தமிழ் சோறு போடுமா?
அட போங்க! அது சோறு போடுமானு தெரியாது. ஆனா, கண்டிப்பா ஐயர்லாந்து கூட்டிட்டு போகும்!
என்னது ஐயர்லாந்தா???
இப்படி தான் எனக்கும் தூக்கி வாரி போட்டது முதன் முதலில் செய்தியைக் கேட்டபோது.
போன வருடம் கதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டேன். நான்கு மொழி பிரிவில், என் கதை தமிழ் பிரிவில் ஜெயித்தது. முதல் பரிசாக கொஞ்சம் பணமும், ஐயர்லாந்தில் நடந்த கதை எழுதும் பயிலரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது.
வேலை, இம்சை, திங்கட்கிழம பத்தி கவலை, மீட்டிங் என எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு, புது புது அரத்தங்கள் ரகுமான் போல் ஜாலியான ஒரு escape!!
ஒரு மாத விடுதி செலவு, சாப்பாட்டு செலவு, மத்த செலவுகள் அனைத்தும் sponsored!! கடவுள் இருக்கான்-டா!!

வழி நடத்தியவர், டேவிட். இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். பயிலரங்கு என கூட சொல்லமுடியாது. அப்படி ஒரு ஜாலி gathering. ஆங்கிலத்தில் நடந்த இந்த பயிலரங்கு காலையில் ஆரம்பித்தால் மதியம் 12 முடிந்துவிடும். டேவிட், கதை எழுதும் உத்திகள் பலவற்றை சொல்லி தந்தார்.
மதிய உணவுக்கு பின்னர், நமக்கு பிடித்ததை செய்யலாம்.
மலை ஏறுதல், massage, அருவிக்கு போகலாம், அது ஒரு சின்ன கிராமம் என்பதால், நடக்க வசதியான இடங்கள் நிறைய உண்டு.




(கீழ் படம்: நாங்கள் தங்கியிருந்து வீட்டிற்கு முன்னால் இருந்த வீடு.)


ஒரு மாதம், இதோ ஒரு வேறு உலகத்துக்கு போயிட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு. இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கும்போது, கதை கவிதை என எதுவுமே எழுத தெரியாது. இப்ப 8 வருஷம் ஆச்சு வலைப்பூ ஆரம்பிச்சு. ஏதோ கொஞ்சம் கதை, கவித எழுத தைரியம் வந்து இருக்கு. நீங்க சொல்லும் கருத்துகள் வச்சு தான் எனக்கு ஊக்கமே வந்துச்சு.
வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். ஐயர்லாந்து கனவு எல்லாம் நினைச்சு கூட பார்க்காத ஒன்று. கடவுள், பெத்தவங்க செஞ்ச புண்ணியம், அப்பரம் வாசகர்களாகிய உங்க ஊக்கம் தான் காரணம். தனஷ் சொல்வதுபோல், "இது என் கனவு திவ்யா!" என்று இப்ப நினைச்சாலும் கண்கள் சந்தோஷ கண்ணீர் வடிக்கும்.
கோடி நன்றிகள்!
தமிழ் சோறு போடுமா?
கண்டிப்பா போடும். ஏனா ஐயர்லாந்தில் பல நாள் தயிர் சாதம்கூட கிடைத்தது!
7 comments:
அருமை.
வாழ்த்துக்கள்.
தமிழுக்கு அங்கீகாரம் இருப்பதையும் நீங்கள் தேர்வு செய்யப்பட்டதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி. நல் வாழ்த்துக்கள்.
அருமை.
வாழ்த்துக்கள்
அயர்லாந்தில் தயிர் சாதம் கிடைத்திருக்கிறது தமிழால் ...
ஆனால் கோடி நன்றிகள் இல்லாமல் கொடி நன்றிகள் கொடுத்துவிட்டீர்களே ..
@jeevan subbu: sorry thalae! :)) changed it. thanks for highlighting the spelling error.
@ to all: Thanks for the wishes, readers! it means a lot to me!:)) Thanks once again.
NRIஐ ஆக இருக்கும்போது, அடுத்த தலைமுறையில் தமிழ் எப்படி பிழைக்கும் என்ற வருத்தம் இருந்தது. உங்களை போன்ற இளையவர்களின் ஆர்வமும் தன்னம்பிக்கையும் சந்தோசம் தந்தன. உங்களின் நீண்டநாள் வாசகியாக, உங்கள் வெற்றி கண்டு மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
- வாணி
வாழ்த்துக்கள் தமிழச்சியே
Post a Comment