது வேறு ஏதேனும் அவசர காலத்தில், நீங்க எதை பாதுகாக்க நினைப்பீர்கள்?”
ஒரு பெரிய தல, நடு தல, சின்ன தல- அதாங்க அக்கா, நான், தங்கச்சியும் யோசிக்க ஆரம்பித்தோம். முதல் வீடியோ
மூலக்கதை- அக்கா
கதை, வசனம், நடிப்பு- தங்கச்சி
திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவாளர்,எடிட்டிங்- நான் தான் (டி ஆர முந்திகொள்ள ஆசையில்ல...)
வீட்டின் அறை தான் லொக்கேஷன். இரண்டே இரண்டு ஷாட் தான். ஆக, முதலே ஒத்திகை பார்த்து கொண்டோம். காட்சி இப்படி போகும்....தங்கச்சி கோபத்துடன் அறையின் கதவை படார்னு சாத்தனும். இரண்டு மூனு முறை அதையே ஒத்திகை பார்க்க, எங்க வீட்டு பணிப்பெண் சமையலறையிலிருந்து “ஏய் என்னங்கடி கதவ போட்டு உடைக்கிறீங்க.... அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என்று கத்தினார்.
சரி சரி, வளரும் கலைஞர்களுக்கு எதிர்ப்பு வர தான் செய்யும். அதையும் தாண்டி நாங்க வீடியோவை எடுத்து முடித்தோம். ஒரு கட்டத்தில் பூகம்பம் வந்தது போல் மேசை ஆட வேண்டும். அதற்காக அக்கா மேசை கீழ் உட்கார்ந்து மேசையை அசைத்து அசத்திவிட்டார். உண்மையிலேயே பூகம்பம் வந்ததுபோல் இருந்துச்சு! அதுக்கு அப்பரம் என்ன நடந்ததுன்னு வீடியோவ பார்த்து தெரிஞ்சிக்குங்கோ....
இரண்டாவது குறும்படம். அதே தலைப்பு ஆனால் விஷயம் வேற. எங்களது பள்ளியை பாதுகாக்க ஆசைப்படுகிறோம் என்பது தான் விஷயம். அக்கா பேசுவார். இதற்காக மூடப்பட்ட பள்ளிக்கு சென்றோம். பள்ளி 5 வருடங்களுக்கு முன்னால் மூடப்பட்டது. அங்கு சென்று வேலையை முடித்தோம்.
நான் கற்று கொண்டது தெளிவான ஒலிப்பதிவுக்கு மைக் பயன்படுத்த வேண்டும் அல்லது re-recording செய்ய வேண்டும். இரண்டுமே செய்ய முடியவில்லை. பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் படத்தை உடனே ரிலிஸ் செய்ய வேண்டும் என்று sun pictures...ச்சி...ஐ மின் akka pictures (எங்க அக்காவின் தொல்லை காரணமாக...) கேட்டு கொண்டதால் செய்ய முடியவில்லை.
இப்போ வாசகர்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் வீடியோவிற்கு சென்று உங்கள் பொன்னான முத்திரைகளை போட வேண்டும். pls vote for the videos by clicking on the right side of the 5th star. அதுக்கு தான் 5-ஸ்டார் ரேட்டிங். நிறைய வோட்ஸ் இருந்தால், பரிசு கொடுப்பார்கள்....:)
கண்டிப்பாக வோட்ஸ் போடுங்கோ! கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும் ஏன்னா இது வித்தியாசமான படம் (எல்லாரும் சொல்றாங்களே...அதான் நானும் சொல்றேன்:)
* ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்க இப்படங்கள்!
links for the video
http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18560.html
http://www.razor.tv/site/servlet/segment/main/whatwillyoudefend/18498.html
16 comments:
all the best!
வணக்கம், நல்லாருக்கிங்களா...
ஆல்வேஸ் கலக்கல்தான்!
அலுவலகத்திலிருந்து திறக்க இயலவில்லை, அப்புறம் பார்த்துட்டு வாக்களிக்கிறேன்.
"ஏய் என்னங்கடி கதவ போட்டு உடைக்கிறீங்க.... அமைதியாவே இருக்க மாட்டீங்களா?” என்று கத்தினார்."
--- புதுசா வந்தவங்களா...? நல்ல செலக்ஷன்:)
(உங்க பாணில) ஹாஹா...
அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தருவீங்களா?
ஹீரோ..அரசியல்..சி.எம்..பி.எம். அவ்ளோதான் நம்ம ஆசை!
பிள்ளைங்களா.....நல்ல முயற்ச்சி...
வாழ்த்துக்கள்!
இந்த படத்துக்கு வேண்டுமென்றெல்லாம் ஒரு பாட்டு இலவசமா எழுதி தரட்டா....
ஆட்டமா...வீட்டுக்குள்
தேர் ஓட்டமா....
ஏ..வாலு..வாலு..வாலுதான்
எல்லாருக்குமே..வாலுதான்!
தூளு...தூளு...தூளுதான்
எல்லா பொருளும் தூளுதான்!
ஆடாத ஆட்டம் எல்லாம்
வீட்டுக்குள்ள ஆடி
போடாத வேசம் எல்லாம்
பள்ளியிலே கூடி...
யாருக்கும் தெரியாம
வீட்டைவிட்டு போயி
எடுத்தாங்க வீடியோ
அக்காகூட கூடி...
அடுத்த பாட்டு....
வீடியோ இரண்டால் உன்
வீடியோ இரண்டால் என்
விழிகளுக்கு நல்ல
விருந்தளித்தாய்....(வீடியோ....)
இப்படி நிறைய பாட்டிருக்கு...
எவ்வளவு தொகை என்று சொன்னால் அதுக்கு ஏற்றவாறு எழுதிடலாம்...சரியா..ஓகே...
மேடம்,
இந்த படத்துக்கெல்லாம் இயக்குநர் இமயம் பட்டமெல்லம் கொடுக்க முடியாது... :) கள்ளவோட்டு போடறதுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பீங்களா??
@அன்பு
//புதுசா வந்தவங்களா...? நல்ல செலக்ஷன்:)//
இல்லங்க... புதுசா வருவங்க அடுத்த வாரம் தான் வராங்க...
வாழ்த்துகளுக்கும் உங்க அன்புக்கும் நன்றி:)
@கார்த்திக்
//அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தருவீங்களா?//
பார்க்கலாம்... ஒரு பெரிய lump sum of money கொடுத்தீங்கன்னா...கண்டிப்பா பண்ணலாம்!
//ஹீரோ..அரசியல்..சி.எம்..பி.எம். அவ்ளோதான் நம்ம ஆசை!//
ஓஹோ...அப்படி போகுதா..கதை!
@பிரியமுடன்
நல்லா இருக்கு உங்க பாட்டு! உங்கள வச்சு படம் எடுத்தா கண்டிப்பா இந்த பாட்டு இருக்கு. பாட்டு சூப்பர் ஹிட் ஆயிடும்!
@ராம்
பிரியாணியா? ம்ம்ம்...ஐஸ் பிரியாணி ஓகேவா..(அதாங்க நேத்து வச்ச சோறு)
உங்களுக்கு என் பட்டாம்பூச்சி விருது
http://www.priyamudan-prabu.blogspot.com/
வீடியோவைப் பார்ப்பதில் சிக்கல் இருக்கிறது. யூடியூபில் ஏற்றியிருக்கிறீர்களா?
@முரளி
போட்டியின் விதிமுறைபடி வேறு தளங்களில் நான் வீடியோவை வெளியிட முடியாது. :(
முரளி,
உங்களுக்கு FireFoxல் படம் வரவில்லையெனில் IEல் முயற்சிசெய்யுங்கள், எனக்கும் அந்தப்பிரச்னை இருந்தது!
//பாரதிரோஜா பேசுகிறேன்.//
முடியல...
//இந்த படத்துக்கெல்லாம் இயக்குநர் இமயம் பட்டமெல்லம் கொடுக்க முடியாது... :) கள்ளவோட்டு போடறதுக்கு பிரியாணி வாங்கி கொடுப்பீங்களா??
//
ரிப்பீட்டு...
என்ன....என்னை வைத்து படம் எடுக்கிறீங்களா....வேண்டாம் சாமி...
நான் யாருடைய பிழைப்பிலும் மண்ணை போட விரும்பவில்லை!! விஜய், சூர்யா, விக்ரம் இவுங்களுக்கு எல்லாம் என்னால் எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நான் உங்களுடைய விருப்பதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை மன்னிக்கவும்.....
பாடல் எழுதுவது கூட வைரமுத்து, வாலி, பா.விஜய் போன்றவர்களை பாதிக்க கூடும் என்று எழுதுவது கிடையாது...என்னை வம்புக்கு இழுக்காதீங்க....வேண்டும் என்றால் உங்ககிட்ட அசிஸ்டந் டிரெக்டராக இருக்கிறேன்...போதுமா....
Post a Comment