புத்தாண்டு முதல் நாள் அன்று என்ன செய்கிறோமோ அதை தான், வருடம் முழுக்க நம்மை சுற்றி, நம்மை கவ்வி, நம்மை பின் தொடர்ந்தே வரும்! இப்படி ஒரு பழைய ஐதிகம் எனக்கு. அது உண்மை தான் போலும். 2015 வருடம் அன்று, என்ன செய்தேனே அதை தான் 2015 வருடம் முழுக்க நேர்ந்தது.
ஒரு தனிப்பட்ட பிரச்சனை காரணமாய் 2015 ஆண்டு முதல் நாளே அழுதேன். மன உளைச்சல் அன்று. அவ்வாண்டு முழுதம் அழுகை, மன உளைச்சல், நிம்மதி இல்லாத வாழ்க்கை, என சனி பகவான் நம்மை போட்டு வாட்டி எடுத்து விட்டது. சனிஸ்வரன் நமக்கு தான் பக்கத்திலேயே பாய் விரிச்சு படுத்து இருக்கே என்று மனதை சமாதானப்படுத்தி கொண்டால், அவ்வபோது அது என் மீது கால்களை தூக்கி போட்டு நிம்மதியாய் தூங்க, நான் தான் தூக்கமின்றி தவித்தேன். ஆனால் எல்லாவற்றிலிருந்து மீண்டு வந்தேன், 2015 கடைசியில் பல நல்ல விஷயங்கள் நடந்தது. (எனது குறும்படம் வெளிவந்தது https://www.youtube.com/watch?v=Wygbavhuge8
ஆக 2016 முதல் நாள் அன்று நல்லதே செய்ய வேண்டும் என்ற ஆசை.
1) உடற்பயிற்சி செய்.
காலையில் 6 மணிக்கே உடற்பயிற்சி. இது இந்த ஆண்டு முழுதும் நடக்க வேண்டும்.

2) பிடித்ததை சாப்பிடு!
நல்ல உடற்பயிற்சி செய்யனும். அதே சமயம் பிடித்ததை அளவோடு சாப்பிட வேண்டும்.
இந்த டயட் எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.
இன்று வெள்ளிக்கிழமை என்றாலும், எனக்கு பிடித்த நண்டு ரசம் என் கையில்

3) பளாக் எழுத விரும்பு.
இன்று ஒரு போஸ்ட் போட்டால், வருடம் முழுக்க எழுத அந்த சிவன் பெருமாள் துணை புரிவார்....
ஏன் சிவன் பெருமாளா??
அவர் தான் படிப்பு/எழுத்து department in charge.
என்னது?
அவர் இல்லை??
ஓ சாரி சாரி.......
சரஸ்வதி i mean.
(நான் இந்த subjectல் கொஞ்சம் weak!)
4) குறும்படம் பார்!
நான் பார்த்து ரசித்து வியந்த ஒரு குறும்படம். அதிக பொருட்செலவில் இப்படி ஒரு பிரம்மாண்ட குறும்படம்!
துர்க்கி நாட்டில் ஒரு தமிழ் குறும்படம்!!! ச்சே chanceless man!
2 comments:
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
அய்யய்யோ உங்கள் பதிவிற்கு கருத்து போட்டுட்டேனே அப்ப வருஷம் முழுவதும் கருத்து போடணுமே....
Post a Comment