Feb 1, 2016

இறுதி சுற்று.....தமிழ் சினிமாவின் உறுதி சுற்று.



படத்துக்கு விமர்சனம் பலர் எழுதியிருக்கலாம். படத்தின்  ட்ரைலெர் வந்தவுடனே எனக்கு பிடித்துவிட்டது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் பட்டியலில் இறுதி சுற்றி நுழைந்து கொண்டது. முதல் நாள் முதல் ஷோ. (சிங்கையில் முதல் ஷோ 4.30pmக்கு தான் வெளியிடப்பட்டது)

அபிமானம். கமல் சொன்னதுபோல் அபிமானத்திற்கு இன்னொரு பெயர் உண்டு. அது என்னை பொருத்தவரை "இறுதி சுற்று"

படம் பிடிக்க காரணங்கள்:

1) பெண் இயக்குனர்,சுதா. மணிரத்னம் ஜி பள்ளியில் இருந்து வந்தவர். கலக்கி இருக்கிறார் போங்க!


2) ரித்திகா சிங். சொல்ல வார்த்தை இல்லை. தமிழ் பேசும் பாணியாக இருக்கட்டும். உடல் மொழி. தனுஷ் வெறியர் என ஆட்டம் ஆடுவதாக இருக்கட்டும். மெர்சல் performance! தெறிக்கவிட்டு இருக்கிறார். 


3) மேடி மேடி ஒ ஒ மேடி! இன்னும் இந்த பாட்டுக்கு அவ்வளவு மவுசு. அவரை போலவே. அலைபாயுதே படத்தில் மைக்கில் வந்த மாதவனும் சரி, இப்போ இப்படத்தில் மைக்கில் வரும்போது சரி, 15 வருடங்கள் ஆனபிறகும் அதே வசீகரம். கோபமாக வரும் காட்சியில் அவர் நடிப்பார் பாருங்க. கண்களுக்கு மட்டும் தனியே ஆஸ்கார் கொடுக்க வேண்டும் என இருந்தது. எப்படி மேடி? 1.5 வருடங்களாய் அமெரிக்காவில் குத்து சண்டை பயிற்சி எடுத்தது எல்லாம் வீணாக வில்லை. அப்படியே ஒரு குத்து சண்டை பயிற்சிவிப்பாளர்க்கான உடல் அசைவுகள். 

4) சந்தோஷ் நாரயணன். இசை பேசுகிறது. நம் உதடுகளில் அவரது மெல்லிசை தனியே தாளம் போடுது. 

5) வசனங்கள். ஒரு படத்தில் முக்கியமான பலம் என்பது வசனங்கள். குத்துசண்டை பஞ்ச் மட்டும் அல்ல, வசனங்களும் பஞ்ச் கொடுக்கின்றன. 

"நீ தொந்தி யோட சுத்துற அரகிழமா இருந்தாலும், நீ சிரிச்சா நல்லா தான்யா இருக்குற!" என்று சொன்ன போது தியெட்டரில் பெண்கள் கூட்டத்தின் விசில் சத்தம் கூரையை பிய்த்தது. 

"உனக்கு சொன்ன புரியாது? செத்த மீனெல்லாம் மறுபடியும் செத்துட போது." என்ற பல காமெடி வசனங்கள் இப்படத்தில். 

இப்படி காமெடி மற்றும் உணர்ச்சிபூர்வமான வசனங்கள் ஏராளம்.

6) நாசர்- அது எப்படி என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் வெளுத்து வாங்குறார் மனுஷன்!!! 

தமிழ் சினிமாவில் கெத்து ஆக்ஷன் கதைகள், கலர் கலராய் சட்டை போட்டு கொண்டு ஆட்டம் ஆடிக்கிட்டு ஊர் சுத்தும் கதைகள் என பல காவியங்கள் மத்தியில் "இறுதி சுற்று" தமிழ் சினிமாவின் "உறுதி சுற்று" தான். 

No comments: