ஒகே கண்மணி படத்தில் வந்த மெண்ட்டல் மனதில்,
மரியான் படத்தில் வந்த எங்க போன ராசா,
கடல் படத்தில் வந்த மூங்கில் தோட்டம்,
என ஒவ்வொரு படத்தில் சில பாடல்கள் தான் பிடிக்கும். அனைத்து பாடல்களும் கவரும் வண்ணம் இருக்காது. இருந்தாலும் ஏ ஆர் ரகுமான் இசையை ஆவலுடன் எதிர்பார்ப்பேன்.
ஆனா, இதுல என்ன ஆச்சுன்னா....
இந்த அனிருத் இசையில் வந்த தங்கமகன் பாடல்களை கேட்டேன்.
இந்த அனிருத் இசையில் வந்த தங்கமகன் பாடல்களை கேட்டேன்.
அட, அனைத்து 4 பாடல்களும் சூப்பர் ஹிட் வகையா இருக்குது பா!!
1)நீ டக்குனா பார்த்தா, திக்குனா ஆகும்
விறுவிறுப்பான பாடல். அநேகமாக தனுஷ் எமி ஜேக்சனை பார்த்தவுடன் வரும் பாடல் என நினைக்குறேன். பாடல் வரிகள் ரொம்ப இயல்பாய் இருக்குது. கண்டிப்பா, சூப்பர் சிங்கர் போட்டியில் உஷா உதுப் இப்பாடலை ஒரு முறையாவது பாடுவார். ஆட தெரியாத அங்கிள்ஸ் ஆண்ட்டிஸ் எல்லாம் ஆடுவார்கள்.
2) ஓ....ஓ...ஓ
அடியே அடியே என தனுஷ் பாடும் போது ரசிக்கும் வண்ணம் இருக்கிறது. பாடல் காட்சி அமைப்பும் ரொம்ப கலராக இருக்கும் என நினைக்கிறேன். "ஓ...ஓ...ஓ" என்று பாடும்போதும் சரி, பாடகி நிகிதா காந்தி பாடிய விதமும் சரி பாடலுக்கு பெரிய பலம்.
3) ஜோடி நிலவு
அனிருத் பாடல் 'கனவே கனவே' பாடலை நினைவுப்படுத்தும், இளையராஜாவின் 'நீ பார்த்த பார்வைக்கு நன்றி' பாடலை நினைவுப்படுத்தும். இரண்டும் கலந்த கலவை இது! இருந்தாலும், தனஷின் குரலில் இப்பாடல் கேட்க இதமாய் இருக்கிறது. பாடகி ஸ்வேதா மோகன் குரலும் கட்சிதமாய் பொருந்தி இருக்கிறது.
பிடித்த வரிகள்
"காயம் மறைந்து போகும்,
உந்தன் காதல் பழகி போகும்
உந்தன் காதல் பழகி போகும்
மண்ணி விழுந்த பூவும்
இன்று காற்றில் பறக்க கூடும்"
இன்று காற்றில் பறக்க கூடும்"
இந்த தனுஷ் நல்லா தான்-யா எழுத ஆரம்பிச்சுட்டான்!
4) என்ன சொல்ல
நல்ல வேளை இது பெண் பாடும் வகையில் இருக்கு. இல்லை என்றால் தனஷே இதுக்கு பாடியிருக்கும். மெதுவாய் ஆரம்பிக்கும் பாடல், பின்ன நல்ல தாளத்துடன் போக, கண் முன்னாடி சமந்தா வந்து போகுது.
சமீபத்தில் வந்த trailer இந்த படத்தையும் பாடல் காட்சிகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருக்கிறது.
குறிப்பாய் சமந்தா "love you love you...."என்று சொல்லும் விதம் செம்ம போங்க!
இத்தனை எதிர்பார்ப்புகளுடன் படத்திற்காக காத்திருப்போம்!!
இத்தனை எதிர்பார்ப்புகளுடன் படத்திற்காக காத்திருப்போம்!!
4 comments:
ஓருத்தரைப் புகழ ஒருவரை இகழ வேண்டும் என்பது இல்லை.
தங்க மகன் பாடல்கள் நன்றாக இருக்கிறது.
கடல், மரியான், ஓ காதல் கண்மணி படப் பாடல்களை திரும்ப ஒரு முறை கேட்கவும்.
உங்களுக்கு பிடிக்காத பாடல்கள்:
இன்னும் கொஞ்ச நேரம்.
நெஞ்சுக்குள்ள.
நெஞ்சே எழு.
சித்திரை நிலவு.
ஓ காதல் கண்மணி (எல்லா பாட்டும்.)
ஆமாம் நண்பரே............ BEEP SONG .......மாதிரியான கேவலமான பாடல்களை போட்டு சீப் பப்ளிசிட்டி தேட ரகுமானுக்கு தெரியாது. அந்த வகையில் ரகுமான் செய்யாததை இந்த .......பய அனிருத் செய்துட்டாந்தான்.........
ஏ.ஆர்.ரகுமான் செய்யாத எதை அநிருத் செய்து விட்டார் என்று கடைசி வரை சொல்லவே இல்லையே
anonymous: so true! beep song is a disgrace!
murali: oh! anirudh made me like an entire album which AR hasn't done in recent times. my personal opinion though.
Post a Comment