Aug 11, 2014

சதுரங்க ஜிகர்தண்டா

1) சதுரங்க வேட்டை

படம் ஆரம்பிச்ச 10 நிமிடத்திலயே படம் என்னை அவ்வளவு ஈர்த்துவிட்டது. கதைக்குள்ள நேராக சென்று உண்மையிலேயே திரைக்கதையில் வேட்டையாடி இருக்கிறார் இயக்குனர்.

intervalல் climax வச்சு, ஹீரோ மாட்டி கொள்கிறார். இதுக்கு அப்பரம் எப்படிதான் கதை போகும் என்ற சுவாரசியத்தை உண்டாக்கி ஒரு நல்ல படம் கொடுத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும்.

நடித்த ஹீரோ நடராஜன் செம்மயா புகுந்து விளையாடி இருக்கிறார். ஹீரோயின் குரல் தான் அவருக்கும் பலம். நடித்தவர்கள் அனைவருமே டாப் கிளாஸ் நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.



வசனங்கள பத்தி சொல்லியே ஆகனும்.

- கோழி மேல பரிதாபம் பட்டால், சிக்கன் 65 சாப்பிட முடியாது.
- பொய் சொல்லும்போது, அதுல கொஞ்சம் உண்மையும் கலந்து சொல்லனும். அப்ப தான் அது உண்மை மாதிரி இருக்கும்.


இது போல படம் முழுதும் கைதட்டி வரவேற்கும் வசனங்கள் ஏராளம்.


ரொம்ப நாளைக்கு அப்பரம் ஒரு நல்ல தமிழ் படம்.

2) ஜிகர்தண்டா

இது கொரியன் படம் ஆச்சே! இது ஜப்பானிய படம் ஆச்சே என்று புலம்பி கொண்டிருப்பவர்களே,

விடுங்க பாஸ்! காபி அடிச்சது தப்போ சரியோ,

நல்லா காபி அடிச்சாங்களா! அத பார்ப்போம்.



நமக்கே தெரியும் உள்ளூர் சினிமாவை காபி அடிச்சு, மொக்கை வாங்கறதுக்கு பதிலா, ஏதோ ஒரு நல்ல உலக சினிமாவை பார்த்து, புதுசா கொடுத்து இருக்காங்க-னு தான் சொல்லனும்.

ரசிச்சு ரசிச்சு பார்த்த படங்களின் பட்டியலில் இது கண்டிப்பா இருக்கும். இசை, திரைக்கதை, வசனம், நடிப்பு என்று அனைத்துமே ஒரு நல்ல வெற்றி படத்துக்கு ஏற்றாற்போல் இருந்துச்சு.

climax மட்டும் இன்னும் நல்லா யோசிச்சு ( இல்லேன்னா இன்னும் ரெண்டும் மூனு கொரிய படங்கள பாத்து) எடுத்து இருந்திருக்கலாம்.



பரவாயில்ல, என் ஆளு விஜய் சேதுபதி வருவதால், அந்த குறை தெரியவில்லை.

செம்ம வேட்டைக்கு போயிட்டு, ஒரு பெரிய க்ளாஸ் கூல் ஜிகர்தண்டா குடிச்சு ஒரு உணர்வு, இந்த ஜாலியான ரெண்டு படங்கள் பார்த்த பிறகு.


(முக்கியமா இந்த ஜிகர்தண்டா நம்பிக்கை ஊட்டும் படம்?
எப்படி?

எப்படியா??

சித்தார்த் 'பாய்ஸ்' படத்துல அறிமுகம் ஆனபோது, லட்சுமி மேனன் மூணாவது படிச்சுகிட்டு இருந்த புள்ள.

இப்ப சொல்லுங்க?
நம்பிக்கை வருதா இல்லையா?)



No comments: