Dec 30, 2015

Romantic Suspense Tamil Short Film- கண நேர நினைவுகள்




இது நான் இயக்கிய மூன்றாவது குறும்படம். உங்களது விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்த்து.....

Dec 24, 2015

பசங்க 2 விம்ரசனம்- இந்த வருடத்தின்.....

இனி இந்த வருடத்தில் வேறு எந்த படங்களையும் பார்க்க கூடாது-னு முடிவு எடுத்துட்டேன். ஏனா இந்த வருடத்தின் சிறந்த படத்தை பார்த்து விட்டேன்.

பசங்க 2.

குழந்தைகள் நடித்து, பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்கும் படம் இது. அறிவுரை கூறும் படமாக இருந்திருக்கலாம். ஆனால், இயக்குனர் பாண்டிராஜ் அந்த அபத்தத்தை செய்யாமல் அனைவரும் ரசிக்கும்படி படத்தை தந்துள்ளார். குழந்தைகள் நடிப்பாக இருக்கட்டும், சூர்யா, அமலா பால் நடிப்பாக இருக்கட்டும், கட்சிதமாக உள்ளது படத்துக்கு.

படத்தின் வண்ணம் இக்கதைக்கு இன்னொரு பலம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, வசனங்கள் தான்.

1) குழந்தை ஒன்று கேட்கும், tamil mediumக்கும் english mediumக்கும் என்ன வித்தியாசம்.

"தமிழ் மிடியத்துல படிச்சவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான்.
இங்கிலீஷ் மிடியத்துல படிச்சவன் இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான்."

2) குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அது கதை ஒன்று சொல்லும். தலைமையாசிரியர் சிரிப்பார், ஆனால் பெற்றோர்கள் சிரிக்க மாட்டார்கள்.

அதற்கு தலைமையாசிரியர்: ஏன் நீங்க சிரிக்க மாட்டேங்கிறீங்க?"

குழந்தை: நான் பேசினா, அவங்களுக்கு சிரிப்பு வராது. வெறுப்பு தான் வரும்.

3) 70கிலோ உள்ளவங்க 17கிலோ உள்ள குழந்தைய அடிக்கறது எவ்வளவு பெரிய வன்முறை

இப்படி நச்- என்ற வசனங்கள் படம் முழுக்க உண்டு.

இப்படத்தில் நடித்த குழந்தைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண் குழந்தை நட்சித்தரம் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். குறிப்பா, தன் அப்பாவிடம் "வீட்லேந்து கிளம்பும்போது, சாவி இருக்கா. பர்ஸு இருக்கானு செக் பண்றீயே? எப்பாவாச்சு  மூளை இருக்கா-னு செக் பண்ணி இருக்கீயாப்பா?" என்று சொல்லும் போது சிரிப்பு வெடி சத்தம் அரங்கம் முழுதும் ஒலிக்கிறது.

பெண் குழந்தை நட்சித்தரம் மேடை ஏறி கதை சொல்லும்போது, கண் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது.

இப்படி காட்சிக்கு காட்சிக்கு படம் சுவாரஸ்சியம்.

2015 வருடத்தை சந்தோஷமாய் நிறைவு பெற, இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும். மன நிறைவு, சந்தோஷமும் தரகூடிய தரமான படம்.

நன்றி பாண்டிராஜ், சூர்யா!

Dec 19, 2015

தங்கமகன் நல்லா இருக்கு! thanks to ஷாருக் ஜி!

dilwale படம் பார்த்துட்டு நீங்க, புலி படம் பாருங்க, புலி படம் சூப்பர்-னு சொல்வீங்க.

dilwale படம் பார்த்துட்டு நீங்க, சுறா படம் பாருங்க! அட என்னமே செதுக்கி இருக்காரு அப்படினு சொல்வீங்க!

அப்படி தான் ஆசையோடு போனேன் dilwale படம் பார்க்க! அதுக்கு அப்பரம் என் மேலயே எனக்கு கோபம். கோபம் தணிக்க தான் தங்கமகன் பார்க்க சென்றேன். அப்பரம் தான் கொஞ்சம் சமாதானம் அடைந்தேன். 


தங்கமகன் படத்தில் பிடித்தவை:
+ ஏமிக்கும் தனுஷ்க்கும் உள்ள கெமிஸ்ட்ரி.

+சமந்தாவுக்கும் தனுஷ்க்கும் உள்ள மகா மெகா கெமிஸ்ட்ரி (படம் பார்த்த அனைவருக்கும் தனுஷ் மேல லைட்டா பொறாமை வந்திருக்கும். பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறா-னு நம்ம ஒதுங்கி போக வேண்டியது தான்)


+ சமந்தா தனுஷ் நடித்த சில காதல் காட்சிகளில் அமுதம் போல் வழிந்த விரசம் இல்லாத காதல்.

+கே ஸ் ரவிகுமார்!! சார்!! பின்னிட்டீங்க! இப்போது உங்களுக்கு பொற்காலம் நடிப்பதில்! இதையே தொடர்ந்து செய்யலாம்! இயக்குனர்கள் நடித்தால் பார்க்க சாயிக்காது என்பதை உடைத்து விட்டீர்கள்!

+ புதிய முகம் ஆதித் அருண் (குறும்படங்கள் பலவற்றில் நடித்து இருக்கிறார். காதலில் சொதப்புவது எப்படி குறும்படத்தின் ஹீரோ இவர் தான்). இவரது நடிப்பும் அருமை. 

+பாடல்களும் அது படத்தில் வரும் இடங்களும் ரொம்ப பொருத்தமா இருக்கு.

+முக்கியமா எனக்கு பிடிச்சது. படத்தில் நீளம். இரண்டு மணி நேரம் இரண்டு நிமிடங்கள் தான்.

+ஆண்ட்ரியாவின் குரல், ஏமிக்கு கச்சிதமாய் பொருந்திய வண்ணம்.

+சமந்தாவும் பிரமாதமாய் அவரே அவருக்கு செய்த டப்பிங். குறிப்பா, தனஷை பார்த்து "யப்பா யப்பா...ஐயோ ஐயோ...ம்ம்ம்...லவ் யூ லவ் யூ!" என சொல்லும் போது....

என் மனதில் தோன்றியது "இந்த நடிப்ப இத்தன நாளா எங்கம்மா ஒலிச்சு வச்சு இருந்த?" 

*******************************

ஆக இது இன்னொரு VIPஆ?

அப்படியும் இல்லை.

- முதல் பாதியில், காதல், இளமை என்று திரைக்கதை ஜாலியாக இருந்தாலும், வலு இல்லாமல் இருந்தது. இரண்டாம் பாதி கதைக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை. ஆக, ஏதோ இரண்டு கதைகளை பார்த்த எண்ணம் தோன்றுகிறது. 

- வில்லன் இருந்தாலும் இல்லாத மாதிரி இருக்கு. 

- தனஷ் ஏற்கனவே நடித்த '3' படத்தின் சாயல் நிறைய தெரிந்தது. 

- பஞ்ச் டயலாக் என்ற பெயரில் சில நீளமான வசனங்கள் நல்லா இல்லை.

- ராதிகாவின் நடிப்புக்கு தீனி போடவில்லை என்று தோன்றுகிறது. அவரை இன்னும் நல்லா பயன்படுத்தி இருந்திருக்கலாம்.

- சதீஷின் காமெடி பெரிய பலம் சேர்க்கவில்லை.


தங்கமகன்:

வைரமகன் என்று இல்லாமல் இருந்தாலும், ஓரளவுக்கு வெள்ளிமகன் இடத்தை பிடித்துவிட்டான்! 

Dec 15, 2015

அடுத்த குறும்படத்தின் புதிய பாடல்!

நாங்கள் எடுத்த குறும்படம், கண நேர நினைவுகள்.

அப்படத்தில் வரும் பாடல் இதோ!!


உங்களது ஆதரவையும் கருத்துகளையும் எதிர்பார்த்து......

அடுத்த குறும்படம்- கண நேர நினைவுகள்

நான் குறும்படங்கள் எடுக்க ஆரம்பித்து கிட்டதட்ட 3 வருஷம் ஆச்சு. இந்த 3 வருடங்களில் 3 படங்கள். கதைகள் அனைத்தும் நான் பல வருடங்களுக்கு முன்பு எழுதியவை. கதைகளை நான் இவ்வலைப்பூவில் வெளியிடுவேன். அப்போது எல்லாம் தெரியாது, கதை படமாக மாறும் என்று.

எப்படி படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது?

youtube, வந்த பிறகு வந்த ஆசை தான். பிறகு, பல குறும்படங்கள் பார்த்தபின்ன ஆசை அதிகமாச்சு. ஆசை யாரை விட்டது என்பது போல நானும் கேமிராவை தூக்கினேன் முதல் படத்துக்கு.

முதல் படம்- லவ் ஸ்டாப்
https://www.youtube.com/watch?v=tq1qEreJmps

பிறகு, இரண்டாவது படம்- காதல் கவ்வும்
https://www.youtube.com/watch?v=YERvbQJhlKI


இவ்விரண்டு படங்களும் ரொம்ப குறைவான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டவை. சொன்ன போனால், சாப்பாடு கூட படத்தில் நடித்தவர்கள் தான் எனக்கு வாங்கி கொடுத்தார்கள். ஹிஹிஹி....

ஆனால், மூன்றாவது படம் வேற மாதிரி இன்னும் அழகாய் இருக்க வேண்டும் என நினைத்தேன். படத்தில் பாடல் கூட உண்டு. நண்பர்கள் மூலமாகவும் அவர்களுக்கு தெரிந்தவர்கள் மூலமாக, இசையமைப்பாளர், பாடகி, பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் என்ற ஒவ்வொரு துறையில் புதிய நபர்களுடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

பாடல் இயற்றிய அனுபவே தனி. இரண்டு மணி நேரத்தில் பாடலை முடித்தோம். சொற்கள் இசையில் அமர, அது புதிய வடிவமாய் உருவம் பெறும் போது, செம்ம போங்க! அந்த உணர்வே தனி!!

இரண்டே நாட்களில் படத்தை முடித்தோம். படம் எடுக்கும் அனுபவம் வேற level boss!! செம்ம ஜாலியாக போனது!! ஒரு frame எப்படி அமைப்பது என்று ஒளிப்பதிவாளர் சொல்லும்போது, எனக்கே அதிசயமாய் இருந்தது.

முதல் இரண்டு படங்களுக்கு, நானே ஒளிப்பதிவு செய்தேன். ஆனால், இந்த அளவுக்கு யோசித்து செய்யவில்லை.



இப்படத்திற்கு, பொருட்செலவு இருந்தது. அழகாய் படம் தெரிய, lights மற்றும் prime lens பயன்படுத்தினோம்.

ஒவ்வொரு முறையும் வேறு இடத்தில் scene மாறும் போது, ஒளிப்பதிவாளரும் அவர் தோழனும் லைட்களை மாற்ற வேண்டும்.

அப்போது புரிந்தது, இவ்வளவுவுவுவுவு கஷ்டம் படம் எடுப்பது என்று!!!





உழைப்பு, சந்தோஷம், சிரிப்பு என கலந்த கலவாய் இருந்தது படம் எடுத்த இரண்டு நாட்களும்.


இதோ கண நேர நினைவுகள் படத்தின் போஸ்டர்.

Dec 11, 2015

ஏ ஆர் ரகுமான் செய்யாததை அனிருத் செய்துட்டானே?

சமீபத்தில் வந்த ஏ ஆர் ரகுமான் இசை அமைத்த படங்களில் ஒரு பாடலோ அல்லது இரண்டு பாடல்கள் மட்டும் தான் பிடிக்கும்.

ஒகே கண்மணி படத்தில் வந்த மெண்ட்டல் மனதில்,
மரியான் படத்தில் வந்த எங்க போன ராசா,
கடல் படத்தில் வந்த மூங்கில் தோட்டம்,

என ஒவ்வொரு படத்தில் சில பாடல்கள் தான் பிடிக்கும். அனைத்து பாடல்களும் கவரும் வண்ணம் இருக்காது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இசையை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.

ஆனா, இதுல என்ன ஆச்சுன்னா....

