பகுதி 1
பகுதி 2
"எப்படி இருக்கே சசி? exams எல்லாம் நல்லா செஞ்சியிருக்கீயா?" என்றான் சித்தார்த். சசி பதிலே பேசவில்லை. என்ன பேசுவது என்று தெரியவில்லை.
"சசி, are you there?"
சசியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முப்பெரும் தேவிகள் 'பேசு' என்பதுபோல் சசியிடம் சைகை காட்டினர்.
"ah..yes...yes...how are you?" வார்த்தைகள் மெதுஓட்டம் ஓடின.
"என்ன busyயா? கொஞ்சம் disturbed ah இருக்குற மாதிரி பேசுற? are you alright?" என்றான் சித்தார்த்.
"yes yes alright." இப்போது வார்த்தைகள் marathon ஓடின.
"சும்மா தான் ஃபோன் பண்ணேன்...அப்பரம்...லீவுல என்ன plans?"
பக்கத்திலிருந்து சசியின் தோழிகள், சித்தார்த் என்ன சொல்கிறான் என்பதை கேட்க சசியின் கைபேசி அருகே தங்களது காதுகளை வைத்தனர். இருந்தாலும் ஒன்றும் கேட்கவில்லை அவர்களுக்கு.
"nothing...." சசிக்கு வேர்த்து கொட்ட ஆரம்பித்தது. பேச்சை உடனடியாக முடித்துகொள்ளவேண்டும் என்பதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
"no plans ah? அப்போ...free தான் சொல்லுங்க?"
"yes!" யோசிக்காமல் பதிலை செப்பினாள்.
"so நம்ம ரெண்டு பேரும் வெளியே போலாமா?"
நேற்று சாப்பிட்ட சிக்கன் பிரியாணி வாந்தியாய் வெளியே வருவதுபோல் இருந்தது சசிக்கு. கொஞ்சம் மயக்கமும் வந்தது.
"நான் வெளியே ஃபிரண்ட்ஸ்கூட இருக்கேன்...." என்று சொல்லி பேச்சை முடிக்க முற்பட்டாள்.
சித்தார்த், "ஐயோ சாரி சாரி...முன்னாடியே சொல்லியிருக்கலாமே! சாரி....you enjoy. நான் அப்பரம் ஃபோன் பண்ணுறேன்....take care sasi." என்று கூறி முடித்தான்.
கைபேசியை கீழே வைத்த சசி மேசையில் இருந்த தண்ணீரை எடுத்து மளமளவென்று குடித்தாள்.
சுதா, "என்ன சொன்னான்?"
விஜி, "எதுக்கு ஃபோன் பண்ணான்?"
கலா, "ஏன் திடீரென்னு இன்னிக்கு ஃபோன் பண்ணான்?"
கேள்வி மேல் கேள்விகளை கேட்டுனர். சசிக்கு தலை சுற்றியது. ஒரு பாட்டில் தண்ணீரை முடித்தவள், வாயை துடைத்துகொண்டு,
"வெளியே போலாமான்னு கேட்டான்?"
மூவரும், "என்னாது???"
விஜி, "எங்க?"
கலா, "அவங்க குடும்பமும் இவ குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு மாவிளக்கு போடறதுக்கு கூப்பிட்டு இருப்பான்.....யாரடி இவ..... ஏய் விஜி, இது கண்டிப்பா அது தான்."
விஜி, "confirmஆ அது தானா?"
கலா, "confirm."
சசிக்கு ஒன்றுமே புரியவில்லை. "என்னய்யா சொல்றீங்க. அவன் outing கூப்பிட்டதுக்கு ஏன் இப்படி என்னைய போட்டு குழப்புறீங்க?"
கலா, "ஏய் ஏய் ஏய்....இந்த டக்கால்ட்டி வேலையெல்லாம் வேணாம் கண்ணு. எல்லாரும் காதுல பூ சுத்துவாங்க...நீ பெரிய ipodட்டே சுத்துற!! கூட்டமா போனா தான் அதுக்கு பெயரு outing. ரெண்டு பேரு மட்டும் போனா அதுக்கு பெயரு dating. dating.dating. dating." என்று dating என்ற வார்த்தையை மூன்று தடவை எதிரோலி போல் சொன்னாள்.
சிரிக்க ஆரம்பித்தனர் சுதாவும் விஜியும். சசி கலாவை பார்த்து முறைத்தாள். தன்னை இதிலிருந்து காப்பாற்றுமாறு தோழிகளிடம் கெஞ்சி கொண்டிருந்தாள். அப்போது சித்தார்த்திடமிருந்து ஒரு குறுந்தகவல்,
சசி, இந்த சனிக்கிழமை போவோமா? evening 5. இடம், உன்னுடைய சாய்ஸ்?:)
இக்குறுந்தகவலை படித்த கலா, "இங்க பாருடி சாய்ஸ் கொடுக்குறாரு? இது பெரிய question paper பாரு? ஹாஹா...."
விஜி, " சும்மா போயிட்டு வா. இதுக்கு என்ன பயம்?"
சசி, "வீட்டுல தெரிஞ்சு கொன்னுடுவாங்க...."
சுதா, "யாருக்கும் தெரியாம போயிட்டு வா...."
கலா, "hey babe, it's very simple. எங்களோட வெளியே வரபோறேன்னு சொல்லிட்டு போயிட்டு வா....enjoy machi...ஆனா ஒன்னு மட்டும் புரியலை...அது எப்படி இந்த மாதிரி நல்ல விஷயங்கெல்லாம் உன்னைய மாதிரி அப்பாவி பொண்ணுங்களுக்கே நடக்குது."
கலா சுதா விஜி ஆகியோர் கைதட்டி சிரித்தனர்.
"அப்ப நான் ஓகே சொல்லிடவா?" அப்பாவியான முகத்துடன் சசி.
"ஓகேன்னு அனுப்பு. எங்க போலாம்னு முடிவு பண்ணி, அதையும் அனுப்பு." சுதா கூறினாள்.
"எங்க போறது?" சசிக்கு ஒரு சரியான இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டது.
"i have got an idea. இந்த சினிமா, பீச் எல்லாம் சுத்த போர்! நீங்க ரெண்டு பேரும் billiards விளையாட போங்க. அதுக்கு அப்பரம் டினர் போங்க." கலா தனது கருத்தை முன்வைத்தாள்.
"எனக்கு billiards விளையாட தெரியாதே...." சசி பதில் அளித்தாள்.
"சித்தார்த் கத்து தருவான் டி." என்று விஜி கூற, சுதாவும் கலாவும் சிரித்தனர்.
"அவனுக்கும் தெரியலைன்னா?" சசி கேள்வி கேட்டாள்.
"ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி இவ....கண்டிப்பா சித்தார்த்துக்கு தெரிஞ்சு இருக்கும்.... நீ மெசேஜ் போட்டு கேட்டு பாரு. " என்றாள் கலா.
சசி உடனே குறுந்தகவல் அனுப்பினாள் சித்தார்த்திற்கு,
ஹாய் சித்தார்த். சனிக்கிழமை how about playing billiards and dinner?
அதற்கு உடனே பதில் வந்தது,
வாவ், நைஸ் சாய்ஸ்! ஐ லவ் billiards. gr8...see you then. can't wait for saturday.
சுதா, "பையன் ரொம்ப தான் குஷியா இருக்கான்?"
சாப்பிட்டு முடித்தார்கள் நால்வரும். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர்.
விஜி, "ok now let's prepare for sasi's dating....we will do a makeover for her."
சசி, "மேக் ஓவரா?"
கலா, "அதுக்கு ஏண்டி hangover ஆக போற மாதிரி கத்துற....."
முதலில் சசியின் கண்ணாடியை மாற்றுவதற்காக ஒரு கண்ணாடி கடையினுள் நுழைந்தனர்....
(பகுதி 4)
11 comments:
superb ... :) waiting for next part
Haiyo aandaavaaa... Enga hero sidharth a kaapaathu.....
//superb ... :) waiting for next part
:))))
i forget to say repeat..
@கஜினி, கோபி, கார்த்திக்
நன்றி நன்றி:)
முதல் பார்ட் மாதிரியே நல்லா போகுது. ம்ம்ம்ம்.... சீக்கிரம் அடுத்த எபிசோட்...
chanceless...superb, thoroughly enjoyed reading this part...
laughed out loud for this one :D
//ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி இவ//
keep rocking!
your story is good.. keep it up...
now mukku problemnaala now only reading :) I love the way u tell the story . endha below para romba nalla erukkuma
//அவங்க குடும்பமும் இவ குடும்பமும் குலதெய்வ கோயிலுக்கு மாவிளக்கு போடறதுக்கு கூப்பிட்டு இருப்பான்.....யாரடி இவ..... ஏய் விஜி, இது கண்டிப்பா அது தான்
"ரெண்டு பேரும் குச்சிய வச்சு, உப்பு கருவாடு ஊறவச்ச சோறுன்னு டான்ஸ் ஆடுங்க...யாரடி //
//
இவ....கண்டிப்பா சித்தார்த்துக்கு தெரிஞ்சு இருக்கும்.... நீ மெசேஜ் போட்டு கேட்டு பாரு. " என்றாள் கலா.
//
Nalla sirichen!
பாவங்க சசி உங்க கிட்ட மாட்டிகிட்டு படுற பாடு இருக்கே! கலாய்ச்சு தள்ளறீங்க.
ஆபீஸ்ல வெட்டியா தானே இருக்கோம்..கதை படிப்போம்னு ஆரமிச்சேன். படிச்சு சிரிச்சிட்டு இருக்கிற என்னை எல்லாரும் பையனுக்கு ஏதோ மறை கழண்டு போச்சு போலனு பரிதாபமா லுக் விட்டு போறாங்க.இந்த பாவம் எல்லாம் உங்களை தாங்க சேரும்.
//கூட்டமா போனா தான் அதுக்கு பெயரு outing. ரெண்டு பேரு மட்டும் போனா அதுக்கு பெயரு dating.//
அட இந்த தத்துவம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி தெரியாம போயிடிச்சே! இது தெரியாம எவ்ளோ confusion வாழ்க்கைல
Post a Comment