Sep 27, 2009

அன்பே, உன்னால் மனம் crazy-3

தனுஜாவை வெளியே கூட்டிகொண்டு போக விஷ்ணுவிற்கு ஆசை இருந்தாலும், உள்ளூர ஒரு பயம். ஃபோனில் மட்டுமே பேசி இருக்கிறார்கள். அவ்வபோது பண்டிகை நாட்களில் வாழ்த்து குறுந்தகவல்கள். முதன் முறை சந்திக்க போகும் தருணத்தை எண்ணி விஷ்ணுவிற்கு மகிழ்ச்சி. இருந்தாலும், அவள் அதை எப்படி எடுத்து கொள்வாள் என்று தெரியவில்லை. தனக்கு வேலை கிடைத்துவிட்டது என்னும் தகவலை அவளிடம் நேரில் சொல்ல வேண்டும் என்ற ஆசை.

குறுந்தகவல் அனுப்பினான். குறுந்தகவல் என்னும் ஒன்றை கண்டுபிடித்தவனுக்கு சிலை வைப்பான் விஷ்ணு. அது மட்டும் உறுதி!

விஷ்ணு: ஹாய் தனுஜா, என்ன பண்ற?

தனுஜா: எருமைமாட்டுலேந்து பால் எடுத்துகிட்டு இருக்கேன். பின்ன என்ன மேன்.... project work விஷயமா தலைய பிச்சுகிட்டு இருக்கேன். என்ன இந்த நேரத்துல மெசேஜ்? anything important....

விஷ்ணு:ஹாஹா....ஒன்னுமில்ல சும்மா தான்.வெளியே போகலாமா?

குறுந்தகவலை பார்த்தவுடனே ஃபோன் செய்தாள் தனுஜா.

தனுஜா, "ஹாலோ விஷ்ணு, என்ன சாருக்கு திடீரென்னு என்னைய பாக்கனும்னு தோணுது?" சிரித்தாள்.

விஷ்ணு, "ரொம்ப நாள் பேசிகிட்டு இருக்கோம்.... நேரடியா பாத்துகிட்டா நல்லா இருக்குமேனு தான்..." இழுத்தான்.

"என்ன நல்லா இருக்குமேன்னு...." அவன் இழுத்ததுபோல் இவளும் பாவனை செய்து விஷ்ணுவை கிண்டல் செய்தாள்.

"சரி உனக்கு பிடிக்கலைன்னா, விட்டுடு!" சற்று கோபம் வந்தது விஷ்ணுவிற்கு.

"ஓய் ஓய்....எதுக்கு உனக்கு இப்படி கோபம் வருது. சரி போவோம். எங்க? எப்போ?" என்றாள் தனுஜா.

அவள் ஓகே சொன்னதுமே இளையராஜாவின் RR சவுண்டுகள் அவன் மனதில் அலைபாய்ந்தன.

"how about movie? நாளைக்கு?" கேட்டான் விஷ்ணு.

"முதன் முதலா பாத்துக்கு போறோம்....யாராச்சு படத்துக்கு போவாங்களா? நாளைக்கு i am not free." தனுஜா சொன்னாள்.

"நான் தான் உன்னைய முன்னாடியே பாத்து இருக்கேனே?" அன்று பார்த்ததை தனுஜாவிற்கு ஏற்கனவே சொல்லியிருந்தான்.

"நீ பாத்து இருக்க....நான் உன்னைய பார்த்ததுகிடையாதே? சரி சரி....வரேன்... அங்க யாரு கேன பய மாதிரி இருக்காங்களோ....அது நீயா தான் இருப்பே.... அடுத்த வாரம் திங்கட்கிழம போலாம்" சிரித்தாள் தனுஜா.

"ஐயாவோட smartness நீ பாத்து அசந்துபோயிட போற... அடுத்த வாரமா? இந்த வாரம் வெள்ளிக்கிழம??" என்றான்.

"ஆமா ஆமா....ambulanceலாம் standbyல இருக்க சொல்லிடுறேன்....அழகுல பாத்து மயங்கி விழுந்துட்டேனா? எனக்கு இந்த வாரம் நிறைய வேலை இருக்கு."

"ஷ்ஷ்... சனிக்கிழம?...." என்றான் விஷ்ணு.

"ஃபிரண்ட் அக்காவோட கல்யாணம்?" என்றாள் தனுஜா.

"என்ன எப்ப பாத்தாலும் அது இருக்கு இது இருக்குனு சொல்ற. எங்க ஏரியா எம் பிய பாக்ககூட சீக்கிரம் appointment வாங்கிடலாம் போல...." என்றான்.

"நாங்கலாம் அடுத்த 6 மாசத்துக்கு ஒரே பிஸி. ஏதோ சின்ன பையன் கேட்குறானேன்னு வரேன்....வேட் பண்ண முடியலன்னா.... no problem! i am fine with it." சற்று பிகு பண்ணினாள். ஆனால், அது அவனுக்கு பிடித்து இருந்தது.

"alrite alrite, அடுத்த வாரமே பாப்போம்." என்றவன் நேரம், இடம் போன்ற தகவல்களை கொடுத்தான் அவளிடம்.

அந்த நாளும் வந்தது. குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் காத்துகொண்டிருந்தான் விஷ்ணு. சின்ன பயம், ஒருவித சந்தோஷம்.
தனுஜாவை கண்டுகொண்டான், கையாட்டினான். அவனை நோக்கி அவள் நடந்து வந்தாள்.

இருவரும் புன்னகைகளை பரிமாறிகொண்டனர்.

"ஹாய்." இருவரும் சொன்ன முதல் வார்த்தை. ஃபோனில் அரட்டையும், கிண்டலுமாக இருந்தாலும், நேரில் சந்தித்த போது இருவரும் சற்று அமைதியாக இருந்தனர்.

"என்ன தனுஜா ஃபோன்ல செமயா கிண்டல் அடிப்ப..இப்ப அமைதியா இருக்க?"

"நீ மட்டும் என்னவா.....?" என்று தனுஜா ஆரம்பிக்க, இருவரும் சகஜமாக பேசினர், சிரித்தனர், ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்து கொண்டனர்.

படம் பார்த்துமுடித்து வெளியே வந்தனர் இருவரும்.

"சாப்பிட போலாமா?" கேட்டான் விஷ்ணு. தனது கைபேசியை ஏதேனும் மெசேஜ் வந்து இருக்கா என்பதை பார்த்தவாறு பதில் அளித்தாள்,

"ம்ம்ம்...போகலாமே?"

"உனக்கு என்ன பிடிக்கும்?" என்று கேட்டான் விஷ்ணு.

"எனக்கு ஓசாமா பல்லு விலக்குற ஸ்டைல் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்" என்று நக்கல் அடிக்க, கைகளை அகல விரித்து சிரிக்க ஆரம்பித்தவன் நிறத்தவில்லை.

"ஓய்..control your laughter dude! this is a public place." என்றாள் தனுஜா.

"உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரி மொக்கை ஜோக் எல்லாம் அடிக்க வருது... நான் கேட்டது சாப்பாட்டுல என்ன பிடிக்கும்னு?"

"மொட்டையா கேட்டா வேற என்னத்த சொல்றது? சாப்பாடுன்னு நீ சொல்லவே இல்லையே..." என்று பேசி கொண்டே இருவரும் ஒரு உணவகத்திற்குள் நுழைந்தனர்.

சாப்பாடு வருவதற்காக காத்து கொண்டிருக்கும் வேளையில்,

"எனக்கு வேலை கிடைச்சுடுச்சு....உன்கிட்ட சொல்ல தான் இந்த அவுட்டிங்!" என்றான்.

தனுஜா கண்களில் தெரிந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சந்தோஷம் போங்க,

"என்ன இப்ப தான் சொல்ற? congrats man...." என்று அவள் கைகளை நீட்டினாள். அவனும் நீட்டினான். அந்த ஸ்பரிசம் ஒரு கணம் அவனுக்குள் விளக்கமுடியாத மாற்றங்களை கொண்டு வந்தது. அவளையே கண்கொட்டாமல் பார்த்தான்.

"ஹாலோ, ஆர் யூ ஒகே?" அவன் கண் முன் கையாட்டினாள்.

"இல்ல....shake hands பண்ணபோது அருவி தண்ணி பின்னாடி ரிவர்ஸ்ல போய் freeze ஆனுச்சு, காத்து ஒரு நிமிஷம் நின்னு போச்சு. வானத்துல மேகங்களுக்கு ரெட் சிக்னல் விழுந்துச்சு. இந்த மாதிரி ஒரு ஃவீல் வந்துச்சு.....உனக்கு ஒன்னும் ஃவீல் ஆகலையா? என்றான் விஷ்ணு.

சிரித்தபடியே தனுஜா, " ஏன் ஆகல? ரோட்ல மாடு நின்னு மாதிரி. குப்பையில பன்னிக்குட்டிங்க தேடுறத்த நிறுத்துன்னு மாதிரி.....சாக்கடையில எலிங்க ஓடுறது நின்ன மாதிரி இருந்துச்சே....."

மறுபடியும் சத்தம்போட்டு சிரித்தான்.

"நீ ரொம்ப தமிழ் படம் பாத்து கேட்டு போய் இருக்க?" புன்னகையித்தாள் தனுஜா.

அவளது கண்களையும் உதடுகளையும் பார்த்தவண்ணம் இருந்தான். அதை கண்டு கொண்ட தனுஜா மேசையின் மேல் இருந்த அவனது கைகளை செல்லமாய் அடித்து, " hey pervert, stop staring at me."

அவன் புன்முறுவலித்தான்.

"எங்க வேலை? எந்த கம்பெனி?"

"மும்பைல.... " என்றவுடன் அவள் முகத்தில் சோகரேகைகள் பரவுவதை பார்த்தான் விஷ்ணு.

"எப்ப போற?" என்றாள்.

"அடுத்த வாரத்துல...."

"எப்ப வருவ...?"

"திருப்பி எதுக்கு வரனும்? அங்கயே இருந்திட வேண்டியது தான்...." என்றான். தனுஜாவிற்கு கோபம் கலந்த அழுகை வர,

"அப்பரம்....எந்த இதுக்குடா என்னைய...." வாக்கியத்தை முடிக்கவில்லை. வேறு பக்கம் திருப்பிகொண்டாள் முகத்தை.

"உன்னைய....என்ன?" வேண்டுமே என்றே வெறுப்பேற்றினான்.

"ஒன்னுமில்ல." என்றாள்.

"சரி சரி....சும்மா தான் சொன்னேன். லீவு கிடைக்கும்போது திருப்பி இங்க வந்துடுவேன்." என்றான்.

"ம்ம்ம்....." அமைதிகாத்தாள் தனுஜா.

பின்னர், பலமுறை வெளியே சென்றனர். இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து இருந்தாலும், அதை சொல்லி கொள்ள தைரியம் இல்லை. தைரியம் இல்லை என்பதும் இருவருக்கும் தெரியும்.

பம்பாயில் விஷ்ணு பிஸியாக இருந்தான். தனுஜாவிற்கும் வேலை பளு அதிகரித்தது. இருவரும் பேசி கொள்ளும் வாய்ப்புகள் குறைந்தன. தனுஜாவின் பிறந்தநாள் அன்று அவளது ஆபிஸில்....

"ஏய் பேப், உனக்கு யாரோ lobbyல வேட் பண்ணுறாங்க" receptionist சொல்ல தனுஜாவும் வந்தாள். அங்கே விஷ்ணு. அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. பல நாட்கள் பேசவில்லை என்ற குற்ற உணர்வு அவளது கண்களில்.

"விஷ்ணு, what a surprise dude! how have you been?"

"i am good. how are you? happy birthday thanuja"

"தேங் யூ. தேங்ஸ் தேங்ஸ்.....நீ எப்ப மும்பைலேந்து வந்த? ஏன் ஃபோன் பண்ணல?" என்று கேள்விகளை அடுக்கி கொண்டே சென்றாள்.

எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை விஷ்ணு. அவன் சொன்னது,

"ஐ லவ் யூ தனு. will you marry me?"

என்றாவது ஒரு நாள் சொல்வான் என்று காத்து கொண்டிருந்த தனுஜாவிற்கு அவன் சொன்னது அளவில்லாத சந்தோஷத்தை தந்தது.

***

" ரிப்போர்ட்ட முடிச்சுட்டீயா?" curtain துணிகளை மாற்றியவாறு விஷ்ணு.

"doing it.... do you need help to change the curtains?"

"i'll manage it dear." என்றான். அறைகளுக்கு சென்று ஃபோட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்தான். அச்சமயம் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்து கொள்வதற்காக தனுஜா டிவி பார்த்தாள்.

oprah winfrey நிகழ்ச்சியை பார்த்தாள். குழந்தைநல மருத்துவர் ஒருவர் பேசியதை கேட்டு தனுஜாவின் நினைவு அலைகள் பின்னோக்கி சென்றன....

***
"ஐ எம் சாரி mrs vishnu...but உங்களுக்கு miscarriage ஆச்சு." மருத்துவர் கூறினார்.

(பகுதி 4)

Sep 26, 2009

அன்பே, உன்னால் மனம் crazy- 2

பகுதி 1 

தனுஜா பொழிந்து தள்ளினாள் தனது கோபங்களை. மறுமுனையில்,

"ஹாலோ ஹாலோ, யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்? எனக்கு ஒன்னுமே புரியல...."

தனுஜா, "தப்பு செஞ்சிட்டு, தப்பிக்க பாக்குறீங்களா? உங்ககிட்ட அளவு ஜாக்கெட் கொடுத்து ஒரு மாசம் ஆச்சு. சரியா தைக்க சொன்னா....இப்படி பண்ணி வச்சு இருக்கீங்க?"

"யாரு? சாரி....நீங்க.... ராங்கா ஃபோன் பண்ணிட்டீங்க?"

தனுஜாவுக்கு கோபம் கொந்தளிக்க, "செய்றதயும் செஞ்சுட்டு......" மறுபடியும் 'பூஜை'யை ஆரம்பித்தாள்.

தாங்கமுடியாத விஷ்ணு, "ஸாட்ப்பிட்! நீங்க ஃபோன் பண்ண நம்பர சொல்லுங்க?"

"98*********34" என்றாள்.

சிரித்தபடியே, "எல்லாம் சரி தான்....கடைசில சொன்னீங்களே 34...அது இது இல்ல...என் நம்பர் 43. தப்பா ஃபோன் பண்ணது நீங்க?"

தனுஜா கஞ்சி திண்ண கருப்பான்பூச்சிபோல்(எத்தன நாளைக்கு தான் இஞ்சி திண்ண குரங்குன்னு சொல்றது) ஆனாள்.

"ஐயோ சாரிங்க சாரி.....என் tailor பெயரும் விஷ்ணு தான்.... நான் தான் தப்பா டையல் பண்ணிட்டேன்...சாரி சாரி...." என்றாள் தனுஜா.

"குஷி ஜோதிகா மாதிரி சாரி சொன்னா விட்டுடுவோமா?"

"அப்பரம் என்ன வேணும்?" பவ்யமான குரலில் தனுஜா.

"மானம் நஷ்ட வழக்கு போடுவோம்....சி எம் வரைக்கும் கொண்டு போவோம். பஸ கொளுத்துவோம். காலேஜ் ஸட்ரைக் விடுவோம்....டில்லி வரைக்கும் போகும் இந்த மேட்டர்! ஒரு சின்ன பையன போய்....அதுவும் ஒரு நல்ல சின்ன பையன போய்....." சிரித்தான் விஷ்ணு.

"ஹாலோ மிஸ்ட்டர் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல...."

"anyway, sorry i gtg. sorry."என்று ஃபோனை கட் செய்ய, விஷ்ணு

"சரியான ஜாக்கெட்ட போட்டு போங்க..ஹாஹா..."

தனுஜா ஃபோன் லைன்னை கட் செய்தாள். விஷ்ணு தனது கைபேசியில் அவளது நம்பரை பார்த்து, "ம்ம்ம்...she has a sweet voice." நம்பரை save செய்துவைத்து கொண்டான்.

சில மாதங்கள் கழிந்தன. ஒருநாள் விஷ்ணு தனது தூரத்த சொந்தக்காரரின் மகளின் காதுகுத்து விழாவிற்கு சென்று இருந்தான். செம்ம போர் அடித்ததால் என்ன செய்வது என்று தெரியவில்லை விஷ்ணுவிற்கு. தனது வயதில் உள்ள பையன்கள் யாருமில்லை அரட்டை அடிப்பதற்கும்.

அவனுக்கு தனுஜாவின் ஞாபகம் வந்தது.

குறுந்தகவல் அனுப்பினான் தனுஜாவிற்கு,

விஷ்ணு: ஹேய் ஜாக்கெட் பொண்ணு, எப்படி இருக்க?

சிறிது வினாடிகள் கழித்து, பதில் குறுந்தகவல் வந்தது.

தனுஜா: ஓய், யாரு இது? mind your language.

விஷ்ணு: அட பாவமே அதுக்குள்ள மறுந்துட்டீயா? நான் தான் ராங் நம்பர் விஷ்ணு... ஜாக்கெட்ட சரியா தைக்கலன்னு நம்மூர் நாட்டாமைக்கு புகார் மனு அனுப்ப பாத்தீங்களே, அந்த பாவப்பட்ட ஜன்மம்.

தனுஜா: ஓ ஓ சாரி சாரி. ஹாய். ஆமா, ஏன் திடீரென்னு ஸ் எம் ஸ்?

விஷ்ணு: ஒன்னுமில்ல சும்மா! போர் அடிச்சது..அதான்...கடலை போடலாம்னு!

தனுஜா: வாட்??? கடலை?? ஹாலோ விஷ்ணு, நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்ல.

விஷ்ணு: ஓ பட், நான் அப்படிப்பட்ட பையன்!

தனுஜா: மனசுல பெரிய காமெடியன் நினைப்பா?

விஷ்ணு: ம்ம்ம்....இப்ப என்ன பண்ணிகிட்டு இருக்கீங்க? ஐ மின் இருக்க?

தனுஜா: ஹாஹா...மரியாதையலாம் குறையுது! நான் என்ன பண்ணிகிட்டு இருந்தா உங்களுக்கு...ஐ மின் உனக்கு என்ன? எதுக்கு தேவையில்லாத கேள்வி?