இந்த அனிருத் இசையில் வந்த தங்கமகன் பாடல்களை கேட்டேன்.
அட, அனைத்து 4 பாடல்களும் சூப்பர் ஹிட் வகையா இருக்குது பா!! 

1)நீ  டக்குனா பார்த்தா, திக்குனா ஆகும்

விறுவிறுப்பான பாடல். அநேகமாக தனுஷ் எமி ஜேக்சனை பார்த்தவுடன் வரும் பாடல் என நினைக்குறேன். பாடல் வரிகள் ரொம்ப இயல்பாய் இருக்குது. கண்டிப்பா, சூப்பர் சிங்கர் போட்டியில் உஷா உதுப் இப்பாடலை ஒரு முறையாவது பாடுவார். ஆட தெரியாத அங்கிள்ஸ் ஆண்ட்டிஸ் எல்லாம் ஆடுவார்கள். 

2) ஓ....ஓ...ஓ 

அடியே அடியே என தனுஷ் பாடும் போது ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. பாடல் காட்சி அமைப்பும் ரொம்ப கலராக இருக்கும் என நினைக்கிறேன். "ஓ...ஓ...ஓ" என்று பாடும்போதும் சரி, பாடகி நிகிதா காந்தி பாடிய விதமும் சரி பாடலுக்கு பெரிய பலம்.

3) ஜோடி நிலவு

அனிருத் பாடல் 'கனவே கனவே' பாடலை நினைவுப்படுத்தும், இளையராஜாவின் 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' பாடலை நினைவுப்படுத்தும். இரண்டும் கலந்த கலவை இது! இருந்தாலும், தனஷின் குரலில் இப்பாடல் கேட்க இதமாய் இருக்கிறது. பாடகி ஸ்வேதா மோகன் குரலும் கட்சிதமாய் பொருந்தி இருக்கிறது. 

பிடித்த வரிகள் 

"காயம் மறைந்து போகும்,
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணி விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்"

இந்த தனுஷ் நல்லா தான்-யா எழுத ஆரம்பிச்சுட்டான்!

4) என்ன சொல்ல

நல்ல வேளை இது பெண் பாடும் வகையில் இருக்கு. இல்லை என்றால் தனஷே இதுக்கு பாடியிருக்கும். மெதுவாய் ஆரம்பிக்கும் பாடல், பின்ன நல்ல தாளத்துடன் போக, கண் முன்னாடி சமந்தா வந்து போகுது. 

சமீபத்தில் வந்த trailer இந்த படத்தையும் பாடல் காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது. 

குறிப்பாய் சமந்தா "love you love you...."என்று சொல்லும் விதம் செம்ம போங்க!

இத்தனை எதிர்பார்ப்புகளுடன் படத்திற்காக காத்திருப்போம்!! 





Dec 10, 2015

இந்த மாதிரி பேரிடர் நடந்து இருக்கு, எத பத்தி எழுதுறது?

ஒரு வார காலமாக பேஸ்புக் பக்கமெல்லாம் பேரிடர் நடந்த செய்திகளும், படங்களும் வந்த வண்ணம் இருக்கிறது.

மனம் அழுதது. நிறையவே பதறியது.



சிங்கை என் தாய்நாடாக இருந்தாலும், சென்னையில் சில வருடங்கள் இருந்திருக்கிறேன். அந்த நினைவுகளை அசை போட்ட படி இருக்க, பேரிடர் செய்திகள் பல சமயம் நெஞ்சை உலுக்கியது.

நமக்கு தெரிந்த செய்திகள் இது என்றால், தெரியாமல் போன செய்திகள் எத்தனையோ! கெட்டதிலும், ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது என்றால், அது சென்னைவாசிகளின் மனங்களைப் பற்றி இவ்வுலகத்திற்கு தெரியவந்தது தான்.

எல்லாம் நல்லதுக்கே என்று சாதாரணமாக சொல்லி முடிப்பதா இப்பதிவை என்று தெரியவில்லை. ஆனால்,சென்னையில் இருப்பவர்கள் பல அசாதாரணமான மக்கள் என்பதால் அவ்வாறே முடித்து கொள்கிறேன்.

நான் பேஸ்புக்கில் பார்த்து, பகிர்ந்து கொண்ட சில படங்கள், இதோ: