May 28, 2009

Book Tag

தொடர் பதிவு இது. படித்த புத்தகங்கள் பத்தி எழுதுனுமா....வலைப்பூ நண்பர் ஸ்ரீ என்னைய tag பண்ணியிருக்காரு. ஐயோ வாழ்க்கையில் நான் என்னத்த படிச்சேன் tag பண்ண?( நான் வாழ்க்கையை படிச்சவள்....ஐயோ தமிழ், நீ கலக்குற மச்சி...தாக்கு தாக்கு!)

சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம். குங்குமம், குமுதம், ஆனந்த விகடன் இப்படி படித்தது தான் ஞாபகம். பள்ளி காலத்துல புத்தகங்கள் எனக்கு தாலாட்டும் பாடும் கருவி. .. திறந்தவுடனே தூ(து)க்கம் வந்து விடும். மூணு இல்ல நாலு மாசத்துக்கு முன்னாடி தான் புத்தகம் படிக்கும் ஆர்வம் வந்துச்சு. என் அக்கா நிறைய படிப்பாங்க. அவங்க ஒரு புத்தகத்த கையில கொடுத்து இத படின்னு சொன்னாங்க. அதுக்கு அப்பரம் தான் ஓரளவு படிக்கும் பழக்கம் வந்துடுச்சு.

one book that changed your life:

ஆமா....அந்த அளவுக்கு இன்னும் ஒன்னும் பெரிசா படிக்கவில்லை. ஒரே ஒரு சின்ன மாற்றம், நல்ல பழக்கம் வந்துச்சு. நான் சொன்ன மாதிரி இந்த வாசிக்கும் பழக்கத்தை உண்டாக்கியது என் வாழ்க்கையில்- one night at the call centre.

The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.

one book you would want on dessert island:
"நான் வித்யா" புத்தகத்தை படிக்கவேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. நம்ம வலைப்பூ தோழி living smile வித்யா எழுதிய புத்தகம்.

one book that made me laugh:
five point someone- இப்புத்தகத்தில் வரும் பல காலேஜ் சம்பவங்கள் அப்படியே என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

one book that made me cry:

children of war- ஈராக்கில் உள்ள குழந்தைகள் போரை பற்றி தங்களது ஆதங்கத்தை கொட்டுகிறார்கள். அவர்களின் சிறு பேட்டிகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். படிக்க படிக்க கண்ணு கலங்கிடுச்சு. கொடுமையான வாழ்க்கை அவர்களது! ஐயோ நினைச்சு பார்க்கவே முடியல...:(

one book you wish you had written:
சர்வதேச அளவில் விருது பெற்ற எல்லா புத்தகங்களையும் தான்! ஹாஹா...

one book you wish had never been written:

ம்ம்ம்ம்....இது கொஞ்சம் கஷ்டமான கேள்வி தான்! ம்ம்ம்...அப்படி எதுவும் எனக்கு தெரியல்ல...

books that you are currently reading:

jasvinder sanghera எழுதிய 'shame' மற்றும் சுஜாதா எழுதிய சிறு சிறு கதைகள்

books that you have meaning to read:

self-made man(இது உண்மை கதை. ஒருத்தி ஒரு வருடம் ஆணாக இருந்து பிறகு மறுபடியும் பெண்ணாக மாறுகிறாள்.)
மற்றும்
six suspects

அடுத்ததாக அண்ணன் பிரேம்குமாரை அழைக்கிறேன்.

15 comments:

விழியன் said...

நல்ல நல்ல புத்தகமா படிச்சி இருக்கீங்க :)

கடைக்குட்டி said...

இதுக்கு நீங்க வெறும் பாஸ் மட்டும் சொல்லி இருக்கலாம் :-)

இராம்/Raam said...

"நான் வித்யா" புக் லைப்ரரி'லே இருக்குமே??? Bedak library'லே borrow பண்ணலாம்.... :)

FunScribbler said...

@கடைக்குட்டி

//இதுக்கு நீங்க வெறும் பாஸ் மட்டும் சொல்லி இருக்கலாம் :-)//

இப்படி ஒரு வாக்கியத்துல என்னைய சிரிக்க வச்சுட்டீங்களே! ஹாஹா...:)

FunScribbler said...

@ராம்

//Bedak library'லே borrow பண்ணலாம்.... :)//

அப்படியா? நன்றி நன்றி தகவலுக்கு. பிடோக் கொஞ்சம் தூரமா இருக்கு... அதான் யோசிக்கிறேன்...ம்ம்..

இராம்/Raam said...

//அப்படியா? நன்றி நன்றி தகவலுக்கு. பிடோக் கொஞ்சம் தூரமா இருக்கு... அதான் யோசிக்கிறேன்...ம்ம்..//

என்ன ஒரு 200 மைல் தூரம் இருக்குமா??? :)

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

sri said...

Hey Thanks for writing :)

shame and self made man - both seems to be intersting , chatla ketukaren :)

மேவி... said...

neenga periya aalu pol irukku....
niraiya padipingala?

shakthi said...

//The book you have read more than once:

ஆஹா...ஒரு தடவ படிக்கவே ரொம்ப கஷ்டம். இதுல மோர் தென் ஒன்ஸா?சத்தியம் அப்படி எதுவும் இல்ல.
//

Correct I understood while i was reading your stories.......

FunScribbler said...

@sakthipriyan

//Correct I understood while i was reading your stories.......//

இதுல உள்குத்து இருக்கா? haahaa..but anyway ur comment brought a smile on my face..ஹிஹி..:)

Prabhu said...

புத்தகம் படிக்காதவங்க மாதிரி ஆரம்பிச்சிங்க, ஆனா நிறைய படிச்சிருக்கீங்க.

அதென்ன எதுக்கெடுத்தாலும் ஹி..ஹி... னு ஸ்ரீஇக்கிறீங்க. I like this attitude.

ச.பிரேம்குமார் said...

பெரும் சிக்கலில் மாட்டி விட்டுடீயே தங்கச்சி. இருந்தாலும் நன்றி ஹாய். விரைவில் எழுதுகிறேன்

shakthi said...

//இதுல உள்குத்து இருக்கா? haahaa..but anyway ur comment brought a smile on my face..ஹிஹி..:)//


Cha cha appadi ellam illa.. Just for fun........

Karthik said...

நீங்களும் கெட்டுப் போய்ட்டீங்களா?? உஸ்! சிங்கப்பூர்ல ஒரே ஒரு நல்லவங்க இருந்தாங்க.. அதுவும் போச்சு! ;)

நெஜமா சொல்லனும்னா, சூப்பர்ப் பதிவு. அண்ணனை மாட்டிவிட்டீங்களா? ரொம்ப சந்தோஷம். கொஞ்சம் பயம். :)