விஷ்ணு: சரி...அப்ப நாட்டுக்கு ரொம்ப தேவையான கேள்விய கேக்குறேன்? உங்களுக்கு தெரியுமா ஜோதிகாவுக்கும் சூர்யாவுக்கும் கல்யாணம் ஆக போகுதுன்னு!! :)

தனுஜா: விஷ்ணு, you are a total crappy fellow i tell u!

விஷ்ணு: but am dead sure that you are very much enjoying it!

தனுஜா: hahaha...whatever dude! நீ படிக்குறீயா? க்ளாஸ்ல கடைசி பெஞ்சா? எப்ப பாத்தலும் பரிட்சைல ஃவேல் பண்ணிடுவீயா?

விஷ்ணு: ஹாஹா...இப்ப உனக்கு மனசுல அலைபாயுதே ஷாலினின்னு நினைப்பா?

தனுஜா: எல்லாம் பொண்ணுங்களும் ஒரு விதத்தில் ஷாலினி மாதிரி அழகு தான். இந்த பசங்கள தான்....மாதவன் மாதிரி ஒருத்தர பாக்குறது ரொம்ம்ம்ம்ம்ப rare! the world is suffering from an imbalance of good guys! tsk tsk...

விஷ்ணு: ஹாஹாஹா....நீங்க சொன்ன ஜோக்க தஞ்சாவூர் பெரிய கோயில தான் எழுதி வைக்கனும்!!

தனுஜா: hoi!! என்ன நக்கலா?

விஷ்ணு: சரி சரி...கூல் கூல்.... நான் வேலை தேடிகிட்டு இருக்கேன்.... நீங்க?

தனுஜா: ஓ..ஐயா வெட்டி ஆபிசரோ? ம்ம்ம்.... நான் ஒரு mncல வேலை பாக்குறேன்.

விஷ்ணு: ஹாலோ அப்படி ஒன்னும் கேவலமா நினைக்காத. வேலை இல்லாம வெட்டியா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா!! அதுக்கலாம் ஒரு தனி கலை இருக்கனும்!

தனுஜா: உனக்கு கொஞ்சம்கூட மானம், ரோஷம் சூடு சொர்ன கிடையாதா?

விஷ்ணு: சாரி பொண்ணுங்ககூட பேசும்போது அதுங்களுக்கு நான் லீவு விட்டுடுவேன்!

இதை பார்த்து விட்டு தனுஜா விழுந்து விழுந்து சிரித்தாள்.

தனுஜா: ஹாஹா.... you are such a funny funny guy! alrite, am busy now. talk to u later.

விஷ்ணு: ஹாலோ, அப்போ என் கதி? என்ன பெரிய பிஸி. இன்னிக்கு சண்டே தானே?

என்ற குறுந்தகவலை அனுப்பவதற்காக முயற்சி செய்தான். ஆனால், நெட்வோர்க் பிரச்சனை என்று கைபேசியில் காட்டியதால், விழா நடக்கும் ஹால்லுக்கு சென்றான். அங்கயும் சரியாகவில்லை. இது சிக்னல் பிரச்சனை என்பதால் ஒரு ரூம்முக்கு சென்றான்.

உள்ளே சரியான கூட்டம். சின்ன குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க அவன் ரூம் கதவு அருகே நின்று கைபேசியை சரி செய்து கொண்டிருந்த வேளையில் இரு பெண்கள் பேசி கொண்டே வெளியே வந்தனர்.

அதில் ஒருத்தி, "ஏய் என்ன மச்சி, கையும் ஃபோன்னுமா இருக்க? யாருகிட்ட இவ்வளவு நேரமா மெசேஜ் அனுப்பிகிட்டு இருந்த?"

இன்னொருத்தி, "அது ஒன்னுமில்ல மச்சி, அன்னிக்கு சொன்னேன்ல ஒரு ராங் நம்பர் விஷ்ணுன்னு அவன் தான். சும்மா ஸ் எம் ஸ் பண்ணிகிட்டு இருந்தான்..."

அவள், "என்னது? ராங் நம்பர் ஃபிரண்ட்ஷிப்பா? என்ன டி.....பையன் ரொம்ப கடல போடுறானா?"

இவள், "அப்படி சொல்ல முடியாது....பட்....ரொம்ப ஜாலி டைப்."

இவர்கள் பேசியதும் விஷ்ணுவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சிகள் புல்லாங்குழல் வாசிப்பதுபோல் இருந்தது. தனுஜாவை அடையாளம் கண்டுகொண்டான். ஆம்ஸ்ட்ராங் நிலவில் மட்டும் கால் அடி வைத்தார் என்றால் விஷ்ணு சந்தோஷத்தால் mars, venus, neptune எல்லாவற்றிலும் கால் அடி வைத்ததுபோல் உணர்ந்தான்.

தனுஜாவை பார்த்தது 3 வினாடி என்றாலும் தன் கேமிரா கண்களால் படம் எடுத்து வைத்து கொண்டான். மனதில் அதை 'develop' செய்ய.

சில பொண்ணுங்களுக்கு அவர்களின் முகபருக்கள்கூட அழகு தான். காலை நேரத்தில் இலைகள் மேல் விழுந்துகிடக்கும் பனித்துளிகள் போல் தனுஜாவின் பொலிவான முகத்தில் கன்னங்களில் ஆங்காங்கே இருந்த பருக்கள்கூட விஷ்ணுவிற்கு அழகாய் தெரிந்தது.

***

"this is for my sweet darling."விஷ்ணு சமையல் அறையிலிருந்து ஒரு கப் ஆரஞ்சு ஜுஸ் கொண்டுவந்தான்.

"எதுக்கு டா இப்போ இது? சொன்ன வேலைய மட்டும் செய்....ஏதாச்சு செஞ்சியா இல்லையா?"

"எல்லாம் on the process of completion..... இந்த ஜுஸ குடிச்சுட்டு தெம்பா ரிப்போர்ட்ட செஞ்சி முடி. alrite. அதுவரைக்கும் உங்களிடமிருந்து விடைபெற்று கொள்வது உன் இம்சை அரசன் விஷ்ணு." சிரித்தபடி மீண்டும் சமையல் வேலைகளை முடிப்பதற்காக சென்றான். திரும்பி வந்தான்.

தனுஜாவின் லெப்டாப்பில் உள்ள 'teri ore' என்னும் இந்திபாடலை ஒலிக்க செய்யவிட்டு, "dedicating this song to you, my sweetheart."என்றபடி தனுஜாவின் கன்னங்களை கிள்ளினான்.
***

"அவள வெளியே கூப்பிடலாமா?" என்றது விஷ்ணுவின் மனசாட்சி.

(பகுதி 3)

Sep 24, 2009

அன்பே, உன்னால் மனம் crazy!- 1

தனுஜா தனது லெப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தாள். காலை மணி 10 ஆனது. "என்ன ஆச்சு...இன்னும் அவன் ஃபோன் பண்ணல...." தனக்குள் முணுமுணுத்து கொண்டாள். microsoft excelலில் டைப் செய்தவற்றை save செய்துவிட்டு ஃபோன் செய்தாள் விஷ்ணுவுக்கு.

அப்போது தான் விஷ்ணு விமானத்தைவிட்டு இறங்கி பெட்டிகளை எடுக்க சென்றான். அவனது கைபேசி அலறியது.

"ஹாய் விஷ்ணு? எங்க இருக்க?"

"ஹாய் தனஜா... என் வருகைக்காக வழி மீது விழி வைத்து காத்துகொண்டிருக்கிறாயா?" என்றான் விஷ்ணு.

தனுஜா சிரித்து கொண்டே, "என்ன ஆச்சு உனக்கு. flightல local சரக்கு ஏதாச்சு குடிச்சியாக்கும்?"

"அடி பாவி!!"

"ஏன் ஃப்ளைட் லேட்?" என்று வினாவினாள் தனுஜா.

"ஒன்னுமில்ல டா, ஏதோ engine problem it seems. bombayலே 2 மணி நேரம் லேட்டா ஆகிட்டான். சரி நான் கொஞ்சம் நேரத்துல வந்துடுவேன்... alrite."

விஷ்ணுவிற்கு வேலை பம்பாயில். ஆக, இரண்டு அல்லது மூன்று மாதத்தில் ஒரு முறை தான் சென்னைக்கு வர முடியும். அப்போதுகூட ஒருசில நாட்களே விடுமுறை கிடைக்கும். ஒரு நாள் லீவு கிடைத்தாலும் பறந்துவந்துவிடுவான் தன் ஆசை மனைவி தனுஜாவை பார்க்க.

பெட்டிகளை மேசையில் வைத்துவிட்டு, சோபாவில் விழுந்தான் அசதியால்.

"how's everything there? how is work going?"அவன் பக்கத்தில் அமர்ந்தபடியே கேட்டாள் தனுஜா.

விஷ்ணு, "ம்ம்...ஏதோ போகுது? அதே வேலை...அதே ஆபிஸ்...அதே traffic jam.." சலித்து கொண்டான். பெட்டியில் இருக்கும் துணிகளை எடுத்து வெளியே வைத்தாள் தனுஜா.

"ஹாஹா....ஏன் இப்படி சலிச்சுக்குற? அங்க தான் நிறைய ஷில்பா ஷெட்டி, ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரான்னு பொண்ணுங்க இருப்பாங்களே...உனக்கு பொழுது நல்லா போகுமே?" தனுஜா விளையாட்டாய் கூறினாள்.

அவனும் சிரித்துகொண்டே, "என்ன தான் சாப்பாத்தி, நாண் இருந்தாலும், என் வீட்டு இட்லிக்கு ஈடாகுமா?" தனுஜாவின் இடுப்பை கிள்ளினான். முறைத்தாள்.
அவனது கையை தள்ளிவிட்டாள் தனுஜா. துவைப்பதற்காக துணிகளை அள்ளிகொண்டு செல்ல முற்பட்டபோது, விஷ்ணு அவளது கைகளை பற்றினான். துணிகள் தரையில் விழ, தனுஜா அவன் மேல் விழுந்தாள் சோபாவில்.

"விஷ்ணு, என்னது...விடு... இன்னிக்கு நிறைய வேலை இருக்குடா எனக்கு." என்றாள் தனுஜா அவனது பிடியில் இருந்து தப்பிக்க முற்பட்டு கொண்டே.

கண்களில் குறும்பு பார்வையுடன் அவன், " all programs cancel!"
பிடிக்கவில்லை என்று அவனது கைகளை விலக்கினாலும், தனுஜாவிற்கு அவன் செய்தது பிடித்து இருந்தது மனத்திற்குள்.

அவள், "ம்ம்ம்...ஏதோ பழமொழி சொல்வாங்களே...காஞ்ச மாடு கம்பைக் கண்டால் பாயுமாம்....அந்த மாதிரில இருக்கு..."

அவன்," காள மாட்டுக்கு பசிக்குது, பசு மாட்டுக்கு பசிக்கலையா?" மயக்கவைக்கும் குரலில்.

"ச்சீ..you shameless flirt."சிரித்துகொண்டே கீழே விழுந்த துணிகளை அள்ளி கொண்டு வாஷிங் மிஷினில் போட்டாள். பின்னாடியே தொடர்ந்து சென்றான் விஷ்ணு. தண்ணீர் குழாயை அழுத்தினாள்; detergent powderயை போட்டாள். பின்னாடியிலிருந்து அவளை இறுக்க கட்டிபிடித்து, "i really miss you da!" விஷ்ணு அவளது காதுமடலை கடித்தான்.

"நீ என்னைய மிஸ் பண்ணவே இல்லையா?" தொடர்ந்தான் விஷ்ணு.

"ஏன் இல்ல? அன்னிக்கு ஒரு நாள்....." என்று முடிப்பதற்குள் விஷ்ணு குஷியாகி,

"அப்பரம் என்ன ஆச்சு?"

தனுஜா, " அன்னிக்கு ஒரு நாள் toilet tubelight கெட்டு போச்சு. மாட்ட முடியல எனக்கு. அப்ப தான் உன்னைய மிஸ் பண்ணேன்...நீ இருந்திருந்தா சரியா போட்டு இருந்திருப்பே இல்ல..." வேண்டும் என்றே கிண்டல் அடித்தாள்.

"அடி பாவி.... இவ்வளவு தானா. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு புருஷன் மேல் அக்கறை இல்ல! what a pity? what a pity?"செல்ல கோபத்துடன் நெற்றியில் அடித்துகொண்டான்.

"என்னப்பா பண்றது? we are all busy career woman. ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை. வீட்டுக்கு வந்தா...வீட்ட பாத்துக்கனும். இருக்குறது 24 மணி நேரம் தான். இதுக்கு நடுவுல டீவி பாக்கனும், ஃபிரண்ட்ஸ் கூட வெளியே போகனும். spa, manicure, pedicure, waxing, threading....exercise, yoga... இவ்வளவு இருக்கு. இதுல எங்க டைம் இருக்கு புருஷன பத்தி யோசிக்க?" நக்கல் அடித்தாள் தனுஜா. குளிர்சாதன பெட்டியை திறந்து காய்கறிகளை எடுத்தாள்.

அமைதியான குரலில், "உண்மையாவே ஒரு ஃவீலிங்ஸும் இல்லையா?"

அவள் மறுபடியும், "என்னா ஃவீலிங்ஸ்??" வடிவேலு பாணியில் சொல்ல, விஷ்ணு விழுந்து விழுந்து சிரித்தான்.

சமையலறையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து மேசையில் இருந்த கேரட்டை கடித்தபடியே, "ம்ம்ம்....ஒரு சிங்கம் இங்க புலம்பிகிட்டு இருக்கு. நீ கண்டுக்கவே மாட்டேங்குற?"

சுற்றும்முற்றும் பார்த்து, "சிங்கமா? எங்க? எங்க?" தேடினாள் தனுஜா.

"நான் தான் டி அது!"

"என் அம்மா என்னைய ஏமாத்திட்டாங்களே! என்னைய ஒரு மனுஷனுக்கு கட்டிவைக்க சொன்னா...மிருகத்துக்கு இல்ல கட்டிவச்சுட்டாங்க!" சிரித்தாள் தனுஜா.

"ஓவர் குசும்பா போச்சு உனக்கு." விஷ்ணு, தனுஜாவை இழுத்து தன் மடியில் உட்கார வைத்துகொண்டான்.

"i really miss you and your jokes da." விஷ்ணு தனுஜாவின் கண்களை பார்த்து கூறினான்.

புன்னகையித்தபடி தனுஜா, "அதுக்கு இப்ப என்ன பண்ணலாம்ங்கற?"

"இன்னிக்கு 'சம்திங் சம்திங்' கிடையாதா?" கிறுங்கடிக்க வைக்கும் குரலில் விஷ்ணு.

"ஓய்....nothing doing!" வெடுக்கென்று எழுந்தாள்.

"கொஞ்சம் விட்டா போதுமே... நான் கடவுள் ஆர்யா மாதிரி தலகீழ நின்னாலும் முடியாது!!! நைட்டுக்குள்ள headofficeக்கு ரீப்போர்ட் அனுப்பனும். and somemore ..today...... curtain மாத்தனும். சோபா துடைக்கனும். rooms vaacum பண்ணனும். photo frames arrange பண்ணனும்....." என்று அன்று செய்துமுடிக்க வேண்டியவற்றை கூறினாள் தனுஜா.

"alrite alrite....ஒன்னு செய்வோம். இன்னிக்கு we'll reverse our roles. இன்னிக்கு முழுக்க நான் தனுஜா மாதிரி இருக்கேன். எல்லாத்தையும் நான் செய்றேன். நீ விஷ்ணு மாதிரி இரு. விஷ்ணு என்னென்ன செய்வானோ அத செய். யாரு அவங்க ரோல கரெக்ட்டா செய்றாங்களோ, அவங்க சொல்றபடி தோத்தவங்க செய்யனும். alrite? sounds fun man......" விஷ்ணுவின் கண்கள் விரிந்தன.

"நீ என்ன செய்வ வீட்டுல இருந்தா? நாள் முழுக்க டீவி பார்ப்ப? இது ஒரு பெரிய வேலையா?" தனுஜா சொல்ல அதற்கு விஷ்ணு,

"ஹாலோ!! சும்மா இருக்குறதுல எவ்வளவு கஷ்டம் இருக்கு தெரியுமா? நீ ஒரு நாள் இருந்து பாரு...அப்பரம் தெரியும் என் கஷ்டம்." சிரித்தான்.

அவன் தொடர்ந்தான், "அது மட்டுமா செய்வேன்....அப்பெப்ப வந்து உன்னைய disturb பண்ணுவேன்ல....அந்த மாதிரியும் செய்யனும்."

"அதானே பாத்தேன்.... நீ திருந்த மாட்ட?" தனுஜா பொய் கோபத்துடன்.

"time starts now....." சொல்லிகொண்டே, சமையல் வேலைகளை ஆரம்பித்தான் விஷ்ணு. பெருமூச்சுவிட்டவாறு தனுஜா ஹால்லுக்கு வந்தாள். தனது ஆபிஸ் ரீப்போர்ட்டை செய்ய தொடங்கினாள் . லேப்டாப்பில் பாடல்களை ஒலிக்க செய்தாள். "டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..." என்ற இந்தியன் படப்பாடல் ஒலிக்க, சமையலறையிலிருந்த விஷ்ணுவை எட்டி பார்த்தாள்.

***
3 ஆண்டுகளுக்கு முன்பு......

"ஹாலோ, மிஸ்ட்டர் விஷ்ணு உங்களுக்கு அளவு ஜாக்கெட் கொடுத்தா...அத வச்சு சரியா தைக்க தெரியாதா? நீங்களாம் எதுக்கு கடை வச்சு இருக்கீங்க? what the hell man...and i need this blouse tonight for a wedding function!!" சரமாரியாக பொழிந்தாள் தனுஜா.

பகுதி 2)

Sep 22, 2009

என்னை போல் ஒருத்தி...-300வது போஸ்ட்

உன்னை போல் ஒருவன்னு எல்லாரும் பேசிகிட்டு இருக்குற நேரத்துல இது என்ன என்னை போல் ஒருத்தின்னு நினைக்குறீங்களா?

ஒன்னும் இல்ல(வேட்....அதுக்குன்னு கிளம்பி போயிடுறதா..? வேட் வேட்...)

இது என் 300வது போஸ்ட். என்னை போல் ஒருத்தின்னு தலைப்பு வச்சா கொஞ்சம் வித்தியாசமா இருக்குமேன்னு நினைச்சு எழுதியது:)

300 பதிவுகளா? என்னாலேயே நம்ப முடியல!!
எவ்வளவு!!
கிட்டதட்ட 4 ஆண்டுகள் 4 மாதங்கள் ஆகிவிட்டன வலைப்பதிவு தொடங்கி! இவ்வளவு ஆண்டுகளாக தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைவருக்கும் இந்த வலைப்பூவை follow செய்து வரும் 85 பேருக்கும் கோடி நன்றிகள்!

நீங்கள் இல்லை என்றால் நான் இல்லை!

மனசாட்சி: ஏ தோடா...என்ன அரசியல குதிக்க போறீயாக்கும்? தேவையில்லாம டையலாக் விடுற?

நான்: அரசியல் இப்போதுக்கு இல்ல...

மனசாட்சி: ஆமா ஆமா....தமிழ்நாட்டுல ரெண்டு பேரு இப்படி தான் சொல்லிகிட்டு திரியுறாங்க...

நான்: இப்போ நீ தான் அரசியல் பண்ணுற?

மனசாட்சி: அட பாவி, கடைசியில என்னையேவா??!!!

இது சும்மா!!!
அனைவருக்கும் நன்றிகள். தொடர்ந்து உங்களது ஆதரவை கொடுத்து வாருங்கள். என்னால் முடிந்த நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்குறேன்:)

(by the way, இன்னிக்கு தான் 300வது போஸ்ட் எழுதவேண்டும் என்று ஒரு சின்ன பேராசை. ஏன் என்றால், இன்று தான் நான் குழந்தையாக இருந்தபோது முதல் முதலில் அழுதது. அட...என் பிறந்த நாள்ன்னு சொல்ல வந்தேன்!)

Sep 20, 2009

dil bole hadippa &ஈரம்

இந்த வார இறுதியில் ரெண்டு படங்கள் பார்த்தேன். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளுக்கு அப்பரம் ரெண்டு சூப்பர் படங்களை பார்த்த சந்தோஷம் மனசு முழுவதும்!!

ஈரம்- ஷங்கரின் தயாரிப்பில் வந்துள்ள படம். முதல் பாதி crime thriller. இரண்டாம் பாதியில் திகில்! நல்ல ஒரு கலவை. நடிப்பை என்னமா கொட்டியிருக்காங்க ஆதி, நந்தா, சிந்து மோகன். சிந்து மோகம் சமுத்திரம் படத்தில் முரளியின் ஜோடியா வந்தவங்க.

யம்மா சிந்து, சிம்ளி சூப்பர்ப்!! குறிப்பா சாகும் காட்சியில் கண்கள் ஓரமா கண்ணீர் துளி வரும் பாருங்க.... வாவ் வாவ்!!

நந்தா, உங்களுக்கு படங்கள் சரியா ஓடலன்னு கவலை வேணாம். இனி, நிச்சயம் உங்களுக்கு பெரிய படங்கள் வரும். என்ன ஒரு வில்லத்தனமான நடிப்பு....*கைதட்டல்கள்*

ஆதி: ம்ம்ம்ம்.....'தற்போது சைட் அடித்து கொண்டிருப்பவர்கள்' பட்டியலில் நான் உங்களை சேர்த்து வைத்து இருக்கேன்.:))

இன்னொரு ப்ளஸ்: இசை. பாய்ஸ் படத்தில் இந்த மல்கோவா மாமி கதை எழுதும் பயலா வந்த தமனின் இசை! oh my god, u are talented man!பாடல்கள் அருமையான melodies...வாழ்த்துகள்
-----------------------------------------------------------------------------

தில் போலே ஹடிப்பா.

ராணி முகர்ஹி ஷாஹித் கபூர் நடித்து வெளிவந்துள்ள படம். கொஞ்சம் bend it like beckham, chak de india, she's the man ஆகிய ஆங்கில மற்றும் ஏற்கனவே வந்த ஹிந்தி படங்கள் போல இருந்தாலும் சிரித்து மகிழ வைக்கும் படம்! ஆரம்பம் முதல் கடைசி வரை சிரித்து கொண்டே இருக்கலாம்!

ராணி ஆண் வேடத்தில்(veer pratap singh) வரும் காட்சிகள் எல்லாம் கைதட்டல்கள் பறக்கின்றன. அவ்வளவு cute!! veer pratap singhயை தூக்கி மடியில் வைத்து கொள்ளலாமா என்று தோன்றும்! ஹாஹா.... பாடல்கள் பக்கா பஞ்சாப் வாசம்! ஆடி கொண்டே இருக்கலாம்!

மொத்தத்தில் நல்ல படங்களை பார்த்த திருப்தி இப்போதான் கிடைச்சு இருக்கு!

Sep 15, 2009

எனக்கே என்னை தெரியாமல்-5

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
சூடான காபியுடன் ரினிஷா உட்கார்ந்து இருந்தாள் தேவியின் வீட்டில். ஹாலில் இருந்த curtainயை திறந்துவிட்டு ஜன்னல்களை சாற்றினாள்.

"ரொம்ப மழையா இருக்குல." தேவி சொன்னாள்.

"thank you devi."

மழையில் நனைந்த தன்னை வீட்டிற்கு அழைத்தமைக்கு நன்றி சொன்னாள் ரினிஷா. இருவரும் ரொம்ப நேரம் பேசினர். அவர்களுக்கிடையே நிறைய விஷயங்கள் ஒத்துபோயின. ஒரே மாதிரியான விருப்பங்கள்கூட. ரினிஷாவின் கணவன் சந்தேகபேர்வழியாக இருந்தபோதிலும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை ஓட்டிகொண்டிருப்பதை கேட்ட தேவி,

"தனியா போயிடு ரினிஷா....எதுக்கு கஷ்டம்?"

புன்னகையித்தாள் ரினிஷா. "பார்ப்போம் வாழ்க்கை எப்படி போகுதுன்னு." என்றாள்.

ஆனால், தேவி தான் ஒரு லெஸ்பியன் என்னும் உண்மையை சொல்லவில்லை. மறைப்பதற்காக அல்ல, ஆனால் அதற்கான அவசியம் ஏற்படவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாகின. தேவியின் பாக்ஸிங் மாஸ்ட்டரும் ரினிஷாவின் நண்பர் ஆனார். மூவரும் நிறைய இடங்களுக்கு சென்றனர். வாழ்க்கை கொஞ்சம் சந்தோஷமாக தெரிந்தது.

அப்படி ஒரு நாள், மூவரும் உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது தேவி கை கழுவ சென்றாள். அச்சமயம் காபி குடித்து கொண்டிருந்த மாஸ்ட்டர்,
"தேவி, இப்படி சந்தோஷமா இருந்து பாத்தது கிடையாது. நீங்க ரெண்டு பேரும் ஃபிரண்ட்ஸ் ஆனாபிறகு, அவளுக்கு எல்லாம் கிடைச்சு ஒரு ஃவீல் நினைக்குறேன். அதான்..... சந்தோஷமா இருக்கா.... இப்படி ஒரு பொண்ணுகூட ஃபிரண்ஷிப் வச்சு இருக்குற உங்களுக்கு தான் நன்றி சொல்லனும்" என்றார் மாஸ்ட்டர். நல்ல எண்ணத்தில் அவர் சொன்னார். ஆனால், அது உண்மையை போட்டு உடைக்கும் சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது.

ரினிஷாவிற்கு ஒன்னும் புரியவில்லை.

"மாஸ்ட்டர்...நீங்க என்ன சொல்லவறீங்க?" புருவங்களை உயர்த்தினாள்.

"நீங்களே சொல்லுங்க.... லெஸ்பியன்ஸ்கூட ஃபிரண்டா இருக்க...எத்தன பேரு விருப்பப்படுவாங்க.." என்றார்.

ரினிஷாவிற்கு அதிர்ச்சி!!! ஒன்றும் சொல்லாமல் கிளம்பிவிட்டாள் அவசர வேலை இருப்பதாக சொல்லிவிட்டு. செய்தி தெரிந்த தேவி, பலமுறை ஃபோன் செய்து பார்த்தாள். ஆனால், ரினிஷா எடுக்கவில்லை.

அன்று இரவு தேவியின் வாசல் மணி ஒலித்தது. பெட்டியுடன் ரினிஷா. தேவி தலைகுனிந்து நின்றாள். தோழியிடம் உண்மையை சொல்லாமல் போன வருத்தம் அவள் முகத்தில் படர்ந்தது.

ரினிஷா தேவியை கட்டிபிடித்து அழுதாள்.

"நான் ஒரு உண்மைய உன்கிட்ட சொல்லனும். உன்னைய பாத்த முதல் சந்திப்பிலேயே....ஏதோ ஒரு மாதிரியா இருந்துச்சு. உன்னைய ரொம்ப பிடிச்சு போச்சு. அது ஒரு சாதாரண ஃபிரண்ஷிப்பை மீறிய ஒரு ஈர்ப்பு. சொல்ல தெரியல. நீ தப்பா நினைச்சுப்பேன்னுதான் சொல்லாம விட்டுடேன்......" அழுகையின் நடுவே.

தேவிக்கு ஆச்சிரியமாக இருந்தது.

"இப்ப இந்த நேரத்துல ஏன்...."

"அவர விட்டுடு வந்துட்டேன்."
-----------------------------------------------------------------------------------------

கீதா கதையை கேட்டு விட்டு, "ஆனா, நம்ம societyல இதலாம் ஒத்து வருமான்னு யோசிச்சீங்களா அப்போ."

அதற்கு ரினிஷா, "நான் கொடுக்கும் அன்புக்கு ஒரு இருப்பிடம் தேவைப்பட்டுச்சு. அது என் ex husbandகிட்ட கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு..... வந்துட்டேன். மத்தவங்க ஆயிரம் சொல்வாங்க. நல்ல மனசு இருக்குற ஒருசில பேர் எங்கள புரிஞ்சுகிட்டாவே சரி. அது போதும் எங்களுக்கு." என்றாள்.

கீதாவிற்கு அன்றைய பொழுது மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. இருவரின் வாழ்க்கை கதையை கேட்டு ஆச்சிரியப்பட்டாள். தன் வாழ்க்கையை எப்படி அமைத்து கொள்வது என்பதை பற்றி யோசனை செய்ய ஆரம்பித்தாள்.

நேரம் ஆகிவிட்டதால் கீதா, "ரொம்ப நன்றிங்க.....really appreciate your time. i had a great evening today. thanks alot."மனமுவந்து நன்றிகளை கூறினாள்.

அப்போது ஒரு குட்டி பொண்ணு அறையிலிருந்து ஓடி வந்து ரினிஷாவின் கால்களை கட்டிபிடித்து, "mummy, look at this. i won the game." கையில் இருந்த video game playerயை காட்டி சிரித்தது.

"யாரு இந்த குழந்தை?" என்று கீதாவின் முகத்தில் உதித்த கேள்வியை கண்டுகொண்ட ரினிஷா,

"my child from my previous marriage." என்றாள்.

கீதா குழந்தையிடம் சென்று, "ஹாலோ, உங்க பேரு என்ன?" என்று கேட்டு தன் பையில் இருந்த ஒரு சாக்லெட்டை கொடுத்தாள்.

"சரி நான் கிளம்புறேன்...." என்றாள் கீதா. வழியனுப்பி வைக்க வாசல்வரை வந்தனர் ரினிஷாவும் தேவியும்.

"ஏதாச்சுன்னா...ஃபோன் பண்ணு." என்றாள் தேவி கீதாவிடம்.

கீதா உடனே, "ம்ம்ம்.... குழந்தைக்கு தெரியுமா?....நீங்க ரெண்டு..." எச்சில் முழுங்கினாள். கேட்க கூடாத கேள்வியை கேட்டுவிட்டதாய் முழித்தாள்.

சிரித்து கொண்டே ரினிஷா, "அவள பொருத்தவர....அவளுக்கு ரெண்டு அம்மா இருக்காங்க...."

*முற்றும்*

(யப்பா சாமி, ஒரு வழி முடிச்சுட்டேன். இந்த பாகம் ரொம்ப சீக்கிரமா முடிஞ்சுட்டு. கதைக்கு எப்படியாச்சு முற்றும் போட்டுவிட வேண்டும் என்பதற்காக தான் முடிச்சேன். ஐயோ....எந்த நேரத்துல எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல. ஒரே பிஸி... ப்ளாக் பக்கமே தலவச்சு படுக்கல......இனியாவது உருப்படியா எதாச்சு எழுதுறேன். i guess i will be back to form soon!)