Jun 17, 2009

daddy mummy வீட்டில் இல்ல (series 2) - பகுதி 2

பகுதி 1

சசி பட போஸ்ட்டர்களை பார்த்து கொண்டிருந்தாள். விஜி,சுதா, கலா வருவதை பார்க்கவில்லை. ஆனால் இவர்கள் சசியை பார்த்துவிட்டார்கள். மெதுவாக பூனைபோல் சென்று, பயம் காட்டுவதற்காக சசியின் தோள்பட்டையை குலுக்கினர் பின்னாடியிலிருந்து. சசி சற்று பயந்துவிட்டாள்.

கலா சிரித்தவாறு, "யாரோ சொன்னாங்க....இந்த மாதிரி படத்துகெல்லாம் வரமாட்டாங்கன்னு!"

சுதா, "நீ வேற, சசி நேத்திக்கே இங்க வந்திருப்பா. அவ பைய check பண்ணு, toothpaste, brush எல்லாம் வச்சுயிருப்பா...ஹிஹிஹி..."

அவர்கள் கிண்டல் செய்வதை சசியும் ரசித்து சிரித்தாள்.

"ஒகே கேர்ள்ஸ்....சீக்கிரம் டிக்கெட் வாங்குவோம்....படம் ஆரம்பிச்சுட போகுது." விஜி அவசரப்படுத்தினாள். நால்வரும் டிக்கெட்டுகளை வாங்கினர். பாப்கார்ன், கோக், சிப்ஸ் போன்ற நொறுக்கு தீனிகளையும் சேர்த்துவாங்கி கொண்டனர்.
வாரநாட்கள் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. பெயர் போட ஆரம்பித்தனர். ஃபிரெஞ்சு படம் என்பதால் ஆங்கிலம் subtitleலுடன் படம் ஆரம்பித்தது.

2 மணி நேரம் படம் முடிந்தபிறகு, வெளியே வந்த நால்வரும் பக்கத்தில் இருந்த KFC கடைக்குள் சென்றனர். பையை மேசையில் வைத்த கலா, "ஐயோ படம் சுத்த போர். waste movie man! இதுக்கு போய் என்னாத்துக்கு m18 rating எல்லாம்?"
விஜியும் ஆம் என்பதுபோல் தலையாட்டினாள்.

"ஆமா கலா, ரொம்ப disappointing, கதையும் இல்ல ஒரு மண்ணும் இல்ல." சுதா தனது கருத்தை தெரிவித்தாள்.

கலா,"இதுக்கு நம்ம ஏதாச்சு தமிழ் படத்துக்கு போய் இருந்தாகூட நல்ல R21 காட்சிகள பாத்து இருக்கலாம்..." விழுந்து விழுந்து சிரித்தாள்.

சசிக்குள் தூங்கி கொண்டிருந்த தமிழச்சி, "ஏய், உனக்கு தமிழ் படம்ன்னா அவ்வளவு கேவலமா போச்சா?" அடுப்பில் வைத்த பால் போல் பொங்கி எழுந்தாள் சசி.

விஜி தனது கைபையிலிருந்து பணத்தை எடுத்து கொண்டு உணவு வாங்க சென்றுவிட்டாள்.

கலா, "ஏய் தோடா இங்க பாரு, பாரதிராஜா பெரியம்மா பொண்ணுக்கு வர கோபத்த...." என்று சசியை இன்னும் சீண்டினாள்.

சசி தொடர்ந்தாள், "நம்மளே நம்ம படத்த பத்தி இப்படி சொன்னா.....it's very bad man. தமிழ் படங்கள சில நல்ல படமும் இருக்கு."

கலா தன் கைபேசியை மேசையில் உருட்டியபடி, "ம்ம்ம்....சுஜாதா சொன்னது சரி தான்!"

இவர்கள் போடும் வாக்குவாதத்தை அமைதியாக கேட்டு கொண்டிருந்த சுதா, "சுஜாதாவா? யாரு அது? என்னா சொன்னாங்க?

"writer sujatha, yea! ஆயுத எழுத்து படத்துல சொன்னாரு.....உன்னைய மாதிரி பொண்ணுங்க இருக்குறதுனால தான் மோசமான தமிழ் படம்கூட நல்லா ஓடுது" என்று கலா சொல்லி கொண்டே சசியை முறைத்து பார்த்தாள்.

சுதா சத்தம் போட்டு சிரித்தாள்.

"உண்மைய தான் சொல்றேன், தமிழ் படத்துல காட்டுற டபுல் மீனிங் விஷயங்க மாதிரி வேற எங்கயும் பாக்க முடியாது...யப்பா....right from scenes to song lyrics...ஐயோ...." கலா தன் வெறுப்பை காட்டினாள்.

கலா ஆள்காட்டி விரலை நீட்டி, "you know what sutha, காமசூத்ராவ எழுதியதே நம்ம தான்..."

கலா இப்படி பேசுவதை கேட்ட விஜி வாயை பிளந்தாள். அவளுக்கு அதிர்ச்சி!
உணவை வாங்கிகொண்டு வந்த விஜி அதற்குள், "நம்ம எப்ப டி அத எழுதுனோம்?"

கலா, "hey loosu. நம்மன்னா நம்ம இல்ல. பொதுவா சொன்னேன். i mean indians. an indian wrote kamasutra. but look at what indian cinema has done.... they have all vulgarised the whole concept of sex."

இதற்கு மேல் பொறுமை இல்லாத விஜி, "kala, just shut up." என்று காதுகளை மூடி கொண்டாள்.

கலா, "இங்க பாருங்க. this is exactly what i meant. இப்படி பேசுறது தப்புன்னு நிறைய பேருக்கு தோணும். அதுக்கு காரணம் இந்த மாதிரி தமிழ் சினிமா.....எல்லாரையும் கெடுத்து வச்சுயிருக்கு. படத்துல சூர்யா சட்டைய கழட்டிபோட்டு வந்தாலோ, இல்ல நமீதா வந்தாலோ பட்டிக்காட்டான் பஞ்சுமுட்டாய பாக்குற மாதிரி பாப்பாங்க விஜி மாதிரி ஆளுங்க....ஆனா என்னைய மாதிரி ஆளுங்க உண்மைய சொன்னா காத பொத்திப்பாங்க....என்ன உலகம்டா இது!"

சசிக்கு கோபம் தலைக்கு ஏற, "ஓய் என்னைய எதுக்கு டி இழுக்குற...நான் என்ன பண்ணேன்?"

சுதா, "ஐயோ ராமா....நிறுத்துங்க. ஏன் கலா, சசிய இப்படி கிண்டல் பண்ணுற?"

கலா, "விரிச்சு போடாத பாயும், சசியை கிண்டல் பண்ணாத வாயும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல!"

"ஹாஹா, தலிவா கலக்குற!" சுதா கலாவின் கையை குலுக்கினாள்.

விஜியும் சிரித்து கொண்டே, "அடியே அழகுகளா, ஸ்டாப் தி சண்டை! சாப்பாடுங்கப்பா, ஆறிபோச்சு..." என்று விஜி சொல்ல, ஒரு burger பொட்டலத்தை கலாவிடம் கொடுத்தாள். அந்நேரம் சசியின் கைபேசி மணி ஒலித்தது. கைபேசியில் காட்டிய நம்பரை பார்த்தாள். புதிய நம்பர் அது.

"ஹாலோ சசி speaking." என்றாள்.

"ஹாலோ சசி, நான் தான் சித்தார்த் பேசுறேன்."

சற்றும் எதிர்பார்க்கவே இல்லை சசி. அதிர்ச்சியில் வாயில் இருந்த burgerயை துப்ப, அந்த சிறுதுண்டு burger கலாவின் முகத்தில் விழுந்தது. கலா துடைத்தவாறு, "லூசா நீ!"

"சித்தார்த்????" என்றாள் சசி புருவங்களை உயர்த்தி.

"சித்தார்த்?????" என்றனர் மற்ற மூவரும் கோரஸாக.

(பகுதி 3)

6 comments:

கலையரசன் said...

நல்லா சொல்லுறீங்க.. கதை!
அடுத்த பாகம் எபபோங்கண்ணா?

ஓட்டும் போட்டாச்சு!!

Divyapriya said...

// "விரிச்சு போடாத பாயும், சசியை கிண்டல் பண்ணாத வாயும் நல்லா இருந்ததா சரித்தரமே இல்ல!"//

ஹா ஹா :D

கதை நல்லா போகுது...காயத்ரி எழுத்து நடையும் எங்கயோ போகுது....சூப்பர்ப்...

ivingobi said...

Good Gaayu....

Prabhu said...

சித்தார்த்?! நல்ல எண்டிங்.... பட், அந்த போன் பில்லே அவன்ட்ட கடல போட்டு வந்ததுன்னு நினைச்சுட்டேன். சித்தார்த் ஓவரா துரத்துரானே! இந்த மாதிரி துரத்தினா, அவன் பொண்ணுக த்ரத்தி விட்டுற மாட்டாங்க?

"உழவன்" "Uzhavan" said...

காமடில கபடி ஆடிக் கலக்குறீங்க. வாழ்த்துக்கள்!

Karthik said...

nice. :))