Dec 24, 2015

பசங்க 2 விம்ரசனம்- இந்த வருடத்தின்.....

இனி இந்த வருடத்தில் வேறு எந்த படங்களையும் பார்க்க கூடாது-னு முடிவு எடுத்துட்டேன். ஏனா இந்த வருடத்தின் சிறந்த படத்தை பார்த்து விட்டேன்.

பசங்க 2.

குழந்தைகள் நடித்து, பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் பாடம் கற்று கொடுக்கும் படம் இது. அறிவுரை கூறும் படமாக இருந்திருக்கலாம். ஆனால், இயக்குனர் பாண்டிராஜ் அந்த அபத்தத்தை செய்யாமல் அனைவரும் ரசிக்கும்படி படத்தை தந்துள்ளார். குழந்தைகள் நடிப்பாக இருக்கட்டும், சூர்யா, அமலா பால் நடிப்பாக இருக்கட்டும், கட்சிதமாக உள்ளது படத்துக்கு.

படத்தின் வண்ணம் இக்கதைக்கு இன்னொரு பலம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது, வசனங்கள் தான்.

1) குழந்தை ஒன்று கேட்கும், tamil mediumக்கும் english mediumக்கும் என்ன வித்தியாசம்.

"தமிழ் மிடியத்துல படிச்சவன் தமிழ்ல கெட்ட வார்த்தை பேசுவான்.
இங்கிலீஷ் மிடியத்துல படிச்சவன் இங்கிலீஷ்ல கெட்ட வார்த்தை பேசுவான்."

2) குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது அது கதை ஒன்று சொல்லும். தலைமையாசிரியர் சிரிப்பார், ஆனால் பெற்றோர்கள் சிரிக்க மாட்டார்கள்.

அதற்கு தலைமையாசிரியர்: ஏன் நீங்க சிரிக்க மாட்டேங்கிறீங்க?"

குழந்தை: நான் பேசினா, அவங்களுக்கு சிரிப்பு வராது. வெறுப்பு தான் வரும்.

3) 70கிலோ உள்ளவங்க 17கிலோ உள்ள குழந்தைய அடிக்கறது எவ்வளவு பெரிய வன்முறை

இப்படி நச்- என்ற வசனங்கள் படம் முழுக்க உண்டு.

இப்படத்தில் நடித்த குழந்தைகளை பாராட்டாமல் இருக்க முடியாது. ஆண் குழந்தை நட்சித்தரம் நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். குறிப்பா, தன் அப்பாவிடம் "வீட்லேந்து கிளம்பும்போது, சாவி இருக்கா. பர்ஸு இருக்கானு செக் பண்றீயே? எப்பாவாச்சு  மூளை இருக்கா-னு செக் பண்ணி இருக்கீயாப்பா?" என்று சொல்லும் போது சிரிப்பு வெடி சத்தம் அரங்கம் முழுதும் ஒலிக்கிறது.

பெண் குழந்தை நட்சித்தரம் மேடை ஏறி கதை சொல்லும்போது, கண் கலங்காதவர் யாரும் இருக்க முடியாது.

இப்படி காட்சிக்கு காட்சிக்கு படம் சுவாரஸ்சியம்.

2015 வருடத்தை சந்தோஷமாய் நிறைவு பெற, இப்படத்தை கண்டிப்பாக பார்க்கவும். மன நிறைவு, சந்தோஷமும் தரகூடிய தரமான படம்.

நன்றி பாண்டிராஜ், சூர்யா!

1 comment:

Anonymous said...

Movie was good. But the kid (girl) saying bird story was way too dramatic. It sort of killed the movie.